முகப்பு

28 December 2014

துளிர் விடும் விதைகள் : வி.கிரேஸ் பிரதிபா

மதுரையில் நடந்த வலைப்பதிவர்களின் விழாவில் சந்தித்த நண்பர்களில் ஒருவர் வி.கிரேஸ் பிரதிபா. அவருடைய வலைப்பூவினை நான் வாசித்த போதிலும் மதுரையில் நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. விழாவின்போது வெளியிடப்பட்ட நூல்களில் அவருடைய கவிதை நூலும் ஒன்று. அவர் தந்து சில நாள்களில் படித்து முடித்தபோதிலும் அதைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள தற்போதுதான் வாய்ப்பு கிடைத்தது. கடந்த வாரம் ஜி.எம்.பி. ஐயாவின் சிறுகதைகளைப்  படித்த நாம் இந்த வாரம்  கவிதைகளைப் படிப்போம்.



துளிர் விடும் விதைகள் என்று தலைப்பு அமைந்துள்ள போதிலும் கவிதையில் காணலாகும் கருத்துக்கள் பல விருட்சங்களாகக் காணப்படுகின்றன. கவிதைகளைவிட சிறுகதைகளின்பால் எனக்கு அதிகம் ஈடுபாடு உண்டு. ஆனால் இவரது கவிதைகளைப் படித்தவுடன் கவிதைகளின் மேலான ஈடுபாடு அதிகமாகிவிட்டது.

"பணி சார்ந்தும் மொழி
வேறாய் இருக்கலாம்
படிக்கும் நூற்கள் 
பன்மொழியினவாய் இருக்கலாம்.
ஆயினும்
இன்னுயிர்த் தமிழினும் இனியது உண்டோ?"

பிற மொழி குறித்து பெருமை பேசிக்கொள்பவர்கள் சற்று ஆழமாக இக்கவிதையை வாசிக்கவேண்டும். தாய்மொழியின் இனிமையை ரசிக்க இதைவிட சிறந்த சொற்கள் உண்டா என்பது வியப்பே.

"இலக்கியம் படித்தால் அன்றோ,
மருத்துவமும் விண்வெளியும்
பாட்டில் ஒளிந்திருப்பது தெரியும்?"

ஈராயிரமாண்டுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இலக்கியம் இருக்க, அதைவிடுத்து தமிழில் இவ்வாறான சொல்லடைவு இல்லை, பயன்பாடு இல்லை, சொற்கள் இல்லை என்று கூறி பம்மாத்தாகப் பேசித்திரிபவர்க்கு இக்கவிதை ஒரு பாடம்.


"ஆறுகளும் காணாமல் போனால்
ஆழியும் என்ன ஆகுமோ?
வானம் எங்கிருந்து முகருமோ?
உயிர்கள் எங்ஙனம் தழைக்குமோ"

இயற்கை வளங்கள் பல நிலைகளில் வீணடிக்கப்படுவதை வேதனையோடு பகிர்ந்துகொள்கிறார் இக்கவிதையில். கவிஞருடைய சமூகப்பிரக்ஞையினை இக்கவிதையில் காணமுடிகிறது.

"புதிதல்ல என்றாலும்
உன் ஓசை கேட்டவுடன்
துள்ளும் என் உள்ளம்"

நன்கு லயித்து எழுதப்பட்ட வரிகள். இவ்வாறான எண்ணங்களைப் பலர் வாழ்வில் அனுபவித்திருப்பர். ஒவ்வொருவரும் தத்தம் துணைக்காக எழுதப்பட்டதைப் போல உணர்வர். என் உள்ளம் இவ்வாறாகத் துள்ளியுள்ளதை நான் அறிவேன்.

"வன்முறையும் வன்கொடுமையும்
வற்றிட வையகத்து வாழ்வோரெல்லாம்
வளமாய் வாழும் நாளே திருநாள்"

நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் காணப்படுகின்ற அதிர்ச்சி தருகின்ற சில நிகழ்வுகள் நம்மை வேதனைப்பட வைக்கின்றன. உண்மையில் அவ்வாறான செய்திகள் வராத, நடக்காத நாளே நல்ல நாள் என்ற இவருடைய ஆதங்கத்தை நம்மிடம் வெளிப்படுத்துவது அவருடைய மனதின் பாரத்தை குறைக்க மட்டுமல்ல, நம்முடைய எதிர்பார்ப்பை வெளிப்படுத்தவும்தான்.
 
"நானாக நான் இருத்தல் எப்பொழுது?
நானாக நான் இருத்தல் பிழையா?"

நம்மில் பலர் செய்யும் தவறுகளை மிகவும் அழகாக இக்கவிதையில் கொணர்ந்துள்ளார் ஆசிரியர். ஒப்புமை காட்டியே நாம் பழக்கப்பட்டுவிட்டோம். இத் தவறினை குறிப்பிட்ட காலம் வரை நானும் செய்துள்ளேன். ஒருகாலகட்டத்தில் திருத்திக்கொண்டேன். மிக இயல்பான எண்ணத்தை நச்சென்று கூறிய விதம் அருமை.

   
தந்தை, தாய், கணவன், நட்பு, இயற்கை, கலைகள், சமூகம், தாய்மை என்ற பல பொருண்மைகளில் வித்தியாசமான கோணங்களில் அவர் எழுதியுள்ள கவிதைகள் படிப்பவர் மனதில் நன்கு பதிந்துவிடும். இந்த கவிதை நூலை வாங்கி, கவிதைகளை வாசிப்போமே?

துளிர்விடும் விதைகள், வி. கிரேஸ் பிரதிபா, அகரம், மனை எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 007, தொலைபேசி 04362-239289, 104 பக்கங்கள், ரூ.100

35 comments:

  1. அருமையான விமர்சனம் ஐயா
    சகோதரியின் இந்நூலினை நானும் படித்து மகிழ்ந்திருக்கின்றேன்
    நன்றி ஐயா

    ReplyDelete
  2. விமர்சனம் மிகவும் அருமை ஐயா...

    ReplyDelete
  3. வணக்கம் தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது ...
    வாழ்த்துக்கள்
    அறிமுகம் செய்தவர் குருநாதசுந்தரம்
    link is here click now!

    ReplyDelete
  4. துளிர்விடும் விதையில் உங்கள் கண்களுக்கு அழகான பூக்களைத் தொகுத்துத் தந்த விமர்சனம்... அருமை முனைவரே!
    நன்றி

    ReplyDelete
  5. அருமையான விமர்சனம் ஐயா.
    தங்களுக்கு பிடித்தமான கவிதைகளை பட்டியலிட்டு அழகாக ஒரு விமர்சனத்தை அளித்துள்ளீர்கள்.

    ReplyDelete
  6. நல்லதொரு விமர்சனம் நண்பரே.... நானும் இதனைக்குறித்து எனது வலைப்பூவில் விமர்சனம் எழுதியுள்ளேன் காண வருமாறு அழைக்கிறேன்.

    நண்பரே வலைச்சரத்தில் தாங்கள் படிக்காத எனது கடைசி பதிவு தங்களுக்கு பதில் சொல்லி இருக்கிறேன் இனைப்பு கீழே...
    தலைப்பு மன்னிப்பு கோரலும், நன்றி கூறலும்.

    http://blogintamil.blogspot.ae/2014/12/blog-post_21.html

    ReplyDelete
  7. மிகச்சிறப்பான நூல் அறிமுகம்! பகிர்வுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  8. முனைவர் அய்யா அவர்களின் நூல் விமர்சனம் சுருக்கமாக இருந்தாலும் விளக்கமாக அமைந்துள்ளது. நானும் சகோதரி அவர்களது இந்த கவிதை நூலினைப் பற்றிய குறிப்புகள் எடுத்து வைத்துள்ளேன். உங்கள் விமர்சனம் என்னையும் சீக்கிரமே எழுதச் சொல்கிறது. நன்றி.

    ReplyDelete
  9. தங்கள் பார்வையில் சகோதரியின் புத்தகத்துக்கு மிகச் சிறந்த விமர்சனம்.

    ReplyDelete
  10. ஆழ்ந்து படித்து அருமையான விமர்சனம் கொடுத்துள்ளீர்கள். நன்றி

    சாமானியன்

    எனது புதிய பதிவு : விடாது துரத்திய விஷ்ணுபுரம் !
    http://saamaaniyan.blogspot.fr/2014/12/blog-post_15.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.

    ReplyDelete
  11. Wonderful collection of songs and beautiful comments.

    ReplyDelete
  12. கிரேஸின் அருமையான நூலுக்கு உங்கள் உரை மிக அருமை!

    ReplyDelete
  13. தங்களது விமர்சனம் அருமை

    ReplyDelete
  14. கவிதைக்கு நன்றி.கருத்துரைக்கு வாழ்த்து.

    ReplyDelete
  15. அன்பின் அய்யாவிற்கு,
    ஒரு தரமான நூலுக்கு தங்களின் உயர்தரமான விமர்சனம் அருமை.

    ReplyDelete
  16. //இவரது கவிதைகளைப் படித்தவுடன் கவிதைகளின் மேலான ஈடுபாடு அதிகமாகிவிட்டது.//
    இந்த வரிகளைக் கண்டவுடனே மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் ஐயா..மிக்க நன்றி!
    என் கவிதைகளில் பிடித்தவற்றைச் சொல்லி அன்புடன் விமர்சனம் பகிர்ந்ததற்கு என் உளமார்ந்த நன்றி ஐயா..என் தளத்தில் பகிர்கிறேன்..

    ReplyDelete
  17. பதிவர் சந்திப்பின்போதே நூலின் சிறப்பை அறிய முடிந்தது. தாங்கள் அதனை உறுதிப் படுத்தி விட்டீர்கள் . நன்றி

    ReplyDelete
  18. பாராட்டுக்குவியல்களுக்கு மத்தியில் துளிர்விடும் விதைகள் விரைவில் விருட்சமாகிட நல்வாழ்த்துகள்! விமரிசனம் மிக அருமை!....அனுபவ அறிவல்லவா பேசுகிறது! அய்யா அவர்களுக்கும் நன்றி சொல்வோம்!

    ReplyDelete
  19. வணக்கம்
    ஐயா

    தங்களின் பார்வையில் விமர்சனம் மிக அருமையாக உள்ளது இந்த புத்தகத்தை PDF வடிவில் படித்தேன் உண்மையில் கவித்துளிகள் நன்றாக உள்ளது... பகிர்வுக்கு நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  20. விமர்சனம் மிக அருமை! சகோதரி மிக அருமையான எழுத்தாளரும் கூட! அவரது படைப்புக் கவிதைகளைப் பற்றி பலர் விமர்சித்து கவிதைகளை வாசித்த போது அத்தனை அருமை..வரிகள் என்று புரிந்து கொண்டோம்....

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    அன்புடனும், நட்புடனும்

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  21. துளிர் விடும் விதைகள் என்ற கவிதை நூலை படிக்க எனக்கு வாய்ப்பு கிட்டாவிடினும் தங்களின்மூலமும் நண்பர் கில்லர்ஜி மூலமும் அறிய தந்தற்கு நன்றி!!

    ReplyDelete
  22. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  23. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  24. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  25. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருகும் எங்கள் இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    அன்புடனும், நட்புடனும்

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  26. நிறை மங்கலம் நீடு புகழ் பெற்று நல்வாழ்வு வாழ இறைவன் நல்லருள் பொழிவானாக!..
    அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  27. தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  28. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  29. தங்களுக்கு இனிய 2015-ம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  30. வணக்கம்!

    பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

    புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
    சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
    தேனுாறும் வண்ணம் செயலுறட்டும்! செந்தமிழில்
    நானுாறும் வண்ணம் நடந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  31. "அன்பும் பண்பும் அழகுற இணைந்து
    துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!"

    வலைப் பூ நண்பரே!

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (2015)

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete