முகப்பு

05 August 2017

அயலக வாசிப்பு : சூலை 2017

அயலக வாசிப்பில் சூலை 2017இல் நான் வாசித்தவற்றில் என்னை ஈர்த்த சில செய்திகளைப் பகிர்ந்துள்ளேன்.  இவற்றில் இஸ்ரேல் கயோம் இதழை இப்போதுதான் முதன்முதலாக வாசிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். கார்டியன், நியூயார்க் டைம்ஸ், டான் போன்ற இதழ்கள் நான் வழக்கமாகப் படிக்கும் இதழ்களாகும். இன்டிபென்டன்ட், டெலிகிராப் போன்றவை அவ்வப்போது வாசிக்கும் இதழ்களாகும். 

சூலை 4
இன்றைய The Hindu இதழில் பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் தொடர்பான செய்தியில் (Suhasini Haidar, Indian Embassy to remain in Tel Aviv, The Hindu, July 4, 2017, p.11) இஸ்ரேலில் வெளிவருகின்ற Israel Hayom இதழுக்கு அவர் அளித்திருந்த பேட்டி மேற்கோளாகக் காட்டப்பட்டிருந்தது. பேட்டி எடுக்கப்படும் விதம் கேள்விகள் வைக்கப்படும் விதமும், பிரதமரைப் பற்றி பேட்டியாளர் தந்துள்ள அறிமுகமும் ரசிக்கும்படி இருந்தன. (நன்றி : Israel Hayom, July 3, 2017)

சூலை 7
சமூக வலைதளங்களில் மோடி மற்றும் நெதன்யாகுவின் இணைந்த கட்டியணைப்பு மற்றும் பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்ளல் குறித்து டான் இதழில் வெளியான செய்தி. (நன்றி : டான்) இருவரும் வெறும்காலுடன் கடற்கரையில் உலாவியது உள்ளிட்ட பல புகைப்படங்களைக் கொண்டமைந்துள்ள இச்செய்தியின் தலைப்பில் Bromance என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. (21ஆம் நூற்றாண்டில் உருவான, brother and romance என்ற இரு சொற்களும் இணைந்த Bromance என்ற சொல்லுக்கு A close but non-sexual relationship between two men என்று பொருளாகும். நன்றி :https://en.oxforddictionaries.com/definition/bromance)


சூலை 11
உங்கள் மேசை ஒழுங்கின்றி கன்னாபின்னா என்று இருக்கிறதா? அப்படியென்றால் அது நீங்கள் ஒரு மேதையாவதற்கான ஓர் அறிகுறி என்கிறது ஓர் ஆய்வு. ஒழுங்கற்ற நிலையில் மேசையை வைத்துள்ளவர்கள் எந்த ஒரு காரியத்தையும் சவாலாக ஏற்றுச் செய்வார்களாம். சுத்தமாக, ஒழுங்குபடுத்தி வைத்துள்ளவர்கள் கடினமான விதிமுறையை பின்பற்றுவதோடு, புதியனவற்றை முயற்சி செய்ய அதிகம் யோசிப்பார்களாம். ஒழுங்கற்ற சுற்றுச்சூழலானது மரபு முறை மீறல் நிலையில், புதிய சாதனைகளைப் படைக்க உதவுகிறது என்கிறது அந்த ஆய்வு. (நன்றி : இன்டிபென்டன்ட்) நமக்கு இது எப்படிப் பொருந்துமோ என்று தெரியவில்லை. ஆனால், என் மேசையை எப்பொழுதும் ஒழுங்காகவே வைத்திருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.


சூலை 16
நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் கடவுச்சொற்கள் password, 123456, 12345678, 1234, qwerty, 12345, dragon, pussy, baseball, football என்பனவாம். ஒரே விதமான கடவுச்சொல்லை பயன்படுத்துவதால் என்ன ஆகும் என்று யோசியுங்கள். ஒரு நபர் பெரும்பாலும் 20க்கும் மேற்பட்ட கடவுச்சொற்களை வைத்துள்ளார். அவற்றில் திரும்பத்திரும்ப வருவன பல உள்ள நிலையில் பல சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளதாம் .(நன்றி : டெலிகிராப்)


சூலை 17
மிதிவண்டியில் பயணிப்பவர்களுக்கு மன அழுத்தம் மிகவும் குறைவே. மேலும் பல பயன்கள் உள்ளன. அவை என்னவென்று பார்ப்போமா? (நன்றி : கார்டியன்)

சூலை 18
அம்மாவுக்குக் கடைசி முத்தம். காதில் தொற்று நோய் காரணமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 36 வாரக் கர்ப்பிணி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவளுடைய உடல் நிலை மோசமானது. சிசரியன் முறைப்படி குழந்தை பிறந்து, மூளையில் வீக்கம் காரணமாக இறந்தது. தாயின் உடல் நிலை கவலைக்கிடமானது. அவள் இறப்பதற்கு முன்பாக அவளுடைய 17 மாத ஆண் குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டான். தாயின் உயிர் காக்கும் கருவிகள் நீக்கும் முன்பாக அவன் தன் தாயின் நெற்றியில் கடைசி முத்தம் கொடுத்தான். அவன் தரும் முத்தம் பார்ப்பவர் நெஞ்சை உருக வைத்துவிடும். (நன்றி : இன்டிபென்டன்ட்)

சூலை 19
2017இல் கார்டியன் இதழில் வெளிவந்த கட்டுரைகளில் வாசகருக்கு மிகவும் பிடித்த கட்டுரை எது என்று கேட்கிறது அவ்விதழ். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கட்டுரை 2017 இறுதியில் 320 பக்கங்களைக் கொண்ட பெட்சைட் கார்டியன் தொகுப்பில் வெளிவரவுள்ளது. ஒரு நாளைக்கு 1,50,000 சொற்கள். ஒரு வருடத்திற்கு 47 மில்லியன் சொற்கள். நூற்றுக்கணக்கான இதழாளர்கள், பங்களிப்பாளர்கள். செய்தி, அரசியல், பண்பாடு, விளையாட்டு என்ற பல நிலைகள். அவற்றில் எது சிறந்தது என்று தேர்ந்தெடுக்கவுள்ளது கார்டியன். (நன்றி : கார்டியன்)


சூலை 20
1942இல் பனிமலையில் சிக்கிய சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மார்சலின் டுமோலின் (40) மற்றும் அவருடைய மனைவி பிரான்சின் (37) ஆகிய இருவரின் உடல்கள் தற்போது தரையிலிருந்து 8,600 அடி உயரத்தில் அல்பைன் பனியாற்றில் கண்டுபிடிக்கப்பட்டன. இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் அணியப்பட்ட ஆடைகள், ஒரு நூல், ஒரு கெடிகாரம் ஆகியவையும் அவர்களின் உடலருகே இருந்தன. (நன்றி : நியூயார்க் டைம்ஸ்)


சூலை 26
விஜயவாடாவைச் சேர்ந்த அண்ணி திவ்யா தன் கனவுகளை நினைவாக்க அதிகம் உழைக்க வேண்டியிருந்தது. உலகிலேயே முதன் முதலாக போயிங் 777 விமானத்தின் இளம் பெண் கமாண்டர் என்ற சிறப்பினைப் பெறுகிறார். 30 வயதில் அவருக்கு இந்த பொறுப்பு கிடைத்துள்ளது. பொருளாதாரப் பிரச்சினைகளையும், எதிர்ப்புகளையும் துணிவோடு எதிர்கொண்டு இச்சாதனையை அவர் படைத்துள்ளார். (நன்றி : இன்டிபென்டன்ட்)  நம் நாட்டுப் பெண்மணியைப் பற்றி இன்டிபென்டன்ட் உள்ளிட்ட பல வெளிநாட்டு இதழ்களில் கட்டுரைகளும், செய்திகளும் வெளிவந்துள்ளன. இவரைப் பற்றி முழுமையாக முன்பொரு பதிவில் வாசித்துள்ளோம்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை : 
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1468586

20 comments:

  1. உங்கள் பதிவின் வழியே புதுப்புது செய்திகள்.

    ReplyDelete
  2. எனது அலுவலகத்தில் மேஜையை சுத்தமாகத்தான் வைத்திருப்பேன் அதுதான் எனக்கும் பிடிக்கும் ஆனாலும் என்னையறியாமல் மேஜை அலங்கோலமாகி விடும்.

    இக்கருத்து என்னையும் சற்று யோசிக்க வைக்கிறது.

    ReplyDelete
  3. புதிய செய்திகள்....

    தொடர்ந்து வாசிக்க நாங்களும் காத்திருக்கிறோம்...

    த.ம. +1

    ReplyDelete
  4. ஒரே பதிவில் உலகச் செய்திகளை அள்ளி வீசிவிட்டீர்கள் நன்றி ஐயா

    ReplyDelete
  5. அறியாத பல செய்திகள் அருமை ,கடைசி முத்தம் மனதை நெகிழ வைத்தது :)

    ReplyDelete
  6. மேசை அலங்கோலமா இருந்தா மேதை..

    அப்ப வீடு அலங்கோலமா இருந்தா?!

    ReplyDelete
  7. சுவாரஸ்யம்.

    தம 7 ம் வாக்கு.

    ReplyDelete
  8. உயிர் காக்கும் கருவிகள் நீக்கும் முன்பாக அவன் தன் தாயின் நெற்றியில் கடைசி முத்தம் கொடுத்தான். அவன் தரும் முத்தம் பார்ப்பவர் நெஞ்சை உருக வைத்துவிடும்//
    குழந்தையின் கடைசி முத்தம் அம்மாவை பிழைக்க வைத்து அற்புதம் செய்து இருக்கலாம்..
    அனைத்து செய்திகளுக்கும் நன்றி.

    ReplyDelete
  9. ன்னாட்டுச் செய்திகளையும் அழகாகத் தொடுத்து அளித்த விதம் ( அதிகம் நீளாமலும் மிகவும் குறுக்காமலும் இருந்தது )சிறப்பு . படிக்கத்தூண்டியது

    ReplyDelete
  10. பல சுவாரஸ்யமான செய்திகள்!

    மேசை அலங்கோலமாக இருந்தால் மேதைகள். இது உண்மையோ என்றும் தோன்றுகிறது. ஏனென்றால் பல மேதைகளின் மேசை அலங்கோலமாகத்தான் இருக்குமாம். எங்கேயோ வாசித்த நினைவு...

    அம்மாவுக்குக் கடைசி முத்தம் மனம் கனத்துவிட்டது...

    கீதா

    ReplyDelete
  11. ஜூலை 11 மேஜை சமாச்சார ஆய்வு சுவாரஸ்யம்.

    இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு நேர் எதிர். ஆனால் வேலை முடிந்ததும் உங்களை மாதிரி ஒழுங்குபடுத்தி விடுவேனாக்கும்.

    ReplyDelete
  12. மிகவும் அருமை அய்யா...எத்தனை எத்தனை புதிய செய்திகள், படங்கள்..உள்ளத்தைத் தொடுபவை, உணர்வுகளை உலுக்குபவை...அருமை அருமை..

    எஸ் வி வேணுகோபாலன்
    சென்னை 24
    94452 59691

    ReplyDelete
  13. நீங்கள் பகிர்ந்த அனைத்துச் செய்திகளும் அருமை. கடைசி முத்தம்..... இதயம் கனக்கிறது.
    Bromance என் சொற்களஞ்சியத்தில் சேர்ந்தது.

    ReplyDelete
  14. அடேங்கப்பா ....! எவ்வளவு வாசிப்பு ....!!
    அவ்வளவு நேசிப்பு ...!!!
    ஆய்வுதான் சுவாசிப்பு ...!

    அவர்பெயர்தான் நம் ஜம்பு ...!!

    தொடரட்டும் தொடரோட்டம்...!
    வரலாற்றுப் புகழ்ப் படரட்டும் ....!!
    " வெல்ல " வாழ்த்துக்கள் ....!!!

    ReplyDelete
  15. அருமை ஐயா...
    நிறைய விஷயங்கள்...
    நிறைவாய் அறியத் தந்தீர்கள்..

    ReplyDelete
  16. எல்லாம் சுவாரசியமான செய்திகள்தான்.

    என் மேசை அலங்கோலமாக இருக்கும். இனி யாரேனும் ஏன்னு கேட்டால் உங்கள் பதிவின் விளக்கத்தைக் கொடுக்கவேண்டியதுதான். த ம 10ன்னு நினைக்கறேன்.

    ReplyDelete
  17. எனக்கு எதுவும் எதிலும் ஒரு ஒழுங்கு வேண்டும் அயலக வாசிப்பில் நீங்கள்விரும்பும் செய்திகள்வருகிறதா

    ReplyDelete
  18. ஆம் ஐயா, வருகின்றன. பெரும்பாலும் மொழிநடை, செய்தியின் முக்கியத்துவம், தனித்துவம் என்ற நிலையில் ரசிப்பேன். நம் நாட்டுச் செய்திகளையும் வெளிநாட்டு இதழ்களில் காண முடிகிறது.

    ReplyDelete