முகப்பு

01 April 2016

ஃபுளோரிடாவிலிருந்து ஹவானாவுக்கு.. : தி இந்து

பீடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், அமெரிக்கா மற்றும் கியூபாவின் புதிய நட்பு, அமெரிக்கா அதிபரின் கியூபா பயணம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஃபுளோரிடாவிலிருந்து ஹவானாவுக்கு.. என்ற தலைப்பிலான எனது கட்டுரை இன்றைய (1 ஏப்ரல் 2016) தி இந்து நாளிதழில் வெளியாகியுள்ளது. அதனைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

ஃபுளோரிடாவிலிருந்து ஹவானாவுக்கு..  

பிடல் காஸ்ட்ரோவுக்கு முடிவுரை எழுத முயன்ற சக்திஇப்போது நட்பு மூலமாக புதிய முன்னுரையை எழுத ஆரம்பிக்கும்விதமாக மாறியிருப்பதை அமெரிக்க அதிபரின் கியூபா பயணம் தெரிவிக்கிறது.
எண்ணங்களின் பிரதிபலிப்புகள் என்று ஒரு கட்டுரையை 2009-ல் பிடல் வெளியிட்டார். கம்யூனிஸ்ட் கட்சியோ அரசோ எடுக்கும் முடிவுகளில் நான் தலையிடப்போவதில்லை” என்று அதில் குறிப்பிட்டார். அதில் ஒபாமாவுக்குப் பெரும் புகழாரத்தையும் பிடல் காஸ்ட்ரோ சூட்டியிருந்தார். கியூப - அமெரிக்க உறவில் இது ஒரு தொடக்கப்புள்ளி என்றாலும்பிடல் காஸ்ட்ரோவின் இந்த நகர்வை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால்பிடல் காஸ்ட்ரோவைக் கொல்ல அமெரிக்க உளவுத் துறையால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இன்றைக்கும் உலகத்தால் மறக்கப்பட்ட கதைகள் அல்ல.


கொலை முயற்சிகள்
1959 புரட்சிக்குப் பின் ஆட்சிக்கு வந்தார் காஸ்ட்ரோ. அப்போது கியூபா உளவுத் துறையின் தலைமைப்பொறுப்பில் இருந்தவர் எஸ்கலன்டே. 1959முதல் 2000 வரை காஸ்ட்ரோவைக் கொல்ல 634 முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவற்றில் 168 முயற்சிகள் வெற்றி பெற்றிருக்க வாய்ப்புள்ளவை என்றும் அவர் எழுதிய எக்ஸிகியூட்டிவ் ஆக்‌ஷன்எனும் புத்தகத்தில் கூறுகிறார்.

காஸ்ட்ரோவைக் கொல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுஅவர் குடிக்கும் சுருட்டில் வெடி மருந்தை வைத்து அவரது முகத்தைச் சிதறவைப்பது. 1985-ல் காஸ்ட்ரோ சுருட்டுப் பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டார். ஒரு முறை பேனாவில் நச்சுத்தன்மை வாய்ந்த ஹைபோடெர்மிக் ஊசி செருகப்பட்டிருந்தது. ஒரு முறை அவர் கடலில் நீந்தும்போதுஅதிகமான கரீபியன் மெல்லுடலிகளைப் பயன்படுத்தி அவரைக் கொல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஒரு முறை கடலுக்கு அடியில் ஒரு பெரிய சங்கு ஓட்டில் வெடிகுண்டைப் பொருத்தி வெடிக்கச் செய்யும் முயற்சி நடந்திருக்கிறது. ஒரு முறை அவருடைய முன்னாள் காதலியான மரிட்டா லோரன்ஸை வைத்து அவரைத் தீர்த்துக்கட்டும் முயற்சி நடந்திருக்கிறது. காஸ்ட்ரோவைக் கொல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பான திரைப்படத்தை இயக்கிய பீட்டர் மூர் அதனைப் பற்றிக் கூறுவதைப் பார்ப்போம். அமெரிக்க உளவுத் துறையால் அந்தப் பெண்ணிடம் விஷ மாத்திரைகள் தரப்பட்டன. அவள் அவற்றைக் குளிர்ந்த ஜாடி ஒன்றில் வைத்துக்கொண்டாள். குளிர்ச்சியின் காரணமாக அந்த மாத்திரைகள் கரைந்துவிடவேகாஸ்ட்ரோவின் வாயில் குளிர்ந்த கிரீமை வைக்க முயற்சித்து அந்த முயற்சியையும் அவள் கைவிட்டாள். அவள் தன்னைக் கொல்ல வந்திருக்கிறாள் என்பதை உணர்ந்த காஸ்ட்ரோ,தன்னைக் கொல்வதற்காக அவளிடம் தன்னுடைய கைத்துப்பாக்கியைத் தருகிறார். அப்போது அவள், ‘என்னால் முடியாது பிடல்’ என்று கூறிவிட்டாள்” என்கிறார் அவர். இவையெல்லாம் தவிரமாஃபியா கும்பல்கள் மூலம் துப்பாக்கிச்சூடுவெடிகுண்டு வீச்சு மூலம் அவரைக் கொல்லும் முயற்சிகள் காலமெல்லாம் நடந்திருக்கின்றன.

இந்த முயற்சிகள் காஸ்ட்ரோவின் வாழ்க்கை முறையையே மாற்றின. அதிபர் பதவிப் பொறுப்பேற்ற ஆரம்பக் காலங்களில் அவர் தனியாகத் தெருவில் நடந்துசெல்வதை வழக்கமாகக்கொண்டிருந்தார். ஆனால்,நாளடைவில் அப்பழக்கத்தைக் கைவிட்டார். பின்னர்அவரைப் போன்ற மாதிரிகள் பயன்படுத்தப்பட்டனர். பின்னர்அவர் கியூபாவில் 20 வேறுபட்ட முகவரிகளில் தங்க ஆரம்பித்தார்.

உண்மையில் பார்க்கப்போனால்அமெரிக்கா தன் ஜென்ம விரோதியான காஸ்ட்ரோவைக் கொல்லும் முயற்சியைக் கைவிட்டுவிட்டாலும்கூட கியூபா பாதுகாவலர்கள் மிகவும் எச்சரிக்கையாகவே நடந்துகொள்கிறார்கள்.

கைகுலுக்கிய நட்பு

2013 டிசம்பரில் நெல்சன் மண்டேலாவின் இறுதிச்சடங்கின்போது கியூப அதிபர் ரால் காஸ்ட்ரோவும் ஒபாமாவும் கைகுலுக்கிக்கொண்டனர். நெடுநாள் பகையை மறந்து இரு நாடுகளும் நட்பு பேணுமா என்ற வினாவை எழுப்பியது இந்தக் கைகுலுக்கல்.

டிசம்பர் 2014-ல் ஒபாமாவும் ரால் காஸ்ட்ரோவும் 45 நிமிடங்கள் தொலைபேசியில் முதன்முதலாகப் பேசினர். இரு நாடுகளின் நட்புப் பாராட்டலின் தொடக்கமாக அமைந்தது. ஆகஸ்ட் 2015-ல் அமெரிக்ககியூப தூதரகங்கள் 54 ஆண்டுகளுக்குப் பின்னர் திறக்கப்பட்டன. மார்ச் 2016-ல் 88ஆண்டுகள் கழித்துகியூபாவுக்கு வரும் அமெரிக்க அதிபர் என்ற பெருமையைப் பெற்றார் ஒபாமா. அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே அதிபர் ஒபாமாவின் கியூபா பயணம் அமைந்தது. கியூபா மக்களுடனான தனது சந்திப்பை வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று கூறி பெருமைப்பட்டுக்கொண்டார். கியூபாவில் ஒரு மாற்றம் நிகழப்போகிறது. ரால் காஸ்ட்ரோ அதனைப் புரிந்துகொள்வார் என நினைக்கிறேன்” என்றார் ஒபாமா. கியூபாவுடனான உறவைப் புதுப்பித்துக்கொள்ளும் வகையில் கடந்த ஓராண்டில் பல திட்டங்களை மேற்கொண்டார் ஒபாமா. அவற்றுள் பயணத் தடைகளில் சில மாற்றங்கள்அமெரிக்க வங்கிகளின் வழியான செயல்பாட்டில் தடை நீக்கம்அமெரிக்க வங்கிகளில் கியூபா நாட்டவர் வங்கிக் கணக்குத் தொடங்க அனுமதிநேரடி கடிதப் போக்குவரத்துவணிக நோக்கிலான விமானங்கள் செயல்பாடுஅமெரிக்கச் சிறைகளில் உள்ள கியூபா கைதிகள் விடுதலை. அவ்வாறே கியூபாவிலிருந்த அமெரிக்கர் அலன் கிராஸ் விடுதலைஅமெரிக்கா வைத்துள்ள தீவிரவாத ஆதரவாளர்கள் பட்டியலிலிருந்து கியூபா நீக்கம் உள்ளிட்டவை அடங்கும்.

புதிர் கடிதம்

அமெரிக்க அதிபரின் கியூபா பயணமும்அவருக்குக் கிடைத்த வரவேற்பும்,உறவை மேற்கொள்ள இரு நாடுகளும் மேற்கொள்ளும் முயற்சிகளும் சாதாரண நிகழ்வாசாதனையா என்று விவாதிக்கும் இந்தச் சூழலில்பிடல் காஸ்ட்ரோ ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அமெரிக்க அதிபரின் பேச்சுகள் தேனில் தோய்க்கப்பட்டவைஅமெரிக்க அதிபரிடமிருந்து இவ்வாறான வார்த்தைகளைக் கேட்கும்போதே மாரடைப்பு வந்துவிடும்என்று கூறியுள்ளார். காஸ்ட்ரோ தன் கடிதத்தில், 1959-ல் கியூபா விடுதலையானது தொடங்கி இன்றைய நிலை வரை விவாதிக்கிறார். ஒபாமா கியூப அரசியலின் கோட்பாடுகளைப் பற்றிய தம் எண்ணங்களைக் கூறுகிறாரே தவிரஅதனைப் பற்றி விரிவாக விவாதிக்கவில்லை என்கிறார். ஒபாமாவின் நல்லெண்ணத்தை பிடல் காஸ்ட்ரோ பாராட்டவே செய்கிறார். ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால்ஒபாமாவின் நடத்தை சரியாக உள்ளது என்கிறார். அதே நேரத்தில்தன்னலம் இல்லாத கியூப நாட்டு மக்கள் தங்கள் நாட்டின் பெருமைகளையும்கல்விஅறிவியல் மற்றும் பண்பாட்டோடு இயைந்த அதன் வளத்தையும் விட்டுக்கொடுப்பார்கள் என்ற மாயையில் யாரும் இருந்துவிடக் கூடாது என்றும் கூறுகிறார்.

ஃபுளோரிடாவிலிருந்து ஹவானா 90 மைல்கள்தான். ஆனால்நாம் இந்த தூரத்தைக் கடப்பதற்கு அதிக தூரம் பயணிக்க வேண்டியிருந்தது” என்றார் ஒபாமா. உண்மைதான். ஆனால்அமெரிக்கா - கியூபா உறவுப் பயணத்தில்,அமெரிக்கர்கள் எடுத்துவைக்க வேண்டிய அடிகளே அதிகம் என்றே தோன்றுகிறது!

பா.ஜம்புலிங்கம்முனைவர்தமிழ்ப் பல்கலைக்கழகக் கண்காணிப்பாளர்.
 தொடர்புக்கு: drbjambulingam@gmail.com


----------------------------------------------------------------------------
தி இந்து நாளிதழில் இக்கட்டுரையை கீழ்க்கண்ட இணைப்பில் வாசிக்க அழைக்கிறேன்.
ஃபுளோரிடாவிலிருந்து ஹவானாவுக்கு..  






----------------------------------------------------------------------------

பிடல் காஸ்ட்ரோ/கியூபா தொடர்பான முந்தைய கட்டுரைகளைப் பின்வரும் இணைப்பில் வாசிக்கலாம்:
3 ஏப்ரல் 2016அன்று மேம்படுத்தப்பட்டது.

29 comments:

  1. வரலாறு படித்தேன் முனைவருக்கு நன்றியும், வாழ்த்துகளும் தொடரட்டும் தங்களது எழுத்துப்பணி வாழ்க வளமுடன்
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. மிகச் சிறப்பான கட்டுரை ஐயா...
    தொடரட்டும் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான வரலாற்றுக் கட்டுரைகள்...

    ReplyDelete
  3. எளிமையாக எழுதப்பட்ட ஒரு தரமான கட்டுரை....பாராட்டுக்கள்.. இது போன்ற தகவல்கள் அடங்கிய பல கட்டுரைகளை எழுதுங்கள் தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கும்

    ReplyDelete
  4. சிறப்பான கட்டுரை - பல தகவல்களோடு. பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  5. Mr Umamaheswaran (thro email: maheshtnjr@rediffmail.com)
    superb article. please continue to write like this.
    i ll too write. thank you very much

    ReplyDelete
  6. Mr TV Ramaswamy(thro email: ramaswamy1949@yahoo.com)
    Dear Sir,
    It is an excellent article I have read in today's THE HINDU TAMIL op-Ed page. You have so nicely and casually narrated as to how Fidel Castro escaped of his dangers during his life time. By reading your writing I could know that Fidel Castro is a tall leader. As we now have MODI as PM in India, US has Barack Obama as her President. Unfortunately this tall leader with genuine approach will be quitting office in another 9-1/2 months. Can his visit to Cuba now will have any impact at all? Can his successor be it Hillary or Trump will follow Obama's footstep? If not what is going to be the fate in future in their relationship between these two countries. It is an exploring article. TVR

    ReplyDelete
  7. தஞ்சையில் தங்களை நேரில் சந்தித்தபோதே இந்த சரித்திர நிகழ்வைப் பற்றி சொல்லி ஆச்சரியப்பட வைத்தீர்கள். இப்போது அதை கட்டுரையாக வாசித்தபோது பிரமிப்பாக இருக்கிறது. அருமையான வரலாற்று பொக்கிஷம்.
    பகிர்ந்தமைக்கு நன்றி!
    த ம 3

    ReplyDelete
  8. Mr SV Venugopalan SV (thro: sv.venu@gmail.com)
    அன்பின் ஜம்புலிங்கம் அய்யா, மிகவும் அருமையான எழுத்துக்களுக்கு பாராட்டுதல்கள்...மிகவும் காலத்தே எழுதப்பட்ட கட்டுரை... நுட்பமான வரலாற்றுத் தரவுகளை மிகச் செறிவாகத் தொகுத்து வழங்கி இருக்கிறீர்கள்...........
    உங்கள் தேடலை, ஆய்வுகளை, வாசிப்பின் பகிர்வை அற்புதமாகத் தொடர்கிறீர்கள்.... அண்மையில் பல்கலை கேட்டிருந்த நூல் கொடை வேண்டுகோளுக்கு இணங்க ஏராளமான புத்தகங்களை வழங்கிய செய்தியும் பார்த்தேன்...
    வாழ்த்துக்கள்...எஸ் வி வி

    ReplyDelete
  9. வரலாற்றில் பதியப்பட வேண்டிய ஒரு வரலாற்று நிகழ்வு ஐயா. அதைப் பற்றித் தாங்கள் மிகவும் அழகாக அழகான தமிழ் நடையில் எழுதியிருப்பதற்குப் பாராட்டுகள் வாழ்த்துகள். இந்து தமிழில் வெளியானதற்கும் வாழ்த்துகள். அதிலும் வாசித்துவிட்டோம் ஐயா.

    ஒபாமா அவர்களுக்கு காந்தியின் அஹிம்சைக் கொள்கையில் பற்று உண்டு என்று அவர் சொல்லியதை வாசித்திருக்கின்றோம். இதுவும் அதை நிரூபணம் செய்கிறதோ ஐயா.

    நல்ல கட்டுரை.

    ReplyDelete
  10. நல்ல கட்டுரை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. முனைவர் அய்யா அவர்களுக்கு வணக்கம். நான் அறியாத, அதேசமயம் விறுவிறுப்பான தகவல்கள். இதுவரை பிடல் காஸ்ட்ரோ வாழ்க்கை வரலாறு ஏதும் முழுமையாக படித்ததில்லை. நல்ல ஒரு முழுநூல் , தமிழில், இருந்தால் தெரியப் படுத்தவும். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மருதன் எழுதிய சிம்ம சொப்பனம் : ஃபிடல் காஸ்ட்ரோ என்ற நூலை (கிழக்கு பதிப்பக வெளியீடு) வாசிக்கலாம் ஐயா. நன்றி.

      Delete
  12. திரு ரத்தின விஜயன் (vasalviji@gmail.com மின்னஞ்சல் வழியாக)
    அன்புமிக்க ஜம்புலிங்கம் அவர்களுக்கு,வணக்கம்.
    ஃப்ளோரிடாவிலிருந்து ஹவானாவிற்கு வாசித்தேன். எளிய வரிகளில் எழுதியிருந்தீர்கள். கட்டுறை முழுவதும் ஒரு புள்ளியில் குவிந்திருந்தது. நீங்கள் பகிர்ந்துகொண்டிருந்த தகவல்கள் பொது மனவெளியில் மீண்டும் மீண்டும் எழுதப்பட வேண்டிய ஒன்று. வாழ்த்துக்கள்.
    தற்செயலாக பழைய ஃபிரண்ட் லைன் ஒன்றை இன்று புரட்டிக் கொண்டிருந்தபோது அதில் பிரசுரமாகியிருந்த உங்கள் கடிதம் ஒன்றையும் கண்டேன் - அதுவும் கூட கியூபா பற்றி ஏற்கனவே அதில் வெளிவந்திருந்த ஒரு கட்டுரைக்காக நீங்கள் எழுதியது.
    கியூபா பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் வரும் எழுத்துக்களை தொடர்ந்து கவனித்தபடியே இருப்பேன். கியூபா பற்றி பொது வெளியில் பேசுவதற்கு எவ்வளவோ இருக்கிறது. எழுதுவதற்கு இன்னும் எவ்வளவோ கைகள் வேண்டும்.
    பேச விரும்புகிறேன். தொடர்பு எண் அனுப்புவீர்களா?
    நன்றி.
    அன்புடன் .....ரத்தின விஜயன்

    ReplyDelete
  13. தன்னைக் கொல்லவே பிடல் காஸ்ட்ரோ 'பிஸ்டலை 'தந்தவர் என்பதை அறிய வியப்பு ஏற்பட்டது !நல்ல தகவல்கள் சொல்லும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  14. அரசியலிலுலக அரசியலிலும் நிரந்தர நட்போ பகையோ இல்லை என்பதையே இது காட்டுகிறதுகட்டுரையை வாசிக்கும் போது கென்னெடியின் brinkmanship நினைவுக்கு வந்தது மூன்றாம் உலகப் போர் தவிர்க்கப் பட்டதும் நிழலாக நினைவில் வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  15. முனைவர் இரா.காமராசு (kamarasu_era@yahoo.co.in மின்னஞ்சல் வழியாக)
    அன்புள்ள சார், வணக்கம் ..கட்டுரை வாசித்தேன். நன்று. மகிழ்ச்சி. அன்புடன் இரா.காமராசு

    ReplyDelete
  16. A neatly narrated article sir. I have read that article today in the
    Tamil hindu. I am very much delighted sir. Thank you sir.

    ReplyDelete
  17. வணக்கம்
    ஐயா

    பல தகவல்கள் உள்ளடங்கிய கட்டுரை படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம7

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  18. அன்பு ஐயா ஜம்புலிங்கம் அவர்களே,
    Mr G Arularasan (arulghsr@gmail.com மின்னஞ்சல் வழியாக)
    தாங்கள் அமெரிக்க கியூபாவின் அண்மைய உறவைப்ற்றி தி இந்துவில் எழுதிய கட்டுரை மிகச் சிறப்பாக இருந்த‍து. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. பல தகவல்கள் அடங்கிய கட்டுரை பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றி ஐயா....

    ReplyDelete
  20. வணக்கம் அய்யா...

    காஸ்ட்ரோ மீதான கொலை முயற்சிகள் தொடங்கி, மிக நீண்ட கால பொருளாதார தடைகள், ராணுவ அச்சுறுத்தல்கள், கியூபா நாட்டு மக்களை கிளர்ச்சிக்கு தூண்ட முயற்சித்தது என கியூபா மீதான அமெரிக்காவின் அரசியல் பகடை விளையாட்டுகள் ஏராளம் !

    அண்டை வீட்டு " மாபெரும் வல்லரசின் " அத்தனை தடங்கள்களையும் மீறி, கியூபா தன் பொருளாதாரத்தை த்க்கவைத்து கொண்டது ஆச்சரியம் !

    ஓபாமாவின் முயற்சி நிச்சயம் பாராட்டத்தக்கது என்றாலும் இந்த கைகுலுக்கல் அமெரிக்காவை பொறுத்தவரை காலத்தின் கட்டாயமும் கூட !

    உலக அரசியல் அரசியல் சதுரங்க அட்டையின் காய்கள் மிக வேகமாக இடம் பெயரத்தொடங்கிவிட்டன !... பாரம்பரிய வல்லரசுகளின் பொருளாதார நிலை தேங்கிவிட்டது ! முக்கியமாய் சீனாவின் எழுச்சி !... இந்தியாவும் குறிப்பிடத்தக்க அளவில் வலுவான ச்க்தியாக வளர்ந்தாலும் சீன ராணுவ வியூகம் அமெரிக்காவை பயப்படுத்தும் அளவுக்கு இந்தியா எந்த வளர்ந்த நாட்டையும் பயப்படுத்தவில்லை !

    மேலும் ரஷ்யாவுடனான சீனாவின் உறவு நெருக்கமானது. ஆசிய பிராந்தியம் முழுவதையும் தன் ஏவுகணை வீச்ச்சு வட்டத்துக்குள் கொண்டுவந்துவிட்ட சீனாவின் அடுத்த கட்டம் ஐரோப்பா மர்றும் அமெரிக்காவை நோக்கி நிச்சயம் திரும்பும் ! அப்படி நேரும் பட்சத்தில் அமெரிக்காவிலிருந்து கூப்பிடு தூரத்திலிருக்கும் கியூபா கம்யூனிச முத்திரையுடன் உறவற்று இருப்பது அமரிக்காவுக்கு பாதகமான ஒன்று !

    அமெரிக்கர்களின் கை ஆதாயம் இல்லாமல் நீளாது என்றாலும் இது ஒரு நல்ல தொடக்கமே !

    தமிழில் " ஜியோ பாலிடிக்ஸ் " கட்டுரைகள், அதுவும் தெளிவான கட்டுரைகள் கம்மி. ஆழ்ந்த புரிதலும், தெளிவான பார்வையும் கொண்ட நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.

    நன்றி
    சாமானியன்



    ReplyDelete
  21. அருமையான அரசியல்க்கட்டுரை ஐயா.

    ReplyDelete
  22. தவிர்க்க இயலாத காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக, வலையின் பக்கமே வர இயலாத நிலை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன் இனி தொடர்வேன்

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. பிடல் காஸ்ட்ரோ கொலை முயற்சிகள், கியூபா & அமெரிக்கா நட்பு என விரிவாக நான் அறியாத செய்திகளை மிகவும் எளிய நடையில் அறியச் செய்தமைக்கு மிகவும் நன்றி. தமிழ் ஹிந்துவில் வெளீயானமைக்குப் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  25. அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
  26. அருமையான பதிவு. அமெரிக்கா காஸ்ட்ரோவை கொல்ல பல முறை சதி திட்டம் தீட்டியும் எந்த முயறசியும் எடுபடவில்லை. ஒபாமாவின் நேசக்கரஙகள் மகிழ்வைத் தருகின்றது.செய்தி பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  27. முனைவர் சு.மாதவன் மின்னஞ்சல் வழியாக(semmozhi200269@gmail.com)கட்டுரையை படித்தேன். இடதுசாரிகள் கூட அவ்வளவு கவனம் செலுத்தாத சுமார் ஒரு நூற்றாண்டைக் கடந்து.
    நிகழ்ந்துள்ள வரலாற்றின் அதிர்வுப் பயணம் குறித்த இந்தக் கட்டுரை மிகுந்த பாராட்டுக்குரியது. கட்டுரையின் கதைமொழிநடை, ஆத்ம ஈடுபாட்டை எடுத்துக்காட்டியது. காஸ்ட்ரோவைக் கொல்ல அமெரிக்கா எடுத்த ஈனமுயற்சிகளைக் கட்டுரையாளர் விவரிக்க விவரிக்க ஒற்றையாதிக்கக் கொடுங்கோலரசான அமெரிக்காமீது கோபம் கொப்பளிக்கிறது. கட்டுரையாளர் சொல்வதுபோல், நடைப்பயிற்சியின்போதுதான் பல முக்கிய நபர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கியூபா சென்றது குறித்து ஒபாமா, " கியூபாவில் ஒரு மாற்றம் நிகழப்போகிறது. ரால் காஸ்ட்ரோ அதனைப் புரிந்துகொள்வார் என நினைக்கிறேன்" எனச் சொல்லி இருப்பது ரால் காஸ்ட்ரோவுக்குப் புரிந்ததோ இல்லையோ நமக்கு நன்றாகப் புரிகிறது. படமெடுத்தாடும் நல்ல பாம்பை எடுத்து நாக்கில் வைத்து ஒத்திகை பார்த்திருக்கிறது கியூபா. இதன் விளைவு வேறென்னவாக இருக்கும்? உலகச் சந்தையை உள்ளே விட்டு கலக மந்தையாக ஆக்குவதுதான். எனவே, கியூபா தன் தற்சார்பின் உயிருக்கு ஆபத்து வந்துவிடாத வகையில் வரையறைகளைக் கறார்ப்படுத்திக் கொள்ளவேண்டும்.இல்லையென்றால், கரும்புச்சாறு பிழிய இரும்புக்காரன் தயாராக இருக்கிறான் என்பதுதான் கியூபநல விரும்பிகளின் பார்வையாக இருக்கும். இந்தச் சூழலில், பிடல் காஸ்ட்ரோ ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.அதில், " அமெரிக்க அதிபரின் பேச்சுகள் தேனில் தோய்க்கப்பட்டவை; அமெரிக்க அதிபரிடமிருந்து இவ்வாறான வார்த்தைகளைக் கேட்கும்போதே மாரடைப்பு வந்துவிடும்" என்று கூறியுள்ளார். தேனில் தோய்க்கப்பட்ட விஷஅணுகுண்டுகள் அவை என்கிறாரோ பிடல்.
    -முனைவர் சு.மாதவன்,புதுக்கோட்டை.

    ReplyDelete