16 April 2016

பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும் : முனைவர் இராசு.பவுன்துரை

முனைவர் இராசு. பவுன்துரை (6.1.1953-19.3.2014) எழுதிய பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும் என்ற நூல் பண்டைத் தமிழகத்தின் தொன்மை வரலாற்றையும் பழந்தமிழரின் வாழ்வியற் பண்பாட்டையும் அறியத்தக்க அரிய சான்றுகளை ஆவணப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ள நூலாகும். 

நூலாசிரியர் நூலின் முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார். "சங்க காலத் தமிழக வரலாறு, கலை மற்றும் பண்பாடு குறித்து முழுமையாக அறிவதற்கும் எழுதுவதற்கும் பண்டைத் தமிழக வரைவுகள், குறியீடுகள் அடிப்படைச் சான்றுகளாக உள்ளன. பண்டைத் தமிழக வரைவுகள் என்பன கோட்டு வரைவு, வடிவம், படிமம் என்னும் வளர்ச்சியை உள்ளடக்கமாகவும் குறியீடுகள் என்பன வரிவடிவங்கள், முத்திரை வடிவங்கள், இயற்கை வரைவுகள், செயற்கை வரைவுகள் என்னும் உத்தியை உள்ளடக்கமாகவும் பெற்றுள்ளன. ... பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும் என்ற ஆய்வுக்களம் தமிழர் நாகரிகத்தின் தொன்மைச் சிறப்பு, பண்பாடு, மொழி பற்றிய சிந்தனைகளை மேலும் சிறப்பாக நுணுகிக் காணும் வாய்ப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகக் கூறின் பண்டைய தமிழரின் படைப்புச் சான்றுகளை மட்டும் முதன்மைப்படுத்தி அதன் வழித் தமிழரின் அறிவியல், சுற்றுச்சூழல், வாழ்வியல் கூறுகள் விளக்கம் காணப்படுகின்றன...வரைவுகள், வடிவங்கள், படிமங்கள் ஒன்றை ஒன்றுச் சார்ந்து எவ்வாறு மானுடம் பெற்ற ஆற்றல் அறிவுடன் இணைந்து வளர்ந்து வந்திருக்கின்றன என்பதைக் கூறும் தொகுப்பு முயற்சியாகவும் இந்த ஆய்வு அமைகிறது".

"தொன்மைத் தமிழகத்தின் தொல்லியல் ஆவணங்களாகக் கிடைத்துள்ள பெருங்கற்படைக் காலச் சின்னங்களிடையேயும், பழங்கற்காலம் மற்றும் புதிய கற்காலத்தில் வாழ்ந்த வேட்டைத் தொழிலைக் கொண்டிருந்த மக்கள் குகைகளிலும் பாறைகளிலும் விட்டுச்சென்ற பாறை ஓவியங்கள், பாறைக்கீறல்களிடையேயும் அமைந்துள்ள வரைவுகளும் குறியீடுகளும் கண்டறியப்பட்டு இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன" என்று நூலின் அணிந்துரையில் உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் குறிப்பிடுகிறார். 

மேலும் அவர், "பெருங்கற்படைக் காலச்சின்னங்களில் குறிப்பிடத்தக்கவையான செத்தவரை, கீழ்வாலை, பெருமுக்கல் போன்றவற்றில் காணப்படும் மனித மற்றும் விலங்கினங்களையும் அவற்றுள் காணப்படும் குறியீடுகளையும் அவற்றைப் போன்றவற்றுடன் இன்னும் சேர்க்கத்தக்க சான்றுகளான திருமால்பாடி பாறை முற்றத்துப் பழங்கால மன்னர்களின் உருவங்கள் மற்றும் விலங்குகள், அவற்றைக் கல் அகல்கள் ஏற்றி வழிபடும் சடங்குகள், பெருமுக்கல், செஞ்சி, உத்தமபாளையம் போன்ற இடங்களில் அமைந்துள்ள நீர்ச்சுனைகளில் ஈமச்சடங்கின் போது ஏற்பறப்பட்டட கல் அகல்கள், அப்பகுதிகளில் இடம்பெறும் எழுத்துக்கோடுகள் போன்றவற்றையும் ஆராய்வோர் தொல்பழந்தமிழ்நாட்டின் வரலாற்றையும் பழந்தமிழர் பண்பாட்டையும் இன்னும் பலவாக விரித்துக் கூறும் பாங்கைப்பெறுவர் என்பதில் ஐயமில்லை" என்று புகழாராம் சூட்டுகிறார்.

இந்நூல் குறியீடுகளும்  ஆய்வு அணுகுமுறைகளும், தமிழகப் பாறை வரைவுகளும் குறியீடுகளும், தொல் வடிவங்களும் குறியீடுகளும், காசுகளும் குறியீடுகளும், மட்பாண்ட வரைவுகளும் குறியீடுகளும், தமிழகக் குறியீடுகளும் சிந்துவெளி நாகரிகமும், சிந்துவெளிக் குறியீடுகளில் காணும் ஒப்புமைகள், தமிழகக் குறியீடுகளும் பண்டைய அயலகமும், குறியீடுகளும் மொழியும், நிறைவுரை என்ற தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. சிறப்பான துணை நூல் பட்டியல் நூலுக்கு அழகு சேர்க்கிறது. நம் பழம்பெருமையை உணர்த்தும் இவ்வரிய நூலை வாசிப்போமே. 

நூல்  பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும்
ஆசிரியர் முனைவர் இராசு பவுன்துரை
பதிப்பகம் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாவது முதன்மைச்சாலை, சிஐடி வளாகம், சென்னை 600 113 (தொலைபேசி 044 2254 2992)
ஆண்டு 2004
பக்கங்கள் 270 + x  

முனைவர் இராசு பவுன்துரை அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக்குறிப்பினை முனைவர் இளங்கோவன் அவர்களுடைய வலைப்பூவில் காணலாம்.
-----------------------------------------------
18 ஏப்ரல் 2016 அன்று தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.


19.4.2016 அன்று மேம்படுத்தப்பட்டது.

13 comments:

 1. அருமையான நூல் விமர்சனம்
  நன்றி ஐயா
  அவசியம் வாங்கிப் படிக்கின்றேன்

  ReplyDelete
 2. சிறப்பான நூல் மதிப்புரை!
  த ம மீண்டும் தகராறு செய்கிறது.

  ReplyDelete
 3. முனைவரின் விமர்சனம் நன்று முனைவர் இராசு. பவுன்துரை அவர்களுக்கு வாழ்த்துகள்
  தமிழ் மணம் 2

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மணம் சேர்க்கப்பட்டுள்ளது என்று சொல்கிறது ஆனால் எண்ணிக்கை மாறவில்லை மீண்டும் வருவேன்

   Delete
 4. விருப்பம் உள்ளவர்கள் எந்த விலை என்றாலும் வாங்குவார்கள் என்பதால் குறிப்பிடவில்லையோ :)
  அதிசயம் ஆனால் உண்மை ,ஒரே நொடியில் த ம வாக்களித்து விட்டேன் :)

  ReplyDelete
 5. நூல் விமர்சனம் அருமை ஐயா.

  ReplyDelete
 6. அருமையான நூல் அறிமுகம் ஐயா! தங்கள் விமர்சனமும் சிறப்பாக இருக்கிறது.

  ReplyDelete
 7. அருமையான நூல் அறிமுகம்
  பயன்மிக்க பதிவு

  ReplyDelete
 8. மிகச் சிறப்பான நூல் அறிமுகம் ஐயா...

  ReplyDelete
 9. பண்டைத்தமிழகத்தின் தொன்மையை பறைசாற்றும் அற்புதமானதொரு நூலறிமுகத்துக்கு மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 10. தமிழக வரலாறும் பண்பாடும் பற்றிய ஆய்வில் மற்றொரு வரலாற்றுக் கல். நூலினைப் பற்றிய தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 11. நூல் விமரிசனம் அருமை சார்.

  ReplyDelete
 12. Dr T.Padmanaban (thro email: drtpadmanaban@gmail.com) Still there is no south Indian history based on all inscriptions copied by the British archaelogists and epigraphists are available in a single place in India. No historian has gone through all the volumes published by them. All historical sources are not pooled in a single library. No historian can have the courage to say that he has seen them all. How can the present day persons say that they have discovered or found out new inscriptions. They do not know that they are already published in some volume. History can never be a completed statement with out omission. After observing the position the Rajaguru Schwartz, the guide of Serfoji II remarked "fables are prostituted by the HISTORIANS". Thanjai Prakash had a team with the name KATHAI SOLLIGAL Prakash is still living in East Main street as the spirit of Sujana Bai. Men dominate always. So it is HIS TORY. AND NOT HERSTORY. Please I kneel down before you, please leave down thanjavur history on its previous track.

  ReplyDelete