முகப்பு

16 January 2016

மகாமகம் 2016 : கும்பகோணம் உலா (13 ஜனவரி 2016)

13-22 பிப்ரவரி 2016இல் கும்பகோணத்தில் மகாமக விழா நடைபெறவுள்ள நிலையில் 13 ஜனவரி 2016 அன்று கும்பகோணம் சென்றேன். மகாமகப்பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருவதைக் காணமுடிந்தது. மகாமகக்குளத்தில் எங்கும் மணற்குவியல். நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் ஓரமாக சிறிதளவே காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் மணற்குவியலே. அடுத்த மாதம் இதே நாளில் விழா இனிதாக ஆரம்பிக்க உள்ள நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் பணிகளும் அதனை வேடிக்கை பார்க்க வரும் கூட்டங்களைப் பார்க்கும்போது வியப்பாக இருந்தது. மகாமகப்பணிகள் அவசரம் என்ற நிலையில் பெரிய இயந்திரங்களும் லாரிகளும் தத்தம் பணியைச் செய்து வருவதைக் காணமுடிந்தது.






மகாமகக்குளத்தைப் பார்த்துவிட்டு குளத்தின் வடகரையில் அமைந்துள்ள காசி விசுவநாதர் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில் வழியாக நிறைவாக குடமுழுக்கு கண்ட நாகேஸ்வரன் கோயிலுக்குச் சென்றேன். இறைவனை தரிசித்துவிட்டு அங்கிருந்து உச்சிபிள்ளையார் கோயில் வழியாகப் பொற்றாமரைக்குளத்திற்குச் செல்ல எண்ணியபோது தேரோட்டத்திற்குத் தயாராக உள்ள சார்ங்கபாணிகோயில் சென்று அங்கிருந்த சிறிய தேரைக் கண்டேன். தேரின் சிற்பங்களை மனதைக் கவர்ந்தன. 





பின்னர் அங்கிருந்து சோமேஸ்வரர் கோயிலாக பொற்றாமரைக்குளத்தைக் காணச் சென்றேன். கும்பேஸ்வரர் கோயில் பின்புலத்தில் பொற்றாமரைக்குளத்தைக் கண்டேன். மகாமகக்குளத்தில் மணற்குவியல் காணப்பட்ட நிலையில் பொற்றாமரைக்குளத்தில் சேறும் சகதியும் அப்புறப்படுத்தப்பட்டு வருவதைக் காண முடிந்தது. அந்த சேற்றில் இயந்திரங்கள் இறங்கி வேலை செய்வதைப் பார்க்கும்போது மலைப்பாக இருந்தது. 


தஞ்சாவூர் செல்வதற்காக கும்பேஸ்வரர் கோயிலின் வழியாக வந்தபோது கும்பேஸ்வரர் கோயில் கீழ வீதியில் தேர் ஆயத்த நிலைக்குத் தயாராவதையும், தேர் மண்டபத்தில் வர்ணம் பூசும் பணி நடைபெறுவதையும் காணமுடிந்தது.  


கோயில் உலாவின்போது உதவி ஆணையர் திரு ஞானசேகரன் அவர்களை அலுவலகத்தில் சந்தித்தேன். அப்போது துர்க்கையம்மன்கோயிலில் பணியாற்றும் நண்பர் திரு செல்வசேகரன் அண்மையில் நிகழவுள்ள பட்டீஸ்வரம் கோயிலின் குடமுழுக்கு அழைப்பிதழினைத் தந்தார். 29 ஜனவரி 2016இல் நடைபெறவுள்ள குடமுழுக்கிற்கு வருவதாகக் கூறினேன். 

மகாமகத்திற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் மகாமகத்திற்காகத் தயாராகும் கும்பகோணத்தைப் பார்த்த நிறைவுடன் திரும்பினேன். 

16 comments:

  1. மகாமக வெள்ளோட்டம் அருமை ஐயா !

    ReplyDelete
  2. மகாமக குளத்தையும் தேர்களையும் அழகாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள்... தங்கள் முன்னோட்டத்தில் கும்பகோணம் வந்த நிறைவு ஐயா...

    ReplyDelete
  3. படங்கள் அருமை அய்யா.....மகாமகம் என்றதும் அந்த விழாவில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் இறந்தது தான் நிணைவுக்கு வருகிறது அய்யா......

    ReplyDelete
  4. படங்களும், விஷயங்களும், பதிவும் மிக அருமை. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. எங்கள் ஊர்க் குளங்கள் நிரம்பி வழிகின்றன. கும்பகோண மகாமகக் குளம் நீர் வற்றி இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. படங்களுடன் பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. இந்த முறையும் மகாமகம் காண வர இயலாது.போன முறை 2004-ல் மகா மகம் கழிந்த சில நாட்களுக்குப் பின் சென்றிருக்கிறேன்

    ReplyDelete
  7. படங்களுடன் தகவல்களும் அருமை. கும்பகோணத்தின் குளம் ஏன் வற்றி உள்ளது? ஆச்சரியம்தான். அங்கும் நல்ல மழை பெய்தது இல்லையா...

    ReplyDelete
  8. ஒரேஒரு முறை மகாமகத்தின் போது
    மகாமகக் குளத்தில் நின்றிருக்கின்றேன் ஐயா
    தங்களின் படங்கள் நினைவலை மீட்டுத் தந்திருக்கின்றன நன்றி

    ReplyDelete
  9. படங்களுடன் , விழா காண இயலாமல் வருந்துவொர்க்குப் பயனுள்ள பதிவு.

    தொடர்கிறேன் ஐயா.
    த ம
    நன்றி.

    ReplyDelete
  10. தருசனம் காண ஆசையுண்டு ஆனால் சூழ்நிலை ஒத்துவருவதில்லை.கவலையைப்போக்கும் பகிர்வு ஐயா.

    ReplyDelete
  11. பணிகள் முடிந்த நிலையில் காணும்போது இந்த இடங்கள் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
    தம +1

    ReplyDelete
  12. அழகிய புகைப்பட தரிசனம் நன்று முனைவருக்கு நன்றி
    தமிழ் மணம் 9

    ReplyDelete
  13. மகாமகம் வரும் காலத்தில் அதனைப் பற்றிய அருமையான கட்டுரை.
    த ம 10

    ReplyDelete
  14. படங்களுடன் தகவல்களும் அருமை

    ReplyDelete
  15. படங்களுடன்
    அருமையான பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  16. வணக்கம்
    ஐயா
    அறியாத தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete