18 May 2019

இரு பெருந்தோல்விகள் - 1969க்கும் 2019க்கும் பெரிய வேறுபாடில்லை : முகமது அயூப்

அண்மையில் நடைபெற்ற இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியாவின் பங்களிப்பு என்பதானது, 1969இல் மொராக்கோவில் உள்ள ராபாட் என்ற இடத்தில் அவ்வமைப்பின் முதல் மாநாட்டுத் துவக்க விழா அமர்வில் இந்தியா கலந்துகொள்ள முயன்று தோற்றதை  நினைவுபடுத்தியது. இரு நிகழ்வுகளும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான காரணங்களால் ஒத்துள்ளன. அக்காலகட்டத்தில் புதுதில்லி அந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் இந்தியாவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பானது பாகிஸ்தானின் வலியுறுத்தல் காரணமாக அப்போது பின்வாங்கப்பட்டது. உலகில் அதிகமான இஸ்லாமியரைக் கொண்ட மூன்றாவது நாடாக இருந்த நிலையில் அவ்வமைப்பில் இடம்பெற தகுதியிருந்தும்கூட அக்கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக ஏற்கப்படவில்லை.   


மதச்சார்பின்மைக்கு எதிர்
இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பில் உறுப்பினராக இடம்பெற புதுதில்லி மேற்கொள்ளும் முயற்சி தார்மீக அடிப்படையில் தவறென்றும், அரசியல்ரீதியாகத் தவறு என்றும் அக்காலகட்டத்தில் தலையங்க எதிர்ப்பக்கத்தில் கட்டுரை எழுதியது இன்னும் என் நினைவில் உள்ளது. மதச்சார்பின்மையை அடித்தளத் தத்துவமாகக் கொண்ட இந்தியா மத அடையாளத்தை வரையறுத்துக்கொண்டு இயங்குகின்ற அந்த அமைப்பில் சேர்வது என்பதானது பொருத்தமற்றதாகும். இந்தியாவைப் பொறுத்தவரை இந்த நியதியானது முஸ்லீம், இந்து, கிறிஸ்தவம் அல்லது பௌத்தம் என்று தன்னை மத வரையறைக்குள் கொள்கின்ற அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.

மேலும் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா ஓர் உறுப்பினராக அமைவது என்பதானது பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட அடிப்படைத்தன்மைக்கான சக்திவாய்ந்த நிராகரிப்பாக எண்ணப்படுவதோடு, அவ்வமைப்பில் இந்தியாவை சேர்த்துக்கொள்வதைக் கடுமையாகத் தடுக்கவும் வாய்ப்பாக அமையும். பாகிஸ்தான், பழமைவாத அரபு முடியாட்சியினருடன் கருத்தியல் தொடர்பாக நல்லுறவைப் பேணிவந்ததோடு, அதன் ராணுவம் அவர்களின் பாதுகாப்பற்ற இடங்களைப் பாதுகாப்பதற்காக நன்கு பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களை தேவைப்படும் காலங்களில் அளித்து வருகிறது.  

அக்காலகட்டத்தில் சோவியத் நாடுகளுக்கு எதிரானதாகவும், அமெரிக்காவிற்கு ஆதரவானதாகவும் கருதப்பட்ட சென்டோ எனப்படுகின்ற பாக்தாத் ஒப்பந்த கூட்டமைப்பின் உறுப்பினர்களான ஈரானுடனும், துருக்கியுடன் பாகிஸ்தான் நெருக்கமான உறவினைக் கொண்டிருந்தது. இதன் காரணமாக புதுதில்லியைவிட பாகிஸ்தான் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பில் அதிகமான செல்வாக்கோடு இருந்து வந்ததோடு, அவ்வமைப்பில் இந்தியா உறுப்பினராவதைத் தடுக்கின்ற அனைத்து முயற்சிகளையும் முறியடித்துவருகிறது. இச்சூழலில் நான் நினைத்தது சரியாகிவிட்டது. புதுதில்லி முன்கூட்டியே நன்கு சிந்தித்திருந்தால் அவ்வமைப்பில் உறுப்பினராகவதற்கு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக எதிர்கொண்ட தேவையற்ற அவமானத்தைத் தவிர்த்திருக்கலாம்.

இன்றைய சூழ்நிலை என்பதானது ஒருவகையில் 1969இல் இருந்த நிலையிலிருந்து மாறுபட்டதாகவும், அப்போதிருந்த நிலையில் இருப்பதைப் போலவும் காணமுடிகிறது. அண்மையில் நடைபெற்ற நிகழ்வு இதனை வெளிப்படுத்துகிறது. அபுதாபியில் நடைபெற்ற இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் வெளிநாட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் பாகிஸ்தானின் எதிர்ப்புக்கிடையிலும், நல்லெண்ண அடிப்படையிலும் விழா ஏற்பாட்டாளர்களான ஐக்கிய அரபு அமீரகமும் சவுதி அரேபியாவும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சிறப்பு விருந்தினராக அழைக்கவும், சிறப்புரையாற்றவும் முடிவெடுத்தன. இது உலகளாவிய நிலையில் இந்தியாவின் வளர்ந்துவரும் பொருளாதார மற்றும் அரசியல் நிலையாலும், அதன் தொழில்நுட்பரீதியான திறமைசார் பணித்திறன்களாலும் எழுகின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதற்காக வளைகுடா முடியாட்சி நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளின் பிரதிபலிப்பாகும்.

ஒரு புதிய திருப்பம்
இங்குதான் 1969க்கும் 2019க்கும் இடையிலான வேறுபாடு நிறைவுற்று, ஒற்றுமைத்தன்மை உருவாகிறது. தீவிரவாதத்திற்கு எதிரான சுஷ்மாவின் பேச்சு பாகிஸ்தானையே குறிவைத்தது. இருந்தாலும் அவருடைய உரைக்குப் பின் நிகழ்ந்த அடுத்தடுத்த நிகழ்வுகளால் நடுநிலையாக்கம் செய்யப்பட்டு சரிகட்டப்பட்டன.
முதலாவதாக கூட்ட நிறைவில் கொணரப்பட்ட அபுதாபியின் அறிக்கையில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆற்றிய உரைக்கு நன்றி கூறப்படவில்லை. சிறப்பு விருந்தினராக சுஷ்மா கலந்துகொண்டதைப் பற்றியோ சிறப்புரையைப் பற்றியோ அவ்வறிக்கையில் இல்லை. இந்த விடுபாடானது மிகத் தெளிவாகத் தெரிந்ததை, அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்த, துபாயில் ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் நிகழ்த்தவுள்ள 2020 எக்ஸ்போ கண்காட்சி போன்ற  முக்கியமற்ற பொருண்மைகள் மூலமாக அறிய முடிந்தது.

இரண்டாவது, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியதுபோல இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான பிரச்னையைப் பற்றி இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் அறிக்கையில், அப்பகுதியில் நிலவிவருகின்ற பதற்றத்தைக் குறைப்பதற்காக நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானியை விடுவிப்பதாகக் கூறிய பாகிஸ்தானின் பிரதம மந்திரி இம்ரான் கானின் நேர்மறை நடவடிக்கையை கூட்டமைப்பு வரவேற்பதாகக் கூறப்பட்டுள்ளது.  இவ்வாறாக திசைதிருப்பிவிடப்பட்ட நிலையில் பாகிஸ்தானின் இந்த ‘முயற்சி’க்கு நேர்மறைத் திருப்பம் தரப்பட்டது. தற்போது நிலவும் இந்திய பாகிஸ்தான் பிரச்னைக்குக் காரணமான, தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஆதரித்து வருகின்ற, அதன் விளைவாக புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதைப் பற்றி எவ்விடத்திலும் எக்குறிப்பும் காணப்படவில்லை.

மூன்றாவதாக, அபுதாபியின் அறிக்கையோடு இணைந்திருந்த காஷ்மீரைப் பற்றிய தீர்மானம் இந்தியக் கண்ணோட்டத்தில் வேதனை தந்ததாகும். மாநிலத்தில் நிலவுகின்ற “அட்டூழியம் மற்றும் மனித உரிமை மீறல்கள்” என்று கூறப்பட்டதோடு மட்டுமன்றி “காஷ்மீரில் இந்தியாவின் தீவிரவாதம்” என்ற சொற்றொடர் அதில் காணப்பட்டது. இந்த தொடர் நிகழ்வுகளிலிருந்தும் கூட்ட அறிக்கையில் சொற்கள் அமைக்கப்பட்ட விதத்திலிருந்தும் என்னதான் சுஷ்மாவுக்கு அவர்கள் அழைப்பு விடுத்தபோதிலும், பாகிஸ்தான் தன் குணத்தை மாற்றாது என்பதும் கூட்டமைப்பில் பாகிஸ்தானின் செல்வாக்கு என்பதானது சிறிதளவுதான் சரிந்துள்ளது என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

இன்னும் சொல்லப்போனால் அபுதாபி மாநாட்டிற்காக சுஷ்மாவிற்கு விடுத்த அழைப்பினை அரைகுறையாகக் கொண்டாடுவதற்குப் பதிலாக, அதனை ஏற்பது குறித்து முன்னரே தீர்க்கமாக முடிவெடுத்திருக்க வேண்டும். பல ஆண்டுகளாக இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு  இந்திய-பாகிஸ்தான் தொடர்பாக தீர்மானங்களை பாகிஸ்தானுக்கு சாதகமாக எடுத்து வரும் நிலையில் வெளியுறவுத்துறை இதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.  இதிலிருந்து இக்கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்துகொண்டதென்பதானது - 1969இல் நடைபெற்ற ராபாட் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா மேற்கொண்ட முயற்சியைப் போல - ஒரு தவிர்க்கப்பட்டிருக்கவேண்டிய பெரிய தோல்வி என்பது புலனாகிறது.

நன்றி : The Hindu
Fifty years apart, the story of two OIC failures, Mohammed, Ayoob, The Hindu, 5 March 2019 என்ற கட்டுரையின் மொழியாக்கம். 

இப்பொருண்மை தொடர்பான மற்றொரு கட்டுரை. வாய்ப்பிருப்பின் விரைவில் மொழியாக்கம் செய்யப்படும்.

17 comments:

 1. சிறு சரிவு போதும் தொடர் சரிவைச் சந்திக்க... விரைவில் நிலைமை மாறும்!

  ReplyDelete
 2. மதச்சார்பின்மையை அடித்தளத் தத்துவமாகக் கொண்ட இந்தியா மத அடையாளத்தை வரையறுத்துக்கொண்டு இயங்குகின்ற அந்த அமைப்பில் சேர்வது என்பதானது பொருத்தமற்றதாகும்
  சரியென்றே தோன்றுகிறது

  ReplyDelete
  Replies
  1. இந்த நியதி
   சமய அடையாளத்தை உடைய தனி மனிதனுக்கும் பொருந்தும் தானே!.

   Delete
 3. இங்கு "அரசியல்" செய்ய வேண்டும் அல்லவா...?!

  ReplyDelete
  Replies
  1. சிலருக்கு அப்படியான அரசியல் இங்கே தேவை....

   Delete
 4. கட்டுரையின் கருத்து சரிதான்... ஆனால் இஸ்லாமிய தேசங்கள் இந்தியாவை ஒதுக்கிவிட்டு இஸ்லாமியரின் நலம் பேணமுடியாது

  ReplyDelete
 5. இஸ்லாமிய நாடுகள் எந்தச் சூழலிலும் பாக்கிஸ்தானை விட்டுக்கொடுக்காது.

  இருப்பினும் இந்தியா பலமான நாடு என்பது அனைத்து நாடுகளும் அறிந்ததே...

  ReplyDelete
 6. 1969-க்கு 2019 நிலை முன்னேற்றம் தானே!..

  இனி வரும் ஆண்டுகளில் இதே இராஜதந்திரத்தைக் கையாண்டால் என்ன நிகழ்கிறது என்று பார்க்கலாம்.
  பாக்கிஸ்தானைத் தவிர்த்து மற்ற இஸ்லாமிய நாடுகள் நம் நாட்டுடனான உறவை பலப்படுத்த விரும்புகின்றன என்ற நிலை நமக்கு சாதகமான ஒன்று தானே! அந்த நிலை தானே நாளைய நாட்களில் பாக்கிஸ்தானுடனும் நம் நட்புறவை சமன்படுத்த உதவியாக இருக்கும்!

  உண்மையான மதச்சார்பின்மை என்பது எல்லா மதங்களுக்கும் சமமான மரியாதை கொடுப்பதாகத் தானே இருக்க முடியும்?.. அதனால் இஸ்லாமிய நாடுகள் என்று மதப்பூச்சு பூசி அண்டை நாடுகளுடன் உறவுநிலைகளை மேம்படுத்தாது போவது நமது மதச்சார்பின்மைக்கு அடையாளம் அல்லவே!

  மற்ற இஸ்லாமிய நாடுகளுடனான நமது ஆக்கப்பூர்வான உறவுகளை விரும்பாதோர் தான் அந்த நாடுகளுடனான நம் நாட்டிற்கான இடைவெளியை விரும்புவர். அந்த இடைவெளி ஆரோக்கியமான நிலை இல்லை, இல்லையா?..  ReplyDelete
  Replies
  1. நமது எரிபொருள் எண்ணைத் தேவைக்கு இஸ்லாமிய நாடுகளில் நட்பு அவசியம். அந்த விஷயத்தில் திரு. மோடி ஆக்கபூர்வமான சில முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியும் அடைந்திருக்கிறார்.மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அந்த நட்புறவைத் தொடர வேண்டும்.

   Delete
 7. கட்டுரை சிறப்பாக உள்ளது. இஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தானிற்குக் கொடுக்கும் ஆதரவில் குறையவில்லை என்றாலும், விட்டுக் கொடுக்காவிடினும் இந்தியாவையும் அவர்கள் புறக்கணிக்க முடியாது. ஏனென்றால் இந்தியாவின் வல்லமை அவர்களுக்கும் தெரியுமல்லவா. மட்டுமல்ல மதச்சார்பின்மை என்பதே பிற மதங்களையும் மதித்து அதில் பங்கு பெறுவதுதானே

  கீதா

  ReplyDelete
 8. இந்தப்பதிவும் வந்துள்ள ஒவ்வொரு விமர்சனமும் சிறப்பாக உள்ளது.

  ReplyDelete
 9. ஹிந்து பத்திரிகை பொதுவாகவே மத்திய அரசின் முயற்சிகளுக்கு எதிரானது என்பது நமக்குத் தெரிந்ததே. எந்த வகையிலாவது அரசைக் குறைகாண வேண்டும் என்பதே அதன் நிலைப்பாடு. அதன் வெளிப்பாடுதான் இக்கட்டுரை.

  உண்மையில், பாகிஸ்தானை பொருட்படுத்தாமல் முதல்முறையாக இந்தியாவுக்கு அமர்வில் இடம் தந்ததின் மூலம் இந்தியாவில்
  முஸ்லீம்களுக்கு அவர்கள் மரியாதை செய்திருக்கிறார்கள் என்றுதான் கருதவேண்டும். ஒருவேளை, அந்த அமர்வில் இந்தியா பங்கெடுக்க மறுத்திருந்தால் இதே பத்திரிக்கை அதனை மத்திய அரசின் இந்துத்துவா கொள்கை என்று சாடி இருக்கும் என்பதை நாம் அறியாமலா இருக்கிறோம்!

  ReplyDelete
  Replies
  1. இந்தியா மதச்சார்பற்ற நாடு, பிறகு எவ்வாறு இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ள இயலும். முற்றிலும் தவறான முன்னுதாரணம்.

   Delete
 10. அருமையான கட்டுரை ஐயா. என்ன இருந்தாலும் பாகிஸ்தானுக்கு ஆதரவு குறையாது என்பது தெரிகிறது.

  ReplyDelete
 11. இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளாவிட்டால் ஹிந்துத்துவா என்னும் பழியை ஏற்க வேண்டியிருந்திருக்கும். கலந்து கொண்டதன் மூலம் அவர்களின் உண்மை ஸ்வரூபம் புரிந்தது.

  ReplyDelete
 12. இந்தியா மத சார்பற்ற நாடு என்பது ஏட்டளவில்தான் உண்மையில் ஹிந்துத்தவா அரசு ஹிந்துஅரசாகவே செயல் படுகிறதோ என்னும் ஐயம் உண்டு

  ReplyDelete