19 March 2016

கலாமும் நானும் : மறக்க முடியாத இரு நிகழ்வுகள் : தினமணி சிறப்பு மலர்

மறக்கமுடியாத இரு நிகழ்வுகள் என்ற தலைப்பில் மேதகு ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்களுடனான எனது தொடர்பு பற்றிய பதிவு, தினமணி ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் சிறப்பு மலரில் வெளியாகியுள்ளது. அம்மாமனிதரைப் பற்றிய அப்பதிவினைப் பகிழ்வதில் மகிழ்கின்றேன். இதனை இம்மலரில் வெளியிட்ட தினமணி இதழுக்கு என் மனமார்ந்த நன்றி.

கலாமும் நானும் :  மறக்க முடியாத இரு நிகழ்வுகள் : முனைவர் பா.ஜம்புலிங்கம்

கலாமுடன் தொடர்புடைய இரு நிகழ்வுகள் என்னை நெகிழவைத்தவையாகும். எனது நூலுக்கு வாழ்த்து தெரிவித்ததையும், அவரை ஒரு முறை விழாவில் நேரில் பார்த்ததையும் என் வாழ்வின் மறக்கமுடியாத நாள்களாக நினைக்கின்றேன்.

க்ளோனிங் எனப்படுகின்ற படியாக்கம் தொடர்பாக நான் எழுதிய அறிவியல் தொடர்பான நூலை அவருடன் பகிர்ந்துகொள்வோம் என்ற உந்துதலின் விளைவாக 20 ஏப்ரல் 2005இல் அவருக்கு அனுப்பிவைத்திருந்தேன்.

16.5.2005 அன்று அவரிடமிருந்து எனது அலுவலக முகவரிக்கு மே 9, 2005 நாளிட்ட கடிதம் வந்தது. ஒரு புறம் பதற்றம். மறுபுறம் மகிழ்ச்சி. இந்தியாவின் முதல் குடிமகனிடமிருந்து கடைக்கோடியில் உள்ள ஒரு குடிமகனுக்கு ஒரு மறுமொழிக்கடிதம். ஆவலுடன் பிரித்தேன். முதலில் அவருடைய கையெழுத்தைப் பார்த்தேன். பின்னர் படிக்க ஆரம்பித்தேன்.

முனைவர் ஜம்புலிங்கம் அவர்களுக்கு, தங்களது கடிதமும் படியாக்கம் நூலின் பிரதியும் கிடைத்தது. நன்றி. தமிழில் அறிவியலைக் கொடுப்பதில் படியாக்கம் நல்ல முயற்சி. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

என்று அவர் எழுதிய கடிதத்தை உறையுடன் பொக்கிஷமாகக் காத்துவருகிறேன். 


மற்றொரு சிறப்பான நாள், அவரை நாங்கள் நேரில் காணும் பேறுபெற்ற நாளாகும். தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் வெள்ளி விழா நிகழ்வுகளின்  நிறைவு விழா 24 செப்டம்பர் 2006 அன்று தமிழ்ப்பல்கலைக்கழக கரிகாற்சோழன் கலையரங்கில் நடைபெற்றது. அவ்விழாவில் அவர் கலந்துகொண்டு தமிழ்ப்பல்கலைக்கழகம் அடுத்த பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குச் செயல்திட்டம் என்னும் நூலினைப் பெற்று, தமிழ்ப்பல்கலைக்கழக இணைய தளத்தினைத் தொடங்கிவைத்து, வெள்ளி விழா நிறைவுப் பேருரையை ஆற்றினார்.

நிகழ்ச்சி முடிந்து அவர் சென்ற பின்னர் பல நாள்கள் அவருடைய பேச்சே எங்கள் அனைவரின் விவாதப்பொருளாக இருந்தது. இந்த இரு நிகழ்வுகளும் என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகளாகும்.


------------------------------------------------------------------------
தி இந்து நாளிதழில் 17 மார்ச்2016இல் வெளியான அப்பச்சி சாமி (சமஸ் கட்டுரை) என்ற தலைப்பிலான பெருந்தலைவர் காமராஜரைப் பற்றிய கட்டுரையைப் பற்றி நான் எழுதிய கடிதம் இன்றைய தி இந்து நாளிதழில் வெளியாகியுள்ளது. தி இந்து நாளிதழுக்கு நன்றி.
------------------------------------------------------------------------
20 மார்ச் 2016 மாலை மேம்படுத்தப்பட்டது.

23 comments:

 1. அன்பார்ந்த பாராட்டுகள் ஐயா..

  ReplyDelete
 2. மிகவும் மகிழ்ச்சி ஐயா.. வாழ்த்துகள்...

  ReplyDelete
 3. கிடைத்தற்கு அரிய வாய்ப்பினை பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி..

  வாழ்க நலம்..

  ReplyDelete
 4. உன்னத சந்திப்பு , அவரின் வாழ்த்துக்கள் கிடைத்தது அதை விட சிறப்பு. வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
 5. அருமையான சந்திப்பு
  வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வு
  பகிர்வுக்கு மிக்க நன்றி.
  பாராட்டுகள் ஐயா!

  ReplyDelete
 6. பாராட்டு! முனைவரே,மிகவும் கொடுத்து வைத்தவர்!

  ReplyDelete
 7. பெருமைக்குறிய விடயம் முனைவரே வாழ்த்துகள்
  தமிழ் மணம் 4

  ReplyDelete
 8. மிகவும் பெருமைக்குரிய மகிழ்வான நிகழ்வுகள் ஐயா. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா

  ReplyDelete
 9. அய்யா வணக்கம். இன்றைய தமிழ்இந்துவில் காலையிலேயே பார்த்தேன். இரவுதான் வீடுதிரும்பினேன். மிக்க மகிழ்ச்சி. தினமணியின் மலரை வாங்கிப் பார்த்துவிடுவேன். வாழ்த்துகள். இதுபோலும் பதிவுகளைத் தங்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கிறேன். வணக்கம். த.ம.7

  ReplyDelete
 10. இத்தகைய அபூர்வ வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது ,வாழ்த்துக்கள் அய்யா !

  ReplyDelete
 11. மறக்க முடியாத நிகழ்வு மட்டுமல்ல
  யாருக்கும் எளிதில் கிடைத்துவிடாத நிகழ்வுமாகும்
  வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
 12. இந்தச்செய்திகளைக் கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  //இந்தியாவின் முதல் குடிமகனிடமிருந்து கடைக்கோடியில் உள்ள ஒரு குடிமகனுக்கு ஒரு மறுமொழிக்கடிதம்.//

  அதுதான் போற்றுதலுக்குரிய அவரின் தனிச்சிறப்பாகும்.

  >>>>>

  ReplyDelete
 13. //தி இந்து நாளிதழில் 17 மார்ச்2016 இல் வெளியான அப்பச்சி சாமி (சமஸ் கட்டுரை) என்ற தலைப்பிலான பெருந்தலைவர் காமராஜரைப் பற்றிய கட்டுரையைப் பற்றி நான் எழுதிய கடிதம் இன்றைய தி இந்து நாளிதழில் வெளியாகியுள்ளது.//

  பாராட்டுகள். வாழ்த்துகள். பெருந்தலைவர் காமராஜர் அவர்களை நான் 1970 இறுதியில் BHEL திருச்சி, பணிமனையில், அதிகக்கூட்டமில்லாத சூழ்நிலையில், அவரின் மிக அருகில் நின்று வெகு நேரம் பார்த்துள்ளேன்.

  ReplyDelete
 14. கணப்பொழுதும் வீணாக்காமல் எழுத்துப்பணியில் ஈடுபட்டுவரும் தங்கள் உழைப்பை வியக்கிறேன். இன்னும் எவ்வளவு விஷயங்களை உள்ளத்தில் தேக்கி வைத்திருப்பீர்கள் என்று வியந்துபோகிறேன். நல்ல எழுத்துக்கு நன்றி! - இராய செல்லப்பா

  ReplyDelete
 15. மிகுந்த மகிழ்ச்சி

  ReplyDelete
 16. Mr KA Bagawanjee (மின்னஞ்சல்வழியாக k.a.bagawanjee@gmail.com)
  படித்தேன் ரசித்தேன் அய்யா :)

  ReplyDelete
 17. நினைத்துப் பெருமைப்படக்கூடிய நிகழ்வுகள். பாராட்டுக்கள்

  ReplyDelete
 18. Mr SV Venugopalan (sv.venu@gmail.com மின்னஞ்சல் மூலமாக)
  டாக்டர் அப்துல் கலாம் அவர்களுடனான அருமையான
  நினைவுக் குறிப்புகளை நேற்று நள்ளிரவில் வாசித்து நெகிழ்ந்தேன்...வாழ்த்துக்கள்...
  எஸ் வி வி

  ReplyDelete
 19. Mrs Kasthuri (r.kasthuri40@gmail.com மின்னஞ்சல் மூலமாக)
  அரும்பெரும் சாதனை படைத்து மறைந்து சென்ற ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களைப்பற்றியச் சிந்தனைகளையும் நேரம் தவறாமையும் உங்களிடம் கண்டுகொண்டேன் நினைவுகளுக்கு நன்றி, அந்த மறக்கமுடியாத இரு நிகழ்வுகளை நானும் தெரிந்துகொள்ள விழைகிறேன்.
  நன்றிகளுடன் இரா.கஸ்தூரி

  ReplyDelete
 20. நீங்கள் கொடுத்து வைத்தவர் என்றே சொல்லவேண்டும். நன் அவருக்கு அனுப்பியிருந்த வாழ்த்து கவிதை அவரை சேர்ந்ததா?......
  என்னுடைய "கலாமுக்கு சலாம்" - பதிவை வாசித்து கருத்திடவும்..

  கோ

  ReplyDelete