முகப்பு

22 April 2016

நண்பர் கவிஞர் வைகறை

சிலருடைய நட்பு மனதில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்பது அனுபவம் தந்த உண்மை. அந்த வகையில் நண்பர் வைகறையின் நட்பு என்பதானது எங்களுக்கு வலைப்பூ மூலமாகவே அமைந்தது. திரு கஸ்தூரிரங்கன் முகநூலில் வைகறை இயற்கையெய்திய செய்தியைப் பார்த்தபோது நம்ப முடியவில்லை. மிகக் குறுகிய காலமே அவருடனான நட்பு எங்களுக்கு. வலைப்பதிவுகள் மூலமாகவே நாங்கள் அறிமுகமானோம். அவருடைய இழப்பை அறிந்த நண்பர்கள் பரிமாறிக்கொள்ளும் செய்திகளைப் பார்க்கும்போது அவரிடம் அவர்கள் வைத்திருந்த அன்பை உணரமுடிகிறது. வீதி நிகழ்வுகளைப் படிக்கும்போதும், அந்நிகழ்வுகளைப் பற்றிய ஏற்பாடுகளைக் கண்டபோதும் அவருடைய ஈடுபாட்டினை நாங்கள் உணர்ந்தோம். 






மந்தகாசப் புன்னகை என்பார்களே அந்த புன்னகை, எப்பொழுதும் சுறுசுறுப்பு, அழகான ஆழமான, அர்த்தமுள்ள கவிதைகள், அனைவரையும் ஈர்க்கின்ற அவருடைய பழகும் முறை, நிதானமான பேச்சு என்ற நிலையில் அவரை புதுக்கோட்டை வலைப்பதிவர் விழாவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.  

இயற்கையெய்தும் அளவு அவருக்கு வயதாகிவிட்டதா என்ன? அவர் அண்மையில் வீதியில் படித்த கவிதையைப் பற்றி நண்பர்கள் பகிர்ந்ததைப் படித்தபோது அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததோ என்று யோசிக்கத் தோன்றுகிறது. 

இளம் வயதில் மரணத்தைப் பற்றி பேசும்போது நீலவானம் திரைப்படத்தில் கதாநாயகி கூறுவார், "ஆறில் சாகலாம், அறியா வயசு. அறுபதில் சாகலாம் அனுபவித்த வயசு......". இவருடைய வயது இன்னும் சாதிக்க வேண்டிய வயது. அதை நினைக்கும்போது நமக்கு இன்னும் வேதனை மேலிடுகிறது.

வலையுலக நட்பில் இவ்வாறான இழப்புகளைத் தொடர்ந்து நாம் எதிர்கொண்டு வருகின்றோம். சமுதாய நலனில் அதிக அக்கறையுள்ளோர்  உடல் நலத்திற்கும் சற்றே முக்கியத்துவம் கொடுத்திருக்கவேண்டும் என்பதை இவரது மரணம் எடுத்துக்காட்டுகிறது. வரும் எதையும் நம்மால் தடுத்து நிறுத்த முடியாது. இருந்தாலும் இவ்வகையிலான இவரது பிரிவு நண்பர்களுக்கு பேரிழப்பாகும். 

அவரைப் பிரிந்து வாழும் அவருடைய குடும்பத்தாருக்கும், பிற நண்பர்களுக்கும் நம் ஆழ்ந்த இரங்கல்களைச் செலுத்துவோம். அவரது எழுத்தின்மூலமாக அவர் என்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டேயிருப்பார். கவிதையும் எழுத்தும் இருக்கும்வரை அவரது எழுத்தும் இருப்பும் பேசப்படும் என்பதே உண்மை.

புகைப்படங்கள் நன்றி : தேவதா தமிழ் முகநூல்

23 comments:

  1. மிகவும் துயரமான செய்தியாக உள்ளது. வருந்துகிறேன்.

    அவரைப் பிரிந்து வாழும் அவருடைய குடும்பத்தாருக்கும், பிற நண்பர்களுக்கும் நம் ஆழ்ந்த இரங்கல்களைச் செலுத்துவோம்.

    //அவரது எழுத்தின்மூலமாக அவர் என்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டேயிருப்பார். //

    உண்மை.

    ReplyDelete
  2. இளவயதில் ஒருவர் மரணிப்பது மிகவும் வேதனையான செய்தி. அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்!

    ReplyDelete
  3. இவருடன் ஒரேயொரு நாள்தான் பழகினேன் மென்மையான மனிதர் அவரது குடும்பத்தார் இதை எப்படி ஜீரனிக்கப் போகின்றார்களோ.... வேதனை.

    ReplyDelete
  4. பதிவர் சந்திப்பில் சிரித்த முகத்துடன் அன்பாக பழகினார். மனம் வேதனையடைகிறது. அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  5. புதுகை பதிவர் விழாவின் போது கவிஞரைப் பார்த்தேன். சுறுசுறுப்பாக அங்குமிங்கும் ஓடியாடிக்கொண்டிருந்தார். அவருடைய புதுக்கவிதை தான் முதல் பரிசு பெற்றது. இந்த வயதில் மரணமா? இருந்திருந்தால் கவிதை உலகில் நிறைய சாதித்திருப்பார். மிகவும் வேதனை தரும் செய்தி. அவர் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்!

    ReplyDelete
  6. மிக அருமையான நட்பு. கவிஞர் வைகறையை கோவை இலக்கிய வட்டம் வாயிலாகவே எனக்கு அறிமுகம். இன்முகமும் இனிமையான பேச்சுமாக எளிதில் நட்பு கொள்ளும் அருமையான இளைஞர்.
    இளம் வயதில் இழப்பு என்பது மிகப்பெரிய வருத்தமே. ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  7. பாவலர் (கவிஞர்) எவரும்
    சாவடைந்ததாய் வரலாறில்லை
    வைகறை - நீ என்றும்
    வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்!

    ஓ! பாவலனே (கவிஞனே)!
    வைகறை என்னும் பெயரில்
    பாக்களால் அறிவை ஊட்டினாய்
    படித்தவர், கேட்டவர் நெஞ்சில் வாழ்கின்றாய்!
    கிட்ட நெருங்காமல் எட்டப் போய்
    எங்கிருந்தோ நம்மாளுங்க உள்ளத்தில்
    வாழும் வைகறையின் குடும்பத்தாருடன்
    துயர் பகிருகின்றோம்!

    ReplyDelete
  8. அவருடைய குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவன் மன ஆறுதலை இறைவன் தர வேண்டும்.
    இளம் வயதில் இறப்பு குடும்பத்தினர், மற்றும் நெருங்கிய நட்புகளுக்கு பெரிய அதிர்ச்சிதான்.

    ReplyDelete
  9. வைகறை குடும்பத்தாருக்கும் அவரின் நட்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்........

    ReplyDelete
  10. சிலமுறை நேரில் பார்த்துப் பேசியிருக்கிறேன்
    அமைதியான பேச்சு
    புன் சிரிப்பு
    இனி எப்போதுக் காணப்போகிறோம்
    வாழ்பு பல சமயங்களில் மிகக் கொடூரமானது என்பது புரிகிறது
    நண்பரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை ஐயா

    ReplyDelete
  11. அன்பாக பழகிய நண்பரின் மறைவை என்னாலும் நம்ப முடியவில்லை !

    ReplyDelete
  12. அன்பாக பழகிய நண்பரின் மறைவை என்னாலும் நம்ப முடியவில்லை !

    ReplyDelete
  13. மிக மிக வேதனையான ஒரு நிகழ்வு. பதிவர் சந்திப்பில் மிகவும் அன்புடன் விளையாட்டாகப் பேசிக் கொண்டிருந்தார். எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகள். அவர்குடும்பாத்தாருக்கு இதை ஏற்கும் மனவலிமையைக் கொடுத்திட இறைவனிடப் பிரார்த்திப்போம்...

    ReplyDelete
  14. மிக சோர்வூட்டும் செய்தி. சாகிற வயதா இந்தத் தம்பிக்கு? அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்

    ReplyDelete
  15. அவருக்கு நேர்ந்த இளம் வயது மரணம். அவராகவே வரவழைத்துக் கொண்டது. அவரது ஆன்மா இனியாவது இளைப்பாறட்டும்.

    ReplyDelete
  16. ஆழ்ந்த இரங்கல்கள்... சீரணிக்க முடியாத இழப்பு ஐயா...

    ReplyDelete
  17. ஆழ்ந்த இரங்கல்கள்!!

    ReplyDelete
  18. அவரது ஆன்மா இறைவனிடம்
    இளைப்பாறிக் கொண்டிருக்கிறது...

    ReplyDelete
  19. எங்கள் புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் மற்றும் வீதிக் குடும்பத்தின் பேரிழப்பு... அவரது தன்னலமற்ற பணிகளை நாங்களே அறிவோம். சாகக்கூடாத வயதில் மறைந்ததை எப்படி ஈடுகட்டுவது? எந்தச் சேமிப்பும் இல்லாத அந்தக் கவிஞனின் சிறுகுழந்தைக்கு நாமனைவரும் சேர்ந்து தான் ஏதாவது செய்ய வேண்டும். வாருங்கள் நண்பர்களே வரும் 04-05-2016 அன்று புதுக்கோட்டைக்கு...

    ReplyDelete
  20. மிகவும் வருந்தத்தக்க செய்தி ஐயா...விதியினை மாற்ற எவராலும் முடியாது...ம்ம்ம் அவரின் ஆன்மா சாந்தி அடையப் பிரார்த்திப்போம்

    ReplyDelete
  21. மிகவும் வருந்தத்தக்க செய்தி ஐயா...விதியினை மாற்ற எவராலும் முடியாது...ம்ம்ம் அவரின் ஆன்மா சாந்தி அடையப் பிரார்த்திப்போம்

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. இளமையில் வறுமை மட்டுமே கொடியதல்ல மரணமும்தான்.அவரது ஆன்ம இளைபாருதலுக்கா வேண்டுகிறேன்.

    ReplyDelete