முகப்பு

11 October 2017

ஏடகம் : வாழ்க, வளர்க

ஏடகம், தஞ்சாவூரில் 8 அக்டோபர் 2017 அன்று உதயமானது. வரலாற்றறிஞர் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரணியன் அவர்கள் குத்துவிளக்கேற்றி அகத்தின் செயல்பாடுகளைத் துவக்கிவைத்தார். இலக்கியம், வரலாறு, சுவடியியல் என்ற பல துறைகளில் பெரும் பங்களிப்பினை வழங்கவுள்ள ஏடகம் அமைப்பின் தொடக்க விழாவினைக் காண நண்பர்களும் அறிஞர்களும் அதிகமான எண்ணிக்கையில் வந்திருந்தனர். 

ஞாயிறு முற்றம் முதல் சொற்பொழிவு நிகழ்வு

முதற்கட்டமாக, ஏடகத்தின் பிரிவாக ஞாயிறு முற்றம் அமைப்பின் முதல் பொழிவு ஆரம்பமானது. திரு மணி.மாறன் (9443476597, 8248796105) வரவேற்புரை நிகழ்த்தினார். ஏடகம் ஆற்றவுள்ள பணிகளை அவர் எடுத்துரைத்தார். 

பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் (தலைவர், பணி நிறைவு, வணிகவியல் துறை, திரு புட்பம் கல்லூரி)  தலைமையுரையாற்ற ஆடிட்டர் திரு டி.என்.ஜெயகுமார், திரு சி.அப்பாண்டைராஜ், திரு எம்.வேம்பையன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில் வாழ்த்துரை வழங்கும் பேறு எனக்கும் கிடைத்தது.திரு பி.கணேசன் நன்றியுரையாற்றினார்.


வரலாற்றுப்பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் "காவிரியுடன் ஒரு பயணம்" என்ற தலைப்பில் ஒளி ஒலிக்காட்சியுடன் சிறப்புரையாற்றினார். காவிரியின் தொடக்கம் முதல் அது கடலில் கலக்கும் பூம்புகார் வரை அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இலக்கியங்கள், கல்வெட்டுகள் பிற சான்றுகளைக் கொண்டு காவிரியின் பயணத்தை அவர் பகிர்ந்தபோது காவிரித்தாயின் பெருமையினை உணரமுடிந்தது. வந்திருந்த விருந்தினர்களும், பார்வையாளர்களும், ஆய்வாளர்களும், அறிஞர்களும், ஊடகவியல் நண்பர்களும் மிகவும் ஆர்வமாகக் ஈடுபாட்டோடு கலந்துகொண்டனர். சிறிய மழைத்தூறல் இருந்தபோதிலும் விழா மிகவும் அமைதியாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.

நன்றி : தினமணி, 9 அக்டோபர் 2017

நன்றி : தினமணி, 9 அக்டோபர் 2017
விழா அழைப்பிதழை வித்தியாசமாக வடிவமைத்திருந்தார் திரு. மணி. மாறனின் மாணவர் திரு ஜெயப்பிரகாஷ். நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் விழா நிகழ்வினை சுருக்கமாக முகநூல் பக்கத்தில் பதிந்திருந்தார்.   


நன்றி : திரு ஜெயப்பிரகாஷ் 

நன்றி : திரு கரந்தை ஜெயக்குமார்
நண்பர் மணி.மாறனின் தன்விவரக்குறிப்பு அவர் எழுதியுள்ள கட்டுரைகளையும், நூல்களையும் பட்டியலிடுகிறது. தமிழ், வரலாறு, நூலகவியல், சுவடியியல் உள்ளிட்ட பல துறைகளில் தன்னுடைய முத்திரையைப் பதித்துவருகின்ற அவர் எடுத்துள்ள முயற்சி மிகவும் பாராட்டத்தக்கதாகும்.  


ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறன்று ஞாயிறு முற்றம் சொற்பொழிவு நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். ஏடகத்தின் பணி சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன். 

புகைப்படங்கள் நன்றி : ஏடகம் ஞாயிறு முற்றம்
7 நவம்பர் 2017 அன்று பதிவு மேம்படுத்தப்பட்டது

17 comments:

  1. வாழ்த்துகள் த ம 2

    ReplyDelete
  2. சுவாரஸ்யமான பகிர்வு.

    ReplyDelete
  3. வாழ்த்துகள். வீடியோ காட்சிகளை பார்க்க இயலவில்லை; ஃபேஸ்புக்கில் போய்தான் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. வடமொழி வார்த்தைகள் வேண்டாம் என்றால் அவற்றை அப்புறப்படுத்தி விடலாம் தான், ஐயா!

    இருந்தாலும் இப்படியா?..

    திரு புட்பம் கல்லூரி என்பது ஸ்ரீ புஷ்பம் கல்லூரி என்பதற்குத் தமிழாக்கமா, ஐயா!

    புரபஷனல் கூரியர் என்கிற ஆங்கில வரியை அப்படியே எழுதும் பொழுது கூட புரபசனல் கூரியர்
    என்று எழுதும் அளவுக்கு அந்த 'ஷ'-வின் மேல் அப்படியென்ன.....

    ReplyDelete
    Replies
    1. அன்பின் ஜீவி அவர்களுக்கு
      வெகு காலமாகவே புஷ்பம் கல்லூரி என்பதை புட்பம் கல்லூரி என்றும் சரபோஜி கல்லூரி என்பதனை சரபோசி என்றும் தான் குறிப்பிடுகின்றார்கள்.. பிற சமயம் சார்ந்த
      சொற்களை இவ்வாறு கையாள்வதில்லை..

      ஒலிக்குறிப்புகளின் வரி வடிவந்தானே இவை!..

      Delete
    2. அன்புள்ள திரு. துரை செல்வராஜூ,

      அப்படியாயின் சரி. தவறு என்னுடையது தான்.

      தங்கள் தகவலுக்கு நன்றி.

      மிக்க அன்புடன்,
      ஜீவி

      Delete
  5. வாழ்த்துகள் பணிகள் சிறக்கட்டும்

    ReplyDelete
  6. ஏடகம்..
    வாழ்க, வளர்க!..

    ReplyDelete
  7. ஏடகம் வளமுடன் வளர்க....

    ReplyDelete
  8. புஷ்பம் என்ற வார்த்தையை புட்பம் என அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இதுப்போலதான் மற்ற வார்த்தைகளும்.....

    ReplyDelete
  9. ஏடகத்திற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அருமையான விழா ஐயா
    இவ்விழாவில் கலந்து கொண்டதுமன நிறைவையும், மகிழ்வினையும் தந்தது
    நன்றி

    ReplyDelete
  11. அ.வீ.வா.நி.ஸ்ரீபுஷ்பம் கல்லூரி, பூண்டி, தஞ்சாவூர் என்ற பெயருள்ள கல்லூரியை திரு புட்பம் கல்லூரி, தஞ்சாவூர் என்றும், பூண்டி கல்லூரி, தஞ்சாவூர் என்றும்கூட சுருக்கமாகக் கூறுகின்றனர். அந்த வகையில்தான் நான் குறிப்பிட்டேன். புஷ்பம் என்ற வார்த்தையை புட்பம் என அழைப்பதில் எனக்கும் உடன்பாடில்லை. (சுருக்கம் கருதி மட்டும் இங்கு பயன்படுத்தப்பட்டது) அதுபோலவே 'ஷ'-வின் மேல் அப்படியொன்றும் இல்லை. இந்த எழுத்துகளை நான் வழக்கம்போல பயன்படுத்திவருகிறேன்.வடமொழி வார்த்தை என்பதெல்லாம் எனக்குக் கிடையாது. என் பெயரை இன்னும் ஜம்புலிங்கம் என்றுதான் பயன்படுத்திவருகின்றனர். தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றும்போது பல நண்பர்களும் ஆசிரியர்களும் சம்புலிங்கம் என்று எழுதக் கூறினர். முடியவே முடியாது என்று கூறிவிட்டேன். புஷ்பம் தொடர்பான நம் வலைப்பதிவர்களின் உரையாடலைத் தொடர்ந்து இந்த குறிப்பினைப் பகிர்கிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஐயா, அந்த அழைப்பிதழில் அச்சிட்டிருந்ததால் குறிப்பிட்டேன். உங்களை அறிவேன்.

      எனக்கு ஒரு பழைய நினைவு நினைவுக்கு வருகிறது.

      ராஜாஜி என்ற தன் பெயரை ராசாசி என்று ஒரு பத்திரிகையில் தொடர்ந்து எழுதுவதைப் பார்த்து, 'ஐயா, நீங்கள் சொல்கிற அந்த ராசாசி நான் இல்லை; நான் வேறே ஆள். ராஜாஜி என்று அழைக்கப்படுபவன்' என்று ராஜாஜியே அந்த பத்திரிகைக்குக் கடிதம் எழுதியிருந்தார். வடமொழி வார்த்தைகளை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்
      ஒருவரின் பெயர் உச்சரிப்பையே மாற்றி எழுதுகிற கைங்கரியத்தை ரொம்ப காலத்திற்கு முன்னாடியே ஆரம்பித்து வைத்து விட்டார்கள்.

      Delete
  12. ஏடகத்திற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. ஏடகத்திற்கு வாழ்த்துகள்! நல்ல பகிர்வு ஐயா

    ReplyDelete