17 ஜனவரி 2017 மற்றும் அதற்கு முன்னருமாக வெண்ணாற்றங்கரையிலுள்ள கோயில்களுக்குச்
சென்றுவந்தேன். வெண்ணாற்றங்கரையில் ஆற்றங்கரை ஓரத்திலேயே சென்று சில கோயில்களைப் பார்த்தது மறக்க முடியாத அனுபவம். அக்கோயில்களுக்கு உங்களை அழைக்கிறேன். இந்த கோயில் உலாவின்போது
கரந்தட்டாங்குடி சப்தஸ்தானக் கோயில்களில் மூன்று கோயில்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது.
தமிழகத்தில் பல இடங்களில் சப்தஸ்தானக்கோயில்கள் உள்ளன. அவற்றில் கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம் ஒன்றாகும். பல வருடங்கள் சப்தஸ்தான தேரோட்டம் நடைபெறாத அந்த கோயில்களைப் பற்றி பிறிதொரு பதிவில் விவாதிப்போம்.
- கரந்தை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
- விரைவில்
குடமுழுக்கு காணவுள்ள வசிஷ்டேஸ்வரர் கோயில் (தேவகோட்டத்தில் மிக அழகான சிற்பங்களைக்
கொண்டுள்ள கோயில்) (கரந்தை சப்தஸ்தானக்கோயில்)
- கோடியம்மன்
கோயில் (உற்சவ கோடியம்மன் கோயில் என்ற பெயரில் தஞ்சாவூரில் மேல வீதியில் ஒரு கோயில்
உள்ளது)
- தஞ்சபுரீஸ்வரர்
கோயில் (ஆனந்தவல்லியம்மன் கோயில் என்றாலே பலருக்கும் தெரிகின்ற கோயில். பெரிய
கோயிலுக்கும் முந்தையது என்ற பெருமையுடையது)
- தஞ்சை
மாமணிக்கோயில் (வீரநரசிம்மப்பெருமாள் கோயில், மணிகுன்றப் பெருமாள் கோயில்,
நீலமேகப்பெருமாள் கோயில்) (வைணவத்தில் ஒரு திவ்ய தேசம் என்ற நிலையில் பல
இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கோயில்களைக் காணலாம். அவ்வகையில் இங்கு மூன்று
கோயில்கள்)
- கல்யாண
வெங்கடேசப்பெருமாள் கோயில் (பராமரிப்பின்றி உள்ள கோயில்)
- விரைவில்
குடமுழுக்கு காணவுள்ள தளிகேஸ்வரர் கோயில் (பெரிய குளத்தைக் கொண்டுள்ள கோயில்)
- கூடலூர்
சொக்கநாதசுவாமி கோயில் (கரந்தை சப்தஸ்தானக்கோயில்)
- கடகடப்பை ராஜராஜேஸ்வரர் கோயில் (கரந்தை சப்தஸ்தானக்கோயில்)
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் விமானம் (தஞ்சாவூர் கரந்தைப்பகுதியில் உள்ளது) |
வசிஷ்டேஸ்வரர் கோயில் (தஞ்சாவூர் கரந்தைப்பகுதியில் உள்ளது) |
கோடியம்மன் கோயில் (தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் பள்ளியக்கிரகாரம் முன்பாக உள்ளது) |
தஞ்சபுரீஸ்வரர் கோயில் (தஞ்சபுரீஸ்வரர், ஆனந்தவல்லி)
(நுழைவாயில், மூலவர் விமானம்)
(வெண்ணாற்றங்கரைக்கு முன்பாக உள்ளது)
(நுழைவாயில், மூலவர் விமானம்)
(வெண்ணாற்றங்கரைக்கு முன்பாக உள்ளது)
கல்யாண வெங்கடேசப்பெருமாள் கோயில்(நுழைவாயில், மூலவர் விமானம்) (வெண்ணாற்றங்கரையில் உள்ளது) |
அனைத்து படங்களும் அருமை ஐயா...
ReplyDeleteமகன், பேரன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்...
விரிவான தகவல்கள், புகைப்படங்கள்.
ReplyDeleteபுகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சிறப்பாக உள்ளன
ReplyDeleteமகனுக்கும், பேரனுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteமுனைவர் அவர்களுக்கு நன்றி. உங்கள் பேரன் தமிழழகனுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஒரு சின்ன ஆலோசனை சொல்வதற்கு மன்னிக்கவும். கோயில்களைப் படம் எடுக்கும் போது, அந்த கோயிலின் வாசலின் இருபுறமும் உள்ள (கட்டிடங்கள் அல்லது மரங்கள் போன்ற) காட்சிகளையும் சேர்த்தே எடுத்தால் அது எந்த ஊர் கோயில் அல்லது எந்த இடம் என்று படத்தை பார்த்த மாத்திரத்திலேயே சொல்லி விடலாம். ஏனெனில் நம்மூர்க் கோயில்கள் அனைத்தும் ஒன்று போலவே இருக்கும்.
தங்கள் ஆலோசனையை ஏற்று அதன்படி நடப்பேன். நன்றி. (மன்னிக்கவும் என்பதைத் தவிர்த்திருக்கலாமே)
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
விரிவான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மீண்டும் ஒருமுறை ஆலய தரிசனம்.. மகிழ்ச்சி..
ReplyDeleteA visual feast as usual
ReplyDeleteபடங்கள் மற்றும் தகவல்கள் சிறப்பு.
ReplyDeleteபடங்களுடன் கோவில் வரலாறு
ReplyDeleteதங்கள் சிறந்த கைவண்ணம்
நாளும் நினைவூட்டும் பதிவு
படங்கள் அருமை ஐயா
ReplyDeleteபடங்களும், விவரங்களும் சுவாரஸ்யம்.
ReplyDeleteகோவில்களுடன் கூடிய பதிவு. கோவில்களைப் பற்றிய சிறு குறிப்பைப் படிக்க ஆசைப்பட்டேன். முன்பே எழுதியிருந்தால் சுட்டி கொடுக்கவும். கடகடப்பை ராஜராஜேஸ்வர்ர் ஆலயத்தின் விதானத்தில் பெரிய கல்போன்று உள்ளது. பொதுவாக மாட அமைப்பில்தானே சோழர் கோவில்கள் இருக்கும்.
ReplyDeleteதமிழர்களின் பொக்கிஷங்களைத் தொடர்ந்து எழுதிவருவது மகிழ்ச்சி.
இடம் மாறி புதிதாக அண்மையில் (நூறாண்டுகளுக்குள்) கட்டப்பட்டதாகக் கூறினர். பதியவேண்டும் என்ற நன்னோக்கில் பதிவு செய்தேன். நன்றி.
Deleteஅருமை
ReplyDelete