19 January 2016

கும்பகோணம் காசி விசுவநாதர் கோயில்

பிப்ரவரி 2016இல் மகாமகம் நடைபெறவுள்ள நிலையில் மகாமகத்தின்போது தீர்த்தவாரி காணும் 12 சைவக்கோயில்களில் இன்னும் நாம் பார்க்கவேண்டியவை காசி விசுவநாதர் கோயில், கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் மற்றும் நாகேஸ்வரர் கோயில். இப்போது காசி விசுவநாதர் கோயில் செல்வோம். 


இக்கோயில் மகாமகக்குளத்தின் வட கரையில் அமைந்துள்ளது. கோயிலுக்கு செல்லும்போது முதலில் கோயிலின் நுழைவாயில் காணப்படுகிறது. 
பின்னர் கோயில் வாயிலின் ராஜகோபுரத்தை அடுத்து நந்தி, பலிபீடம், கொடிமரத்தைக் கடந்து உள்ளே சென்றால் இடப்புறத்தில் நவக்கிரக சன்னதி உள்ளது.




முன் மண்டபத்தை அடுத்து உள்ளே செல்லும்போது உள் மண்டபத்தில் வலப்புறம் வள்ளிதேவசேனாவுடன் சுப்பிரமணியர், கஜலட்சுமி சன்னதிகள் உள்ளன. இடப்புறம் கணபதி, சோமாஸ்கந்தர் சன்னதிகளும், நவகன்னியருக்கான உற்சவர் சன்னதியும் உள்ளன.

இதே மண்டபத்தில் வலப்புறம் சரயு, கிருஷ்ணா, துங்கபத்திரா, கோதாவரி, காவேரி, சரஸ்வதி, நர்மதா, யமுனா, கங்கா ஆகிய நவகன்னியருக்கான சன்னதி உள்ளது. 

நவகன்னியர் சன்னதியை அடுத்து பள்ளியறையும், நடராஜர் சன்னதியும் உள்ளன. வெளிச்சுற்றில் ஷேத்திர மகாலிங்கம் எனப்படும் லிங்க பானம் உள்ளது.

மூலவர் கருவறையின் கோஷ்டத்தில் துர்க்கா, பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி உள்ளனர். கருவறையின் வலப்புறம் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. மூலவர் கருவறையின் வலப்புறம் விசாலாட்சி அம்மன் சன்னதி உள்ளது. மூலவரும் தேவியும் உள்ள மண்டபத்தின் கருவறையைச் சுற்றிவரும்போது பின்புறம் பைரவர், சூரியன், சனீஸ்வரன், சந்திரன், பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் உள்ளனர். இக்கோயிலின் குடமுழுக்கு 9.2.2014இல் நடைபெற்றது.  
இக்கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 6.00-12.30, மாலை 4.00-8.30 
---------------------------------------------------------------------------------------------------
    ---------------------------------------------------------------------------------------------------
    துணை நின்றவை
    மகாமகப்பெருவிழா 2004 கும்பகோணம், இந்து சமய அறநிலையத்துறை,தமிழ்நாடு அரசு

    11 comments:

    1. படங்கள் அருமை... தங்களின் பகிர்வால் கோயிலை சுற்றி வந்து விட்டோம் ஐயா... நன்றி...

      ReplyDelete
    2. காலைப்பொழுதில் இனிய தரிசனம்..

      வாழ்க நலம்..

      ReplyDelete
    3. படங்களும் பதிவும் அருமை சார்.

      ReplyDelete
    4. கோவிலை முழுமையாக பார்த்த உணர்வை தந்து விட்டீர்கள் ஐயா. படங்கள் அருமை.தம +1

      ReplyDelete
    5. கோவிலை நேரில் பார்த்த நிறைவு. நன்றி.

      தம +1

      ReplyDelete
    6. படங்களும் தகவல்களும் சிறப்பு ஐயா! நன்றி!

      ReplyDelete
    7. படங்களும் தகவலும் அருமை ஐயா!

      ReplyDelete
    8. முனைவரின் உபயத்தால் கும்பகோணத்தை வலம் வந்து விட்டேன்
      தமிழ் மணம் 6

      ReplyDelete
    9. தங்கள் பதிவின் மூலம் கும்பகோணத்தில் உள்ள அனைத்து கோயில்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது.
      த ம 7

      ReplyDelete
    10. வணக்கம்
      ஐயா

      கும்பகோணத்தில் உள்ள ஆலயத்தின் சிறப்பை அறியத் தந்தமைக்கு நன்றி ஐயா

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      ReplyDelete