14 March 2014

வீற்றிருந்தபெருமாள் கோயில் : வேப்பத்தூர்

சூன் 2010இல் வேப்பத்தூர் வீற்றிருந்தபெருமாள் கோயிலைப் பற்றிய ஒரு கட்டுரையினை தி இந்து ஆங்கில நாளிதழில் படித்தேன். பல்லவர் காலம், சோழர் காலம் மற்றும் விஜயநகர் காலம் என்ற மூன்று  காலங்களைச் சந்தித்த இக்கோயிலில் காணப்படும் ஓவியங்களைப் பற்றியும், கட்டடக்கலை நுட்பத்தைப் பற்றியும் படித்தபின்பு அக்கோயிலைக் காணவேண்டும் என்ற ஆவல் எழுந்தது. இருப்பினும் மார்ச் 2012இல் அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.     

 தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூர் என்னுமிடத்தில் இந்த வீற்றிருந்த பெருமாள் கோயில் உள்ளது.  வைணவக்கோயில்களில் திருமாலை நின்ற கோலம், அமர்ந்த கோலம், சயன கோலம் அல்லது கிடந்த கோலம் என்ற மூன்று நிலைகளில் காணமுடியும்.  108 திவ்யதேசங்களில் திருமால் நின்ற கோலத்தில் உள்ள கோயில்களே அதிகம். அதைத்தொடர்ந்து சயன கோலம். மற்ற நிலைகளில் ஒப்பிடுமபோது அமர்ந்த கோலத்தில் திருமால் உள்ள கோயில்கள் குறைவே. ஒரே இடத்தில் மூன்று கோலங்களிலும் திருமாலை திருக்கோட்டியூரில் நாங்கள் பார்த்துள்ளோம்.

கோயிலுக்குச் செல்ல வழியை விசாரித்துக்கொண்டு சென்றபோது ஊரின் உட்பகுதியில் கோயிலைக் காணமுடிந்தது. அதனைக் கோயில் என்றே கூற முடியாது. இடிபாடுகளுடன் கூடிய ஒரு தொகுப்பான கட்டட அமைப்பே அங்கு இருந்தது. தரையிலிருந்து சுமார் 40 அடி உயரத்தில் கூரையால் மூடப்பட்ட விமானத்தைப் பார்த்தோம். தற்போது தமிழகத்தில் இவ்வாறாக செங்கல் கட்டுமானத்துடன் கூடிய விமானம் இருப்பதாகத் தெரியவில்லை.

வீற்றிருந்த பெருமாள் கோயில் விமானம்
ஆங்காங்கு சிதைந்த நிலையில் கட்டட அமைப்புகள். தரைப்பகுதியிலிருந்து மேடை போன்ற பகுதிக்குச் சென்றுவிட்டு பின்னர் விமானம் உள்ள பகுதியை அடையவேண்டும். பாதை நடக்குமளவு காணப்படவில்லை. எங்கு பார்த்தாலும் புல் மண்டிக் கிடக்க தரையிலிருந்து விமானப் பகுதியைக் காண ஏறிச்செல்வது என்பதே சிரமமாக இருந்தது.  
தரையிலிருந்து சற்று உயர்ந்த நிலையில் கட்டட அமைப்பு
கோயிலுக்குரிய அமைப்புகளான கோபுரம், திருச்சுற்று, முகமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்ற அமைப்புகள் அனைத்தும் கால வெள்ளத்தில் கரைந்துபோக தற்போது காணப்படுவது கருவறைக்கு மேல் காணப்படுகின்ற விமானம் மட்டுமே. கருவறையில் இருந்த மூலவரையும் பிற சன்னதிகளில் இருந்த சிற்பங்களையும் தனியாக ஒரு இடத்தில் வைத்துள்ளதைக் காணமுடிந்தது.   


விமானத்தின் உட்புற அமைப்பு
கருவறைக்கு மேல் தஞ்சாவூர் பெரிய கோயிலின் விமான உட்புறத்தில் காணப்படும் கூடு போன்ற அமைப்பு காணப்பட்டது. பெரிய கோயிலில் வட்டவடிவமாக அந்த அமைப்பு காணப்படும். இக்கோயிலில் சதுரமாகக் காணப்பட்டது.

 
கருவறையின் உட்பகுதியில் ஓவியங்கள்
கருவறையின் உட்பக்கச் சுவர்களில் ஓவியங்களைக் காணமுடிந்தது. போதிய வெளிச்சமில்லாமையால் அந்த ஓவியங்களைத் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை.    
கருவறையின் மூலவர் இருந்த இடம் 
 கருவறையில் மூலவர் இருக்குமிடத்தின் கீழ்ப்பகுதி தோண்டப்பட்டிருந்தது. பெரிய பள்ளம் அங்கே காணப்பட்டது. விமானத்தின் உட்புறம் காணப்பட்ட கூடுபோன்ற பகுதி, மூலவர் இருந்த கருவறையின் உட்புறம் சுற்றி காணப்பட்ட ஓவியங்கள், மூலவர் இருந்த இடத்தின் தோண்டப்பட்ட பகுதி ஆகியவை எங்களுக்கு பிரமிப்பை உண்டாக்கின.
கருவறை வாயிலில் ஜம்புலிங்கம், சிவகுரு, பாக்கியவதி, பாரத்
ஒவ்வொரு பகுதிகளின் கட்டுமானத்தைப் பார்த்தபின் கருவறை வாயிலில் நின்று புகைப்படமெடுத்துக்கொண்டோம்.  நாங்கள் நின்ற இடம் தரையிலிருந்து சுமார் 10 அடி உயரத்தில் உள்ளது. அக்கோயில் தரையிலிருந்து சற்று உயர்ந்த இடத்தில் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்பதை அறியமுடிந்தது. 


விமானத்தின் பக்கவாட்டுத்தோற்றம்
 கருவறையின் வெளியே வந்தபின் விமானத்தை கட்டுமானத்திற்காக கட்டப்பட்டுள்ள மூங்கில்களுக்கிடையே பார்த்தோம். பெரிய செங்கற்களைக் கொண்டு மிக நேர்த்தியாக காணப்பட்ட அமைப்பினைக் கண்டு வியந்தோம். தமிழகத்தில் தற்போது இவ்வாறான ஓர் செங்கல் கட்டுமான விமான அமைப்பு இங்கு மட்டுமே உள்ளது என்பதை அறிந்தபோது ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், வரலாற்றின் ஒரு சுவடு கண்ணுக்கு முன் மறைந்து கொண்டிருப்பதை நினைத்து வேதனை அடைந்தோம்.  

சில மாதங்கள் கழித்து கும்பகோணம் சிற்பக்கலைஞர் நண்பர் திரு இராஜசேகரன் அவர்களுடன் இக்கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதும் அக்கோயிலை அதே நிலையில்தான் காணமுடிந்தது. வீற்றிருந்த பெருமாளை கம்பீரமான வீற்றிருக்கும் கோலத்துடன் பார்க்கும் நாள் எந்நாளோ?

32 comments:

  1. அங்குள்ள செங்கல் கட்டுமான விமான அமைப்பு உட்பட பல தகவல்களுக்கு நன்றி ஐயா...

    படங்கள் அருமை...

    ReplyDelete
    Replies
    1. வரலாற்றறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களுடன் களப்பணி சென்றபோது கும்பகோணம் வீரபத்ரசுவாமி கோயிலில் செங்கல்லால் அமைந்த அமைப்புகளைப் (கும்பபஞ்சரம் மற்றும் கால்கள்) பார்த்துள்ளேன். தங்களின் வருகைக்கு நன்றி.

      Delete
  2. ஆங்கிலத்தில் படித்தறியமுடியாத தகவல்களை தமிழில் ஆக்கம் செய்து வெளிப்படுத்துவதற்கு நன்றி. வளர்க...

    ReplyDelete
    Replies
    1. தங்களைப் போன்றோரின் வாழ்த்துக்கள் என்னை மென்மேலும் எழுதவும், களப்பணி மேற்கொள்ளவும் வைக்கின்றன. நன்றி.

      Delete
  3. The excavation was done by REACH FOUNDATION and the debris cleared and Vimana brought out, under the able guidance of Dr T Satyamurthy. Due to paucity of funds the work has stopped. There are few more Brick temples of Pallava in and around Chennai, which can be shown to interested members by us, REACh FOUNDATION.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகை மூலமாக சென்னை மற்றும் அருகிலுள்ள இடங்களில் இவ்வாறான அமைப்புகள் இருப்பதை அறிந்து மகிழ்கின்றேன். தாங்கள் தந்த தகவல் மிகவும் உதவியாக உள்ளது. தங்களின் பணி பாராட்டிற்குரியதாகும். நன்றி.

      Delete
  4. பல்லவர் காலம், சோழர் காலம் மற்றும் விஜயநகர் காலம் என்ற மூன்று காலங்களைச் சந்தித்த இக்கோயில் பாதுகாக்கப்படவேண்டிய கோயில் ஐயா.
    படங்கள் வியக்க வைக்கின்றன.
    நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. நம் மண்ணில் இவ்வாறான ஒரு கோயில் இருப்பது மனதிற்கு நிறைவே. இக்கோயில் புத்துயிர் பெறுவது நமக்குப் பெருமையே. நன்றி.

      Delete
  5. Nice research work. I read in the Hindu that Veppathur stood as centre of excellence during Pallava period. The Archaeological survey of India can take some steps for the temple restoration.

    ReplyDelete
    Replies
    1. அந்த நல்ல நாளுக்காகக் காத்திருப்போம். தங்களின் வருகைக்கு நன்றி.

      Delete
  6. முதலில் தங்களின் ஆா்வத்திற்கு நன்றி. வேதனையையும் அறிய முடிகின்றது. புகைப்படங்கள் நன்றாக உள்ளன.

    ReplyDelete
    Replies
    1. கட்டட அமைப்புகளைப் பற்றி தங்களின் மூலமாக முன்னர் அறிந்துள்ளேன். தங்களின் வருகை எனக்கு நிறைவைத் தருகிறது.

      Delete
  7. சிறப்பான செங்கல் கட்டுமானத்தில் விளங்கும் பழைமையான கோயிலைப் பற்றிய விவரங்களை அறியத் தந்தமைக்கு நன்றி!...

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் பல கோயில்களுக்கும், விழாக்களும் தங்களின் பதிவுகள் மூலமாக அழைத்துச் செல்வதைப் போல ஒரு வித்தியாசமான முயற்சியாக நாங்கள் சென்ற கோயிலைப் பற்றி பதிவு செய்தேன். வருகைக்கு நன்றி.

      Delete
  8. தகவலுக்கு நன்றி அய்யா, தமிழகதில் இது ஒன்று ஆனாலும் ஆந்திரா, விஜயநகரம், மகராஷ்டிரம் மற்றும் வடக்கில் பல இடங்களில் இது காணப்படுகிறது, முக்கியமாக புத்த விகாரைகள் விமானங்கள் செங்கல் கொண்டு தான் கட்டப்பட்டுள்ளன. சாரநாத் சாஞ்சி விகாரைகள் மற்றும் அஜந்தா கற்கோவிலுக்கு அருகில் உள்ள சிறிய தளங்களில் கோபுரங்கள் செங்கல் கொண்டே கட்டப்பட்டுள்ளன

    ReplyDelete
    Replies
    1. தங்களின் மூலமாக பல அரிய தகவல்களைத் தெரிந்துகொண்டோம். தங்களின் வருகைக்கும், முக்கியமான தகவல்கள் பகிர்வுக்கும் நன்றி.

      Delete
  9. மூன்று கோலங்கலும் ஒரே இடத்தில் பார்ப்பது மிகவும் அபூர்வம். தகவலுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகையும் வாழ்த்தும் நமது கல்லூரி நாள்களில் (1975-79) சைக்கிளிலும், நடந்தும் சென்று நாம் பார்த்த பல கோயில்களை நினைவூட்டின. நன்றி.

      Delete
  10. வீற்றிருந்தபெருமாள் கோயில் : வேப்பத்தூர்
    படங்களுடன் அருமையான பதிவு. நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து எனது வலைப்பூக்களைப் பார்த்து கருத்துக்களை வெளியிடும் தங்களின் எழுத்து எனக்கு புத்துணர்ச்சியைத் தருகிறது.. நன்றி.

      Delete
  11. எனக்குத் தெரிந்திராத தகவல். வீற்றிருந்த பெருமாள் மீண்டும் எழுந்து, வீற்றிருக்கப்போகும் திருநாளையும் தாங்கள் கண்டு எழுதும் நிலை வரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போலவே நானும் அந்த திருநாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். வருகைக்கு நன்றி.

      Delete
  12. பல புராதனக் கோயில்கள் புதுப்பிக்கவும் வழிபாடு செய்யவும் ஏற்றதாக செய்யப் பணப் பற்றாக் குறை ஒரு சாபமே. தகவல்ளுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அவ்வப்போது இவ்வாறாக பதியப்படும்போது ஏதாவது ஒரு நல்ல விளைவு கிடைக்கும் என்கிற உந்துதலே இவ்வாறான பதிவுகளைப் பதியக் காரணம். தங்களின் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  14. தங்கள் முயற்சியால் இவ்விமானம் பாதுகாக்கப்படும் என நம்பலாம் / அ.கலைமணி

    ReplyDelete
  15. எனது எழுத்தின்மீதான தங்களின் நம்பிக்கைக்கு மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  16. ஒவ்வொன்றிலும் புது தகவல்கள்.
    அற்புதமான தகவல்க்ளை அற்புதமாக படைக்கின்றீர்.
    உங்கள் முயற்சி பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்று நம்புவோம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி. தங்களது நம்பிக்கையே என்னுடைய நம்பிக்கையும்.

      Delete
  17. பெரிய செங்கற்களைக் கொண்டு மிக நேர்த்தியாக காணப்பட்ட அமைப்பினைக் கண்டு வியந்தோம்.

    அருமையான கோவில்பற்றி தகவல்பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. நமது பண்பாட்டுப் பெருமைகளைப் பகிர்ந்துகொள்வதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு ஏதுவுமில்லை.

      Delete
  18. செங்கற்கலைக் கொண்டு எழுப்பபட்ட இக்கோயில் வியக்க வைக்கிறது. தங்களது புகைப்படங்கள் அபூர்வம்...
    திருவாரூர் காமலாபுரம் ( வாள் பட்டறை ) என்ற நிறுதத்திற்கு அருகே ஒரு சிறு செங்கற் கோயில் இருக்கிறது .அதில் நால்வரில் ஒருவர் சிலையும் உள்ளது...மூலவர் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி. வாய்ப்பிருக்கும்போது காண்பேன்.

      Delete