முகப்பு

27 January 2017

அயலக வாசிப்பு : ஃபிடல் காஸ்ட்ரோ

  • 20 ஆண்டுகளுக்கு முன் ப்ரன்ட்லைன் ஆங்கில இதழில் ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றி படித்தபோது (Fidel breakfasts with not less than three hundred pages of world news .. தினமும் காலையில் முந்நூறு பக்கங்களுக்குக் குறையாமல் வெளிநாட்டுச் செய்திகளை வாசிக்கிறார்) நான் அடைந்த வியப்பு, 
  • ஒரு முறை ஐக்கிய நாடுகள் சபையில் அவர் பேசிக்கொண்டிருக்கும்போது பேச்சு நேரம் முடியப்போவதை அறிவிக்கும் வகையில் சிகப்பு விளக்கு எரிந்தபோது அதன்மேல் தன் கைக்குட்டையைப் போட்டு தொடர்ந்து தன் பேச்சைத் தொடர்ந்த நிலை,
  • புதுதில்லியில் அணி சேரா மாநாடு நடைபெற்றபோது பாலஸ்யாதீன யாசர் அராபத், ஜோர்டான் அதிபர் ஆகியோருக்கிடையேயான, பெரிய பிரச்னையாக மாறவிருந்த,  சிறிய சிக்கலைத் தீர்த்துவைத்தது, 
  • வெனிசூலா அதிபர் சவேசுடன் தான் படிக்கும் நூல்களைப் பற்றி பகிர்ந்துகொள்ளும் பாங்கு,
  • அவரைக்கொல்ல 638 முறை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அவர் எதிர்கொண்டவிதத்தைப் படித்தபோது அடைந்த உணர்வு,
  • அவர் உயிருடன் இருக்கிறாரா என்பதை உறுதி செய்வதற்காகக் காட்டில் அவரைத் தேடிச் சென்ற நிருபர்களிடம் பேசிவிட்டு, அவர்களை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் அனுப்ப ஏற்பாடு செய்தமை,
  • அணிசேரா இயக்க மாநாட்டின்போது இந்திரா காந்தியிடம் அவர் வெளிப்படுத்திய அன்பின் வெளிப்பாடு, 
என்ற நிலைகளில் ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றி அவ்வப்போது படித்தது அவர்மீதான மதிப்பை என்னுள் உயர்த்தியது. அவர் இயற்கையெய்தியபோது  ஃபிடல் காஸ்ட்ரோ எங்கள் வாசிப்பில் என்று தலைப்பிட்டுப் பதிந்தேன். தொடர்ந்து வந்த செய்திகளை அவ்விதழ்களிலிருந்தும், இந்தியாவில் வரும் இதழ்களிலிருந்தும் வாசித்து முகநூலில் பதிவிட்டேன். இப்பதிவில் அவற்றைப் புகைப்படத் தொகுத்துத் தந்துள்ளேன். இவ்விதழ்களின் புகழாரம் அவருடைய மேன்மையை நமக்கு எடுத்துரைக்கிறது. 
Observer, London

Guardian, London

Guardian, London

NYT, New York

Times of India

The Hindu

தி இந்து

தினமணி

Dawn, Pakistan

Independent, London

Granma

BBC News

தி இந்து 

Aljazeera

  









14 comments:

  1. அரிய புகைப்படங்களை காண தந்தமைக்கு நன்றி
    த.ம.1

    ReplyDelete
  2. அறிந்துகொண்டேன்.
    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  3. இது போன்ற தகவல்களை சொல்லி செல்லும் பதிவுகளை உங்களிடம் இருந்து அதிகம் எதிர் பார்க்கிறேன்

    ReplyDelete
  4. மீள் பதிவு என்றாலும் மறக்க முடியாத சிறப்பான பதிவு :)

    ReplyDelete
  5. அரிய புகைப் படங்கள் ஐயா
    போற்றுதலுக்கு உரிய மாமனிதர்

    ReplyDelete
  6. நல்லதொரு தொகுப்பு. 638 முறைகள்! அத்தனை முறை முயன்றும் அவரை அழிக்க முடியவில்லை என்பது வியப்புக்கு, பிரமிப்புக்கும் உரியது.

    தம +1

    ReplyDelete
  7. உலகின் சர்க்கரைக் கிண்ணமான கியூபாவின் அதிபர், அமெரிக்காவிற்கு மட்டும் கசப்புப் பாகற்காயாக இருந்தார். அரசியல், பொருளாதார ரீதியாக ஒதுக்கப்பட்ட நாடாக ஆக்கப்பட்ட நிலையிலும் சுயமதிப்பை விட்டுக்கொடுக்காமல் இறுதிவரை தன நாட்டிற்காக உறுதியோடு நின்றவர். அவரது வாழ்க்கை இளைஞர்களுக்கு நல்லதொரு பாடமாகும். - இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து.

    ReplyDelete
  8. சிறப்பான பகிர்வு... நன்றி.....

    ReplyDelete
  9. அரிய புகைப்படங்களுடன் மிகவும் அருமையான படைப்பு ஐயா...

    ReplyDelete
  10. அரியதொரு தொகுப்பு. மிகச் சிறந்த தலைவர் என்றால் மிகையல்ல. இவரைப் போன்றொருவர் இனி வருவாரா என்பது ஐயமே! இவரைப் பற்றி வாசித்திருக்கிறேன். பிரமிக்க வைத்தவர். அருமையான புகைப்படங்களுடன் கூடிய தொகுப்பு ஐயா. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  11. இரும்பு மனிதர்... சிறப்பான புகைப்படத் தொகுப்பு... நன்றி ஐயா...

    ReplyDelete
  12. படங்களின் தொகுப்பு மனத்தை நெகிழ்த்தியது. இந்திரா அம்மையாரும் ஃபிடல் காஸ்ட்ரோவும் படங்கள் பழைய வரலாற்று நினைவுகளை மீட்டியது.

    அரிய புகைப்படத் தொகுப்பு. காட்சிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி, ஐயா!

    ReplyDelete
  13. அமெரிக்காவுக்கு எதிராக நின்று வென்று காட்டிய போராளி. எண்ணற்ற புரட்சியாளர்களின் மானசீக குரு.

    ReplyDelete