20 April 2015

பெரிய கோயில் தேர் வெள்ளோட்டம்

இன்று (20.4.2015) காலை 5.30 மணியளவில் தஞ்சாவூர் பெரிய கோயில் தேரின் வெள்ளோட்டம் பார்க்கக் கிளம்பினோம். மேலவீதி ராமர் கோயில் அருகே புதிய தேர் செய்யப்பட்ட இடத்தில் பூசைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.  



தேரோட்டத்திற்கு முன்பாக பூஜை
அங்கு சிறிது நேரம் நின்றுவிட்டு அந்த இடத்தில் உருவாக்கப்பட்டு வெளியே ராமர் கோயிலின் எதிரே நிறுத்திவைக்கப்பட்டிருந்த தேரினைக் கண்டோம். மலர்த் தோரணங்களால் தேர் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னர் தஞ்சாவூரில் இருந்த தேரைப் பற்றிப் படித்தவை நினைவிற்கு வந்தன.




1997இல் தஞ்சாவூரில் நடைபெற்ற தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலரில் வெளியான (எஸ்.பாபாஜி ராஜா பான்சலே சத்ரபதி, மாமன்னர் சரபோஜியின் மகத்தான கொடை) கட்டுரையில் 400 ஆண்டுகளுக்கு முன்பாக தஞ்சாவூரில் இருந்த தேரைப் பற்றிய குறிப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கி.பி.1776இல் 20,200 நபர்கள் இழுத்து தஞ்சாவூரில் தேர் உலா வந்தததாகவும், சரபோஜி மன்னர் காலத்தில் கி.பி.1813இல் நடைபெற்ற தேரோட்டத்தின்போது தேர் இழுப்பதற்காக 27,394 நபர்கள் பல தாலுக்காக்களிலிருந்தும் அழைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவையாறு (1900), பாபநாசம் (2800), கும்பகோணம் (3494),மாயவரம் (3484), திருவாரூர் (2920), மன்னார்குடி (4200), கீவளூர் (4500), நன்னிலம் (3200) என்ற நிலையில் தேருக்காக 26,494 நபர்களும், வாகனங்களுக்காக திருவையாற்றிலிருந்து 900 நபர்களுமாக மொத்தம் 27,394 நபர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 




இந்த நினைவுகளுடன் தேரைப் பார்த்துவிட்டு மறுபடியும் பல நூற்றாண்டுக்குப் பின் உருவான இந்த தேரைப் பார்த்தோம். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தன. வழிபாடு செய்யப்பட்ட பூரண கும்பம் தேரின் மீது அமைக்கப்பட்டு அதன் மீது அலங்கரிக்கப்பட்ட சிறிய வண்ணக்குடை வைக்கப்பட்டது. சிறிது நேரத்தில் தீப ஆராதனைகள் காட்டப்பட்டு தேர் புறப்பட ஆயத்தமானது. மங்கல வாத்தியங்கள் முழங்க, மயிலாட்டத்துடன் வெகு சிறப்பாக தேர் கிளம்பியது. தேர் கிளம்பும் முன்பாக தேரின் வடத்தை தொட்டுக் கும்பிட்டோம்.   


 


மேலவீதி தேரோட்டம்

இத்தேர் பற்றி நாளிதழ்களில் முழுமையான விவரங்கள் வந்ததைப் பார்த்திருந்தோம். 16½ அடி உயரத்துடன் 3 அடுக்குகள் கொண்டதாக உள்ளதாகவும், மேல்மட்டத்தில் தேவாசனம், சிம்மாசனம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் 1½ அடியிலும் 56 பொம்மைகளும், 2ஆம் அடுக்கில் 2¼ அடியில் 46 பொம்மைகளும், 3ஆம் நிலையில் 1½ அடியில் 56 பொம்மைகளும் என மொத்தம் 231 பொம்மைகள் இடம் பெற்றுள்ளதாகவும் முதல் நிலையில் பெருவுடையார், பெரியநாயகி, விநாயகர், முருகன், துவாரபாலகர், பூமாதேவி, கல்யாணசுந்தரமூர்த்தி, அகத்தியர், சரபமூர்த்தி, மன்மதன், கண்ணப்பநாயனார் கதை, சிவராத்திரி தோன்றிய வரலாறு, அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், வீரபத்ரன், பிச்சாடனமூர்த்தி, விருஷ்பரூடர், ஏகபாதமூர்த்தி போன்ற பொம்மைகள் நான்கு திசைகளிலும், குதிரை மற்றும் யாழி உருவங்களும் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அறிந்தோம். தேரில் 245 மணிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும்,  தேரின் 2 அச்சும் 2 டன் எடையும், சக்கரங்கள் ஒவ்வொன்றும் தலா 1 டன் எடையும் கொண்டது. தேரின் மொத்த எடை சுமார் 40 டன் என்பதையும் அறிந்தோம். தேரின் பின்புறம் நந்தி மண்டப தோற்றம் ஒரே பலகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதைப் பார்த்தோம். 





பின்னர் கீழவீதிக்கு வந்து கீழ வீதியில் தேர் செல்லும் அழகினைப் பார்க்கக் காத்திருந்தோம். யானை முன் வர, தொடர்ந்து கலைக்குழுவினர் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து தேர் வந்தது. அங்கிருந்து சிறிது நேரம் பார்த்து இறையுணர்வோடு அவ்வழகினை ரசித்தோம். 





கீழவீதியில் தேரோட்டம்
பின்னர் மறுபடியும் மேலவீதிக்கு வந்து அங்கே இந்த புதிய தேர் அமைக்கப்படவுள்ள தேர்முட்டியைப் பார்த்தோம். இந்த புதிய தேர்முட்டி செப்பம் செய்யப்படும்போது கடந்த 100 ஆண்டுகளுக்கு முந்தைய தேரின் 20 மரச்சக்கரங்கள், 15 தேர் நிறுத்திகள் ஆகியவை கிடப்பது தெரியவந்ததாகக் கூறினர். 


மேலவீதியில் புதிய தேர்முட்டி
மேல வீதியில் தேரோடு தொடங்கிய எங்களது பயணம் புதிய தேர்முட்டியில் நிறைவானது. இத்தேரோட்டத்தின்போது பக்தர்களே பக்தி பரவசத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 29.4.2015 அன்று இங்கிருந்துதான் தேரோட்டம் நடைபெறவுள்ளது. 

32 comments:

  1. படங்களும் பகிர்வும் மிக அருமை. நேரில் சென்று பார்த்து வந்ததுபோல ஓர் திருப்தியை அளிக்கிறது. மிக்க நன்றி.

    ReplyDelete
  2. நன்றி ஐயா. தேரோட்ட வருணனை (சுருக்கமாகத்) தருவீர்கள் என நம்புகிறேன்.

    அன்பன்
    மா. அருச்சுனமணி,

    ReplyDelete
  3. சிறப்பான படங்கள்! தகவல்களுடன் தேரோட்டம் பற்றிய பதிவு அருமை! நன்றி!

    ReplyDelete
  4. தேரோட்ட நிகழ்வுகளைக்குறித்த விடயங்களும் சரித்திர தகவல்களும் அறிந்து கொண்டேன் நன்றி
    அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா
    அறிய முடியாத தகவலுன் அருமையான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. அன்பின் ஐயா..
    இன்று எனது பதிவில் தங்கள் பதிவினுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்..
    நேரில் பார்த்த நிறைவு.. அழகான படங்கள்.. மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete
  7. அய்யா தங்கள் பதிவின் வழி தான் தேரோட்டம் பார்த்தேன்.அருமையாக உள்ளது. நன்றி.

    ReplyDelete
  8. சுடச் சுட தேரோட்டம் பற்றிய பதிவு
    படங்களுடனும், முந்தைய தேரோட்டம் பற்றிய செய்திகளுடனும்
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
  9. தேர் பற்றி முழுத் தகவல்களோடு எங்களையும் அழைத்து சென்று விட்டீர்கள் ஐயா... நன்றி...

    ReplyDelete
  10. படங்கள் மூலம் நாங்களும் தேரோட்டம் கண்டு களித்தோம்.... மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  11. ஊர் கூடி தேர் இழுக்கும்
    தேர்த் திருவிழாவை!
    பார் போற்றும் பக்தித் திருவிழா
    பதிவாய் பகிர்ந்தளித்த
    பைந்தமிழ்சுவைமிகு
    முனைவர் அய்யாவே!
    வணங்கி மகிழ்கின்றேன்!
    "வடம் பிடித்த மிகிழ்வை தந்த பதிவு"
    நன்றி!
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  12. தஞ்சை தேரோட்டம் குறித்து உடனுக்குடன் படங்களுடனும் விவரங்களோடும் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  13. 29-04-2015 நடக்க இருக்கின்ற தேரோட்டத்தைப்பற்றி தாங்கள் எழுத இருக்கின்ற பதிவிற்கு இதை வெள்ளோ(முன்னோ)ட்டாமாக எடுத்துக்கொள்ளலாமா?
    அழகிய படங்களுடன் கூடிய அரிய தகவல்களை தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  14. படங்களும், பகிர்வும் தேரோட்டத்தை நானும் பார்த்த மகிழ்ச்சி ஐயா!

    ReplyDelete
  15. தேரோட்டத்தை நேரில் பார்த்தோம்.

    ReplyDelete
  16. தேரோட்டத்தின் விவரணம் தகவல்கள் எல்லாமே புதியவை எங்களுக்கு. புகைப்படங்கள் அருமை! பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  17. பெரிய கோவில் தேர் வெள்ளோட்டப் பதிவு பல தகவல்களுடன் சுவாரசியம் பாராட்டுக்கள்

    ReplyDelete
  18. Prof.,Dr.T. Padmanaban, Tamil Research Center. I have marked above about this temple car trial run as FUNNY. because there was no provision to comment as FOOLISH. RajarajI wished that the name of Siva should be prevailing everywhere... ara hara..ara..hara..as he was a strong devotee of Siva and Siva only. He did not finish the Big temple by 1010 A.D. after him Pandyas ruled. Then Nayaks who were Vaishnavites ruled. Rajaraja did not build granite houses for him either in Thanjavur or Palayarai. but Nayaks built the present palace. Nayaks only built many Vishnu temples wherein Navagrahas will not be present. He liked beautiful girls and had a harem inside the palace. Marathas too followed them and thanjavur girls were dumped in his harem in south main street named Mangala vilasam. Chaste women built very small lanes in south and west main street to escape from the eyes of nayaks and maratha kings. so very narrow lanes into which even autorickshaws cant enter are still prevailing. There were 4 theradi mandapams in the fourt main streets. In West main street from Ramar temple , a vaishnavite temple, the siva temple urchava moorthi is put and is called the Big temple Car festival and destined to run on 29th April 2015. Shame. Rajaraja has been said to have committed suicide by falling down from the top of Big temple by some famous persons. His soul if there is one will do it on 29th April 2015 the Big temple Brahadeesvara saivite urchava moorthy is put in a Rama temple. The compelled kidnapped concubine girls of nayak and marathas enjoyed looking at the car from their places at the palace and Mangala vilasam. it was intentionally done to humble down Rajaraja. ANSWER MY QUESTION: For a few months on full moon day in Big temple, Aanmeeka valam is being conducted. Devotess go round the Big temple clockwise that is Prathatchanam. For big temple, from the big temple car should go from the entrance of East Gopuram clockwise or prathatchanam and reach Rast gopuram at the final stage.AAGAMAS DISRESPECTED|: |Big temple has been built as per MAGUDA AAGAMAM. But this new temple car has been built as per Siva AAgamam. That is why marriages, rituals for children are not conducted in Big temple as Magada aagamam has been over thrown. The therai Theertham the temple tank built by Raja raja has been converted by Nayaks into a well and completely closed by Marathas. Big temple has lost its sanctity. To add fuel to the fire big temple car festival comes around the Palace and not around the temple. Experts from Banaras should be approached. Learn about maguda Aagamam. Make modificatins. Then only Dhakshina meru will become Sabari meru or sabarimali to its devotees. otherwise bad things will happen as all of us have experienced so far. Let all people prosper, be happy, be prosperous, peacefil. Prof.Dr.T. Padmanaban 23 Apr.2015.

    ReplyDelete
  19. Well. Such kind of comments is always enhancing the merits of the Historical evidences. Of course we can try to find out the very old threshold with the help of the great scholars like a renowned perpetual director Dr T.Padmanaban. Sir, I am very much confident that your valuable suggestions and ideas are always creates an awareness to one and all. We are always expecting your valuable timely comments like this. I am sure; certainly it will be a light to the historical society. When proposing the same aspects, I think this kind of rituals may not be a part of neglected one. Generally these rituals are pave to unify all sorts of people and relax them. Anyway I am very proud to say that the Thanjavur is having a very great scholars like you, it is a great moment for Thanjavur and it will be appreciable one. SRINIVASAN.K. (thro email from Mr.K.Srinivasan)

    ReplyDelete
  20. Well. These type of the measures are very much needed. Even though these are basically created a positive approach. I am sure, in our society all the rituals are framed only for promoting the life style and enhance the quality of personality. I very much appreciate one and all.sk.sabai

    ReplyDelete
  21. Well. These type of the measures are very much needed. Even though these are basically created a positive approach. I am sure, in our society all the rituals are framed only for promoting the life style and enhance the quality of personality. I very much appreciate one and all.sk.sabai

    ReplyDelete
  22. There are historians and also distorians. Rev. Frederick Schwartz has said "historians prostitute history by manipulating fables, hearsay stories,and poems praising for profits". Here is a Palace of the Nayak king only. so four streets are Raja Veedhis. A Temple car there should be Car Streets around the temple. Car should start from Eastern side, come a round around the temple clockwise pradhatchanam and come back to East Car street Theradi. In all temples there will be car streets around the temple. If u believe in Hinduism u should follow the Aagama principles. For Big temple maguda Aagamam is followed. Making a Car as per Siva Aagamam is deviation of Hindu faith. Has anybody celebrated a marriage, ceremonies for children inside Big temple? VIPs who entered into it have experienced fatal change of life.
    Let us correct the deviations, people should be prosperous, peaceful and no havocs should happen to us. Let All of us may beblessed by the Almighty Supreme power.

    ReplyDelete
  23. தேரின் அமைப்பு பற்றி இவ்வளவு விரிவாக அறிந்ததில்லை. தேரோட்ட நிகழ்வை விவரித்த விதமும் அருமை

    ReplyDelete
    Replies
    1. Well. I am also in the same boat. My opinion is also match with your thoughts and interpretations. Since the structure of the big temple is not at all followed Siva Aakama, it creats some unexpectable motions also.Practically all of them known the facts. Hence, instead of saying temple car, it may be called as some kind of chariot. I think nobody is having any difference of opinion. So it may called Thanjavur Chariot or otherwise simply say Chariot. Thank your very much for your patronage sir. SRINIVASAN.K.26.4.2015

      Delete
    2. Well. The renowned Prof Dr. T.Padmanaban’s statement is very much needed to our society. I think it will certainly create some awareness about our culture and correct the history. Frankly speaking, that there is lot of abnormalities found in our history. From the Rev. Schwartz’s statement which is cited by the Prof, I think that it is obvious to say how our historical trends are going on. It has to be curtailed and corrected in time. The historians are fully responsible for the same. They should take necessary steps to improve our society in a right path. Then only we make clear fool free history.
      I request the blogger to publish these massages into Tamil so that it will reach easily in vast manner, resulting positive and right move to guide our society. It is proper way to correct the deviations. Then only people should be prosperous, peaceful and no devastation should happen to our society. Let all of us be blessed by Supreme power the Almighty. SRINIVASAN.K.27.4.2015

      Delete
    3. Sivamgama is not a single agama. There are 28 sivagamas.Among them Kaamigamam prescribes rules for constructing Siva temples..1.building the temple 2. location of various deities 3.rituals and 4. festivals. Dvaita and Advaita philosophies are the divisions among sivagams. It will be a curious to know that there are 10 Sivas and the first is Parama Siva. Magudagama is one of the sivagama where above the Linga the temple gopuram will be constructed around the sanctum sanctorum of the siva. Big temple has been built as per magudagama and hence there are different rules as per magudagama differing from Kamigama built for siva temples. if there are deviations and alterations made in the Big temple in its building, deities, rituals and festivals, the sanctity will be lost. At present there are calamities in the whole world and Brahadeeswara has to bless us to live without any havoc and with prosperity of the whole world. Niskamis of makutagama can make corrections for the already made deviations and make all the word to be peaceful.
      From A.D.1010 to 1014 of Rajaraja's Big temple car festivals there was no Nayak palace and the present Raja veedhis. LET THE WHOLE HUMANITY BE BLESSED BY BRAHADEESWARA WITH PROSPERITY OF ALL KINDS.
      OHM NAMASIVAYA,




      Delete
  24. தேர்பற்றி தகவலுக்கு நன்றி! த.ம.11

    ReplyDelete
  25. good coverage, took more pain and labour to picture the entire car festival.thank you sir.

    ReplyDelete
  26. Well. The renowned historian Prof Dr. T.Padmanaban’s statement is always very much boost up our society. I think it will certainly create some awareness about our culture and the history. I think that you are well versed in all subjects.

    In this regard, may I request the Prof. Dr. T. Padmanaban sir, kindly explain the origin of published tamil book in print media and how they give priority to print the tamil books. Is there is any specific contribution of Christian Rev. Father to the tamil language and culture? On behalf of all, I expect your brief account, so that it will reach easily in vast manner, resulting positive and right move to guide our society. Thank you very much for your kind patronage sir, SRINIVASAN.K.6.5.2015

    ReplyDelete
  27. தேரின் அமைப்பு பற்றி எத்துனை விளக்கம். அருமை, அய்யா. தாங்கள் பாலமகிபக்கங்கள் பக்கம் வந்து பார்த்து செல்லலும்.நன்றி.

    ReplyDelete
  28. அருமையான படங்கள் மூலம் தேரோட்டத்தை நேரில் பார்ப்பது போல .இருந்தது

    ReplyDelete
  29. Keep your knowledge to yourself, Dr. T. Padmanaban. We know the brahmin agenda. We, Tamizhars know how to consecrate what we built.

    ReplyDelete