முகப்பு

31 October 2020

உலக வரலாறு அறிவோம் : இந்து தமிழ் திசை

இந்திரா காந்தி, “என் அப்பா எழுதிய ‘உலக வரலாறு’, ‘சுயசரிதை’, ‘இந்திய வரலாறு’ ஆகிய மூன்று நூல்களும் என் வாழ்க்கை முழுதும் எனக்குத் துணையாக இருந்துவந்துள்ளன. அவற்றிலிருந்து பிரிந்திருப்பது என்பது இயலாதது. குறிப்பாக, ‘உலக வரலாறு’ எனக்காகவே எழுதப்பட்டது'' என்கிறார்.


196 தலைப்புகளில் 1,000 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில் சுமார் 50 நிலப்படங்களும், காலவாரியான அட்டவணைகளும் உள்ளன. நேருவின் இந்தக் கடிதங்களில் வரலாற்றின் மீதான அவருடைய ஈடுபாடு, தேடல் திறன், பரந்துபட்ட அறிவு, வாசிக்கும் ஆர்வத்தை உண்டாக்கும் எழுத்து பாணி, அழகான சொற்பயன்பாடு போன்றவற்றைக் காண முடியும். இந்த நூலை வாசிக்கும்போது நாம் வேற்றுலகுக்குச் சென்ற உணர்வு ஏற்படும். அந்த அளவுக்கு நிகழ்வுகளை நமக்கு மிகவும் நெருக்கமாகக் கொண்டுவருகிறார் நேரு.


“உனக்கு நினைவிருக்கிறதா? முதன்முதலாக ஜோன் ஆஃப் ஆர்க்கைப் பற்றிப் படித்தபோது, நீ எவ்வளவு ஆச்சர்யப்பட்டாய் தெரியுமா? அவரைப் போலச் சாதிக்க வேண்டும் என்ற உனது விருப்பம் எந்த அளவு இருந்தது தெரியுமா? சாதாரண ஆணோ பெண்ணோ கதாநாயகர் ஆகிவிடுவதில்லை. அவர்களுக்கு அன்றாடப் பிரச்சினைகள் பல உள்ளன. ஆனால், நேரம் வரும்போது ஒட்டுமொத்த ஆண்களும் பெண்களும் கதாநாயகர்களாக ஆகிவிடுகிறார்கள். வரலாறு படைக்கப்படுகிறது. இந்தியாவுக்குச் சேவைசெய்யும் அளவு மிகச் சிறந்த தைரியமான வீராங்கனையாக நீ வளர்வாய், அன்பு மகளே” என்று ஆரம்பப் பக்கங்களில் பேசுகிறார்.


கன்னியாகுமரியைப் பேசும்போது அது இமயமலை வரை நீள்கிறது. 2,500 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி 19-ம் நூற்றாண்டு வரையிலான நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார். சிந்தனையாளர், தலைவர்கள், பேரரசுகள், தொழில் புரட்சி, அறிவியல் வளர்ச்சி, உலகப் போர் எல்லாம் வருகின்றன. கடைசிக் கடிதத்தில், “இது வரலாறல்ல. இவை நமது கடந்த காலப் பதிவுகள். வரலாறு உனக்கு ஆர்வமூட்டினால், வரலாற்றின் அழகை நீ உணர்ந்தால் பல நூல்களின் துணையோடு கடந்த காலத்தைப் பற்றி அறிந்துகொள்ள முடியும்.


நூல்களைப் படிப்பது மட்டுமே உனக்கு உதவப்போவதில்லை. கடந்த காலத்தைக் கருணையோடும் புரிதலோடும் பார்க்க வேண்டும். பல்லாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு நபரைப் பற்றி அறிந்துகொள்ள அவருடைய சூழலையும், அவர் வாழ்ந்த நிலையையும், அவர் மனதில் இருந்த எண்ணங்களையும் நீ அறிந்துகொள்ள வேண்டும்” என்கிறார்!


உலக வரலாற்றை ஒரு பறவைப்பார்வையாக இந்தக் கடிதங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கியமான நூல் இது. பின்னாளில், இந்திரா காந்தி உயர்ந்த பொறுப்புக்கு வர அடித்தளம் அமைத்துத் தந்த நூல்.


நன்றி : உலக வரலாறு அறிவோம், இந்து தமிழ் திசை, 31 அக்டோபர் 2020

இன்று இந்திரா காந்தியின் நினைவு நாள்

15 comments:

  1. // பறவைப்பார்வையாக //

    இப்போது திருக்குறள் எண் ஆய்வில் அவ்வாறே... நன்றி ஐயா...

    ReplyDelete
  2. நானொரு காலத்தில் எந்தம்பிகளுக்கு glimpses of world history யில்ருந்து ப்லவிஷ்யங்களை எழுதி இருந்தேன் அவர்கள் அறிந்து கொள்ள அதெல்லாம் ஒரு காலம்

    ReplyDelete
  3. இந்திரா காந்தியின் நினைவு நாளில் அவருக்கு பிடித்த அவர் அப்பாவின் நூல் பகிர்வு அருமை. இந்து தமிழ் திசையில் உங்கள் கட்டுரை இடம்பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நல்ல கட்டுரை. நேருவின்  எழுத்துக்களை  படித்தால்  ஆங்கில  மொழி மீது காதல் வரும். நேருவின் தீவிர அபிமானியான என் தந்தை வைத்திருந்த  Discovery of India படித்திருக்கிறேன். 

    ReplyDelete
  5. அன்னை இந்திரா காந்தி நினைவு நாளில் வெளிவந்த அருமையான நூல் விமர்சனம், வாழ்த்துக்கள் அய்யா.தஞ்சை அப்பா ண்டை ராஜ்

    ReplyDelete
  6. //பல்லாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு நபரைப் பற்றி அறிந்துகொள்ள அவருடைய சூழலையும், அவர் வாழ்ந்த நிலையையும், அவர் மனதில் இருந்த எண்ணங்களையும் நீ அறிந்துகொள்ள வேண்டும்” என்கிறார்!//

    அருமையான கருத்து.

    ReplyDelete
  7. நல்ல கட்டுரை ஐயா.

    //பல்லாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு நபரைப் பற்றி அறிந்துகொள்ள அவருடைய சூழலையும், அவர் வாழ்ந்த நிலையையும், அவர் மனதில் இருந்த எண்ணங்களையும் நீ அறிந்துகொள்ள வேண்டும்” என்கிறார்//

    இக்கருத்து மிக அருமையான பல அர்த்தங்கள் கொண்ட கருத்து. அப்போதைய காலக்கட்டத்தை கொண்டுதான் அளப்பிட முடியுமே ஒழிய இப்போதைய சூழலோடு ஒப்பிட்டுப் பார்ப்பதும் சரியன்று என்றே தோன்றும். அப்படி அதை அறிந்து கொள்ளூம் போது இப்போதைய சூழலை நாம் நன்கு புரிந்து கொள்ள பல பாடங்களும் கிடைக்கும் என்றும் தோன்றுவதுண்டு.

    கட்டுரைக்கு வாழ்த்துகள் ஐயா

    கீதா

    ReplyDelete
  8. உங்கள் கட்டுரை சிறப்பாக இருக்கிறது தினத்திற்கு ஏற்ற கட்டுரை. வாழ்த்துகள் ஐயா!

    ஆங்கில ஆசிரியனான எனக்கு நேரு அவர்களின் ஆங்கிலம் மிகவும் ஈர்க்கும். அவரது மொழி ஆளுமை வியக்கச் செய்யும்.

    துளசிதரன்

    ReplyDelete
  9. இந்திரா அம்மையார் என் மனம் கவர்ந்த தலைவர். அதற்குக் காரணங்கள் பல.

    பண்டித நேரு அவர்களின் 'glimpses of world history' நூலுக்கான ஓ.வி.அளகேசன் அவர்களின் தமிழாக்கம் அருமையாக இருக்கும். அலைக்ஸாண்டரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, 'அலைக்ஸாண்டரை ஒரு மாபெரும் வீரன் என்று நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன்' என்று அந்தக் கட்டுரை ஆரம்பிக்கும். இன்னும் நினைவிலிருக்கிற வாசகங்கள் அவை.

    ReplyDelete
  10. உலக வரலாறு பற்றிய நூலை அழகாகப் படைத்துள்ளீர்கள் ஜம்பு சார் !

    ReplyDelete
  11. Sundar Vadivelu (saisundar.vadivelu@gmail.com மின்னஞ்சல் வழியாக)
    அன்புடையீர், வணக்கம். நலம். நலமறிய ஆவல். இந்து தமிழ் நாளிதழ்.. நூல் வெளி பகுதியில், உலக வரலாறு அறிவோம். நூலின் சிறப்புகள் அறிந்தேன். உலக சரித்திரம்.நேரு, இந்திராகாந்தி பெருமைகளை அறிவோம். எனது நன்றிகள்.M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.CELL NO.9787243003

    ReplyDelete
  12. Ramaswamy Dhanasekar (ramdsekar@gmail.com மின்னஞ்சல் வழியாக)
    ஆங்கிலத்திலும் படிக்க இனிமையாக இருக்கும்.
    மிக அருமையான மொழிப்பெயர்ப்பு.
    திரு.ஓ வி அளகேசன் சுதந்திர போராட்ட வீரர்.
    மறைந்த தமிழக முதல்வர் திரு பக்தவச்சலம் உறவினர் என்று கேள்வி.

    ReplyDelete
  13. Mr Dharumi (thro email: dharumi2@gmail.com)
    sir, saw your article on nehru's book. congrats. very informative.......

    ReplyDelete