முகப்பு

08 August 2015

விக்கிபீடியாவில் பயனராவோம்

தமிழ் விக்கிபீடியாவில் அண்மையில் 200ஆவது பதிவினை (article) நிறைவு செய்ததை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டபோது, வலைப்பூ நண்பர்கள் தமிழ் விக்கிபீடியாவில் எழுதும் முறையைப் பற்றி ஒரு பதிவினைப் பதியும்படிக் கேட்டிருந்தனர். எனது அனுபவத்தில் நான் கற்றவற்றைப் பகிர்கிறேன். இன்னும் பல நான் கற்கும் நிலையில் உள்ளேன். இப்பதிவில் விக்கிபீடியாவில் பயனராவதைப் (User) பற்றி அறிவோம். பயனராவோம். வாருங்கள்.

முதலில் https://ta.wikipedia.org/wiki என்ற முகவரி மூலமாக விக்கிபீடியாவின் முகப்புப்பக்கத்திற்குச் செல்வோம். இடது மூலையில் புதிய கணக்கை உருவாக்கு புகு பதிகை என்ற சொற்கள் காணப்படும்.  முன்னரே கணக்கு வைத்து பயன்படுத்திக்கொண்டிப்பவர்கள் புகு பதிகை மூலமாக வரமுடியும்.

புதியவராக பதியப்போகும் நிலையில் புதிய கணக்கை உருவாக்கு என்பதைச் சொடுக்கவும். பின்னர் பயனர் (உங்கள்) பெயர், கடவுச்சொல், கடவுச்சொல்லை உறுதிசெய்க என்பனவற்றை வழக்கமாக முகநூல், மின்னஞ்சல் போன்றவற்றிற்குப் பதிவது போல பதியலாம். தேவையெனில் மின்னஞ்சல் முகவரியை தரலாம்.  பாதுகாப்பு சோதனைக்குப் பின் உங்கள் கணக்கை உருவாக்குக என்பதைச் சொடுக்கினால் நமக்கென்று ஒரு கணக்கு உருவாகும். முடிந்தவரை பயனராகப் பதிந்துவிட்டு எழுத ஆரம்பிப்பதே நல்லது.


பயனர் பெயர்
கடவுச்சொல்
கடவுச்சொல்லை உறுதிசெய்க
மின்னஞ்சல் முகவரி (விருப்பத்தேர்வு)
பாதுகாப்பு சோதனை
புதுப்பி

புதிதாக நம் பெயரில் கணக்கு உருவாகிவிட்ட நிலையில் பின்வருமாறு திரையில் தெரியும்போது கடவுச்சொல்லை தட்டச்சு செய்துவிட்டு புகுபதிகை என்பதனைச் சொடுக்கவேண்டும்.



புகுபதிகை

பயனர் பெயர்

புகுபதிகையைச் சொடுக்கிய பின்னர் பின்வருமாறு திரை தோன்றும். கட்டுரையை ஆரம்பிப்பதற்கு முன்பாக வலது ஓரத்தில் காணப்படுகின்ற கீழ்க்கண்டவற்றைப் படித்துத் தெரிந்துகொள்வது அவசியம். முதற்பக்கம் என்ற சொல்லைச் சொடுக்கினால் பின்வருமாறு திரை தோன்றும்.


விக்கிபீடியாவில் வலது பக்கம் காணப்படுகின்றவற்றில் புதிய கட்டுரை எழுதுக என்பதைச் சொடுக்கினால் பின்வருமாறு திரை தோன்றும். அதில் முதல் கட்டுரை எழுதுவது எப்படி என்று தெளிவாக எளிய முறைகள் தரப்பட்டுள்ளன. அப்பகுதியை நன்கு படித்துவிட்டு கட்டுரை எழுத ஆரம்பிக்கலாம். 

தமிழில் எழுத என்பதற்குள் நுழைந்தால் தமிழில் எழுதுவதற்கான முறைகள் தரப்பட்டுள்ளன. நான் எம்எச்எம் ரைட்டரை பதிவிறக்கம் செய்து தட்டச்சு செய்துவரும் முறையைக் கடைபிடிக்கின்றேன்.

ஆலமரத்தடி என்ற இணைப்பில் விக்கிபீடியாவின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல குறிப்புகள் உரையாடப்படுகின்றன. அவை புதிதாக எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும்.  


கட்டுரைகளை உருவாக்கும் முன்பாக விக்கி நற்பழக்கவழக்கங்கள் என்ற பக்கத்திற்குள் சென்று ஒரு முறை படித்துவிட்டு வருவது பயன் தரும். பின்னர் கீழ்ப்பகுதியில் உள்ள பெட்டியில் கட்டுரையின் தலைப்பை இட்டு கட்டுரையைத் தொடங்கவும் என்ற பொத்தானை அழுத்தவேண்டும். இவை தெர்டர்பான உரிய விவரங்கள் இப்பக்கத்தில் தரப்பட்டுள்ளன. பக்கத்தை சேமிக்கவும் என்ற நிலையைத் தொடர்ந்து அந்த பொத்தானை அழுத்தும்போது கட்டுரை தமிழ்விக்கிபீடியாவில் இடம் பெற்றுவிடும். 

எழுத ஆரம்பித்தவுடனே நமக்கு உதவுவதற்கு விக்கிபீடியாவில் நண்பர்கள் உள்ளனர். அவர்கள் நமக்கு தேவையான கருத்தினைத் தந்து நம் பதிவுகளை செழுமைப்படுத்த உதவுவர். 

சரி. எந்த கட்டுரையை எழுதுவது. விக்கிபீடியாவில் நாம் எழுத விரும்பும் கட்டுரையோ, அப்பொருண்மை தொடர்பான கட்டுரையோ உள்ளதா என்பதை எப்படி உறுதி செய்வது, பத்திகளை எவ்வாறு அமைப்பது, இணைப்புகளை எவ்வாறு தருவது என்பனவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம். அதற்கு முன்பாக மேலுள்ள படிநிலைகளைப் படித்து முயற்சித்துப் பாருங்கள். பயனராகுங்கள்.  ஐயமிருப்பின் எனது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு (drbjambulingam@gmail.com) உங்களது தொலைபேசி எண் விவரத்தைத் தந்து கேளுங்கள், தெரிந்ததைப் பகிர்கிறேன்....  முதலில் பயனராக ஆவோம். 

.............................தொடரும்

நன்றி : விக்கிபீடியா

71 comments:

  1. நலம் - நிச்சயம் இனைகின்றேன்

    ReplyDelete
  2. நான் பதிவு செய்தும் இன்னும் தொடரவில்லை அய்யா..இனியாவது எழுதனும்...நன்றி

    ReplyDelete
  3. நான் பதிவு செய்தும் இன்னும் தொடரவில்லை அய்யா..இனியாவது எழுதனும்...நன்றி

    ReplyDelete
    Replies
    1. தொடருங்கள். ஐயமிப்பின் கேளுங்கள், எனக்குத் தெரிந்தவரை பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறேன்.

      Delete
  4. மிகவும் பயனுள்ள தகவல்கள்..

    தொடர்கின்றேன்..

    ReplyDelete
  5. தொடரட்டும் ஐயா...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. என்னை எழுத வைப்பவர்களில் தாங்களும் ஒருவர். அந்நிலையில் தங்களுக்கும் என் நன்றி.

      Delete
  6. பலருக்கும் பயனுள்ள பதிவு என்னால் முடியுமா ? என்று பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களால் முடியாததில்லை. நீங்கள் எழுதுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

      Delete
  7. அருமையான தகவல்கள். தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பிருப்பின் பதிய முயற்சி செய்யுங்கள். வருகைக்கு நன்றி.

      Delete
  8. புக்மார்க்க செய்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள பதிவு.பாராட்டுக்கள்.. நான் புக்மார்க்கில் சேர்த்து கொண்டேன்

    ReplyDelete
    Replies
    1. முக்கியத்துவம் உணர்ந்தமையறிந்து மகிழ்ச்சி. நன்றி.

      Delete
  9. நல்ல விளக்கம் ,பயன் படுத்திக் கொள்கிறேன் அய்யா !

    ReplyDelete
  10. நல்ல பயனுள்ள பகிர்வுங்க ஐயா.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பதிவு கட்டுரை எழுதுவது தொடர்பானது. வருகைக்கு நன்றி.

      Delete
  11. பயனுள்ள பதிவு ஐயா
    இன்றே பயனராக இணைகின்றேன்
    நன்றி
    தம+1

    ReplyDelete
    Replies
    1. இணைவதறிந்து மகிழ்ச்சி. நன்றி.

      Delete
  12. மிகவும் பயனுள்ள வழிகாட்டும் பதிவு. ஏதாவது எழுதவேண்டும் என்று தோன்றுகிறது

    ReplyDelete
    Replies
    1. இவ்வாறான ஓர் ஆர்வத்தை பதிவு தந்ததறிந்து மகிழ்ச்சி. நன்றி.

      Delete
  13. பயனுள்ள விளக்கம். தொடர்கிறேன் ஐயா.

    ReplyDelete
  14. வணக்கம்
    ஐயா
    சிறப்பான விளக்கம் கண்டுமகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி.த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு அன்பான நன்றி.

      Delete
  15. நல்லதொரு ஆலோசனை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தாங்களும் முயற்சி செய்யலாம். விக்கிபீடியாவில் பதியப்படாத கதைகள் எதுவும் இருந்தால் தாங்கள் எழுத ஆரம்பிக்கலாம்.

      Delete
  16. அன்புள்ள அய்யா,

    விக்கிபீடியாவில் பயனராவோம் என்பதைப் பற்றி பல தகவல்கள் தெரிந்து கொள்ள வைத்ததற்கு மிக்க நன்றி.

    த.ம. 9.

    ReplyDelete
    Replies
    1. புதிய கட்டுரை எழுதுவதோடு, பழைய கட்டுரைகளை மேம்படுத்தவும் வாய்ப்புள்ளது. வருகைக்கு நன்றி.

      Delete
  17. உங்களிடமிருந்து ஆவலோடு நான் எதிர்பார்த்து இருந்த பதிவு. வலைப் பதிவர்களுக்கு பயனுள்ள, விக்கிபீடியாவில் எழுதுவது குறித்த சிறப்பான பதிவு. இந்த கட்டுரையை ஒரு கோப்பில் சேமித்துக் கொண்டேன். முனைவர் அய்யாவிற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பல நாளாக ஆசைப்பட்டும் நான் எழுதுவது அனைவருக்கும் எளிதாகப் புரியும் வகையில் இருக்கவேண்டும் என்ற நிலையில் சற்று தாமதமானது. தாங்கள் கோப்பினை சேமித்தமைக்கு நன்றி.

      Delete
  18. தமிழ் இணையப் பயன்பாட்டாளர்களுக்கு மிகப் பயனுள்ள கட்டுரை.

    தொடர்கிறேன்.

    நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  19. ஏற்கனவே இணைந்து விட்டேன்.. திரும்பி போவதற்கு வழி தெரியாமல் இருந்தேன். நன்றி! அய்யா....

    ReplyDelete
    Replies
    1. விக்கிபீடியாவில் எழுதுவது தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்படின் எழுத வேண்டுகிறேன். அன்பிற்கு நன்றி.

      Delete
  20. பயனுள்ள வழிகாட்டும் தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  21. வணக்கம் ஐயா!

    பயன் தரும் அருமையான அவசியமான பதிவு!
    பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி. வாய்ப்பிருப்பின் பயனராக முயற்சிக்கலாம்.

      Delete
  22. வணக்கம் அய்யா,
    தங்களை நேரில் சந்திக்கும் போது கேட்க வேண்டும் என்று இருந்தேன், அது எனக்கு மட்டுமாய் இருந்து இருக்கும், இது அனைவருக்கும் பயன்படும் வகையில் அருமை ஐயா,
    தொடர்கிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த, தொடர் பதிவை முடிந்தவரை புரியும்படி எழுத முயற்சிக்கிறேன். தங்களைப் போன்றோரின் ஆர்வம் என்னை ஊக்குவிக்கிறது. நன்றி.

      Delete
  23. நல்ல உள்ளடக்கம் கொண்டார்கள் நிச்சயம் விக்கி பீடியாவில் எழுதவேண்டும். இனையத் தமிழ் வளர்ச்சிக்கு இது உதவும். பயனுள்ள பதிவு நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தூண்டுதல் என்னை மென்மேலும் எழுதவைக்கும்.நன்றி.

      Delete
  24. பயனுள்ள தகவல்.
    நன்றி.

    ReplyDelete
  25. நல்ல தகவல் ஐயா...
    விவரம் அறிந்து கொண்டோம்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      Delete
  26. உங்கள் வழிகாட்டுதலின்படி தமிழ் விக்கிபீடியாவில் இணைந்து முதல் கட்டுரையையும் பதிந்து விட்டேன்.

    தொடர்பு ; https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D&redirect=no

    மற்ற விசயங்களை எல்லாம் போகப்போகத்தான் கற்றுக்கொள்ளவேண்டும். செல்லும் செல்லாததற்கு செட்டியாரைக் கேளுங்கள் என்ற கதை மாதிரி என்ன இடைஞ்சல் வந்தாலும் கைகொடுக்க ஜம்புலிங்கம் இருக்க கவலை ஏது?

    ReplyDelete
    Replies
    1. மிகவும் மகிழ்ச்சியாகவும் மன நிறைவாகவும் இருக்கிறது. எனக்குத் தெரிந்தவரை தங்களுடன் பகிர்வதற்குத் தயாராக இருக்கிறேன். உங்களின் ஈடுபாட்டிற்கும் ஆர்வத்திற்கும் மனமார்ந்த நன்றி.

      Delete
  27. மிக மிக அருமையான வேண்டிய பதிவு. நாங்களும் சில கட்டுரைகளைப் பகிர வேண்டும் என்று நினைத்திருந்தோம். நீங்கள் வழி காட்டுவது மிக மிக உதவியாக இருக்கும்/இருக்கின்றது. தொடர்கின்றோம். இதனைக் குறித்தும் கொண்டோம் ஐயா! மிக்க மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. எளிதில் பகிரலாம். சிரமம் எதுவுமில்லை. ஐயமிருப்பின் எழுதவும். தெரிந்தவரைப் பகிர முயற்சிக்கிறேன். கட்டுரைகளை எழுதுவது தொடர்பாக அடுத்த பதிவில் இட உள்ளேன். நன்றி.

      Delete
  28. பயனுள்ள சிறப்பான பகிர்வுக்கு நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. தங்களைப் போன்றோரின் வருகை எனக்கு உவகை தருகிறது. நன்றி.

      Delete
  29. விக்கிபீடியாவில் நாம் பயனராகி எழுதுவது என்றால் நம் எழுத்தும் தேடு பொருளாகி விடும் அல்லவா ?உண்மையான செய்தி இருந்தால் மட்டுமே பதியலாம் என்று நினைக்கிறேன் பல விஷயங்களை விக்கிப் பீடியாவில் சென்று தெரிந்து கொள்கிறோம் இல்லையா. பொறுப்பும் கூடும் என் புரிதல் சரியா எனக் கூற வேண்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. பொறுப்பு கூடும் என்பது உண்மை. நமக்கு மென்மேலும் படிக்க நல்ல வாய்ப்பு. முடிந்தவரை நமக்குத் தெரிந்தவற்றை, விக்கிபீடியாவில் இல்லாதவற்றைப் பதிதல் நலம். நாம் பல விஷயங்களைத் தெரிந்துகொள்வது போல, நாம் பதிந்தால் நம்மால் பலர் தெரிந்துகொள்ள முடியும் அல்லவா? தாங்கள் நினைத்தால் முடியும். அடுத்த பதிவில் கட்டுரை எழுதுவது தொடர்பாக விவாதிக்க உள்ளேன். நன்றி.

      Delete
  30. நன்றி ,முயலுவோம் முன்னேறுவோம்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் ஆர்வத்திற்கு நன்றி.

      Delete
  31. பயனர் ஆவதற்கான உத்தியை ஊக்கியமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  32. பயனுள்ள சிறப்பான பகிர்வுக்கு நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி. அடுத்த பதிவு கட்டுரை எழுதும் முறையைப் பற்றியதாகும்.

      Delete
  33. வாழ்த்துக்கள். பணி சிறக்க வாழ்த்துகிறேன். (Muralidharan மின்னஞ்சல் வழியாக)

    ReplyDelete
  34. பயனுள்ள தகவல்கள் (sambasivam udayasuriyan மின்னஞ்சல் வழியாக)

    ReplyDelete
  35. இந்த இடுகையை சேமித்துக் கொண்டேன்..நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் சேமிப்புக்கும் நன்றி. விக்கியில் எழுத முயற்சிக்கும்போது இப்பதிவு உதவும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

      Delete
  36. செயல்படாத சுட்டிகளை நீக்கி முதல் முறையாக ஒரு விக்கிபிடீயா கட்டுரையை திருத்தினேன். அதை ஒரு விக்கி புதுப் பங்களிப்பாளர்களுக்கு உதவியாக ஒரு பதிவாக எழுதிவிட வேண்டுமென நினைத்தேன். அந்த தேடலில் ஏற்கனவே நீங்கள் எழுதியிருக்கும் அருமையான கட்டுரைத் தொடரைக் கண்டுகொண்டேன் (நன்றி: மனஅலைகள் வலைப்பூ). எனது வலைப்பூவில் இணைப்பு தந்து மகிழ்கிறேன்.

    ReplyDelete
  37. புதிதாக எழுதுபவர்களுக்குப் பயனாக இருக்கவேண்டும் என்ற நிலையில் முடிந்தவரை தெளிவாக எழுதினேன். தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து பயணிப்போம், பதிவுகள் மூலமாக.

    ReplyDelete
  38. Merkur Futur Adjustable Safety Razor - Sears
    Merkur https://febcasino.com/review/merit-casino/ Futur Adjustable https://vannienailor4166blog.blogspot.com/ Safety Razor is the https://septcasino.com/review/merit-casino/ perfect balance of performance, safety, and comfort. Made in https://deccasino.com/review/merit-casino/ Solingen, Germany, this febcasino.com razor has a perfect balance of

    ReplyDelete