முகப்பு

10 February 2018

பல இதழ்களில் ஒரே கட்டுரை : Syndicated article

Syndicated article என்பது தொடர்பாக நான்  எழுதிய கட்டுரை 
அதனை வெளியிட்ட அவ்விதழுக்கு நன்றி. 
அதன் மேம்படுத்தப்பட் வடிவைப் பகிர்வதில் மகிழ்கிறேன். 

பருவ மாற்றம் தொடர்பாக Copenhegan: seize the chance என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் 45 நாடுகளைச் சேர்ந்த, 56 நாளிதழ்களில் ஒரே நாளில் வெளியானது. அத்தலையங்கம் 7 டிசம்பர் 2009 நாளிட்ட The Hindu இதழில் முதல் பக்கத்தில் பொதுத்தலையங்கமாக இடம் பெற்றிருந்தது. அதற்கு முன்னர் இவ்வாறாக ஒரே கட்டுரை ஒரே நாளில் பல இதழ்களில் வெளியானதாக நினைவில்லை. 
பருவ மாற்றம் தொடர்பாக 45 நாடுகளில் 56 நாளிதழ்கள் வெளியிட்ட 
ஒரே தலையங்கம், The Hindu, 7 டிசம்பர் 2009
அதனை வியந்து பாராட்டி நான் எழுதிய கடிதம் அவ்விதழில் 9 டிசம்பர் 2009  அன்று வெளியானது. அது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

அதைப் பாராட்டி நான் எழுதி, வெளியான கடிதம் 
The Hindu, 9 டிசம்பர் 2009

இவ்வாறாக ஒரே கட்டுரை பல இதழ்களில் ஒரே நாளில் வெளிவருவதை Syndicated article என்று கூறக் கேட்டுள்ளேன். Syndication என்பதற்கு The sale or licensing of material for publication or broadcasting by a number of television stations, periodicals etc. என்று ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி கூறுகிறது.  Syndicated என்பதற்கு (of articles and photographs) sold to different newspapers and magazines for publishing என்று கேம்பிரிட்ஜ் அகராதி கூறுகிறது.  அரசியல் பிரமுகர்கள் இவ்வாறாக அவ்வப்போது சில இதழ்களில் எழுவதைப் பற்றிப் படித்துள்ளேன்.  

26 ஜனவரி 2018இல் புதுதில்லியில் நடைபெற்ற 69ஆவது குடியரசு தினத்தன்று ஆசியன் அமைப்பின் 10 நாட்டுத் தலைவர்கள் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இந்திய ஆசியன் உறவைக் குறிக்கின்ற வகையில் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி எழுதிய "Shared values, common destiny" என்ற கட்டுரை அந்த 10 ஆசியன் நாடுகளின் கீழ்க்கண்ட 27 நாளிதழ்களில் கம்போடியா, இந்தோனேசியா, வியட்னாமிஸ், பர்மிஸ், மலாய், தாய், லாவோ, மாண்டரின், தமிழ், ஆங்கிலம் ஆகிய 10 மொழிகளில் வெளியானது. இவற்றில் சிங்கப்பூர் (தமிழ் முரசு) மற்றும் மலேசியா (தமிழ் நேசன், மக்கள் ஓசை) ஆகிய நாடுகளில் தமிழ் இதழ்கள் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகள் வெளியான இதழ்களின் பக்கங்களை கீழே காணலாம்.

  • கம்போடியா: 1) Rasmei Kamuchea, Cambodian 2) Phnom Penh Post, English 
  • இந்தோனேசியா: 1) Kompas, Bahasa Indonesia 2) Jakarta Post, English 
  • வியட்நாம்: 1) Tuoi Tre, Vietnamese 2) Vietnam News, English
  • மியான்மர்: 1) Myanmar Times, English 2) Global New Light of Myanmar, English  3) Myanmar Alin, Burmese 4) Mizzima, English
  • புருனேய்: 
    1) Media Permata, Bahasa Malay 2) Borneo Bulletin, English
  • தாய்லாந்து: 1) Bangkok Post, English 2) Post Today, Thai
  • லாவோஸ்: 1) Vientiane Mai, Lao language 2) Vientiane Times, English
  • பிலிப்பைன்ஸ்: 1) Manila Bulletin, English
  • சிங்கப்பூர்: 1) Strait Times, English  2) Business Times, English  
    3) Tamil Murasu, Tamil 4) Lianhe Zaobao Mandarin 5) Berita Harian, Basha Malay, 6) Tabla, English 
  • மலேசியா: 1) Berita Harian, Bahasa Malay 2) The Star, English 
    3) Tamil Nesan, Tamil 4) Makkal Osai, Tamil
வியட்நாம் நியூஸ், வியட்நாம்

குளோபல் நியூ லைட் ஆப் மியான்மர், மியான்மர்

பாங்காங் போஸ்ட், தாய்லாந்து

மணிலா புல்லட்டின், பிலிப்பைன்ஸ்

ஸ்ட்ரைட் டைம்ஸ், சிங்கப்பூர்

"பிரதமர் மோடி இதழாளர் ஆகிறார்,  ஆசிய நாடுகளின் 27 நாளிதழ்களில் தலையங்க எதிர்ப்பக்க கட்டுரை எழுதுகிறார்" என்ற தலைப்பிட்டு The Hush Postஇல் வெளியான கட்டுரையில் (PM turns into journalist, writes an op-ed piece for 27 newspapers of Asean Nations) சிங்கப்பூரின் இதழில் வெளியான "Shared Values, common destiny" என்ற தலைப்பிலான அக்கட்டுரை இணைக்கப்பட்டிருந்தது. அதே தலைப்பில் கட்டுரைகள் வெவ்வேறு இதழ்களில் இடம் பெற்றுள்ளதை மேற்கண்ட பக்கங்களில் காணமுடிகிறது. 

கட்டுரையின் ஆரம்பப் பத்திகள்
"Today, 1.25 billion Indians will have the honour to host 10 esteemed guests – leaders of Asean nations – at India’s Republic Day celebrations in our capital, New Delhi.
Yesterday, I had the privilege to host the Asean leaders for the Commemorative Summit to mark 25 years of Asean-India partnership. Their presence with us is an unprecedented gesture of goodwill from Asean nations........

கட்டுரையின் நிறைவுப் பத்திகள்
......Indians have always looked East to see the nurturing sunrise and the light of opportunities. Now, as before, the East, or the Indo-Pacific region, will be indispensable to India’s future and our common destiny.
Asean-India partnership will play a defining role in both. And, in Delhi, Asean and India renewed their pledge for the journey ahead."

அவரது இந்த கட்டுரையினைப் பற்றி இந்திய மற்றும் வெளிநாட்டு இதழ்களில் பரவலாக விவாதித்திருப்பதைக் காணமுடிந்தது.  தமிழகத்தில் வெளியாகும் பல நாளிதழ்களில் Syndicated article பற்றிய செய்தி இடம் பெற்றிருந்தது. The Hindu இதழில், மூன்று இதழ்களின் பெயர்கள் காட்டப்பட்டிருந்தன. அதனடிப்படையில் அந்தந்த இதழ்களின் தளங்களுக்குச் சென்றபோது பிற இதழ்களையும் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. தொடர்ந்து முயற்சி மேற்கொண்டபோது சில இதழ்களில் இணையத்தில் இக்கட்டுரையினைப் பெறமுடியவில்லை. 

Syndicated article/Op-ed piece என்ற சொல்லை 2009இல் The Hindu மூலமாக அறிந்தேன். இருந்தாலும் இப்போதுதான் அவ்வகையான கட்டுரையினைப் பல தளங்களில் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். Syndicated என்ற ஒரு சொல்லே இந்தப் பதிவினை நான் எழுதக் காரணமானது. 

The Hindu வாசிப்பு எனக்கு பல வெளிநாட்டு இதழ்கள் அறிமுகமாக உதவியது. அவ்வகையில் The Guardian, Dawn, New York Times உள்ளிட்ட பல இதழ்களை கடந்த 10 ஆண்டுகளாகப் படித்துவருகின்றபோதிலும் முதன்முதலாக மேலும் பல புதிய வெளிநாட்டு இதழ்களைப் பற்றி தற்போது அறியமுடிந்தது.

30 டிசம்பர் 2017இல் வெளியான The Hindu நாளிதழின் இணைப்பு Turning points : Global Agenda 2018 என்ற தலைப்பில் 12 பக்கங்களைக் கொண்டிருந்தது. அதன் முகப்புப்பக்கத்தில் The Hindu:The New York Times News Service & Syndicate என்றிருந்தது. அவ்விணைப்பின் 2ஆம் பக்கத்தில் வந்த தலையங்கத்தில், இரண்டாவது பத்தியில் "The Hindu, in association with The New York Times, brings its readers an analytical package on the world and on India, with a range of influential thinkers and writers from abroad and India presenting their forward-looking perspectives..." என்று குறிப்பிட்டுள்ளது. இதுவும் Syndicate என்பதன் அடிப்படையில் அமைவதுபோலுள்ளது. 

நன்றி : பதிவில் சுட்டப்பட்டுள்ள அனைத்து இதழ்கள்     
முகாம் : சென்னை, பாண்டிச்சேரி, கரூர் (2 பிப்ரவரி 2018 முதல்)

18 பிப்ரவரி 2018இல் மேம்படுத்தப்பட்டது

14 comments:

  1. தங்களது வாசிப்பு பணி கண்டு ஆச்சர்யமாக இருக்கிறது.
    தொடரட்டும் எமது வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம் போல முன்னரே பேசிவைத்துக்கொண்டு ஒரே நாளில் வெளியிடுவார்களா? ஆச்சர்யமான தகவல். சுவாரஸ்யமானதும் கூட.

    ReplyDelete
  3. உங்கள் பாராட்டு கடிதம் இடம்பெற்றதை அறிந்து மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நான் மட்டும் அதிகாரத்தில் இருந்தால் உங்களுக்கான அங்கீகாரம் உங்கள் வீடு தேடி வரவழைத்திருப்பேன். வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. பல நல்ல புதிய தகவல்கள், உங்கள் கடிதமும் பேப்பரில் பிரசுரிக்கப் பட்டமை மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  6. புதிய அரிய தகவல்கள். இதழியல் படித்த எனக்கு இச் செய்தியால் பெருமை கொள்கிறேன். நன்றி.

    ReplyDelete
  7. நல்ல செய்தி.வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. Mr Jeevalingam/Yarlpavanan (yarlpavanang1@gmail.com வழி)
    தங்கள் ஆற்றலை நாமறிவோம். ஆனால், உலகம் அறிய வேண்டுமே!
    தங்கள் தமிழ் கட்டுரைகள் உலகெங்கும் பரவ வாழ்த்துகள்! தங்கள் பணி தொடர வேண்டும்!

    ReplyDelete
  9. அன்பிற்கினிய அய்யா

    வணக்கங்களும். வாழ்த்துக்களும்...
    ரசனை கலந்த வாசிப்பு, தேடல் மிகுந்த ரசனை, தாகம் தணியாத தேடல், பருகுவதை விட பகிர்வதில் தீரும் தாகம்!

    அருமை அருமை அருமை

    எஸ் வி வேணுகோபாலன்

    ReplyDelete
  10. வணக்கம் சகோதரரே

    தங்களுடைய பல பத்திரிக்கைகள் படிக்கும் திறன் குறித்து வியப்படைகிறேன்.தாங்கள் எழுதிய கடிதமும் வெளியானது குறித்து மிக்க மகிழ்ச்சி. நீங்கள் எழுதும் தகவல்களால் நாங்களும் நிறைய பயன் பெறுகிறோம். செய்தி பகிர்வுகளுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  11. அட! இது ரொம்ப ஸ்வாரஸ்யமாக ஆச்சரியமாக இருக்கிறதே ஐயா! இதை அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி. தங்களின் வாசிப்பும் பிரமிக்க வைக்கிறது. தங்களின் பாராட்டுக் கடிதம் பிரசுரிக்கப் பட்டதற்கும் வாழ்த்துகள்! பாராட்டுகள் ஐயா!

    ReplyDelete