முகப்பு

05 March 2015

இளைய மகாமகம் : தேரோட்டம்

மகாமகத்திற்கு முதல் ஆண்டு இளைய மகாமக ஆண்டாகக் கருதப்படுகிறது. 2016இல் மகாமகம் நிகழவுள்ள நிலையில் 2015இல் நடைபெறும் மகாமகம் இளைய மகாமகமாகும். இளைய மகாமகத்தையொட்டிய தேரோட்டங்களைக் காண 3.3.2015 அன்று நானும் என் மனைவியும் கும்பகோணம் சென்றோம். கும்பேஸ்வரர் கோயில்,  சோமேஸ்வரர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் அபிமுகேஸ்வரர் கோயில்களில் தேரோட்டத்தை ஒரு நாளில் கண்டோம். அடுத்த நாள் மகாமகக்குளத்திற்குச் சென்று தீர்த்தவாரியைக் கண்டோம். இப்போது தேரோட்டங்களைக் காண்போம். 

விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்குரிய தேருக்கான திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கும்பேஸ்வரர், மங்களாம்பிகை தேர்கள் மட்டும் நிலையில் இருந்தன. கும்பேஸ்வரர் தேரில் விநாயகரும், முருகனும் இருந்தனர். மங்களாம்பிகை தேரில் சண்டிகேஸ்வரர் இருந்தார். கும்பேஸ்வரர் தேரை இழுத்து அனைத்து வீதிகளையும் சுற்றிவந்து நிலையில் நின்ற பின்னர், சிறிது நேரம் கழித்து மங்களாம்பிகை தேரினை இழுத்தோம்.

புறப்படத் தயாராகும் கும்பேஸ்வரர் கோயில் தேர்கள் 

கும்பேஸ்வரர் தேர்
தேரில் கும்பேஸ்வரர், விநாயகர், முருகன்
மங்களாம்பிகை தேர்


தேரில் மங்களாம்பிகை, சண்டிகேஸ்வரர்

கோயில் தேர் நகர நகர அங்கிருந்து தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாகச் சென்றோம். மேலவீதி-வடக்குவீதி சந்திப்பிலும், கோயில் குளத்தின் அருகே உள்ளேயிருந்தும், பொற்றாமரைக்குளத்தின் அருகேயிருந்தும், முதன்மை வாயிலிலிருந்தும்மொட்டை கோபுர வாயிலின் உள்ளேயிருந்தும்,  தேர்களைப் புகைப்படமெடுத்தோம். 








கும்பேஸ்வரர் கோயில் தேர்களில் உள்ள சிற்பங்களைப் பார்த்தோம். அவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தன. சிவனின் பல்வேறு உருவங்களையும், சைவத்தின் முக்கியக் கூறுகளைச் சித்தரிக்கும் சிற்பங்களையும் கண்டோம்.




பின்னர் கும்பேஸ்வரர் கோயிலிலிருந்து கிளம்பி கடைத்தெரு ஆஞ்சநேயர் கோயில், ராஜகோபாலசுவாமி கோயில், கன்னிகாபரமேஸ்வரி கோயில், நவநீதகிருஷ்ணன் கோயில், கரும்பாயிரம் விநாயகர் கோயில், வராகப்பெருமாள் கோயில் உள்ளிட்ட பல கோயில்களுக்குச் சென்றுவிட்டு பின்னர் மற்ற தேர்களைக் காணச் சென்றோம்.
காசி விஸ்வநாதர் கோயில் தேர்
அபிமுகேஸ்வரர் கோயில் தேர்



சோமேஸ்வரன் கோயில் தேர் (கோயில் வாயிலில்) 
முதலில் சோமேஸ்வரர் கோயில் சென்றோம். சோமேஸ்வரர் கோயில் தேர் அலங்கரிக்கப்பட்டு கோயில் வாயிலில் நிற்க வைக்கப்பட்டிருந்தது. மாலை நாங்கள் அங்கிருந்து கிளம்பும்வரை அத் தேர் கிளம்பவில்லை. அத்தேர் ஓடவில்லை என்பதை அறிந்தோம். தொடர்ந்து காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் அபிமுகேஸ்வரர் கோயில்களின் தேர்களை சிறிது நேரம் இழுத்துவிட்டு மகாமகக்குளத்தைச் சுற்றிவந்தோம். 2004 மகாமகத்திற்குப் பிறகு ஒரே நாளில் அதிக நேரம் கும்பகோணத்தில் தற்போது பல கோயில்களைச் சுற்றிவந்ததைப் பெருமையுடன் கூறினார் என் மனைவி. அனைத்துக் கோயில்களுக்கும் நடந்தே சென்றது ஒருவகையான மகிழ்ச்சியைக் கொடுத்தது. 

ஒரே நாளில் நான்கு கோயில்களில் ஐந்து தேர்களையும், சில கோயில்களையும், இரு குளங்களையும் பார்த்த மன நிறைவோடு அங்கிருந்து மன நிறைவோடு கிளம்பினோம், மறுநாள் மகாமகம் தீர்த்தவாரியைப் பார்ப்பதற்குக் கிளம்ப ஆயத்தம் ஆவதற்காக. 

புகைப்படம் எடுக்க உதவி : உடன் வந்த என் மனைவி திருமதி பாக்கியவதி

7.3.2015 அன்று மேம்படுத்தப்பட்டது.

31 comments:

  1. வணக்கம்
    ஐயா.

    பதிவை படித்த போது ஒரு பக்தி உணர்வு.நாங்களும் சென்று வந்தது போல உணர்வு படங்கள் எல்லாம் அழகு பகிவுக்கு நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அருமையான பகிர்வு. தாங்கள் மனநிறைவுடன் திரும்பியது மகிழ்ச்சியே. புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அருமை. அம்மாவுக்கு என் நன்றியைத் தெரிவிக்கவும்.இளையமகாமகம் கண்டு மகிச்சியுடன் மகாமகத்தைத் தோடர்வோம்.

    ReplyDelete
  3. மகாமகத்தில் நாங்களும் கலந்துகொண்ட மாதிரியான உணர்வு ஏற்படுகிறது. படங்கள் அனைத்தும் அருமை.

    ReplyDelete
  4. அருமை.. ஐயா..
    சென்ற ஆண்டு நான் இவ்விதமே தரிசனம் செய்து வந்தேன்..
    ஊர் கூடித் தேர் இழுத்தல் - எவ்வளவு அர்த்தமுள்ளது..

    இனிய பதிவு.. மகிழ்ச்சி..

    ReplyDelete

  5. தேர்த் திரு விழா வெகு சிறப்பு!
    பார் போற்றும் நற்படைப்பு!
    தொடர்க!

    த ம 4
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  6. ஒரே நாளில் அவ்வளவு கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்ததுமல்லாமல் பலதேர்களை இழுத்த சாதனையும் செய்த உங்களுக்குப் பாராட்டுக்கள். கும்பகோணத்தில் காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகம் ஒன்று மட்டும்தான் நாங்கள் பார்த்த கோவில் விழா. கருணாநிதியைக் கைது செய்த நேரம் போக்குவரத்தே மிகவும் பாதித்து இருந்தகாலம்.

    ReplyDelete
  7. கும்பகோணத்தில் இருந்த நாட்களை மீண்டும் அசைபோட வைத்தது உங்கள் கட்டுரைகளும் புகைப்படங்களும். நன்றி ஜம்பு.

    ReplyDelete
  8. ஆஹா ... 1968 மஹாமகம் நண்பர்களோடு சென்று வந்தது நினைவுக்கு வருகிறது. ம்ம்,,... அது அந்தக் காலம்!!!

    ReplyDelete
  9. //அனைத்துக் கோயில்களுக்கும் நடந்தே சென்றது ஒருவகையான மகிழ்ச்சியைக் கொடுத்தது. //

    அம்மாடி ...!

    நல்ல தரமான படங்கள் ... நல்ல ‘மூன்றாவது கண்’ ... வாழ்த்துகள்

    ReplyDelete
  10. அருமைான புகைப்படங்களுடன் எங்களையும் தேர் இழுக்கவைத்த உணர்வையும், தெளிவான விளக்கவுரையும் தந்து விட்டீர்கள் நன்றி.
    தமிழ் மணம் 5

    ReplyDelete
  11. ஒரே நாளில் இத்தனை கோவில்களும், தேர்களும் கண்டது பாக்கியம் தான். நாங்களும் உங்களுடன் வந்த உணர்வு. உங்களுக்கும்,அம்மாவிற்கும் நன்றி. தம 6

    ReplyDelete
  12. நாங்களும் கலந்து கொண்ட உணர்வு...

    அழகான படங்கள்... நன்றி ஐயா...

    ReplyDelete
  13. கோவில் திருவிழாவில் நாங்களும் கலந்து கொண்டோம் உங்கள் கட்டுரை மூலமாக....

    படங்களும் நேரில் பார்த்த உணர்வு தந்தன. நன்றி.

    ReplyDelete
  14. அன்பின் அய்யா.
    அருமையான பகிர்வு. நேரில் பார்த்த உணர்வு. அற்புதம்.

    ReplyDelete
  15. தேர்களிலுள்ள சிற்பங்கள் மிக மிக அழகு! புகைப்படங்கள் அனைத்துமே அருமை!

    ReplyDelete
  16. கும்பகோணத்திற்கு எங்களையும் அழைத்துச் சென்றுவிட்டீர்கள், தங்களின் புகைப் படங்கள் வாயிலாக.
    படங்கள் ஒவ்வொன்றும் அழகு
    நன்றி ஐயா
    தம 8

    ReplyDelete
  17. படங்கள் நேரில் பார்த்ததுபோல் இருந்தது ஐயா..

    ReplyDelete
  18. உங்கள் பதிவை படித்த போது நேரில் தேரோட்டம் பார்த்த உணர்வு ஏற்ப்பட்டது.

    எனது வலைப்பூவுக்கு வந்து கருத்தும்.வாழ்த்தும் சொன்னதற்கு மிக்க நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள். உறுப்பினராகவும் சேர்ந்து கருத்துக்களை சொல்லுங்கள்.

    ReplyDelete

  19. வணக்கம்!

    தேரோட்டக் காட்சிகளைச் சிந்தை மகிழ்ந்திடவே
    சீரூட்டத் தந்தீர் செழித்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  20. தேரோட்டம் பற்றிய உங்கள் பார்வையை வண்ணப் படங்களோடு சொன்னமைக்கு நன்றி. எல்லாப் படங்களையும் பெரிதாக்கி பார்த்தேன். தேர்களில் உள்ள மரச் சிற்பங்கள் தமிழகத்தின் கலையுணர்வை வெளிப்படுத்தும் வண்ணம் உள்ளன.இளைய மகாமகம் என்றால் கொஞ்சம் விளக்கவும்.
    த.ம.11

    ReplyDelete
    Replies
    1. மகாமகத்திற்கு முதல் ஆண்டு இளைய மகாமக ஆண்டாகக் கருதப்படுகிறது. 2016இல் மகாமகம் நிகழவுள்ள நிலையில் 2015இல் நடைபெறும் கம் இளைய மகாமகமாகும். தற்போது இவ்விவரத்தைக் கட்டுரையின் ஆரம்பத்தில் இணைத்துவிட்டேன். நன்றி.

      Delete
  21. மாசி மாதம் எல்லாம் திருவிழா காலங்கள்தான்.

    ReplyDelete
  22. அன்புள்ள அய்யா,

    மகாமகத்திற்கு முதல் ஆண்டு இளைய மகாமக ஆண்டாகக் கருதப்படுகிறது. 2016இல் மகாமகம் நிகழவுள்ள நிலையில் 2015இல் நடைபெறும் மகாமகம் இளைய மகாமகமாகத்தைப் பற்றி விரிவாக விளக்கியுள்ளதை அறிந்து வியந்து போனேன்.

    புகைப்படம் எடுத்து உதவிய தங்களின் மனைவி திருமதி. பாக்கியவதி கிடைக்க நீங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும். தேர்ந்தெடுத்த புகைப்பட நிபுணராகத் தெரிகிறார். புகைப்படங்கள் எல்லாம் அருமை... அருமை!

    நன்றி.

    ReplyDelete
  23. அன்பின் திரு ஜம்புலிங்கம்

    அருமையான பதிவு - புகைப்படங்கள் நிறைந்த பதிவு - விளக்கங்கள் விரிவானவை. துணைவியாரின் திறமை புகைப் படங்களீல் பளிச்சிடுகிறது.

    நன்று
    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  24. ஏரோட்டம் குறைந்து தேரோட்டம் மிகுந்த காலமிது..

    ReplyDelete
  25. எவ்வளவு அழகான பதிவு ஐயா! அழகான படங்கள்! அதுவும் அந்த தேரின் சிற்பங்கள் என்னே அருமை! கலை நுணுக்கம் எத்தனைச் சிறப்பாக உள்ளது?!!! அதைச் செதுக்கிய கலைஞர்கள் வாழ்க!

    ReplyDelete
  26. கும்பகோணம் தேரோட்டத்திற்கு நேரில் சென்று தரிசித்த மாதிரி இருக்கு தங்கள் புகைப்படமும்,விளக்கமும்..

    நன்றி..
    வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  27. ஐயா இளைய மகாமகம் பற்றிய புகைப்படமும், விளக்கமும், அனைவரும் கூறியவாறு நேரில் சென்று பார்த்த உணர்வு ஏற்படுகிறது. இதன்வழி தாங்கள் குடும்பத்தோடு இறைப்பணி செய்து வருகிறீர்கள். இறைவன் அருள் இருப்பதால்தான் இச்செயல்கள் நடக்கின்றன. சக பணியாளர் என்பதில் எனக்கு தனி மகிழ்ச்சி. நன்றி.

    ReplyDelete
  28. ஒரே நாளில் நான்கு கோயில்களில் ஐந்து தேர்களையும், சில கோயில்களையும், இரு குளங்களையும் பார்த்த மன நிறைவோடு அங்கிருந்து மன நிறைவோடு கிளம்பினோம்,//

    நாங்களும் உங்களுடன் தேர்திருவிழாவை கண்டு களித்தோம் சார்.
    அழகாய் அற்புதமாய் படம் எடுத்து தந்து விட்டீர்கள்.

    ReplyDelete