முகப்பு

13 December 2016

அயலகவாசிப்பு : அக்டோபர், நவம்பர் 2016

கடந்த 10 ஆண்டுகளாக தினமும் காலை 15 நிமிடங்களாவது வெளிநாட்டு இதழ்களை வாசித்து வருகிறேன். அவ்வகையில் முதலிடம் பெறுபவை The Guardian, The New York Times மற்றும் Dawn. நேரமிருக்கும்போது Observer, Independent, Mail, Sun, Island உள்ளிட்ட இதழ்களும் இப்பட்டியலில் சேரும். 

 The Hindu இதழும் தினமணி இதழும்  வழக்கமாக காலை 8.00 மணிக்கு மேல் நிலையில் முதலில் வெளிநாட்டு இதழ்களை இணையத்தில் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.  அக்டோபர் 2016இல் தொடங்கி சில நிகழ்வுகளை முகநூலில் பதிய ஆரம்பித்தேன். அந்தந்த இதழ் தளத்தில் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாலும் டிவிட்டர் வழியாகப் படிக்கும்போது உடனுக்குடன் அனைத்து செய்திகளையும், கட்டுரைகளையும் காணும் வாய்ப்பு கிடைக்கிறது. என் வாசிப்பிற்குத் துணைநிற்கும் அனைத்து நல்லுங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.


#அயலகவாசிப்பு தொலைக்காட்சிகள் தோற்ற நிலையில் அவ்விடத்தை இதழ்கள் பெற்றுவிட்டன என்பதை உணர்த்துகின்ற கட்டுரை. 


… but would the famously fair and impartial BBC have behaved any differently?
THEGUARDIAN.COM|BY PETER PRESTON
… but would the famously fair and impartial BBC have behaved any differently?

#அயலகவாசிப்பு பழிவாங்கும் டேப்ளாய்ட்டுகள் (Revenge of the tabloids) என்ற தலைப்பில் பிரிக்ஸ்ட் சூழலை மிக நுணுக்கமாக விவாதிக்கும் கட்டுரை.


The Long Read: Rocked by the phone-hacking scandal and haemorrhaging readers, the rightwing tabloids seemed to be yesterday’s news. But now, in Theresa May’s Brexit Britain, they look more powerful than ever
THEGUARDIAN.COM|BY ANDY BECKETT

#அயலகவாசிப்பு பணத்திற்காக நாம் வரிசையில் நிற்பதைப் பற்றியும் தற்போதைய சூழலைப் பற்றியும் விவாதிக்கும் கட்டுரை.


Indian prime minister insists cancellation of 500 and 1,000-rupee notes will ultimately benefit poorer people
THEGUARDIAN.COM

#அயலகவாசிப்பு டிரம்ப் வெற்றி மற்றும் பிரிக்சிட்டைத் தொடர்ந்து Post truth என்ற சொல் ஆக்ஸ்போர்டு அகராதிகளில் UK and US Word of the Year என்ற நிலையினைப் பெறுவதை அறிவிக்கும் கட்டுரை.
The word is an adjective, defined in the dictionary as “relating to or denoting circumstances in which objective facts are less influential in shaping public opinion than appeals to emotion and personal belief”. Courtesy: Telegraph


#அயலகவாசிப்பு அமெரிக்கத்தேர்தல் நாளின் இரவில் 13 முறை தலைப்புச்செய்திகளின் சொல்லமைப்பில் மாற்றம் (In final hours of a bitter race, Voters get Their Say என்பதில் தொடங்கி Trump Triumphs) செய்யப்பட்டதை கூறும் நியூயார்க் டைம்ஸ். 
http://www.nytimes.com/…/in-13-headlines-the-drama-of-elect…

The changing headlines that topped The Times’s home page — 13 of them in all — convey the drama of election night.
NYTIMES.COM|BY MARK BULIK AND STEPHEN HILTNER
#அயலகவாசிப்பு இனி ஒயிட்ஹாலில் mansplaining இருக்காதாம். ஓர் ஆணால் ஒரு பெண் மேல், அவருக்கு (அந்தப் பெண்ணுக்கு) எதுவும் தெரியாது என்றும் தனக்கு மட்டுமே (அந்த ஆணுக்கு) அனைத்தும் தெரியும் என்றும் விவாதிப்பது. 

It is the bane of women across the country - men 'mansplaining' things to them or talking over them in a patronising manner.
TELEGRAPH.CO.UK
#அயலகவாசிப்பு இங்கிலாந்தைச் சேர்ந்த, புற்றுநோயால் இறந்த 14 வயது பெண்ணின் உடல் அவர் விரும்பியவாறு (cryogenically frozen முறையில்) பாதுகாக்கப்படவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. படிக்கும்போதே உறையவைக்கின்ற செய்தி. இவ்வாறாக பலருடைய உடல் பாதுகாக்கப்படுகிறதாம்.

Judge backs mother in allowing body of 14-year-old daughter, who died of cancer, to be cryogenically frozen in US
THEGUARDIAN.COM|BY OWEN BOWCOTT
Teenage girl's wish for preservation after death agreed to by court, The Guardian

Mother captures special moment with 'miracle' baby who survived against the odds, The Telegraph

மூலக்கட்டுயை, அந்தந்த செய்தியின் கீழே தரப்பட்டுள்ள இணைப்பினைச் சொடுக்கிப் படிக்கலாம்.
நன்றி : The Guardian, The New York Times, Telegraph 

7 comments:

  1. போற்றுதலுக்கு உரிய வாசிப்புப் பழக்கம் ஐயா

    ReplyDelete
  2. தங்களால் - 14 வயதுடைய பெண்ணின் ஆசையையும் , தாயின் மகிழ்ச்சியையும் அறிந்து கொள்ள முடிந்தது..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  3. பல தகவல்கள் அறிந்து கொள்ள முடிகிறது அய்யா... நன்றி...

    ReplyDelete
  4. வாசிப்பு - பல புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் வாசிப்பின் ஆர்வம் பிரமிக்க வைக்கிறது.

    ReplyDelete
  5. #This is her seeing her first snow fall. She absolutely loved it#
    அந்த தாயின் மகிழ்ச்சியில் நானும் மகிழ்ச்சி அடைந்தேன் :)

    ReplyDelete
  6. இந்தக் கட்டுரையை வாசித்தது அற்புதமான அனுப்வம், ஐயா.

    வங்கி வாசலிலான தற்போதைய மக்கள் வரிசை சிரமங்களின் POST TRUTH என்னவாக இருக்கும் என்ற யோசனை கூடியது. கார்டியன் இதழில் தற்போதைய இந்த நிலையை எப்படி விமர்ச்சித்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கலாம். விமர்சனம் இல்லை, வெற்றுச் செய்தி தான் என்றால் சப்பென்று போய்விடும்.

    பனி வீழ்ச்சியை உற்று நோக்கும் அந்தக் குழந்தையைப் பற்றிய செய்தி உருக்கம். அந்தக் குழந்தையின் முகத்தில் தான் எவ்வ்வளவு திகைப்பு+ஆர்வம்+ கூர்மை பாருங்கள்! GOD BLESS THE BABY!

    ReplyDelete
  7. Mr Balasubramaniam G.M (thro email: gmbat1649@gmail.com) ஐயா தாமத வருகைக்கு மன்னிக்கவும் இந்தியர்களுக்கு அயல் நாட்டு பத்திரிக்கைகளை வாசிக்கும் விருப்பம் போல் அவர்களுக்கு நம்மைப் பற்றிய எந்த எண்ணமும் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் உங்கள் ஆர்வமும் அவதானிப்பும் போற்றத்தக்கதே. வாழ்த்துகள்.

    ReplyDelete