03 February 2018

அயலக வாசிப்பு : ஜனவரி 2018

ஜனவரி 2018இல் அயல்நாட்டு இதழ்களில் வாசித்தவற்றில் சில செய்திகளைக் காண்போம். குறைந்த வயதில் அரசி, ஊடகவியலாளர்களைத் தவிர்க்கும் அதிபர், கார்டியன் இதழின் முகப்பு மாற்றம், கார்டியன் மற்றும் அப்சர்வர் இதழ்கள் டேப்ளாய்ட் வடிவிற்கு மாறல்,  இறந்து இரண்டு மாதங்கள் ஆன பின்னரும் புன்னகைக்கும் புத்தத் துறவி. குரங்குகள் படியாக்கம்  உள்ளிட்ட செய்திகள் இவற்றில் உள்ளன. கார்டியன், அப்சர்வர், நியூயார்க் டைம்ஸ், இன்டிபென்டன்ட், சன், டெலிகிராப் ஆகிய இதழ்களில் இச்செய்திகள் வெளிவந்துள்ளன. 
இந்தக் குடியாட்சி உலகில் ஆங்காங்கே முடியாட்சியின் பரிமாணங்கள். 91 வயதாகும் எலிசபெத் அரசி 65 ஆண்டுகளாக இப்பொறுப்பில் உள்ளார். அது சரி, உலகிலேயே மிகக் குறைந்த வயதில் அரசியானவர் யார் தெரியுமா? பூட்டானைச் சேர்ந்த க்யால்சூன் செட்சன் பேமா வாங்சக் (Gyaltsuen Jetsun Pema Wangchuck) இவர்தான் உலகின் மிக இளைய அரசி, இன்டர்னெட்டில் மிகவும் பிரபலமானவர்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளிடமிருந்து தப்புவது எப்படி என்பதற்கு ஒரு புதிய உத்தியைக் கண்டுபிடித்துள்ளார் தாய்லாந்து நாட்டின் பிரதமர். தன்னைப் போல உள்ள அட்டை உருவத்தை (cardboard cutout) வைத்து அதனிடம் அவர்களைக் கேள்வி கேட்கும்படி கூறுகிறார் அவர். அண்மையில் இவ்வாறாக தயார் செய்து வைத்தபின்னரே பத்திரிக்கையாளர் கூட்டத்தினை எதிர்கொண்டுள்ளார்.

கார்டியன் இதழ் தன் முகப்பெழுத்தில் (masthead) மாற்றத்தை நாளிதழிலும், இணையத்திலும், செயலிகளிலும் அறிமுகப்படுத்தவுள்ளதாக 30 நொடி வீடியோ மூலம் ட்விட்டர் வழியாக டீசரில் தெரிவித்துள்ளது. வரும் திங்கட்கிழமை (15 ஜனவரி 2018) முதல் கார்டியன் டேப்ளாய்ட் வடிவத்திற்கு மறுபடியும் மாறவுள்ள நிலையில், 2005 முதல் பயன்படுத்தப்பட்டு வந்த நீல மற்றும் வெள்ளை நிற முகப்பு வேறு வண்ணத்தினைப் பெறும் என்றும், உத்திகளுக்கான இடம் கார்டியன் என்றும் அந்த காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கார்டியன் மற்றும் அப்சர்வர் இதழ்களுக்கான முதன்மை இதழாசிரியர் “பல மாதங்கள் மேற்கொண்ட சிந்தனை, படைப்பாற்றல், இலக்குகளின் அடிப்படையின் விளைவே இந்த புதிய வடிவம்.இதழின் மூத்த ஆசிரியர்களும், வடிவமைப்பாளர்களும் இணைந்து இதனை வடிவமைத்துள்ளனர்.தாம் விரும்புவதைப் போலவே வாசகர்களும் புதிய முகப்பினை விரும்புவர்" என்று கூறியுள்ளார்.


15 ஜனவரி 2018இல் கார்டியன் புதிய வடிவம் பெற்றுள்ளது. சக ஊடகங்கள் என்ன நினைக்கின்றன?
"நாங்கள்தான் பிரிட்டனின் மிகப்பெரிய, சிறந்த தரமான நாளிதழ்" என்கிறது டெய்லி டெலிகிராப் (Daily Telegraph). 2003இல் டைம்ஸ் (Times) டேப்ளாய்ட் வடிவிற்கு மாறியது. டெலிகிராப் (Telegraph) மற்றும் ஃப்னான்சியல் டைம்ஸ் (Financial Times) ஆகிய இதழ்கள் ப்ராட்ஷீட் வடிவில் கடைசியாக வெளியாகின்ற நாளிதழ்களாகும். மிர்ரர் (Mirror) இதழைவிடவும், கார்டியன் 
The Guardian) இதழைவிட 1.50 பவுண்டு விலை குறைவு என்றும் சன் (Sun) கூறுகிறது. சில விமர்சனங்களை முன்வைக்கும் பிபிசி (BBC), "இந்த வடிவம் படிக்க மிகவும் எளிதானது" என்கிறது. "டேப்ளாய்ட் இதழின் சில தவறான பழக்கங்களை இவ்விதழ் மேற்கொள்ள வாய்ப்புள்ளது" என்கிறது டெய்லி மிர்ரர் (Daily Mirror). உலகளாவிய நிலையில் உற்றுநோக்கப்பட்ட இவ்வடிவம் பற்றி நியூயார்க் டைம்ஸ் (New York Times), "பிரிட்டனின் இடதுசாரி இதழ் சக்தி டேப்ளாய்ட் வடிவம் பெறுகிறது" என்று கூறுகிறது. லே மேண்டே (Le Monde, France) இதழும் இதனைப் பற்றி விவாதிக்கிறது.

15 ஜனவரி 2018 முதல் கார்டியன் இதழியல் புதிய வடிவம் பெற்றுள்ளது. மூல கார்டியனான Guardian Egyptianஐ உருவாக்கிய Commercial Type விற்பன்னர்களுடன் இணைந்து, வாசிக்க மிகவும் எளிதாக இருக்கும் வகையில் இந்த வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. கால மாற்றத்திற்கேற்றவாறு கார்டியனின் இடத்தையும் இலக்கையும் குறிக்கும் வகையில் இந்த முகப்பானது புதுப்பிக்கப்பட்ட பலத்தையும், நம்பிக்கையையும் கொண்டுள்ளது என்கிறது கார்டியன்.

 
இளம் வாசகர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இளைஞர்களை நிருபர்களாகப் பணியாற்ற அழைக்கிறது நியூயார்க் டைம்ஸ். "உங்களுடைய மற்றும் உங்கள் நண்பர்களுடைய பிரச்னைகள் நியூயார்க் டைம்ஸ் இதழில் அலசப்படவேண்டும் என விரும்புகிறோம். உங்களுடைய எண்ணங்களுக்கும் எழுத்துகளுக்கும் தளம் அமைத்துத் தர தயாராக இருக்கிறோம். வாருங்கள், உங்களைப் போன்றோரை நிருபர்களாகக் கொள்வதில் பெருமை கொள்கிறோம்".

1791 முதல் வெளியாகின்ற, அப்சர்வர் இதழ் (கார்டியன் இதழின் சகோதர இதழ்) இன்று தன் வடிவில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. உலகில் நெடுநாள் வெளிவருகின்ற ஞாயிறு இதழ்களில் இதுவும் ஒன்றாகும்.


இறந்து இரண்டு மாதங்கள் ஆன ஒரு புத்தத்துறவி சவப்பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டபோது "புன்னகைசெய்யும்நிலையில் இருப்பது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளதுஉடல்நிலை பாதிக்கப்பட்ட லுவா போர் பியான் (Luang Phor Pian, 92)  என்ற அந்த துறவிதாய்லாந்தின் தலைநகரான பாங்காங்கில் நவம்பர் 16இல் இறந்தார்கம்போடியாவைச் சேர்ந்த அவர் தாய்லாந்தின் லோப்பூரி மாகாணத்தில் புகழ்பெற்ற புத்த குருமாராக இருந்தார்அவர் தொண்டு செய்த கோயிலில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்ததுசவப்பெட்டியிலிருந்து அவருடைய உடலை எடுத்தபோது அது அழியாமல் இருந்ததைக் கண்டு அவருடைய சீடர்கள் அதிர்ச்சியடைந்தனர்அதையும்விட அவர் பார்ப்பதற்கு புன்னகைத்துக் கொண்டிருப்பதைப் போல இருந்ததுஅவர்கள் அவருடைய அந்த புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்அவருக்கு புதியசுத்தமான அங்கி அணிவிப்பதற்காக அவருடைய பூத உடல் வெளியே எடுக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்அவருடைய அந்த அமைதியான நிலை பௌத்தத்தின் இறுதி இலக்கானபுத்தத் துறவிகள் அடைகின்றநிர்வாண நிலையின் வெளிப்பாடாகக் கூறப்படுகிறதுதொடர்ந்து அவருடைய சீடர்கள்அவருடைய இறுதியான அடக்கச் சடங்கு செய்யப்படவுள்ளஅவர் இறந்த 100 நாள் வரை தொடர்ந்து வழிபாடு நடத்தவுள்ளார்கள்.

அண்மையில் நடந்துள்ள வரலாற்று சாதனை. டாலி உருவாக்கப்பட்டதைப் போலவே, அதே படியாக்க முறையில் குரங்கள் படியாக்கம் செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில் விரைவில் மனிதர்களும் படியாக்க முறையில் (cloning) உருவாக்கப்படுவார்களோ என்ற ஐயம் வந்துவிட்டது. இவ்வாறாக பிறப்பிக்கப்பட்ட இரு குரங்குகளைப் (Zhong Zhong மற்றும் Hua Hua) பற்றி சீன அறிவியலாளர்கள் கருத்து கூறியுள்ளனர். அந்த குரங்களுக்கு தற்போது புட்டி மூலமாகவே பால் ஊட்டப்படுகிறதாம். அதன் வயதையொத்த பிற குரங்குகளைப் போலவே இவை வளர்கின்றனவாம். வரவுள்ள நாட்களில் மேலும் பல படியாக்கங்கள் செய்யப்படவுள்ளனவாம்.

14 comments:

  1. அவ்வளவு விடயங்களும் பிரமிக்க வைத்தன குறிப்பாக புத்த துறவி.

    நல்ல தகவல்களை பகிர்ந்து கொண்ட முனைவருக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. வியப்பிற்குரிய செய்திகள்
    தங்களின் வாசிப்பு போற்றுதலுக்கு உரியது

    ReplyDelete
  3. பல செய்திகள்....

    எங்களையும் அறிந்துக் கொள்ள வைத்தமைக்கு மிகவும் நன்றி ஐயா....

    ReplyDelete
  4. நன்றி !தகவலுக்கு முனைவரே!

    ReplyDelete
  5. பல தகவல் வியக்க வைக்கிறது.
    படியாக்கம் தேவையா என்ற கேள்வி எழுவதை தடுக்க முடியவில்லை.

    ReplyDelete
  6. புத்த மதத் துறவி பற்றிய செய்தி வியப்பு.....

    க்ளோனிங் செய்தி - இன்னமும் என்ன செய்யப் போகிறார்களோ என்ற சிந்தனை மனதில்.

    உங்கள் மூலம் நாங்களும் அயலக செய்திகளைத் தெரிந்து கொள்கிறோம். நன்றி.

    ReplyDelete
  7. நிறையத் தகவல்கள்...புத்த பிக்குவைப் பார்க்க மனம் சாந்தமாகின்றது. ஓ என் கிரேட் குருவும் இருக்கிறார் கடசியில்:)..

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா,

    உங்களின் இந்த பதிவு நடப்பு உலகம் பற்றிய சில் நிதர்சனங்களை யோசிக்க வைக்கிறது...

    கார்டியன் போன்ற இதழ்கள் காலத்துக்கு ஏற்ப சுயமாற்றம் செய்துக்கொள்ளும் வேலையில் பண்டைய அரச பாரம்பரியங்களும் சில நாடுகளில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன !

    உயிரினங்களை படியக்கம் செய்யும் அளவுக்கு மனிதன் முன்னேறிவிட்டாலும், அவ்வப்போது நிகழும் " புன்னகைக்கும் புத்த துறவி " போன்ற நிகழ்வுகள் சிருஷ்டியின் ரகசியத்தை இயற்கையிடமிருந்து என்றுமே மனிதனால் முற்றிலுமாக படியெடுக்க முடியாது என்பதையும் உணர்த்துகிறது.

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : " ஒரு சாண் வயிறே இல்லாட்டா... "
    http://saamaaniyan.blogspot.fr/2018/02/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    ReplyDelete
  9. அயலக வாசிப்பில் பகிர்ந்தவை அனைத்தும் அருமை .பூட்டான் குட்டி இளவரசர் பிறந்தப்போ அரச குடும்பம் 108,000 மரக்கன்றுகளை நடடங்களாம் மக்களிடம் கொடுத்து ..

    படியாக்கம் பகீரென்கிறது :( டாலியே நோய்வாய்ப்பட்டு இறந்தது எதற்கு இந்த வீண் முயற்சியோ

    ReplyDelete
  10. தங்களது அயலக வாசிப்பினால்
    நானும் புதிய தகவல்களைத் தெரிந்து கொண்டேன்..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  11. சிந்திக்க வைக்கும் அருமையான தகவல்
    தெரிந்துகொள்ள வைக்கும் - தங்கள்
    அயலக வாசிப்பு
    எமக்குப் பயன்தரும்

    ReplyDelete
  12. சுவாரஸ்யம். பாராட்டுகள்.

    ReplyDelete
  13. வணக்கம் சகோதரரே

    அத்தனை அயலக தகவல்களும் வியப்பை ஊட்டுகிின்றன. இறந்ந பின் புத்த துறவியின் சாந்தமான புன்னகை மெய் சிலிர்க்க வைக்கிறது. தங்களின் வாசிப்பில் அத்தனை செய்திகளையும் அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி!

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  14. புதிய தகவல்கள். படித்தேன். நன்றி

    ReplyDelete