முகப்பு

18 April 2015

இளைய மகாமகம் : தீர்த்தவாரி

இளைய மகாமகத்தையொட்டிய 3.3.2015 அன்று தேரோட்டம் சென்று திரும்பிவிட்டு, மறுநாள் (4.3.2015) தீர்த்தவாரியைக் காண  நானும் என் மனைவியும் கும்பகோணம் சென்றோம். கோயில் மகாமகக்குள மண்டபத்திலிருந்து தீர்த்தவாரிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. 

தீர்த்தவாரியில் விநாயகர், முருகன், கும்பேஸ்வரர், மங்களாம்பிகை, சண்டிகேஸ்வரர்
கும்பேஸ்வரர், மங்களாம்பிகை
விநாயகர், முருகன்

தீர்த்தவாரி

தீர்த்தவாரியில் காசி விஸ்வநாதர்



தீர்த்தவாரியில் அபிமுகேஸ்வரர்
தீர்த்தவாரிக்கு முன்பாக கும்பகோணத்திலுள்ள சிவன் கோயில்களிலிருந்து சிவனும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் பல்லக்கில் தீர்த்தவாரிக்காக மகாமகக் குளத்தினைச் சுற்றி வந்து, பின்னர் குளக்கரையில் இருந்து அருள் பாலித்தனர். உடன் நாங்களும் சுற்றிவந்தோம். தீர்த்தவாரிக்காக வரும் இறைவன், இறைவியைப் பார்க்க மக்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டிருந்தனர். சிலர் உடன் தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். ஒரு கோயில் இறைவன், இறைவியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அடுத்த கோயிலைச் சார்ந்த பல்லக்கினைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல்லக்குகள் வர ஆரம்பித்தன. அனைத்துப் பல்லக்கினையும் காணும் ஆர்வத்தில் பார்த்ததையே மறுபடியும் சூழலும் எழுந்தது.  ரிஷப வாகனத்தில் சிறப்பான மலர் அலங்காரத்தோடு கோயில் குடையின் கீழ் இறைவன் செம்மாந்து அமர்ந்திருந்த அழகினை பொறுமையாக ரசித்தோம். இவ்வாறான இறை இன்பத்தை இப்போது பெறமுடிந்ததை எண்ணி மகிழ்ந்தோம். 

 



இவ்வாறாக கும்பேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களின் சுவாமிகள் ரிஷப வாகனத்தில் தேவியருடன் குளத்தைச் சுற்றி வந்த காட்சியைக் காண கண் கோடி வேண்டும். அவர்களுடன் நாங்களும் மகாமகக்குளத்தைச் சுற்றி வலம் வந்தோம். சுற்றிவரும்போது குளத்தின் கரையில் பலர் மூத்தோருக்கு வழிபாடு நடத்திக்கொண்டிருந்தனர். 





காலை 9.15 மணிவாக்கில் சுற்ற ஆரம்பித்து, 10.00 மணிவாக்கில் மகாமகக்குளத்தின் படித்துறையில் தீர்த்தவாரி நடைபெறும் இடத்திற்கு எதிராக உள்ள படித்துறையில் அமர்ந்தோம். அங்கிருந்தபடியே காசிவிஸ்வநாதர் கோயிலின் அருகே தீர்த்தவாரிக்கான ஏற்பாடுகள் நடைபெறுவதைக் கண்டோம். வாகனங்களில் வந்த இறைவன், இறைவியை ஒரே இடத்தில் அங்கு காணமுடிந்தது. குளக்கரையில் நான்கு திசையிலும் மக்கள் அதிக எண்ணிக்கையில் காணமுடிந்தது. பல இடங்களில் குளத்திற்காக உள்ளே வரும் வழியில் காவலர்கள் நின்றுகொண்டு கூட்டத்தை நெறிப்படுத்திக் கொண்டிருந்தனர்.  நாங்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அபிமுகேஸ்வரர் கோயிலையும் அங்கு பல்லக்கில்  நின்றுகொண்டிருந்த இறைவன், இறைவியைக் கண்டோம்.   








நாங்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அபிமுகேஸ்வரர் கோயிலையும் அங்கு பல்லக்கில் இருந்த இறைவன், இறைவியைக் கண்டோம். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நாங்கள் இருந்த படிக்கட்டில் கூட்டம் அதிகமாகிவிட்டது. பலர் படிக்கட்டில் தீர்த்தவாரி நேரத்தில் புனிதக்குளியல் குளிக்கவேண்டும் என்பதற்காக அமர்ந்துகொண்டிருந்தனர். அவ்வாறாக சுமார் 2 மணி நேரம் சிலர் அமர்ந்திருந்ததைக் காணமுடிந்தது. தலையில் குளத்தின் நீரைத் தெளித்துத் திரும்பக் கூட வந்தவர்களுக்கு யோசித்தே இடம் தந்தனர். மறுபடியும் தத்தம் இடத்தில் நெருக்கமாக அமர்ந்து கொண்டனர். தீர்த்தவாரி நேரத்தில் அனைவரும் புனித நீராடினர். அங்கிருந்தபடியே இறைவனை வணங்கினோம்.  பின்னர் சிறிது சிறிதாகக் கூட்டம் குறைய ஆரம்பித்தது. முதல் நாள் நான்கு கோயில் தேர்களைப் பார்த்த நிறைவுடன், இன்று அனைத்து கோயில்களின் பல்லக்குகளையும் ஒரே இடத்தில் கண்டு, உடன் சென்று, வழிபட்டு மன நிறைவோடு அங்கிருந்து கிளம்பினோம். 2016இன் மகாமகத்திற்கு முன்னோட்டமாகவே இந்த இளைய மகாமகத் தீர்த்தவாரி இருப்பதை எங்கள் மனம் உணர்ந்தது.

புகைப்படங்கள் எடுக்க உதவி: 
உடன் வந்த என் மனைவி திருமதி பாக்கியவதி

13 comments:

  1. வணக்கம் முனைவரே தீர்த்தவாரி நிகழ்வுகளை கண்முன் கொண்டு வந்து நிகழ்த்தி விட்டீர்கள். அழகான வர்ணனைகளும் புகைப்படங்களும் அழகு.
    இறைவன் – இறைவி என்ற வார்த்தையை முதன் முதலாக படிக்கின்றேன் புதிய வார்த்தைகளை நாண் மிகவும் விரும்புவேன் வாழ்க நலம்
    தமிழ் மணம் இணைப்புடன் 1

    ReplyDelete
  2. அருமையான தரிசனம்.. கண்ணும் மனமும் குளிர்ந்தன!..

    தாங்கள் கூறுவது போல - அடுத்தடுத்து அனைத்து கோயில்களின் பல்லக்குகளையும் ஒரே இடத்தில் தரிசித்து மகிழும் போது பிறவிப் பயனைப் பெற்று விட்டதாகவே தோன்றும்..

    ReplyDelete
  3. வர்ணனைகள் நிகழ்வுகளைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தின.

    ReplyDelete
  4. அருமையான படங்கள்
    எளிமையான வார்த்தைகளால்
    எங்களையும் கும்பகோணத்திற்கு அழைத்துச்
    சென்றுவிட்டீர்கள் ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
  5. சிறப்பான படங்கள்! தகவல்கள்! பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  6. அருமையான பதிவு,அழகிய புகைப்படங்கள். அருமை, நன்றி.

    ReplyDelete
  7. புகைப்படங்களும் பதிவும் பக்தி மயமாகக் காட்சியளிக்கின்றன. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  8. வணக்கம்
    ஐயா
    நிகழ்வை மிக அருமையாக படம்பிடித்து காட்டியுள்ளீர்கள் நாங்களும் சென்று வந்த ஒரு உணர்வுதான்... பகிர்வுக்கு நன்றி த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. அருமையான படங்கள் ஐயா... நாங்களும் கலந்து கொண்ட உணர்வு...

    நன்றி...

    ReplyDelete
  10. அருமையான புகைப்படங்கள்......

    தீர்த்தவாரியில் கலந்து கொண்டு அந்த அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. மஹாமஹம் 2016-ல்.... அப்போது வர முயற்சிக்க வேண்டும்.....

    ReplyDelete
  11. வர்ணனைகளுடன் புகைப்படங்கள் மிக மிக அழகு! நேரில் கண்டது போல் இருக்கின்றது...

    பகிர்வுக்கு மிக்க நன்றி! தங்கள் மனைவி மிக அழகாக புகைப்படம் எடுத்திருக்கின்றார்..

    ReplyDelete
  12. You have pictured and narrated the trial car festival eloquently,thank you sir.

    ReplyDelete
  13. கடந்த மகாமகம் முடிந்த சமயம் ஒருநாள் தாமதமாக மகாமகக் குளம் சென்றோம் பேரன் பேத்தியுடன் குளத்தில் எல்லாக் கிணறுகளுக்கும் சென்று வந்தோம் உங்கள் பதிவு அந்த நினைவை மீட்டெடுத்தது. காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகமும் பார்த்த நினைவு வருகிறதுகருணாநிதியைக் கைது செய்த காலம் என்று நினைக்கிறேன் பேரூந்துகள் இயங்காததால் மிகவும் சிரமப்பட்டோம் ஒரு பதிவில் எத்தனை நினைவலைகள்,,,!

    ReplyDelete