10 June 2017

அயலக வாசிப்பு : மே 2017

என் வாசிப்பில் கார்டியன், நியூயார்க் டைம்ஸ், டான் உள்ளிட்ட அயலக இதழ்கள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. அவ்வாறு படிக்கும்போது நான் ரசித்ததை அவ்வப்போது முகநூலில் பகிர்கிறேன். அவ்வகையில் மே 2017இல் நான் பகிர்ந்ததை இங்கு தொகுத்துத் தந்துள்ளேன். இந்தியாவில் தாய் சேய் இறப்பு விகிதம் அதிகரிக்க உள்ள அபாயம் குறித்து கார்டியன் இதழில் வெளியான செய்தியும் அடங்கும். செய்திகளின் முக்கியத்துவம், சொற்களின் பயன்பாடு என்ற நிலையில் நான் ரசித்தவற்றை காண்போம், வாருங்கள். (அந்தந்த இதழ்களில் செய்தியை வாசிக்க நன்றி என்ற இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இதழின் பெயரைச் சொடுக்க வேண்டுகிறேன்.) 

7 மே 2017 
உலகில் தற்போது போலியோவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் நைஜீரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான். நைஜீரியாவைச் சேர்ந்த அமினு குழந்தையாக இருக்கும்போது போலியோவால் பாதிக்கப்பட்டவர். பள்ளி செல்ல இயலா நிலைக்கு ஆளான அவர், போலியோவை எதிர்கொள்ளத் துணிந்தார். எச்சூழலிலும் பிச்சையெடுக்கக்கூடாது என்று முடிவெடுத்து, தன்தேவைக்குத் தகுந்தபடி ஒரு வாகனத்தைத் (bike) தயாரித்தார். உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் கண்டார். தன்னைப் போல போலியோவால் பாதிக்கப்பட்டவர்களைப் பணியமர்த்தி அவர்களுடைய வாழ்வில் மலர்ச்சி ஏற்பட உதவுகிறார். அவ்வகையில் பல வாகனங்களை வடிவமைத்துள்ளார். போலியோவை எதிர்கொண்டோர் குழு ஒன்றினை அமைத்து வெற்றிகரமாகச் செயல்படுத்துவதோடு போலியோவை எதிர்கொள்ளலாம் என்று நம்பிக்கையோடு பல திட்டங்களை செயல்படுத்திவருகிறார். (நன்றி : கார்டியன்)
12 மே 2017
11½ வாரக் குழந்தையான அலியா ஜாய் கேட்ஸ் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது எப்படி ? அவளுக்குப் பசியெடுக்கவே அழ ஆரரம்பித்தாள். மகளின் பசியை உணர்ந்த அவளுடைய தாயும் ஆஸ்திரேலியாவின் பாராளுமன்ற உறுப்பிருமான லாரிசா வாட்டர்ஸ் மகளுக்குத் தாய்ப்பால் ஊட்டினார்.குழந்தையின் அழுகை நின்றது. ஆனால் அதே சமயம் பாராளுமன்ற வளாகத்தில் தாய்ப்பால் ஊட்டப்பட்ட முதல் குழந்தை என்ற பெருமை பெற்றது. (நன்றி: நியூயார்க் டைம்ஸ்)
13 மே 2017
அறிவியல் தொழில்நுட்பத்தின் மறுபக்கம், கற்பனை செய்து பார்க்க முடியா எதிர் விளைவுகளை உலகம் எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளது. (நன்றி: கார்டியன்)
15 மே 2017
சீன அதிபருடன் இரு தரப்புப் பேச்சுக்காகக் காத்திருந்த நேரத்தில் பியானோ வாசிக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். அவ்விசை மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பற்றிய சோவியத் காலத் தொடர்புடையவை. இதற்கு முன்னர் 2010இலும் ஒரு நிகழ்ச்சியின்போது இவ்வாறாக புடின் பியானோ வாசித்துள்ளார். (நன்றி : கார்டியன்இவர் சைபீரியாவில் சட்டையின்றி குதிரையை ஓட்டிவர், பறவைகளுடன் (hand glider) பறந்தவர், டால்பின்களுடன் நீந்தியவர், ஜுடோ சண்டையிட்டவர், பைக்கால் ஏரி மற்றும் கருங்கடலில் ஆழத்தில் நீந்தியவர் ஆவார். (நன்றி : நியூயார்க் டைம்ஸ்)

20 மே 2017
43 வயதான ஓர் இந்தியப் பெண்மணி, கருப்பை இன்றி பிறந்த தன்னுடைய 21 வயது மகளுக்கு தானாக முன்வந்து தன் கருப்பையைக் கொடையாகத் தந்துள்ளார். இந்தியாவில் முதன்முதலாக இப்பொழுதுதான் இவ்வாறான கருப்பை மாற்றம் நடைபெற்றுள்ளது. இதற்கு முன்பாக ஸ்வீடனில் ஐந்து முறை ஒரே குழுவினரால் இவ்வாறான கருப்பை மாற்று சிகிச்சை நடைபெற்றுள்ளது. (நன்றி :  இன்டிபென்டன்ட்)
23 மே 2017
பல வெளிநாட்டு இதழ்கள் மறுநாள் வெளிவருகின்ற முகப்புப்பக்கத்தையும், அந்தந்த நாளின் முகப்புப்பக்கத்தையும் வெளியிடுவதைக் காண முடியும். அவ்வகையில் இன்று (23.5.2017) கார்டியன் இதழ் முகப்புப்பக்கம் என்ற நிலையில் இரு பக்கங்களை அடுத்தடுத்து (The Guardian front page, Tuesday 23.05.17 – May’s manifesto meltdown: U-turn on ‘dementia tax’ leaves PM on back foot மற்றும் The Guardian front page, Tuesday 23.05.17 – Murder in Manchester: at least 19 die in arena attack என்ற தலைப்பிலும்) வெளியிட்டுள்ளதைக் காணமுடிந்தது. தாக்குதலுக்குப் பின் முகப்புப்பக்கம் மாற்றப்பட்டிருக்கலாம் என்பதை இதன்மூலம் அறியமுடிகிறது. கடந்த ஆண்டு அமெரிக்க தேர்தலின்போது நியூயார்க் டைம்ஸ் இணைய இதழின் முகப்புப்பக்கத்தை 13 முறை மாற்றியது நினைவிருக்கலாம்.  
23 மே 2017
“நடிப்பின் ஆரம்ப காலத்தில் வெற்றி பெறுவதற்கு ஆளுமை, திறமை, அதிர்ஷ்டம் ஆகியவை ஒரே அளவில் இருக்க வேண்டும் என்று பலர் கூறுவதைக் கேட்டுள்ளேன். இதில் எனக்கு உடன்பாடில்லை. என்னைப் பொறுத்தவரை 99% அதிர்ஷ்டம்தான். சரியான நேரத்தில் சரியான இடத்தில் இல்லாமல் இருந்தால் அங்கே திறமைக்கு என்ன வேலை“ என்று ஆரம்ப காலகட்டத்தில் நடிப்பைப் பற்றிக் கூறிய ரோஜர் மூர் இன்று இயற்கையெய்தினார். (நன்றி: கார்டியன்இவருடைய படங்களில் The Moon with golden gun (1974), The spy who loved me (1977), Moonraker (1979), For your eyes only (1981) உள்ளிட்ட பல படங்களைப் பார்த்துள்ளேன். கல்லூரிக்காலங்களில் நாங்கள் ரசித்த 007 ஜேம்ஸ்பாண்ட் இவரே. 
30 மே 2017
Alone and naked - தனிமையாதல் அல்லது தனிமைப்படுத்தப்படல். இது தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ந்யே பேவான் 1957இல் பயன்படுத்திய, பிரபல்யமான சொற்றொடர் ஆகும். கோர்பியின் அணுஆயுத எதிர்ப்பு நிலைப்பாட்டிற்காக இச்சொற்றொடரில் உள்ள naked என்ற சொல் பிரிக்சிட் விவாதத்தை முன்வைத்து தெரசாவால் பயன்படுத்தப்படுகிறது. (நன்றி : கார்டியன்)
31 மே 2017
"covfefe" என்ற ஒரு சொல் டிரம்பால் ட்விட்டரில் பயன்படுத்தப்பட்டு, அதிக நேரமாகியும் பதிவிலிருந்து நீக்கப்படாத நிலையில் பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் பயன்படுத்திய சொற்றொடர் “despite the constant negative press covfefe” என்பதாகும். இந்த சொற்றொடரில் ‘covfefe’ என்பது எவ்வித தொடர்புமின்றி அந்தரத்தில் நிற்கிறது. விக்ரம் நடித்த சேது திரைப்படத்தில் சீயான் என்ற சொல்லுக்கு பொருள் தேடுவார்களே, அதைப் போல இச்சொல் குறித்து தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது. (நன்றி  : கார்டியன்)
31 மே 2017
பேறுக்காலச் சலுகைகள் முதலில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இனி பொருந்தும் என்ற இந்திய அரசின் புதிய திட்டத்தால் தாய் சேய்களின் வாழ்க்கைத் தரம் அதிக பாதிப்புக்குள்ளாவதோடு குழந்தை மற்றும் தாயாருடைய இறப்பு விகிதம் அதிகரிக்கும். (நன்றி  : கார்டியன்)


16 comments:

  1. இரண்டு தவிர மற்றவையனைத்தும்
    நான் அறியாத செய்திகளே
    நானறிய நமது நாளிதழ்களில் வராதவையே
    தங்கள் பதிவின் மூலமே அறிய முடிந்தது
    தொடர்ந்தால் மகிழ்வேன்
    வாழ்த்துக்களுடன்
    (டிரம்பின் செய்தி கூட நான் இங்கு
    இருப்பதால் அன்றாடம் தொலைக்காட்சிச்
    செய்திகளில் தூள்பறக்கிறது .அதனால் தெரிந்தது )

    ReplyDelete
  2. தாங்கள் படித்த ஆங்கில செய்திகளை பிறருக்கும் அறியும்படி மொழிபெயர்த்து தந்தது பலரும் ரசிக்கும்படி உள்ளது.
    நன்றி
    த.ம.1

    ReplyDelete
  3. பல்வேறு செய்திகளை தெரிந்து கொள்ள முடிந்தது உங்களின் இந்த பகிர்வால், நன்றி.

    ReplyDelete
  4. சுவாரஸ்யமான தொகுப்பு.

    ReplyDelete
  5. தங்களின் வாசிப்புப் பழக்கமும்,
    வாசிப்பிற்காகத் தாங்கள் செலவிடும் நேரமும்
    போற்றுதலுக்கு உரியது ஐயா

    ReplyDelete
  6. எல்லாம் ஆர்வமூட்டும் தகவல்கள்தாம், சில ஏற்கனவே படித்திருந்தாலும்.

    ReplyDelete
  7. பற்பல தகவல்கள் புதியவை ஐயா...

    நன்றி...

    ReplyDelete
  8. அனைத்தும் பயனுள்ள பதிவுகள் மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  9. பயனுள்ள தகவலோடு
    சிறந்த கண்ணோட்டம்

    ReplyDelete
  10. 'இதழியலில் புதிய கலைச்சொல்லாக்கங்கள் - ரசிக்கலாம் ' என்னும் தலைப்பில் நூலாக்கம் செய்யலாமே ...!

    ReplyDelete
  11. தங்களால் பயனுள்ள பல செய்திகளை அறிய முடிந்தது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  12. பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. செய்திகள் அனைத்தும் சுவாரசியம்

    ReplyDelete
  14. சுவாரசியமான தொகுப்பு...

    துளசி, கீதா

    ReplyDelete