முகப்பு

16 November 2014

கனவில் வந்த காந்தி (3)



நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அண்மையில் மதுரையில் நடைபெற்ற வலைப்பதிவர் திருவிழாவில் இவருடைய அறிமுகம் கிடைத்தது. பழகுவதற்கு இனியவர். அவருடைய பதிவுகள் வித்தியாசமானவையாக இருக்கும். கனவில் வந்த காந்தியைக் கண்டு தன் பாணியில் மறுமொழி கூறியுள்ள அவர் நம்மிடம் அதே வினாக்களைத் தொடுத்துள்ளார்.  10 நண்பர்களுக்கு அனுப்பி கருத்தினைக் கேட்டுள்ள அவருக்கு முதலில் என்னுடைய கருத்துக்களை இதோ கூறுகிறேன். கேள்விகளுக்கு மறுமொழி கூறுமுன் வலையுலகப் பதிவர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள். அன்புகூர்ந்து காந்தியின் சுயசரிதையைப் (My experiments with truth) படியுங்கள். அது நமக்கு ஒரு பாடம்.இதோ கில்லர்ஜி வழியாக காந்தியடிகளுக்கு மறுமொழி கூறுவோம்.

01.   நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டும் என்று நினைக்கிறாய்?
நான் பிறந்தது கும்பகோணத்தில். அங்கேயே பிறக்க வேண்டும் என்பது என் ஆசை.

02.   ஒரு வேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால்?
அவ்வாறான எண்ணமோ சிந்தனையோ சிறிதுகூட எனக்கு இல்லை.

03. இதற்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால்? என்ன செய்வாய்?
அவ்வாறான நிலை எழ வாய்ப்பு இல்லை.

04.   முதியோர்களுக்கு என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?
இறுதிக்காலத்தில் அவர்கள் மன நிறைவோடு இருக்கும் வகையில் ஆன்மீக நூல்களை வழங்க ஏற்பாடு செய்தல், மன நிம்மதிக்காக வழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் செல்லுதல், அவர்களுடன் அனைத்து வயதினரும் அளவளாவ நடவடிக்கை மேற்கொள்ளல்.

05.   அரசியல்வாதிகளுக்கு என்று புதிய திட்டம் ஏதாவது?
முடிந்தவரை படித்தவர்களே அரசியலில் முக்கியப் பொறுப்புக்கு வரவேண்டும் என சட்டம் இயற்றுவேன்.

06.   மதிப்பெண் தவறென, மேல்நீதி மன்றங்களுக்குப் போனால்?
நீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்படுவேன்.

07.   விஞ்ஞானிகளுக்கென்று ஏதும் இருக்கிறதா?
நமது நாட்டை முன்னுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்புள்ளவர்களில் அவர்களும் அடங்குவர். எனவே, அவர்கள் மென்மேலும் சாதிக்க உரிய வசதிகள் செய்து தரப்படும்.


08.   இதை உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?
பின்வருபவர்கள் செய்வார்கள் என்று உறுதியாக எடுத்துக்கூற முடியாது. இருப்பினும் அதன் முக்கியத்துவம் பற்றி ஆட்சியாளர்களிடம் எடுத்துக்கூறப்படும்.


09.   மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?
அனைவரும் படிப்பறிவு பெற வேண்டிய நிலை.

10.எல்லாமே சரியாக சொல்வது போல் இருக்கு. ஆனால் நீ மானிடனாய் பிறந்து நிறைய பாவங்களை செய்து விட்டாய். உனக்கு மீண்டும் மானிடப் பிறவி கொடுக்க முடியாது. ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென இறைவன் கேட்டால்?
இந்த பிறவியில் அனுபவித்ததே போதும். அடுத்த பிறவி வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்வேன்.
பிற நண்பர்கள் இதனைத் தொடர அன்போடு அழைக்கிறேன்.

1.அரும்புகள் மலரட்டும் திரு பாண்டியன்

2.ஊமைக்கனவுகள்

3.திரு மோகன்ராஜ்

4.திரு புதுவை வேலு

5.திரு சிவக்குமாரன் சிவக்குமாரன் கவிதைகள்

6.திரு கவியாழி 
http://kaviyazhi.blogspot.com/

7.ராஜராஜேஸ்வரி
http://jaghamani.blogspot.com/ 

8.திரு எஸ்.ரமணி தீதும் நன்றும் பிறர் தர வாரா
9.திரு .ஜி.எம்.பாலசுப்ரமணியன்

10.இனியா


 

26 comments:

  1. சிறப்பான பதில்கள்! மீண்டும் தொடர்பதிவு களை கட்டுதுபோல! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. பதில்கள் நன்றாகவே உள்ளது நானும் முயற்சி செய்கிறேன் வேறு வழி சிக்கி விட்டேனே. கனவு காணக்கூடாது என்று சட்டம் போடவேணும் போல இருக்கிறதே ம்..ம்..ம்.. ஆளாளுக்கு ஒரு கனவு கண்டு தொல்லை தாங்க முடியலடா சாமி .. ஹா ஹா.... கட்டட்டும் களை மறுபடியும் வாழ்த்துக்கள் .....! மீண்டும் வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. என்னோட கனவுல காந்தி வந்துட்டாருனு பொறாமையா ?

      Delete
  3. கனவுகள் நனவானால் இனிமை...

    ReplyDelete
  4. காந்தியுடன் கனவிலா?

    ReplyDelete
  5. உடனடியாக என்னால் இக்கேள்விகளுக்குப்பதில் கூற இயலாது. சற்றுக் காலம் கடந்தபின் எழுதுவேன். அழைப்புக்கு நன்றி.

    ReplyDelete
  6. வணக்கம்
    வினாவும் அதற்கான பதிலும் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. அன்பின் ஐயா எனது வார்த்தைக்கு மதிப்பளித்து எனது விண்ணப்பத்தை ஏற்று சிறப்பான முறையில் காந்தி அவர்களுக்கு பதில் அளித்துள்ளீர்கள் நன்றி எப்படியும் மீண்டும் காந்தி இந்தவாரம் எனது கனவில் வருவார் (சகோதரி இனியா அவர்கள் முறைப்பது தெரிகிறது) தங்களது பதில்களை அவரிடம் சமர்ப்பிக்கிறேன் மீண்டும் நன்றி.

    அன்புடன்
    கில்லர்ஜி

    ReplyDelete
  8. அய்யோ. எனக்கு பதில் சொல்லத் தெரியாதே.
    முயல்கிறேன். நன்றி

    ReplyDelete
  9. கேட்டது காந்தியார் என்பதால் ,உங்கள் பதில்களில் மிகவும் மரியாதை தெரிகிறதே :)

    ReplyDelete
  10. கேட்டது காந்தியார் என்பதால் ,உங்கள் பதில்களில் மிகவும் மரியாதை தெரிகிறதே :)

    ReplyDelete
  11. அருமையான பதில்கள் ஐயா

    ReplyDelete
  12. தனித்துவமான விடைகள்.. அருமை ஐயா..

    ReplyDelete
  13. அருமையான பதில்கள் ஐயா. தாங்கள் மாட்டிக்கொண்டது பத்தாது என்று, இன்னும் பத்து பேரை மாட்டிவிட்டீர்களே...

    ReplyDelete
  14. ஒரு ஆன்மீக முனைவரின் நோக்கில் அருமையான சிந்தனைகள்.

    ReplyDelete
  15. அனுபவமும் பொறுப்பும் பதில்களில் தெரிகின்றன . சிறப்பான பதிவு ஐயா

    ReplyDelete
  16. அருமையான பதில்கள் ஐயா...அனுபவம் நிறைந்த பதில்கள்.

    ReplyDelete
  17. அருமையான பதில்கள்! ஐயா! 4 வது மிக மிக அருமை!

    ReplyDelete
  18. கனவில் வந்த காந்தி

    மிக்க நன்றி!
    திரு பி.ஜம்புலிங்கம்
    திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

    புதுவைவேலு/யாதவன் நம்பி
    http://www.kuzhalinnisai.blogspot.fr

    ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

    ReplyDelete
  19. அழுத்தமான பதிலகள்
    பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. அய்யா வணக்கம்.
    தாமத வருகைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.
    ஒரு ஃபார்மல் அரசு அலுவலராக நீங்கள் பதிலளித்திருக்கிறீர்கள். விடை 4இல் ஆன்மீக நாட்டமில்லாதவர்களுக்கு என்ன செய்வீர்கள் என்று சொல்லவில்லையே அய்யா? எனினும் உங்கள் பதிலில் நேர்மையான உங்களின் அடக்கப்பண்பே அதிகம் வெளிப்படுகின்றது அய்யா.நன்றி

    ReplyDelete
  21. // ஒரு வேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால்?//

    http://dharumi.blogspot.in/2005/06/24-great-dictator.html

    ReplyDelete
  22. தொடர் தகவலுக்காக ...........

    ReplyDelete
  23. அன்புமிகு அய்யாவிற்கு,
    தங்களின் பதில்கள் உங்களுடைய சாத்வீகமான பண்பினை வெளிக்காட்டுகின்றன.

    ReplyDelete
  24. ஹலோ! நண்பரே !
    இன்று உலக ஹலோ தினம்.
    (21/11/2014)

    செய்தியை அறிய
    http://www.kuzhalinnisai.blogspot.com
    வருகை தந்து அறியவும்.
    நன்றி
    புதுவை வேலு

    ReplyDelete