முகப்பு

14 February 2016

மகாமகம் 2016 : வைணவக்கோயில்களில் கொடியேற்றம்

மகாமகத்தை முன்னிட்டு தீர்த்தவாரி காணும் சைவக்கோயில்களில் பெரும்பாலான கோயில்களில் (13.2.2016) நேற்று கொடியேற்றம் நடைபெற்றதைக் கண்டுவந்தோம். இன்று (14.2.2016) தனியாகக் கும்பகோணம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கொடியேற்றம் கண்ட அனைத்து வைணவக் கோயில்களுக்கும் சென்றேன். 


கும்பேஸ்வரர் கோயில் மொட்டை கோபுர நிறுத்தத்திலிருந்து கும்பேஸ்வரர் கோயில் வழியாகச் சென்று கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி வழியாக வராகப் பெருமாள் கோயிலை நேற்றைவிட இன்று கும்பகோணத்தில் மகாமகத்திற்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்டது. முதலில் வராகப்பெருமாள் கோயிலுக்குச் சென்று கொடியேற்றம் நடைபெற்ற கொடி மரத்தினைக் கண்டு, பெருமாளை தரிசனம் செய்தேன்.
அங்கிருந்து சக்கரபாணி கோயிலுக்குச் சென்றேன். சக்கரபாணி கோயிலிலும் கொடியேற்றம் நிறைவேறிய நிலையில் பக்தர்கள் கொடி மரத்தைச் சுற்றி வந்து கோயிலின் சன்னதிக்குச் சென்று கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் கோயிலைச் சுற்றிவந்தேன். 
பின்னர் அங்கிருந்து ராஜகோபாலசுவாமி கோயிலுக்குச் சென்றேன். கும்பகோணத்தில் இரண்டு ராஜகோபாலசுவாமி கோயில்கள் உள்ளன. ஒன்று பெரிய தெருவிலும் மற்றொன்று தோப்புத்தெருவிலும் உள்ளன. பெரிய கோயிலில் உள்ள கோயில்தான் மகாமகத்தோடு தொடர்புடைய கோயிலாகும். ராஜகோபாலசுவாமி கோயிலுக்கு வரும் வழியில் மகாமகக்குளத்திலிருந்து குளித்து விட்டு காவிரியாற்றுக்கு பக்தர்கள் நனைந்த ஆடைகளோடு வருவதைக் காணமுடிந்தது. எதிரில் வருவோர் பெரும்பாலும் ஆற்றுக்கு வழி கேட்டுக்கொண்டே வருவதையும் காணமுடிந்தது.

ராஜகோபாலசுவாமி கோயில் தரிசனம் முடிந்தபின்னர் அங்கிருந்து பெரிய தெரு வழியாக ராமசாமி கோயிலுக்குச் சென்றேன். அழகான சிற்பங்களைக் கொண்ட இக்கோயிலிலும் கொடியேற்றம் அப்போதுதான் நிறைவுற்றிருந்தது. ராமர் பட்டாபிஷேகக்கோலத்தை கண்குளிர பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

ராமஸ்வாமி கோயிலிலிருந்து பொற்றாமரைக் குளம் வழியாக சார்ங்கபாணி கோயிலுக்குச் சென்றேன். பொற்றாமரைக்குளத்தில் நேற்றைவிட இன்று பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் புனித நீராடுவதைக் கண்டேன். மற்ற கோயில்களைவிட இங்கு அதிகமாகக் கூட்டம் காணப்பட்டது. 
சார்ங்கபாணிகோயிலிலிருந்து  தஞ்சைக்குக் கிளம்ப ஆயத்தமானது மறுபடியும் மகாமகக்குளத்தைப் பார்க்க எண்ணம் வரவே மறுபடியும் குளத்திற்குச் சென்றேன். நேற்றைவிட இன்று மகாமகக்குளத்தில் நீராடியோரின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்டது. கூட்டம் கூட்டமாக பக்தர்கள் குளித்துவிட்டு கரையில் ஏறிவருவதைக் காணமுடிந்தது. ஒரே பக்கமாக பக்தர்கள் அனுப்பப்பட்ட  நிலையில் அனைவரும் சீராகச் செல்ல உதவியாக இருந்தது. நாள் ஆக ஆக இன்னும் எண்ணிக்கை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விழா சிறப்புற நடைபெற எல்லாம் வல்ல இறைவன் திருவருள் துணை நிற்கும்.  


பயணத்தின் இடையே நேற்று கொடியேற்றத்திற்குப் பின்  பார்க்காமல் விடுபட்ட கும்பேஸ்வரர் கோயிலுக்கும், சோமேஸ்வரர்கோயிலுக்கும் சென்று கொடி மரத்தைக் கண்டு தரிசனம் செய்துவிட்டு மன நிறைவுடன் வந்தேன். சோமேஸ்வரர் கோயிலுக்குச் சென்றபோது உற்சவமூர்த்தியாக அவர் இறைவியுடன் வந்த காட்சியைக் கண்டு, சிறிது நேரம் அவர்களுடன் சென்றுவிட்டுத் திரும்பினேன். 






----------------------------------
எனது 100ஆவது பதிவு 
என் எழுத்திற்குத் துணை நிற்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
----------------------------------

13 comments:

  1. அருமையான தகவல்
    கொடியேற்றம் நிகழ்வை
    நேரில் கண்ட நிறைவு

    ReplyDelete
  2. தகவல் அனைத்தும் நன்று புகைப்படங்களும் அருமை
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  3. மிக நன்றி டாக்டர் ஜம்புலிங்கம். அங்கே போக முடியாதவர்களுக்கு உங்கள் படங்கள் தெய்வ தரிசனத்தை அளிக்கின்றன.

    ReplyDelete
  4. படங்களும் தகவல்களும் அருமை ஐயா
    நன்றி

    ReplyDelete
  5. படங்களோடு கூடிய தகவல்கள். இந்து அறநிலையத்துறை சார்பாக நூல்கள் ஏதும் வெளியிடப்பட்டு இருந்தால் தெரியப்படுத்தவும்.

    ReplyDelete
    Replies
    1. விரைவில் வெளியிடப்படவுள்ளது. விவரம் கிடைத்தபின் பகிர்வேன்.

      Delete
  6. படங்களுடன் தகவல்களும் தெரிந்து கொண்டோம் ஐயா. கூட்டம் குறைவாகத்தான் இருக்கின்றது போல் தெரிகின்றதே...

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து அங்கு சென்று வருகிறேன்.நாள் ஆக ஆக கூட்டம் பெருகுவதைக் காணமுடிகிறது.

      Delete
  7. கொடியேற்றம் படங்களும்,விளக்கங்களும் நாங்களும் கண்டது போல் உணர்வை தருகிறது ஐயா.

    ReplyDelete
  8. படங்களுடன் தகவல்களுக்கும் நன்றி ஐயா

    ReplyDelete
  9. Beautifully depicted with good narration. thank you
    m.gauthaman

    ReplyDelete
  10. தங்களின் மிகச்சிறப்பான இந்த 100-வது பதிவுக்கு என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். பதிவும் படங்களும் மிக அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete