முகப்பு

07 June 2015

மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்

சித்தாந்த ரத்னம் முனைவர் வீ.ஜெயபால் அவர்களுடன் சென்ற குழுவில் நான் பார்த்த கோயில்களில் ஒன்று மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில். தமிழகத்தில் சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ள அக்கோயிலைக் காண உங்களை அழைக்கிறேன். ஒரு முறை நேரில் சென்று காணுங்கள். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வட்டத்தில் உள்ள இக்கோயிலுக்கு சிதம்பரம்-எய்யலூர் வழியாகக் காட்டுமன்னார்குடி சாலையில் மெயின் ரோட்டில் முதலில் கீழக்கடம்பூர் 2 கிமீ என்ற கைகாட்டியைக் கடந்து, பின் செல்லலாம். தாராசுரம், ஆவுடையார்கோயில், திருவலஞ்சுழி உள்ளிட்ட பல கோயில்களை இக்கோயில் நினைவூட்டும். 

காவேரியின் வடகரைத்தலங்களில் அமைந்துள்ள இக்கோயில் ஞானசம்பந்தர், நாவுக்கரசரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகும்.இங்குள்ள தட்சிணாமூர்த்தி சிற்பம் மிகப்புகழ் பெற்றதாகும்.



இக்கோயில் கரக்கோயில் வகையினை சார்ந்தது என்று கூறுவர். நான்கு சக்கரங்களுடன் கிழக்கு நோக்கி குதிரைகள் பூட்டபெற்ற அழகிய தேர்வடிவத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.  விமானத்துடன் கூடிய கருவறையை, திருச்சுற்றிலிருந்து பார்க்கும்போது  கும்பகோணம் சார்ங்கபாணி கோயில், குடந்தைக் கீழ்க்கோட்டம் என்னும் நாகேஸ்வரன் கோயில் இக்கோயிலைப் பார்க்கும், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் நம் நினைவுக்கு வரும்.

 

கடம்ப பேரரசை ஆண்ட கடம்பர்களின் “முண்டா” மொழியில் கரம் என்ற சொல்லுக்கு கடம்பூர் என்று பெயர் கரம்+கோயில் கடம்பினை தல மரமாக கொண்ட கோயில்= கரக்கோயில் என பொருள் தருகிறது.தமிழகத்தில் கரக்கோயில் என குறிப்பிடப்படும் ஒரே கோயில் இதுவாகும்.




 

இறைவன் உமையம்மையுடன் அமர்ந்த கோலத்தில், உமையம்மையின் தாடையை வருடியபடி காணப்படும் சிற்பம் நமக்கு பஞ்சவன்மாதேவீச்சரத்தை நினைவூட்டும். இவ்வாறான சிற்பங்கள் தமிழகத்தில் பல கோயில்களில் உள்ளன. அருகிலுள்ள இருவரும் நின்ற கோலத்தில் காணப்படும் சிற்பம் மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளதைக் காணமுடியும். 






கருவறை கோஷ்டத்தில் காணப்படும் சிற்பங்கள் நமக்கு தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் திருச்சுற்றில் காணப்படுகின்ற நாயன்மார்களின் சிற்பங்களையும், கதையையும் நினைவூட்டும். 








கோயிலுக்குள் நுழைந்து சிற்பங்களைப் பார்க்க ஆரம்பித்தால் நாம் முற்றிலும் அதில் லயித்து விடுவோம். அவற்றினுடைய அழகு நம் மனதில் பதிந்துவிடும். வேலைப்பாடுகளையும், மிகச் சிறிய அளவிலான சிற்பங்களையும் கொண்டுள்ள இக்கோயிலை ஒரு முறை சென்று பார்ப்போம். 

8.6.2015 அன்று மேம்படுத்தப்பட்டது.

26 comments:

  1. மேலக்கடம்பூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலைப் பற்றிய அரிய தகவல்கள்..
    அழகிய படங்கள்.. காணக் காண மனம் மகிழ்கின்றது..

    ReplyDelete
  2. மேலக்கடம்பூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலைப் பற்றிய அழகிய புகைப்படங்களுடன் அரிய/அறியா தகவலை தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  3. அருமையான சிற்பங்கள்.

    ReplyDelete
  4. அழகான படங்கள் ஐயா... அங்கங்கே இணைப்புகள் மேலும் அறிந்து கொள்ள உதவி செய்கிறது... நன்றி...

    ReplyDelete
  5. சிற்பங்களும், தேர் வடிவக்கோயிலும் படத்தில் பார்க்கவே நேரில் பார்த்ததுபோல இவ்வளவு அழகாக உள்ளன. கோயிலைப்பற்றிய சிறப்புக்களையும் வரலாறுகளையும் தங்களுக்கே உள்ள தனிப்பாணியில் அருமையாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள் ஐயா. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. சிற்பங்கள் மிக மிக அழகு. நீங்கள் சொல்லியிருப்பது போல தாராசுரம் கோவிலைத்தான் இக்கோவில் நினைவூட்டுகிறது!

    ReplyDelete
  7. எந்தச் சிற்பத்தைப் பார்த்தாலும், எனக்கு புதுமைப்பித்தனின் சிற்பியின் நரகம் நினைவுக்கு வந்துவிடும்...
    அழகான கோயில் குறித்து அதைவிட அழகான புகைப்படங்களையும், இணைப்புக் கட்டுரையையும் சேர்த்து வழங்கியுள்ளமைக்கு நன்றி...
    பேனாவை அருகே வைத்து சிற்பத்தின் அசல் பரிமாணம் என்ன என்பதை உணர்த்திய விதம் அருமை....

    வாழ்த்துக்கள்...

    எஸ் வி வேணுகோபாலன்

    ReplyDelete
  8. அழகான படங்கள் முனைவரே... சிறப்பான தகவல்கள்
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  9. மேலக்கடம்பூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலைப் பற்றிய அரிய தகவல்கள்..
    சிற்பங்களின் அளவினைத் தெரியப் படுத்துவதற்காக
    பேனாவை வைத்து சிற்பத்தின் சிறிய அளவினையும், சீரிய வேலைப் பாடுகளையும் உணர வைத்துவிட்டீர்கள்
    நன்றிஐயா
    தம +1

    ReplyDelete
  10. தேர்வடிவம் மிக அழகாய் இருக்கிறது. சிற்பங்கள் அழகு.அறியாத கோவில் ஐயா. நன்றிகள்

    தம 4

    ReplyDelete
  11. சிற்பங்களின் நுணக்கத்தை உணர வைக்க அருகே பேனாவை வைத்து படம் எடுத்தது அருமை. கோவில் குறித்த அழகான பதிவு!
    த ம 5

    ReplyDelete
  12. அறியாத செய்திகளைத் தங்கள் பதிவுகள் வாயிலாக அறிகிறேன்.

    கோவிலைச் சென்று பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்தைத் தூண்டுகிறது தங்களின் விவரணையும் படங்களும்.

    த ம 7

    தமிழ் மணத்தில் நுழைய.

    நன்றி.

    ReplyDelete
  13. #கடம்ப பேரரசை ஆண்ட கடம்பர்களின் “முண்டா” மொழியில் கரம் என்ற சொல்லுக்கு கடம்பூர் என்று பெயர் #
    இவர்களுமா ஆண்டிருக்கிறார்கள் ?அவர்களின் மொழி 'முண்டா 'வா ? அறியாத தகவலை அறியத் தந்தமைக்கு நன்றி :)

    ReplyDelete
  14. தகவலுக்கு நன்றி! தமிழ்மணம் 8

    ReplyDelete
  15. அருமையான நுண்வேலைப்பாடுகளன் ஆகிய சிற்பங்களின் படங்கள் தாங்கி வந்த பதிவு ரசித்தேன்

    ReplyDelete
  16. கோவில் பற்றிய சிறப்புகளையும், சிற்பங்களின் பெருமைகளையும் சுவாரஸ்யமாக விளக்கிய நல்ல பதிவு.







    ReplyDelete
  17. சிற்பங்களின் படங்கள் மிக அழகு.

    ReplyDelete
  18. சிற்பங்களின் படங்கள் மிக அழகு.

    ReplyDelete

  19. அன்பு வலைப்பூ நண்பரே!
    நல்வணக்கம்!
    இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
    தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

    முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்

    அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
    "குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
    உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
    ஆம்!

    கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.

    ( http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form )

    சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.

    தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.

    மற்றும்!

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  20. T M 10
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  21. படங்கள் அருமை! தகவலுக்கு நன்றி! முனைவரே!

    ReplyDelete
  22. கோயில் பற்றிய விளக்கங்கள் அருமை. சிற்பங்கள் என்ன அழகு..மனதைக் கட்டிப்போடுகின்றன! நிச்சயமாகப் பார்க்க வேண்டும்...

    ReplyDelete
  23. படங்கள் அருமை, தாங்கள் விளக்கியதும் அருமை. தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  24. எனது இன்றைய பதிவு ஸ்ட்ராபெரி ஜாம் . உங்கள் ப்ளாக் லிஸ்டில் ஏனோ வரவில்லை கருத்திட வாருங்கள்

    ReplyDelete
  25. வணக்கம்
    ஐயா
    விளக்கமும் படங்களும் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  26. வணக்கம் சகோதரரே.

    மேலக்கடம்பூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலைப் பற்றிய சிறப்பான தகவல்களுடன் ௬டிய தங்கள் பதிவை மிகவும் ரசித்துப் படித்தேன். கோவிலின் சிற்ப புகைப் படங்கள் கண்ணுக்கு விருந்தாக இருந்தது. சிறப்பான பதிவை பகிர்ந்த தங்களுக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete