முகப்பு

12 March 2015

ஆளுமைகள் தருணங்கள் : ரவிசுப்பிரமணியன்

அண்மையில் நான் படித்த நூல் ரவிசுப்பிரமணியன் எழுதியுள்ள ஆளுமைகள் தருணங்கள். பெரும் பெரும் ஆளுமைகளுடனான அவரது தருணங்களை அவர் தனக்கே உரிய ஆளுமையோடு நம் முன் வைக்கும் விதம் நம்மை நெகிழச்செய்கிறது. ஒவ்வொரு துறையிலும் பெரும் விற்பன்னர்களாக இருக்கும் மாமனிதர்களிடம் அவர் கொண்டிருந்த நட்போ, பழக்கமோ, அணுக்கமோ, ஈடுபாடோ ஏதோவொன்று நம்மை அவருடைய எழுத்தோடு பிணைத்துவிடுகிறது. நூலாசிரியரின் நினைவாற்றல், தேர்ந்தெடுத்த சொல் பயன்பாடு, நினைவுகூறும் விதம், சமுதாயத்தின் தாக்க வெளிப்பாடு போன்றவையும் அவருடைய எழுத்தில் மிளிர்வதைக் காணமுடிகிறது. இசை, ஓவியம், கலை, இலக்கியம், திரைப்படம் என்ற பல்வேறு நிலையில் பரிணமித்து தம் முத்திரையைப் பதித்தவர்களைப் பற்றி எழுதுவது என்பது எளிதான காரியமன்று. தன்னுடைய அழகான சொல்லாடல் மூலமாக நம்மிடம் அவர் பகிர்ந்துகொள்ளும் பாங்கு படிப்பவர் மனதைவிட்டு அகலாது. அவர்களுடைய நிறைகுறைகளை சீர்தூக்கி அலசி நூலாசிரியர் எழுதியுள்ள முறை நாம் வாழும் காலத்திய கலைஞர்களின் பன்முகப்பாங்கினை அனாயசமாக நம்முன் கொண்டுவருகிறது.அனைத்துக் கருத்துக்களும் பொருள் பொதிந்தவையாக அர்த்தமுள்ளவையாக உள்ளன. 

எம்.வி.வி, கரிச்சான் குஞ்சு,  கவிஞர் அபி, மதுரை சோமு, பி.பி.சீனுவாஸ், எஸ்.வி.சகஸ்ரநாமம், ஓவியர் மருது, ஓவியர் ஜே.கே., பாலுமகேந்திரா, தேனுகா, ருத்ரய்யா ஆகியோரைப் பற்றிய இப்பதிவுகள் மூலமாக நம்மை அவர்களுடன் மிக அணுக்கமாக்கிவிடுகின்றார் ரவிசுப்பிரமணியன். இவர்களில் தேனுகா அவர்களுடன் மட்டுமே நான் பழகியுள்ளேன். வாழும் காலத்தில் வாழ்ந்தோரைப் பற்றியும் வாழ்வோரைப் பற்றியும் இவ்வாறு எழுதுவதன் மூலமாகச் சமூகத்திற்குப் பெரும் பங்களிப்பு செய்துள்ளார். அவர்களைப் பற்றி அவர் பகிர்ந்தவற்றில் சிலவற்றை இதோ பகிர்ந்துள்ளேன், உங்களுக்காக. வாருங்கள் வாசிக்க.    


ரவிசுப்பிரமணியன் 

"நான் எழுத்துலக முன்னோடிகளாகக் கருதும் சில ஆளுமைகள் என்னிடம் இவை குறித்துச் சிலாகித்தது, அதற்கு முன் நான் அறியாதது. இத்தனைக்கும் இவை எண்ணிக்கையில் குறைவான கட்டுரைகளே. இந்தக் கட்டுரைகளில் இடம்பெறும் ஆளுமைகளோடு எனக்கிருந்த உணர்வுபூர்வமான ஒடடுதலே இவற்றின் பின்னுள்ள பலம். எல்லாரும் என்னில் மூத்தவர்கள்" என்கிறார் நூலாசிரியர். (ப.17)




எம்.வி.வி.
"கேட்காத காதுகளோடும் பார்க்கமுடியாத குளுக்கோமா விழிகளோடும் பிறழ்வான மனக்கொதிப்பில் மேலெழும்பும் அவஸ்தை மிகுந்ததாக இருந்தது அவரது கடைசி வருட வாழ்க்கை. இயன்ற வரையில், நினைவு தப்பாமல் இருந்த வரையில் எல்லாக் கஷ்டங்களையும் மீறி, கைம்மாறு கருதாமல் அவர் சதா நமக்காக ஏதோ நெய்துகொண்டே இருந்தார், தன் நடுங்கும் விரல்களால்." (ப.26)

கரிச்சான்குஞ்சு
"தன் படைப்புகளை முன்னிறுத்தாது, தன்னை முன்னிறுத்தும் போக்குகள் மலிந்த தமிழ்ச்சூழலில், தனது படைப்புகளின் மேன்மை வழியே, தன்னை அறிந்துகொள்ளவைத்தவர் கரிச்சான்குஞ்சு. நம் காலத்திலேயேஅவர் வாழ்ந்து மறைந்திருந்தாலும், கீழான வகைதொகைகளில் அவர் சிக்கிவிடவில்லை." (ப.27)

கவிஞர் அபி
"அபியின் கவிதைச் சாதனைகளிலி முதன்மையானது, மொழியிலிருந்து அதன் அர்த்தத்தை வெளியேற்றிவிட்டு, புதிய கவிதை மொழியைக் கவிதைக்குள் உருவாக்கியிருப்பதுதான்." (ப.42)

மதுரை சோமு
"சோமுவின் புகழ் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகக் காரணமாக அமைந்தது 'தேவரின் தெய்வம்' படத்தில் வந்த தர்பாரி கானடா ராகத்தில் அமைந்த 'மருதமலை மாமணியே' பாடல்தான். பல பாடல்களைப் பாடி ஒரு பாடகர் அடையும் பெரும் புகழை, அந்த ஒரே பாடலில் பெற்றார் அவர்." (ப.54)

பி.பி.சீனுவாஸ்
"காலம் ஒவ்வொரு கட்டத்திலும் சில சிறந்த பாடல் கலைஞர்களை நமக்குப் பரிசளித்தபடிதான் இருக்கிறது. ஆனால், கலையின் மேன்மையோடு, பக்கத்து வீட்டுக்காரனின் தோழமை போல, மனம் விட்டுப் பேச முடிகிற நண்பனின் அண்மை போல, நமக்கு வெகு அருகில் இருக்கும் தோற்றத்தைத் தன் குரலால் ஏற்படுத்திவிடுகிற எளிய கலைஞர்கள் எப்போதாவதுதான் நமக்குக் கிடைக்கிறார்கள். அத்தகைய கலைஞன் பிபி.எஸ்." (ப.62)

எஸ்.வி.சகஸ்ரநாமம்
"நாடகத்தால் கலையால் வாழ்பவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் பாத்திரத்திற்காகவே வாழ்ந்த சிலருள் சகஸ்ரநாமமும் ஒருவர்." (ப.67)

ஓவியர் மருது
"தன் கோடுகள் வழியாகவே அதிகபட்சமான தமிழர்களைச் சென்றடைந்த நவீன ஓவியக்கலைஞன் மருதுவாக மட்டுமே இருக்கமுடியும் என்று சொன்னால் அது மிகையாகாது." (ப.83)

ஓவியர் ஜே.கே.
"இவரது கோட்டோவியங்களின் வித்தைச்சூழலில், சமயங்களில் என் மனம் கிறங்கிப் போனதுண்டு. ஸ்ருதி பிசகாது, தாளம் பிசகாது கோடுகள் சென்ற பயணத்தின் வழித்தடம் வழியே எழும்பும் சுநாதம் அது. என்ன வருமென அனுமானிக்க முடியாது. ஒற்றைப்புள்ளியில் துவங்கிட, கையை எடுக்காமல் அவர் கோட்டோவியங்களை வரைந்து முடிக்கும் மாயத்தை நான் கண்டிருக்கிறேன். நகாசு வேலைகளுக்கான மெனக்கெடல் தனி. வெறும் தொழில்நுட்ப வித்தையாகத் தேங்கிவிடாமல் படைப்பாகவும் அவை உருக்கொள்ளும் தருணங்களையும் நான் பார்த்ததுண்டு." (ப.89)

பாலுமகேந்திரா
"சதா அவர் பயணப்பட்டுக்கொண்டே இருந்தார். ஆசிரியாக இருந்தாலும் மாணவனாக வாழ்ந்தார். எல்லா வெற்றிக்குப் பின்னும் துயரத்தின் மெல்லிய நிழல் அவரைத் தொடர்ந்தபடியே இருந்தது. ஆனால் ஒரு போராளியின் வீர்யம் மட்டும் கடைசிவரை அவரை விட்டு விலகவே இல்லை." (ப.93)

தேனுகா
"கலை குறித்த உரையாடலுக்கு சதா ஏங்கிய அவர் தன் வாழ்வின் கடைசி நாளில்கூட, பி.பி.சி.நேர்காணலில் நாதஸ்வரத்தைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்திருக்கிறார். அந்த உரையாடலில் கரைந்ததில் உடல் முழுக்க வேர்த்து அவருக்கு நெஞ்சு வலி வந்ததையும் அவரால் உணர இயலவில்லை. சட்டென அவரது மனோலயம் அறுந்து உரையாடல் நின்று போய்விட்டது." (ப.108)

ருத்ரய்யா
"காத்திரமான பங்களிப்பைச் செய்துவிட்டு தன்னை முன்னிருத்தும் யத்தனங்கள் இல்லாத சில உன்னத கலைஞர்களையும் சிந்தனையாளர்களையும் தமிழ்ச் சமூகம் தனித்தே வைத்திருக்கிறது. அதுகுறித்து அதற்கு எவ்வித சொரணையும் இல்லை. உலகமே வியாபாரிகள் கையில் இருக்கும்போது எல்லாமே ஒரு வகையில் பொருள்கள்தானே." (ப.111)

(திரு ரவிசுப்பிரமணியன் புகைப்படம் அவரது முகநூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது, நன்றியுடன்)

---------------------------------------------------------------------------------------------------
நூல் : ஆளுமைகள் தருணங்கள்
ஆசிரியர் : ரவிசுப்பிரமணியன் (9940045557)
பதிப்பகம் : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிடெட், 669 கே.பி.சாலை, 
நாகர்கோயில் 629 001
ஆண்டு : 2014
விலை : ரூ.100
---------------------------------------------------------------------------------------------------






33 comments:

  1. அன்புக்குரிய ஜம்புவுக்கு,
    வணக்கம்.

    எனது நூல் குறித்த உங்கள் கட்டுரைக்கு, அபிப்ராயாங்களுக்கு,
    எடுத்துக் காட்டிச் சொன்ன விதத்திற்கு, உங்கள் அன்பிற்கு
    என் வந்தனங்களும் நன்றியும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரவி... நல்லா இருக்கீங்களா? உங்களது கவிதைகளை அறிவேன். அழகாக அறிமுகமும் செய்வீர்கள் என்பதை, முனைவர் அய்யா வின் பதிவு வழியே அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். உங்கள் பணியும், அய்யாவின் இதுபோலும் ரசனையான பதிவுகளும் தொடரட்டும். நானும் தொடர்வேன். த.ம.வாக்கு எண்-7

      Delete
  2. வணக்கம்
    ஐயா
    புத்தகம் பற்றி மிக சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் படிக்க தூண்டுகிறது பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அருமையான நூல். உங்கள் விமர்சனமும்!

    எல்லோருமே ஆளுமைகள்தான்....
    ருத்ரய்யா அவர்களின் அத்தியாயம் நிறைவு பெறாமலேயே போய்விட்டது. அருமையான படைப்பாளி. அவள் அப்படித்தான் அருமையான வசனங்களுடனான திரைப்படம். அதன் பின் அவர் இயக்கிய படம் தோல்வியைத் தழுவியதால்...பின்னர் அவர் எடுக்க இருந்த படமும் நிறைவேறாமல் போனது. ...அவரைப் பற்றி எழுத்தாளர் சொல்லியிருப்பது முற்றிலும் சரியே! //தன்னை முன்னிருத்தும் யத்தனங்கள் இல்லாத சில உன்னத கலைஞர்களையும் சிந்தனையாளர்களையும் தமிழ்ச் சமூகம் தனித்தே வைத்திருக்கிறது. //

    ReplyDelete
  4. நூலை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று தூண்டியது உங்கள் விமர்சனம்.

    ReplyDelete
  5. அருமையான விமர்சனம் நூலை படிக்கத்தூண்டிய வர்ணனைகள் தாங்கள் கொடுத்து விக்கிபீடியா இணைப்புகளுக்கு சென்று வந்தேன், நன்றி
    தமிழ் மணம் 3

    ReplyDelete

  6. நல்ல ஆக்கத்திற்கு தந்துள்ளீர் அய்யா நூல் விமர்சனம் என்னும் ஊக்கம்.
    நன்று! பாராட்டும் பண்பு போற்றத்தக்க வகையில் உள்ளது முனைவர் அய்யா தங்களிடம்.
    இதை அனைவரும் பின்பற்றுதல் நலம்.

    த ம 4

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  7. நல்ல நூல் ஒன்றினை அறிமுகம் செய்தமைக்கு நன்றி..

    ReplyDelete
  8. அருமையான நூல் ஒன்றினை அறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள் ஐயா
    அவசியம் வாங்கி படிக்கின்றேன்
    நன்றி
    தம +1

    ReplyDelete
  9. அருமையான நூல் அறிமுகம் அய்யா,என் தளத்தில் பீச்சாங்கை படியுங்களேன். தங்கள் மேலான கருத்து கேட்க நான். நன்றி.

    ReplyDelete
  10. வாசிக்கும் ஆவலைத் தூண்டும் வண்ணம்
    மிக நன்றாக விமரிசித்துள்ளீர்கள்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  11. வணக்கம்.
    நல்ல பல தகவல்களைத் தேடி எடுத்து, நல்ல மலர்களில் மட்டுமே அமர்ந்து தேனீ, தேன் சேகரிப்பது போல
    தாங்கள் சேகரித்துத் தரும் இந்தத் தேன் கூடுகள் கண்டிப்பாக ஒரு நாள் இந்தச் சமுதாயத்திற்குப் பயன்படும் என்பதில் சந்தேகமே இல்லை..... தாங்கள் தரும் பதிவுகளைப் படிக்கத்தான் நேரம் கிடைப்பதில்லை. மன்னிக்கவும்.

    நட்புடன்
    இடைமருதூர் கி. மஞ்சுளா

    ReplyDelete
    Replies
    1. மதிப்பிற்குரி இ.ம.கி.மஞ்சுளா அவர்களுக்கு வணக்கம். தங்களின் கட்டுரை, கடிதங்களை பழைய செம்மலர் மற்றும் 90களின் தினமணி-தமிழ்மணி இணைப்பில் பார்த்திருக்கிறேன். இணையத்தில் கிடைக்குமா தெரிவிக்க வேண்டுகிறேன். வணக்கம்.
      முனைவர் அய்யாவின் பதிவுவழியே தங்களைத் தொடர்பு கொள்ளக் கிடைத்த வாய்ப்பிற்கு அவருக்கு எனது நன்றியும் வணக்கமும்.

      Delete
    2. வணக்கம் திரு. முத்து நிலவன் அவர்களே...
      தங்கள் பதிவைப் பற்றி ஜம்புலிங்கம் ஐயா இன்று தொலைபேசியில் கூறிய பிறகுதான் பார்த்தேன். மன்னிக்கவும். (அவ்வளவு வேலையா!!!! என்று கேட்காதீர்கள். இணையத்துக்குள் சென்றுவிட்டால் நாம் யாரோடு இணைந்திருக்கிறோம் என்பதே மறந்துபோய்விடும். அத்தகைய மயக்கவலை அது - மனக் கவலையும் தருவது. அதனால் எப்போதாவது செல்வேன்).

      தாங்கள், 90களில் தினமணி - தமிழ்மணியின் இணைப்பில் அடியேனின் பதிவுகளைக் கண்டேன் என்று எழுதியிருக்கிறீர்கள். ஆனால், நான் தினமணியில் காலடி எடுத்து வைத்ததே 2008-இல்தானே!!! 90களில் யார் எழுதியிருப்பார்கள் தெரியவில்லையே....

      கூகுள் சென்று அடியேனின் பெயரைத் தமிழில் டைப் செய்தால் (இடைமருதூர் கி.மஞ்சுளா), தினமணியில் (வெள்ளிமணி, தமிழ்மணி, மகளிர் மணி, கருத்துக்களம், தலையங்கப் பக்கம், கொண்டாட்டம், கதிர்) வெளியானவைகளைப் படிக்கலாம். அடியேனின் வலைப்பூவிலும் edaimaruthour kmanjula@blogspot.in சென்று படிக்கலாம்.

      தங்கள் அறிமுகத்துக்கும் நட்புக்கும்
      தலைவணங்குகிறேன்.
      நட்பு தொடரட்டும்.

      இடைமருதூர் கி.மஞ்சுளா

      Delete
  12. 9ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் (ஜனவரி 2015-இல் கோலாலம்பூரில் நடைபெற்ற) வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் "பண்சுமந்த தமிழால் முக்தி இன்பமும் வீடுபேறும்" என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள அடியேனின் கட்டுரையை படித்துப் பாருங்கள். தமிழின் பெருமை தரணியெங்கும் தழைத்தோங்கட்டும்

    நட்புடன்
    இ.கி.ம.

    ReplyDelete
  13. நல்ல அறிமுகம். நன்றி

    ReplyDelete
  14. அறிமுகத்திற்கு நன்றி

    ReplyDelete
  15. நல்லதொரு நூல் விமர்சனம். விக்கி பீடியா இணைப்புகளுக்கு நன்றி.
    த.ம.6

    ReplyDelete
  16. அன்பின் அய்யா,
    திரு.ரவிசுப்பிரமணியன் அவர்களின் ஆளுமைகள் தருணங்கள் புத்தகத்தை நீங்கள் விமர்சித்த விதம் மிக அழகு. உடனே வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி விட்டது.நன்றி.

    ReplyDelete
  17. சிறந்த மதிப்புரை.

    த ம 9

    ReplyDelete
  18. #எம்.வி.வி.# என்று சுருக்கமாய் அழைக்கப் பட்டவர் ,மணிக் கொடி எழுத்தாளர்கள் என்றழைக்கப் பட்டவர்களில் ஒருவருமான m.v.வெங்கட்ராமன் அவர்கள்தான் என நினைக்கிறேன் .அவருடைய 'காதுகள் 'நாவலில் இருக்கும் மேற்சொன்ன நாலு வரிகளே ,அவருடைய 'காதுகள் 'நாவலை நினைவுக்கு கொண்டு வருதே!
    த ம 8

    ReplyDelete
  19. நூலிலிருந்து ஆளுமைகள் ஒவ்வொருவரைப் பற்றியும் ஆசிரியர் கொடுத்தவற்றில் சிறப்பான கருத்துக்களை எடுத்துக்கொடுத்து நூலை வாசிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியமைக்குப் பாராட்டுக்கள். நல்ல அறிமுகம். த.ம. வாக்கு 10.

    ReplyDelete
  20. நல்ல அறிமுகம். இதுபோன்ற நூல்களில் இருந்துதான் மேலோட்டமாக நாம் அறிந்த பிரபலங்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியும். ரவி சுப்ரமணியம் அவர்களும் அறிமுகப் படுத்திய உங்களுக்கும் நன்றி

    ReplyDelete
  21. திரு.ரவிசுப்பிரமணியன் அவர்களின் ஆளுமைகள் தருணங்கள் புத்தகத்தை நீங்கள் விமர்சித்த விதம் மிக அழகு. உடனே வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி விட்டது.நன்றி

    ReplyDelete
  22. நல்லதொரு பகிர்வு. எனது பதிவு காலிபிளவர் மிளகு பொரியல் !

    ReplyDelete
  23. சிறப்பான நூல் அறிமுகம்... நன்றி ஐயா...

    தாமத வருகைக்கு மன்னிக்கவும்...

    ReplyDelete
  24. Reading is a good habit.but sharing what you read is a great quality
    Thanks sir.

    ReplyDelete
  25. Reading is a good habit.but sharing what you read is a great quality
    Thanks sir.

    ReplyDelete
  26. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!
    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,
    தங்களது தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!
    வருக!
    வலைச்சரத்தில் கருத்தினை தருக!
    http://blogintamil.blogspot.fr/
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  27. அன்புள்ள அய்யா,

    ‘ஆளுமைகள் தருணங்கள் ’- ரவிசுப்பிரமணியன் அய்யா அவர்களின் நூல் பற்றி...தாங்கள் அறிமுகப் படுத்தியதைப் படித்து மகிழ்ந்தேன். பலரைப் பற்றிய செய்திகள் அருமையாகக் கொடுத்திருப்பதைப் பார்த்தால் அந்த நூலை வாங்கிப் படிக்கத் தூண்டுகிறது.
    நன்றி.
    த.ம. 12.

    ReplyDelete
  28. அறியாதவர்களை அறிய தந்தற்கு நன்றி! ஐயா..

    ReplyDelete
  29. உண்மையில் ரவிசுப்பிரமணியன் ஒரு எழுத்தாளன் என்பதை அவரது வார்த்தை நயம் புலப்படுத்துகிறது வாசகனை மெய்மறக்க செய்ய வார்த்தைபிரயோகம் இன்றியமையாதது அருமை அருமை

    ஒரு திறமையானவரை அறிமுகம் செய்தமைக்கு மகிழ்ச்சி முனைவர் ஐயா
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    தம 14

    ReplyDelete
  30. ஆளுமைகள் தருணங்கள் - அருமையான அறிமுகம் . என் போல் புத்தகம் வாசிப்பதை இடைநிறுத்தம் செய்தோரை மீண்டும் படிக்கத் தூண்டுகிறது . மகிழ்ச்சி

    ReplyDelete