03 September 2016

தமிழ்ப்பல்கலைக்கழக நூற்கொடை இயக்கம் : 500 நூல்கள் அன்பளிப்பு

தமிழ்ப்பல்கலைக்கழகம் 35ஆம் ஆண்டை நிறைவு செய்யும் (14 செப் 2016) இனிய வேளையில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் 35ஆம் ஆண்டில் அடியெடுத்து (16 ஆகஸ்டு 2016) வைத்துள்ளேன். நூற்கொடை இயக்கத்தில் இதுவரை 500 நூல்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளேன் என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.  
தமிழ்ப்பல்கலைக்கழக நிர்வாகக்கட்டடம்
முந்தைய பதிவில் நான் கூறியதைப் போல நானும், என் குடும்பத்தாரும், நண்பர்களும் படித்த, எங்கள் இல்ல நூலகத்தில் இருந்த நூல்கள் அனைவருக்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணமே நான் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு நூல்களை வழங்க உதவியாக இருந்தது. 

தமிழ்ப்பல்கலைக்கழக நூலகக்கட்டடம்
தமிழ்ப்பல்கலைக் கழகத்திற்கு இலக்கியம், தத்துவம், கலை, பொருளாதாரம், மேலாண்மையியல், கதை, கட்டுரை, கவிதை, கருத்தரங்கத் தொகுப்பு, கோயில் தல புராணம், நீதி நூல், சங்க இலக்கியம், ஆங்கில இலக்கணம், பொது அறிவு, பேச்சு ஆங்கிலம், தமிழ்ச்சுருக்கெழுத்து, ஆங்கிலச் சுருக்கெழுத்து உள்ளிட்ட  நூல்களையும், தினமணி புத்தாண்டு மலர், மாத இதழ்களின் சிறப்பு மலர்கள், The Hindu இணைப்பாக வெளியிட்ட Folio  (supplement to The Hindu, Nov 1996-Sep 1997) வழங்கியுள்ளோம். அவற்றில் கீழ்க்கண்ட தலைப்புகளில் உள்ள   நூல்கள் அடங்கும். 
எங்கள் இல்ல நூலகத்தில் நூல்கள்
அட்லாஸ்
  • Oxford Student Atlas for India, OUP
  • The Concise Orient Longman School Atlas, Orient Longman
அகராதிகள்
  • Concise Oxford Dictionary, 1983
  • Cambridge International Dictionary of English, 1996
  • Oxford Senior Learner's Dictionary, 2001
  • English-Tamil Dictionary, University of Madras, 1988
  • அருங்கலைச்சொல் அகரமுதலி, தமிழ்ப்பல்கலைக்கழகம், 1992
  • சட்டத்தமிழ் அகராதி, தமிழ்ப்பல்கலைக்கழகம், 2001
  • மருத்துவக்கலைச்சொற்கள், சாமி.சண்முகம், 1990 
வரலாறு/கலை
  • பண்டைத்தமிழக வரைவுகளும் குறியீடுகளும், இராசு.பவுன்துரை
  • தமிழ்ப்பெரியார்கள், வ.ரா,
  • Literary History in Tamil, Karthikesu Sivathambi
  • தமிழ் இலக்கிய வரலாறு, தெ.பொ.மீனாட்சிசுந்தரன், (மொ.பெ.), 2000
  • நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள் வரிசை, பழனியப்பா பிரதர்ஸ்
  • Bronzes of South India, P.R.Srinivasan, 1994 (Revised edition)
  • Amaravathi sculptures in the Chennai Government Museum, C.Sivaramamurti,1998
  • Care of Archival materials, V.Jayaraj, 1999
சமயம்
  • பன்னிரு திருமுறை வரலாறு, வெள்ளைவாரணன், 2 தொகுதிகள்
  • திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நூல்கள்
  • காசியில் நடைபெற்ற கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்புகள்
  • வாரியார் அமுதம், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், 2000
  • முதல் ஏழு திருமுறைகள் மற்றும் திருவாசகம் உரையுடன், சதுரா, 2008 
  • திருவாசகம், ராஜராஜ சமய சங்கம், 2003
  • சமயம் வளர்த்த சான்றோர்கள் வரிசை, பழனியப்பா பிரதர்ஸ்
  • Hindu speaks on Religious Values, 1999
  • கீதைப்பேருரைகள், ஆச்சார்ய வினோபா பாவே
  • பகவத் கீதா, 1999
  • முப்பொருள் விளக்கம், தி.மு.சுவாமிநாத உபாத்தியாயர் 1911 (மறுபதிப்பு), களப்பாள் குமரன்
ஆண்டு/ஆயிரமாண்டு நூல்கள் 
  • மனோரமா இயர்புக் 
  • தினமலர் இயர்புக்
  • Manorama Year Book
  • A Millennium Book of Reference, India 1000 to 2000
  • India Book of the Year 2003 (Encyclopaedia Britannica & The Hindu)   
  • India Book of the Year 2004 (Encyclopaedia Britannica & The Hindu)  
வரலாற்றுப்புதினம்
  • சிவகாமியின் சபதம், கல்கி

பிற மொழி நூல்கள்
  • ஸம்ஸ்கிருத பாரதி, ராஜபாளையம்
  • சுலபமாக நீங்களும் இந்தியில் பேசலாம்
  • Agasthiar Hindi-Hindi-Tamil-English Dictionary, 1997
  • Sanmskritasri, Patamala I and II, Sanskrit-English
  • 30 நாள்களில் கன்னட பாஷை
மகாமகம் 
  • மகாமகம் 2014 இந்தியா டுடே, தினத்தந்தி, கல்கி இதழ்கள் 
  • மகாமகம் 2016 சிறப்பு மலர், சரசுவதி மகால் நூலகம், 2016

எனது ஆய்வேடுகள்/நூல்கள்
  • Buddhism in Tamil Nadu with special reference to Thanjavur District, 1995
  • சோழ நாட்டில் பௌத்தம், 1999
  • Buddhism in Cola country, Nehru Trust for the Indian Collections at the VA Museum, New Delhi, 2002, Project
  • வாழ்வில் வெற்றி (சிறுகதைத்தொகுப்பு), 2001
  • Judgement Stories of Mariyathai Raman, (Tr), NCBH
  • Tantric Tales of Birbal, (Tr), NCBH
  • Jesting Tales of Tenali Raman, (Tr), NCBH
  • Nomadic Tales from Greek (Tr), NCBH 
  • படியாக்கம், தாமரை பப்ளிகேஷன்ஸ், 2004
தமிழ்ப்பல்கலைக்கழக நூல் கொடை இயக்கம்
நவம்பர் 2015இல் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் தமிழ்ப் பல்கலைக் கழத்துடன் மக்களுக்கு உணர்வுபூர்வமான நேரடித்தொடர்பை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு நூலை அளித்து பல்கலைக்கழகத்துடன் தங்களை இணைத்துக்கொள்ளலாம் என்றும் அதன்மூலம் லட்சக்கணக்கான நூல்கள் ஆய்வு மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்து, நூல் கொடை இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். நூல்களில் கொடையாளர்களின் பெயர்கள் எழுதப்படும் என்றும் 100க்கு மேல் நூல் அளிப்பவர்களின் பெயர் நூலகப்பெயர்ப்பலகையில் குறிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். 

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தற்போது 1,70,327 நூல்களும், 275 காலமுறை இதழ்களும் உள்ளன. இதில்  26,787 நூல்கள் மறைந்த மற்றும் வாழும் அறிஞர்களின் வீடுகளைத் தேடிச் சென்று பணம் கொடுத்தும், அன்பளிப்பாகவும் பெறப்பட்டவையாகும். இதில் 18,000 அரிய நூல்கள் உள்ளன. 
அறிவுக்கொடையாக 1 இலட்சம் நூல்களைப் பெற  தமிழ்ப்பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள முயற்சியில் உங்களை இணைத்துக்கொள்ள அன்போடு அழைக்கிறேன். தானத்தில் சிறந்தது அறிவு தானம். நீங்கள் படித்து, பயன்படுத்திய நூல்களைக் கொடையாகத் தர பல்கலைக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்வேண்டுகோளை மறுபடியும் உங்கள் முன் வைக்கிறேன்.  தொடர்புக்கு துணைவேந்தர் செயலகத் தொலைபேசி எண்.04362-227040இல் தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு 300 நூல்கள் அன்பளிப்பு வழங்கிய விவரத்தை 26 மார்ச் 2016 நாளிட்ட பதிவில் காணலாம். அதைத் தொடர்ந்து தற்போது மேலும் 200 நூல்கள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வழங்கவுள்ளேன் என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். 20.9.2016 வரை வழங்கப்பட்ட நூல்களின் எண்ணிக்கை : 525

While entering into service of Tamil University on the 35th year I feel happy to share that I have so far donated 500 books to Tamil University which completes its 35th year.

20.9.2016 அன்று மேம்படுத்தப்பட்டது.

16 comments:

  1. சிறப்பான தகவல். வாழ்த்துகள்.

    என்னிடமும் புத்தகங்கள் இருக்கின்றன. தரலாமா... என்ன மாதிரி புத்தகங்கள் தரலாம் எனச் சொன்னால் தர வசதியாக இருக்கும்.....

    ReplyDelete
    Replies
    1. தரலாம். மேலே தரப்பட்டுள்ள அலுவலகச் செய்திக்குறிப்பு உங்களுக்கு உதவும். பயன்படுத்தக்கூடிய நிலையிலான நூல்களை வழங்கலாம்.தெளிவிற்காக நான் தந்துள்ள நூல்களில் சிலவற்றின் பெயரைத் தந்துள்ளேன். ஐயமிருப்பின் துணைவேந்தர் செயலகத்துடன் தொடர்புகொள்ளலாம். நன்றி.

      Delete
  2. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற கூற்றுக் கிணங்க தாங்கள் செய்திருக்கும் நூல்கொடைக்கு வாழ்த்துகள் !

    ReplyDelete
  3. நல்ல மனம் என்றென்றும் வாழ்க..

    ReplyDelete
  4. நல்ல செயல் ஐயா...
    வாழ்த்துக்கள்...
    தொடரட்டும் தங்கள் பணி.

    ReplyDelete
  5. பெரிய மனம். நற்செயல். பாராட்டுகள்.

    ReplyDelete
  6. என்னிடம் நான் படித்த சில நூல்கள் இருக்கின்றன, ஆனால் பெரிய அளவில் இல்லை. சமயம் நேரும்போது கொடுக்க எண்ணம் உங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்

    ReplyDelete
  7. Dr T. Padmanaban (thro' drtpadmanaban@gmail.com):
    u r doing a wrong thing. When I established the library many scholars came forward to donate their books and i have a rare collection of their donate books. i purchased famous professor's collection at an accepted rate. Mr. K. Veeramani the leader of D.K. Party always speak about the rich collection wgich i had gathered compared to other univ. libraries. rsearchers from various univs. came, stayed and finished their collection of data here.
    When the services of Mahathma Gandhi himself is questioned by this wretched Indians, who will remember this richly experienced Professor, Library Director Dr. t. padmanaban.(as per the high courts Decree).
    For me people gave books. i am away. Only V.C. Thirumalai used to address me as the Founder of Tamil Univ. Librarian. When anti Univ. Activists who are against good things are at the top.... not donation... beg for books... nobody will support. Go to cuntry to country to beg for grants .. nobody will give... As Mr. Avvai Natarajan used to say that he will be the last V.C. ... unfavourable conditions prevail.
    mr. jambulingam, i was not allowed to do ph.d. as i was not a teacher. u r a good person in journalistic mind. u dont interfere into dirty politics of univ. administration of any univ. u be neutral. dont publish nonsense in ur blogspot hereafter. be a true journalist never join any side.
    prof., dr. t. padmanaban

    ReplyDelete
  8. வணக்கம்
    ஐயா

    அரிய பணி....தொடர எனது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. நல்லதொரு பணியை நாட்டு மக்களுக்கு வழிகாட்டியாக செய்து இருக்கிறீர்கள். அன்னதானம், பூமிதானம், உடல்தானம் போன்று எல்லோருக்கும் பயன்படும் வண்ணம், நூல்கள் தானம். பாராட்டுகள்.

    நிறையபேர் (என்னையும் சேர்த்துதான்) வீட்டில் சேர்த்து வைத்த இவ்வளவு புத்தகங்கள் நமக்குப் பிறகு என்ன ஆகுமோ என்று கவலையுடன் உரையாடியதை கேட்டு இருக்கிறேன். இவர்களுக்கு உங்களது இந்த பதிவு ஒரு வழிகாட்டி. நன்றி.

    ReplyDelete
  10. பேராசிரியர் கி.அரங்கன் (rangan.lingprof@gmail.com மின்னஞ்சல் வழியாக)
    அன்புள்ள முனை. ஜம்புலிங்கம்,
    தமிழ்ப் பல்கலைக்கழகம் 35 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பது மிக்க மகிழ்ச்சி. நூற்கொடை இயக்கம் மிக உயரிய நோக்கம் கொண்டது. பெறப்படுகின்ற நூல்கள் முறையாகப் பேணிக் காப்பதில் ஐயம் உள்ளது. ஆள்பற்றாக் குறை நூலகத்தில் மிகுதியாக உள்ளது. ஆகையால், உரிய பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு நூலகம் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
    நன்றி.அரங்கன்

    ReplyDelete
  11. கு.கி.கங்காதரன் (gangadharan.kk2012@gmail.com மின்னஞ்சல் வழியாக)
    உங்களின் தயாள குணம் பாராட்டுதலுக்குரியது ..
    மேலும் சிறப்பாக செய்ய எனது வாழ்த்துக்கள் ..
    அன்புடன், கு.கி.கங்காதரன்

    ReplyDelete
  12. தங்கள் பதிவுகளை இங்கும் பதியலாம் http://tamiln.in/

    ReplyDelete
  13. ஐயாவிற்கு வாழ்த்துக்கள்.

    அருமையான சேவை செய்துவரும் உங்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.

    கோ

    ReplyDelete