முகப்பு

06 June 2020

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் கடிதங்கள்

குடும்பத்திற்காக ஒரு பெண் கஷ்டப்படுகிறாள் என்ற கதையின் விமர்சனத்தைக் கேட்டதும், நான் பார்த்த திரைப்படம் அரங்கேற்றம் (1973). அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். இளம் வயதிலேயே குடும்பப்பொறுப்பு என்பதை உணர்த்தி நாங்கள் வளர்க்கப்பட்டதால் இப்படம் என்னை ஈர்த்துவிட்டது என நினைக்கிறேன். பார்த்துவிட்டு திரையரங்கிலிருந்து வெளியில் வந்தபோது அன்னியோன்னியமானவரை விட்டுப்பிரிந்து வருவதைப் போல உணர்ந்தேன்.

கதையின் நாயகியான லலிதாவிற்கு மட்டுமல்ல, முதன்முதலாக நான் பார்த்த பாலசந்தரின் திரைப்படம் என்ற வகையிலும் எனக்கு அரங்கேற்றம்தான். குடும்ப நிலையின் காரணமாக பணிக்குச் சென்று, காலச்சூழலால் தடம்மாறி தன்னையே இழந்த லலிதாவை ஒரு தாயாகவோ, சகோதரியாகவோ, மகளாகவோ நினைக்க முடிந்ததே தவிர ஒரு கதாபாத்திரமாக நினைக்கமுடியவில்லை, இன்றுவரை. நான் விரும்பிப்பார்த்த, இன்னும் பார்த்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களில் முதன்மையானது இத்திரைப்படம். அரங்கேற்றத்தை அடுத்து அவள் ஒரு தொடர்கதையில் தொடங்கி, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருடைய பெரும்பாலான திரைப்படங்களை "அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு" என்று திருவள்ளுவர் தோன்றுவது முதல் இறுதிக்காட்சி வரை பொறுமையாக அமர்ந்து பார்த்து, ரசித்துப் பார்த்தது மறக்க முடியாத அனுபவங்கள்.  





கே.பாலசந்தரின் 90ஆம் பிறந்த நாளில் (9 ஜுலை 2020) அவரைப் பற்றி ஆவணப்பட இயக்குநர் திரு ரவிசுப்பிரமணியன் இயக்கும் ஆவணப்படம் வெளிவரவுள்ள நிலையில், பல்வேறு காலகட்டங்களில் அவர் பட்டங்களையும், விருதுகளையும் பெற்றபோது (மதிப்புறு டாக்டர் பட்டம், அழகப்பா பல்கலைக்கழகம், 2005, மதிப்புறு டாக்டர் பட்டம், சென்னைப் பல்கலைக்கழகம், 2007, இந்திய அரசின் தாதாசாஹிப் பால்கே விருது 2011) அவருக்கு நான் எழுதிய கடிதங்களையும், அதற்கு அவர் தந்த மறுமொழிகளையும் பகிர்வதில் மகிழ்கிறேன். 











23 comments:

  1. ரசிகர்களை மதித்து பதில் சொல்லி இருக்கும் அவர் பண்பு பாராட்டத்தக்கது.

    ReplyDelete
  2. ரசிகர்கள் எழுதிய கடிதங்களுக்கு பதில் கடிதம் அனுப்பும் செயல் பாராட்டுக்குரியது. கடிதங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. திரு.கே.பி.அவர்கள் பதிலளித்தது பெருந்தன்மையான விசயம்.

    அவரது படங்களில் தண்ணீர் தண்ணீர், வறுமையின் நிறம் சிவப்பு குறிப்பிட வேண்டியது.

    ReplyDelete
  4. இனிமையான நினைவலைகள்...

    வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  5. நெஞ்சை விட்டகலா
    இனிய நினைவுகள்

    ReplyDelete
  6. ஏதோ பழைய நினைவுகள் மனதிலே மலருதே! காவேரி ஊற்றாகவே!
    நன்றி! வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  7. தாங்கள் குறிப்பிடும் ஆவணப்படத்தில் இந்தக் கடிதங்களில் ஒன்றாவது இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. உன்னால் முடியும் தம்பி என்று கல்விடுடே ஆசிரியர் உயர்திரு.கி.இராமசுப்பிரமணியன், அவர்கள் மூலம் ,மயிலாப்பூர் அவரது இல்லத்திலேயே,அவரது உதவியாளர் மதுரை திரு.மோகன் அவர்களுடன் 2007 ஆம் ஆண்டு ,இயக்குநர்சிகரம் முனைவர் K.பாலசந்தர்,அவர்களை சந்தித்த நேரம் ஓருரூபாய் நாணயம்என் சட்டைப்பாக்கெட்டிலிருந்து அவரது நாற்காலிக்கு அருகில் உருண்டுசென்றபொழுது சுற்றும்பூமியாய் ஓலி ..ஆ பொற்காசுகள் என்றார்..K.B...இன்றும் நினைவில்..தொடர்கிறது ஊடக பயணங்கள்...சந்திப்பு என்றும்..பொற்காலங்கள்...குரோம்பேட்டை இரயில்நிலையத்திலிருந்து மயிலாப்பூர் இரயில் பயணம் மறக்க இயலாத அனுபவம்..இப்பொழுது மாற்றங்கள் ஏராளம்..என்றும்.நினைவில் அலைகளாய் வந்துசெல்கிறது..தலைமைச்செயலகம் முதல் அனைத்து இடங்களிலும் நாங்கள் அறிமுகம் செய்துகொண்ட பெயர் K.B.சார்..இல்லத்தில் அவரது இல்லத்தில் வெளியிட்ட பத்திரிகை இதழ் என்று...கேட்டவர்கள் அதிகம்..தொடர்கிறோம்.இன்றுவரை...
    நன்றி. எங்களால் முடியும் என்ற நம்பிக்கையுடன்....நா.மணிவண்ணன்
    கல்விடுடே
    Spot Light Television
    புதியநாளிதழ்
    Cell:9865626523

    ReplyDelete
  9. ங்களைப் பற்றிய புதிய தகவல்

    ReplyDelete
  10. உங்களின் பாராட்டு, வாழ்த்து கடிதங்களுக்கு இயக்குனர் சிகரத்தின் பதில் கடிதங்கள் அருமை.

    ReplyDelete
  11. கேபி சார் உங்களின் கடிதங்களுக்கு மதிப்பளித்து தன் கைப்பட எழுதி பதில் அளித்தது அவரது பெருந்தன்மையைக் குறிக்கிறதி.

    நல்ல இனிமையான நினைவுகள்

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete
  12. உங்கள் கடிதங்களும் அதற்கான அவரின் பதில்கடிதங்களும் அருமை.

    ReplyDelete
  13. ஶ்ரீராம் பக்கம் பாட்டுப் பகிர்ந்தமையால், படம் பார்க்கும் ஆவல் வந்து அரங்கேற்றம் பார்த்தேன்...

    அழகிய நினைவலைகள்...

    ReplyDelete
  14. இப்போது தளம் அதிக கம்பீரத்துடன் அழகாய் இருக்கிறது!

    ReplyDelete
  15. திரு.பாலச்சந்தரின் 90ஆவது பிறந்த நாளுக்கு இந்தப்பதிவு அருமையான சமர்ப்பணம்!

    ReplyDelete
  16. நல்ல நினைவுகளை ஒரு கோப்பிலிட்டு மடியாமல் கசங்காமல் பாதுகாத்து வரும் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள நிறையவே இருக்கிறது.

    ReplyDelete
  17. நல்ல பகிர்வு. சிந்து பைரவி வெளியான சமயம் நான் அவருக்கு கடிதம் எழுதினேன். அவரும் பதில் போட்டிருந்தார். ஆனால் அந்த் கடிதம் என்னிடம் இல்லை.
    இன்று காலை தொடங்கி மதியம் வரை எ.பி. வாட்சாப் குழுவில் கே.பி அவர்களின் சிந்து பைரவி படத்தைப் பற்றி விவாதம் நடந்தது. இன்று கே.பி. தினம் போலிருக்கிறது.

    ReplyDelete
  18. வணக்கம் சகோதரரே

    தங்களுக்கும், இயக்குனர் திலகம் திரு கே. பாலசந்தர் அவர்களுக்கும் உள்ள நட்பான தொடர்பறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
    உங்களின் அன்பான கடிதங்களும், அவருடைய பணிவான பதில் கடிதங்களும், படிக்க சுவாரஸ்யமாக உள்ளது. எனக்கும் அவர் இயக்கிய திரைப்படங்கள் மிகவும் பிடிக்கும். அவர் மறைந்தாலும் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை நமக்கு தந்த அவரின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும். அவருடனான தங்களின் நட்பை பகிர்ந்த பதிவுக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  19. சிறப்பான நினைவு பெட்டகம்.

    கோ

    ReplyDelete
  20. அருமையான நினைவுகள். எனக்கும் பாலச்சந்தர் படங்கள் பிடிக்கும். அரங்கேற்றம், அவளொரு தொடர்கதை, சிந்து பைரவி எல்லாம் வெறும் படங்களாக மட்டும் இருக்கமுடியாது. எங்கோ ஒரு மூலையில் இவர்களை போல காவிய பாத்திரங்கள் இருக்கலாம். மனிதராக படைக்கப்பட்ட அனைவரின் செயலுக்கு பின்னும் ஒரு ஞாயம் இருக்கும் என்பதை எடுத்துச்சொல்லும் அற்புத இயக்குனர் அவர்.

    ReplyDelete
  21. பாலச்சந்தர் நான் பார்த்து வியந்த முதல் இயக்குநர். நான் மட்டுமில்லை தமிழ்நாட்டில் எண்பதுகளில் பிறந்த அனைவருமே ரஜினி, கமல், எம்ஞ்சியார், சிவாசி என முதலில் நடிகர்களின் படங்களில் தங்கள் திரையுலகச் சுவையைத் தொடங்கி பாலச்சந்தர் படம் ஒன்றை முதன் முதலாகப் பார்த்த பிறகுதான் இயக்கம் என்றால் என்ன என்பதை உணர்வார்கள். அதன் பிறகுதான் திரைப்படங்களை நடிகர்களுக்காகப் பார்க்காமல் கதைக்காகப் பார்க்கும் பழக்கமே நம் மக்களுக்கு வரும். அந்த அளவுக்கு இயக்கம் எனும் பிரிவில் தன் முத்திரையை அழுந்தப் பதித்தவர் இயக்குநர் சிகரம் அவர்கள். அவரே உங்களுக்குக் கைப்படக் எழுதியிருக்கும் கடிதம் கருவூலம்! அவற்றைப் பார்க்க எங்களுக்கும் வாய்ப்பளித்தமைக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  22. தமிழ்த் திரைப்படங்களோடு தொடர்பானவர்களுள் கே.பாலச்சந்தர் தனித்துவமானவர்.மிகுந்த திறமைசாலி. அவருக்கும் உங்களுக்கும் இடையே ஏற்றபட்ட தொடர்பு மகிழ்வையும் புது உற்சாகத்தையும் தருகிறது. நன்றியும் நல்வாழ்த்துக்களும்

    உடுவை.எஸ்.தில்லைநடராசா...இலங்கை

    ReplyDelete