முகப்பு

29 November 2014

கோயில் உலா : நவம்பர் 2014

8.11.2014 அன்று தஞ்சாவூர் சைவசித்தாந்த ஆய்வு மைய நிறுவனர் முனைவர் வீ.ஜெயபால் அவர்களுடன் தலப்பயணம் சென்றோம். இப்பயணத்தில் கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருஆலம்பொழில், திருக்காட்டுப்பள்ளி, திருப்பேர்நகர், திருவானைக்காவல், திருச்சி, திருவெறும்பியூர் ஆகிய இடங்களுக்குச் சென்றோம். இவற்றில்  திருஆலம்பொழில், திருக்காட்டுப்பள்ளி, திருப்பேர்நகர் மூன்று கோயில்கள் தற்போது முதல் முறையாக நான் செல்கிறேன். பிற கோயில்களுக்கு முன்னர் பல முறை சென்றுள்ளேன். 


1)கண்டியூர்(பிரம்மசிரகண்டீஸ்வரர்/மங்களாம்பிகை/அப்பர் பாடல்)
தேவாரப்பாடல் பெற்ற சோழ நாட்டுத் தென்கரைத்தலம். தஞ்சை திருவையாறு சாலையில் உள்ளது. இக்கோயிலில் பிற்காலத்தில் வைக்கப்பட்ட பிரம்மா, சரஸ்வதியை திருச்சுற்றில் காணலாம். சப்தஸ்தானத் தலங்களில் இதுவும் ஒன்று.

கண்டியூர் இராஜகோபுரம்


கண்டியூர் விமானம்


2)திருப்பூந்துருத்தி(புஷ்பவனேஸ்வரர்/சௌந்தரநாயகி/அப்பர் பாடல்)
தேவாரப்பாடல் பெற்ற சோழ நாட்டு தென்கரைத்தலம். கண்டியூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில், கண்டியூரை அடுத்து உள்ளது.  இத்தலத்தில் நந்தி விலகிய நிலையில் உள்ளது. அப்பர் உழவாரத் தொண்டு செய்த தலம் என்று எண்ணி, காலால் மிதிக்க அஞ்சி வெளியில் நின்ற ஞானசம்பந்தருக்கு, இறைவன் நந்தியை விலகச் செய்து காட்சி தந்ததாகக் கூறுவர். சப்தஸ்தானத் தலங்களில் இதுவும் ஒன்று.
திருப்பூந்துருத்தி இராஜகோபுரம்

திருப்பூந்துருத்தி விலகிய நிலையில் நந்தி 




3)திருஆலம்பொழில்(வடமுலேஸ்வரர்/ஞானாம்பிகை/அப்பர் பாடல்)
தேவாரப்பாடல் பெற்ற சோழ நாட்டு தென்கரைத்தலம். கண்டியூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில், மேலத்திருப்பூந்துருத்தியை அடுத்து உள்ளது.  திருவையாற்றிலிருந்து பூதலூர் வழியாகத் திருச்சி செல்லும் பேருந்தில் வந்தால் இத்தலத்தில் இறங்கலாம்.பல நாள்களாக நான் பார்க்க ஆசைப்பட்ட கோயில். தற்போதுதான் என் விருப்பம் நிறைவேறியது. கோயிலில் தற்போது திருப்பணி நடைபெற்றுவருகிறது. பிரகாரத்தில் ஐந்து லிங்க பானங்கள் உள்ளன.





திருஆலம்பொழில் இராஜகோபுரம் 

திருஆலம்பொழில் பிரகாரம்
4)திருக்காட்டுப்பள்ளி(அக்னீஸ்வரர்/சௌந்தரநாயகி/ஞானசம்பந்தர்,அப்பர் பாடல்)
மேலைத்திருக்காட்டுப்பள்ளி என்றழைக்கப்படும் தேவாரப்பாடல் பெற்ற சோழ நாட்டு தென்கரைத்தலம். திருச்சி, தஞ்சையிலிருந்தும், கண்டியூர், திருவையாறு, கல்லணை முதலிய இடங்களிலிருந்தும் இத்தலத்திற்குப் பேருந்துகள் உள்ளன. கோயிலின் கருவறை சற்று தாழ்வான நிலையில் உள்ளது. திருக்காட்டுப்பள்ளியில் குடமுருட்டி ஆறு பிரிகிறது.

திருக்காட்டுப்பள்ளி இராஜகோபுரம்
 திருக்காட்டுப்பள்ளி கருவறை

5)திருப்பேர் நகர் (அப்பாலரெங்கநாதன்/கமலவல்லித்தாயார்/நம்மாழ்வார்)
தேவாரப்பாடல் பெற்ற சோழ நாட்டு தென்கரைத்தலங்களைப் பார்த்து வந்துகொண்டிருந்தபோது, மங்களாசாசனம் செய்யப்பெற்ற கோவிலடி எனப்படும் திருப்பேர் நகர் சென்றோம். திருச்சியிலிருந்து 15 மைல் தொலைவில் இத்தலம் உள்ளது. மற்றொரு திவ்யதேசமான அன்பில் என்னுமிடத்திலிருந்து கொள்ளிட நதியின் மறுகரையைச் சேர்ந்தால் இத்தலத்தை அடையலாம். கோயிலில் தற்போது திருப்பணி நடைபெற்றுவருவதால் மூலவரைப் பார்க்கமுடியவில்லை.

அப்பாலரெங்கநாதர் கோயில், திருப்பேர் நகர் 
அப்பாலரெங்கநாதர் கோயில், திருப்பேர் நகர்

6)திருவானைக்காவல்(ஜம்புகேஸ்வரர்/அகிலாண்டேஸ்வரி/மூவர் பாடல்)
திருஆனைக்கா என்றழைக்கப்படும் தேவாரப்பாடல் பெற்ற சோழ நாட்டு வடகரைத்தலம். திருச்சிக்கு அருகில் உள்ளது. பஞ்சபூதங்களுள் நீர்த்தலமாக விளங்குகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வரும்போது கருவறையில் உள்ள லிங்கத்திருமேனி தண்ணீர் சூழப் பார்த்துள்ளேன். தற்போது அவ்வாறு இல்லை. கருவறை சற்றுத் தாழ்ந்த நிலையில் உள்ளது.


திருவானைக்காவல் இராஜகோபுரம்
திருவானைக்காவல் நாலுக்கால் மண்டபம்
7)திருச்சிராப்பள்ளி(தாயுமானவர்/மட்டுவார்குழலி/ஞானசம்பந்தர்,அப்பர் பாடல்)
சிராப்பள்ளி என்றழைக்கப்படும் தேவாரப்பாடல் பெற்ற சோழ நாட்டு தென்கரைத்தலம். திருச்சி நகரின் நடுவில் உள்ள மலைக்கோட்டையில் இக்கோயில் உள்ளது. மலையடிவாரத்திலிருந்து 258 படிகளைக் கடந்தபின் கோயிலை அடையலாம். வலப்புறம் உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதை உள்ளது. அப்பாதையில் சென்று உச்சிப்பிள்ளையாரை வணங்கினோம். மலையிலிருந்து நகரைப் பார்க்க மிகவும் அற்புதமாக இருந்தது.
திருச்சி தாயுமானவர் கோயில்
8)திருவெறும்பூர்(எறும்பீஸ்வரர்/நறுங்குழல்நாயகி/அப்பர்)
திருஎறும்பியூர் என்றழைக்கப்படும் தேவாரப்பாடல் பெற்ற சோழ நாட்டு தென்கரைத்தலம். திருச்சி தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் உள்ளது. இக்கோயில் மலை மீது உள்ளது.  கிழக்கு நோக்கிய வாயில் வழியாக 125 படிகள் சென்றால் மேலே கிழக்கு நோக்கிய சன்னதியைக் காணலாம். எங்களது பயணத்தின் நிறைவாக இக்கோயில் அமைந்தது. 
துணை நின்றவை
திருமுறைத்தலங்கள், பு.மா.ஜெயசெந்தில்நாதன், வர்த்தமானன் பதிப்பகம், 21, ராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை 6/00 017, தொலைபேசி  28144995, 28140347,43502995


108 வைணவ திவ்யதேச வரலாறு, ஆ.எதிராஜன், ஸ்ரீவைணவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், 85/1, கோட்டையூர் சாலை, செக்காலை, காரைக்குடி, தொலைபேசி  425929 


நன்றி : இத்தலச்சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்து எங்களை அழைத்துச் சென்ற முனைவர் வீ.ஜெயபால்  மற்றும் குழுவினர், புகைப்படம் எடுக்க உதவிய திரு வேதாராமன்  ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி.
நன்றி : இத்தலச்சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்து எங்களை அழைத்துச் சென்ற முனைவர் வீ.ஜெயபால்  மற்றும் குழுவினர், புகைப்படம் எடுக்க உதவிய திரு வேதாராமன்  ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி.

22 comments:

  1. அற்புதமான புகைப்படங்களுடன் விரங்கள் அனைத்தும் அருமை
    சிறப்பு வாய்ந்த பணியை இறைவன் தங்களுக்கு கொடுத்ததை மேலும் சிறப்புற எங்களுடன் பகிர்ந்தமைக்கு முனைவர் அவர்களுக்கு எமது நன்றி.
    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    ReplyDelete
  2. அழகிய படங்கள் - தலங்களைப் பற்றிய திருக்குறிப்புகள்..
    உங்களுடன் நானும் திருத்தலச் சுற்றுலா தரிசனம் செய்தது போல இருக்கின்றது..

    திருப்பூந்துருத்தி, திருஆலம்பொழில், திருக்காட்டுப்பள்ளி, திருப்பேர்நகர், திருஎறும்பூர் - ஆகிய தலங்களைத் தங்கள் பதிவின் வாயிலாக தரிசனம் செய்தேன். மகிழ்ச்சி..

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா.

    தங்களின் பதிவுவழி அறியாத ஆலயம் பற்றி புகைப்படம் வாயிலாக அறிந்தேன். இறை தரிசனம் கிடைத்தது போல ஒரு உணர்வு.. பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. அருமையான ஆலையங்கள் பற்றிய தகவல்கள் தொகுப்பும் அழகு! படங்களும் அழகு!

    ReplyDelete
  5. அழகிய படங்களுடன் அறியாத ஆலயங்கள் பற்றிய உங்கள் பயணத் தொகுப்பு அருமை ஐயா...

    ReplyDelete
  6. அழகிய வண்ணப் படங்கள் மற்றும் சிறுசிறு குறிப்புகளுடன் புண்ணிய தலங்கள். அப்படியே தொகுத்தால் ஒரு சிறு கையேடு கிடைக்கும். பிறருக்கும் பயன்படும். அடுத்த பயணம் பற்றியும் அறிய ஆவலாய் இருக்கிறேன். வாழ்த்துக்கள். ( முன்னுரையில் திருசி > திருச்சி என்று மாற்றவும்)

    ReplyDelete
  7. அய்யா.! அருமையான வண்ணப் படங்கள்...நாங்களும் உங்களுடன் ஆலய உலா வந்ததுபோல் ஒரு உணர்வு,.நன்றி அய்யா

    ReplyDelete
  8. அறியாத பல தகவல்கள்... தொடர வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  9. ஆலயந் தொழுவது சாலவும் நன்று என்பார்கள். தங்களது உலா காணாதவர்களையும் ஒரு சுற்று ஏற்றி உலவ விட்டு வரும். பகிர்விற்க நன்றி அய்யா

    ReplyDelete
  10. அற்புதமான படங்களுடன் ஒரு ஆலய வழிபாடு
    நன்றி ஐயா

    ReplyDelete
  11. அழகிய ஆன்மீக சுற்றுலா! சிறப்பாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  12. நான் இப்பொழுது தான் சைவசித்தாந்த உலகில் பிறந்து தவழ ஆரம்பித்திருக்கிறேன். அடுத்த முறை இந்தியா வரும்பொழுது, தங்களின் இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா.
    பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி

    ReplyDelete
  13. படங்களும் தகவல்கள் அருமை

    ReplyDelete
  14. நிறைவான தகவல்களுக்கு நன்றி/அ.கலைமணி

    ReplyDelete
  15. திருவானைக்காவல் தவிர மற்றவை பார்த்திராத தலங்கள். வாய்ப்ப்பு ஏற்படுத்திக்கொண்டு பார்க்க வேண்டும்

    ReplyDelete
  16. இந்தப் பதிவானது தாங்கள் தரிசித்த இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று தரிசிக்க வேண்டும் என்ற ஆவலை எனக்கு ஏற்படுத்தியுள்ளது. நேர்த்தியான படங்கள் அருமை. தொடரட்டும் தங்கள் பணி. நன்றி.

    ReplyDelete
  17. நான் பல காலமாக ஏங்கிக் கொண்டிருக்கும் பயணங்கள் இவை. இப்படியாவது தரிசிக்கும் பேறு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்

    ReplyDelete
  18. எட்டு திருக்கோவில்களுக்கும் கோயில் உலா சென்று வந்ததைப்போன்று இருந்தது தங்கள் பதிவைப்படித்ததும். பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  19. திருத்தல விவரங்கள் படத்துடன் சிறப்பு.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  20. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

    http://blogintamil.blogspot.com.au/2014/12/blog-post_7.html?

    ReplyDelete