09 February 2019

கோயில் உலா : அகஸ்தியான்பள்ளி, குழகர் கோயில்

பொன்னியின் செல்வனில் கல்கி, பூங்குழலி கோடியக்கரையில் படகிலிருந்து இறங்கியபின் நடப்பனவற்றைக் கூறும்போது குழகர் கோயிலைப் பற்றிக் கூறுவார்.  
"..........மற்றொரு பக்கத்தில் குட்டை மரங்கள் அடர்ந்த காட்டின் நடுவில் கோபுரம் ஒன்று தலைதூக்கி நின்றது. அதனடியில் கோடிக்கரைக் குழகர், கோயில் கொண்டிருந்தார். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்ரீசுந்தரமூர்த்தி நாயனார் இந்தக் கோடியக்கரைக்கு வந்தார். காட்டின் மத்தியில் தன்னந்தனியே கோயில் கொண்டிருந்த குழகரைத் தரிசித்தார். 


அந்தோ! இறைவா! இப்படி இந்தக் கடற்கரைக் காட்டின் மத்தியில் துணையின்றித் தனியாக இருந்தீரே? இருக்க வேறு இடமாயில்லை? பக்தர்கள் கூட்டங் கூட்டமாக உமது புகழைப் பாடிக்கொண்டிருக்கும் ஸ்தலங்கள் எத்தனையோ ருக்க ந்தக் கோடிக்கு வந்து பயங்கரக் காட்டிலே தனியே கோயில் கொண்டிருப்பதேன்? க்கொடியேனுடைய கண்கள் ந்தக் காட்சியையும் காண நேர்ந்ததே என்று மனமுருகிப் பாடினார்.... "

வேதாரண்யம் பகுதி சுற்றுலாவின்போது, சுந்தரர் பாடிய குழகர் கோயிலுக்கும், அகஸ்தியான்பள்ளிக்கும் சென்றுவந்தோம். தேவாரப்பாடல் பெற்ற தலங்களை அடுத்தடுத்து பார்த்தது மனதிற்கு நிறைவினைத் தந்தது. அங்கு செல்வோம், வாருங்கள்.  

அகத்தியான்பள்ளி
அகஸ்தியான்பள்ளி, வேதாரண்யம் கோடியக்கரை சாலையில் வேதாரண்யத்திலிருந்து ஒன்றரை  கிமீ தொலைவில் கோடியக்காடு என்னுமிடத்தில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற, காவிரியின் தென் கரையின் அமைந்துள்ள தலமாகும். ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற இங்குள்ள மூலவர் அகஸ்தீஸ்வரர் ஆவார். இறைவி மங்கைநாயகி என்றும் பாகம்பிரியாள் என்றும் அழைக்கப்படுகிறார். சிவபெருமானின் திருமணக்கோலத்தைக் காண்பதற்காக அகத்தியர் தவம் இருந்த பெருமையுடையது. உள்ளூரில் அகத்தியர் கோயில் என்றே அழைக்கின்றனர். 


குழகர் கோயில்
அகத்தியான்பள்ளியை அடுத்து நாங்கள் சென்ற கோயில் கோடியக்கரையில் அமைந்துள்ள குழகர் கோயில் ஆகும். கோடியக்கரையை கோடிக்கரை என்றும், திருக்கோடி என்றும் அழைக்கின்றனர். குழகர் கோயில் உள்ள இடத்தினை கோடியக்காடு என்றும் கடல் உள்ள இடத்தினை கோடியக்கரை என்றும் கூறுகின்றனர்.  குழகர் கோயில், வேதாரண்யத்திலிருந்து கோடியக்கரை செல்லும் சாலையில் 10 கிமீ தொலைவில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற, காவிரியின் தென் கரையின் அமைந்துள்ள தலமாகும். அமைதியான சூழலில் இக்கோயில் அமைந்துள்ளது. சுந்தரரால் பாடப்பெற்ற இங்குள்ள மூலவர் குழகர் என்றும் அமுதகடேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.  இறைவி மைத்தடங்கண்ணி என்று அழைக்கப்படுகிறார். சேரமான் பெருமாள் நாயனாருடன் வந்த சுந்தரர், கோயில் கடலருகே தனித்திருப்பதைக் கண்டு வருந்தி பாடியதாகக் கூறுவர். சுந்தரர், சிவபெருமான் இங்கு இருக்கும் நிலை குறித்து தன்னுடைய பாடலில் குறிப்பிடுகின்றார். சுந்தரர் பாடியதைப் போலவே இறைவன் தனித்துவிடப்பட்ட நிலையில் உள்ளார். கோடியக்காடு காட்டுப்பகுதி என்பதால் பாதுகாப்பிற்காக த்தலத்தில் முன் மண்டபத்தின் வலப்புறத்தில் காடுகிழாள் இருக்கிறாள்.  பிற கோயில்களுக்குச் சென்றபோது கிடைத்த அனுபவத்தைவிட சற்று வித்தியாசமான அனுபவத்தை இங்கு உணர முடிந்தது.
இலங்கையின் பின்புறம் கோடியக்காடு அமைந்துவிட்டதால், ராமர், ராவணனைப் பின் புறமாகச் சென்று தாக்குவது அழகல்ல என்று தனுஷ்கோடி சென்றதாகக் கூறுவர். ராமர் வந்ததை நினைவுபடுத்தும் வகையில் ப்பகுதியில் ராமர் பாதம் அமைக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றி பிறிதொரு பதிவில் காண்போம்.

துணை நின்றவை
பூ.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத் தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம்,2009 
விக்கிபீடியா
தினமலர் கோயில்கள்
பொன்னியின் செல்வன்

11 comments:

 1. கோயில் தகவல்கள் அனைத்தும் அருமை ஐயா...

  ReplyDelete
 2. Very detailed infos with excellent photos which creates the feei of getting Dharshan as directly.Always you bring prompt messages.

  ReplyDelete
 3. அழகான பழமையான கோயில்கள். குழகர் கோயில் புதுப்பிக்கட்டுள்ளது போலும். புது வர்ணமாயிருக்கிறது.

  ReplyDelete
 4. அழகான கோவில்.
  நாங்கள் போய் இருக்கிறோம். ராமர் பாதம் பார்க்க வெகு தூரம் நடந்து போனது நினைவு இருக்கிறது.

  ReplyDelete
 5. இரு கோயில்களும் மிக மிக அழகாக இருக்கின்றன ஐயா. தகவல்களும் அருமை.

  ReplyDelete
 6. இந்தக் கோவில்களுக்குச் சென்றதில்லை செல்லும்வாய்ப்பும் குறைவே

  ReplyDelete
 7. சிறப்பான தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 8. பொன்னியில் செல்வனில் வருகிற குழகர் கோயிலா
  அவசியம் ஒரு முறையேனும் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எழுகிறது
  நன்றி ஐயா

  ReplyDelete
 9. தொடரட்டும் உலா ...
  பரவட்டும் செய்திகள்
  வாழ்த்துகள் அய்யா

  ReplyDelete
 10. அகஸ்தியான்பள்ளி, குழகர் கோயில் பற்றிய தகவல் அருமை.
  முயற்சிகள் தொடர எனது வாழ்த்துகள்

  ReplyDelete
 11. குழகர் கோவில் என்ற வார்த்தையைப்படித்ததுமே பொன்னியின் செல்வன் தான் ஞாபகம் வந்தது. நீங்களும் அதைப்பற்றியே எழுதி ஆரம்பித்திருக்கிறீர்கள்!

  கோவில்களின் அழகும் அமைதியும் புகைப்படங்களில் தெரிகிறது!

  ReplyDelete