முகப்பு

04 August 2018

பெரிய எழுத்தின் பயன்பாடு (The usage of capital letters)

அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் அதிபர் ரூஹாணிக்கு அனுப்பியிருந்த டிவிட்டர் செய்தியில் “எச்சரிக்கையாக இருங்கள். இல்லாவிட்டால் வரலாறு காணாத பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று கூறியிருந்தார். பொதுவாக கோபத்தை வெளிக்காட்டும் விதமான பெரிய எழுத்துக்களில் (capital letters in English) அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது என்று அச்செய்தியில் காணமுடிந்தது. கோபத்தை வெளிக்காட்டும் விதம் என்ற சொற்றொடரைக் கண்டு வியப்புற்றேன். பொதுவாக பெரிய எழுத்துகளில் செய்தியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும், அழுத்தம் தருவதற்காகவும் பெரிய எழுத்தினைப் பயன்படுத்தி எழுதுவதை நாளிதழ்களில் பல செய்திகளைப் பார்த்துள்ளேன்.
வழக்கத்திற்கு மாறாக டிரம்ப் பெரிய எழுத்தில் எழுதி வருவது மொழியியலாளர்கள் மற்றும் மொழி வல்லுநர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பெயர்ச்சொல்லாக இல்லாத சொற்களைக்கூட (“border”, “military”, “country”) அவர் பெரிய எழுத்தில் எழுதுகிறார். பணியிலிருந்து நீக்கல், கொள்கை முடிவுகளை அறிவித்தல், தன்னுடைய விரக்தியை வெளிப்படுத்துதல் மற்றும் எதிரிகளை அவமானப்படுத்துதல் போன்றவற்றின்போது அவர் பெரிய எழுத்தினைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர். மின்னஞ்சல்களிலும் அலுவல்சாராக் கடிதங்களிலும் பெரும்பாலும் பெரிய எழுத்துகள் பயன்படுத்தப்படுவதில்லை. அலுவல்சார் கடிதங்களில் பெரிய எழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
பொதுவாக டிரம்ப் கேபிடல் எழுத்துக்களை அரிதாகப் பயன்படுத்துவதாக அண்மையில் கூறியிருந்தார். அப்போது அவர் சில சொற்களை மட்டுமே அழுத்தம் தருவதற்காக பெரிய எழுத்தில் எழுதுவதாகக் கூறியிருந்தார்.  சில செய்திகளில் காணப்பட்டதுபோல அவர் கோபத்தை வெளிப்படுத்த பெரிய எழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பதற்கு மாற்றாக அழுத்தம் தருவதற்காக அவர் அவ்வாறு பயன்படுத்தியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. பல சூழல்களில் பல நாளிதழ்களில் பெரிய எழுத்துக்கள் இவ்வாறான பயன்பாட்டில் உள்ளதைக் காணலாம்.  

டிரம்பின் ஈரான் டிவிட்டும் அனைத்து எழுத்துக்களையும் பெரிய எழுத்துக்களில் தட்டச்சு செய்யும் வரலாறும் என்ற தலைப்பில் வெளியான செய்தியில் பெரிய  எழுத்துக்களைப் பயன்படுத்தும் முறையைப் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. டிரம்பின் டிவிட்டரைக் கிண்டலடித்து பலர் டிவிட்டரில் செய்திகளைப் பரிமாறியிருந்தனர். டிரம்ப் முக்கியத்துவத்திற்காகவே/அழுத்தம் தருவதற்காகவே தான் பெரிய எழுத்துக்களைப் பயன்படுத்துவதாக ஒரு டிவிட்டர் செய்தியில் கூறியிருந்தார்.


அமெரிக்காவில் தெருக்களின் பெயர்களில் பெரிய எழுத்து

டிரம்பின் பயன்பாட்டினை நோக்கும்போது 2010வாக்கில் நியூயார்க் நகரில் உள்ள தெருக்களின் பெயர்களின் எழுத்துருக்களில் மாற்றம் கொணர முடிவெடுக்கப்பட்டது நினைவிற்கு வந்தது. அதற்கு முன்னர் வரை தெருக்களின் பெயர்கள் முழுக்க முழுக்க பெரிய எழுத்துக்களில் இருந்தன. பெரிய எழுத்துக்கள் அபாயகரமானவை என்று அப்போது கூறப்பட்டது. "அனைத்துமே பெரிய எழுத்துக்களாக உள்ள சொற்களைப் படிப்பது சற்றே சிரமம் என்று ஓர் ஆய்வு கூறுவதாகவும், பெரிய எழுத்துக்களை உற்றுப்பார்க்கின்ற அதிகமான நேர இடைவெளியில் விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும், குறிப்பாக வயதான ஓட்டுநர்கள் இச்சிக்கலை எதிர்கொள்வதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது." என்றது நியூயார்க் போஸ்ட். அவ்வகையில் நியூயார்க் நகரில் 2,50,900 தெருப்பெயர்கள் மாற்றம் காணவுள்ளதாகவும் முதல் எழுத்து மட்டுமே பெரிய எழுத்தாக இனி அமையும் (உதாரணமாக BROADWAY என்பது Broadway) என்றும் கூறப்பட்டது. இவ்வகையில் வருடத்திற்கு 8,000 தெருப்பெயர்கள் மாற்றம் பெறுமென்று கூறப்பட்டது. இதற்காகவே Clearview என்ற புதிய எழுத்துரு அறிமுகப்படுத்தப்பட்டது.  பொதுமக்களில் மூவரில் இருவர் இந்த முறைக்கு ஆதரவினைத் தெரிவித்திருந்தனர். இந்த எழுத்துரு மாற்றம் கனிவான உணர்வினைத் தருமென்றும், பலரின் உயிரைக் காப்பாற்றும் என்றும் நகரின் டிரான்ஸ்போர்ட்டேஷன் கமிஷனர் கூறியிருந்தார்.


கார்டியன் 4 அக்டோபர் 2010
ஐக்கிய நாடுகளில் தெருவின் பெயர்களில் பெரிய எழுத்து

ஐக்கிய நாடுகளில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த முடிவின் எதிரொலியே நியூயார்க்கின் பெயர் மாற்றம் என்று கூறப்படுகிறது. சாலையின் பெயர்களில் உள்ள குழப்பத்தினைச் சரிசெய்யும் பொறுப்பினை ஏற்ற வடிவமைப்பாளர்கள் "வழக்கமாக அனைத்து எழுத்துக்களும் பெரிதாக இருக்கும் நிலைக்கு மாறாக பெரிய மற்றும் சிறிய எழுத்துக்கள் கலந்திருந்தால் படிக்க எளிதாக இருக்கும்" என்று கூறினர். அவர்கள் இதற்காகவே Transport என்ற புதிய எழுத்துருவினை அப்போது உருவாக்கினர்.  பிரிட்டிஷ் ஓட்டுநர்களுக்கு, அந்த எழுத்துக்கள் பார்ப்பதற்கு கண்களுக்கு இதமாக இருக்கும்படி அது அமைந்தது. அவ்வாறாக அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட அந்த எழுத்துருக்களைக் கொண்ட சாலையின் பெயர்கள்தான் இன்னும் பயன்பாட்டில் உள்ளன.

        Using Capital letters என்ற கட்டுரையில் In English, we do NOT use capital letters very much என்ற சொற்றொடரைக் காணமுடிந்தது. இவ்விடத்தில்  பொருண்மையின் முக்கியத்துவத்தைக் குறிக்க NOT என்ற சொல் பெரிய எழுத்துக்களில் குறிக்கப்பட்டிருந்தது. 

        Guardian மற்றும் Observer இதழ்களின் தளத்தில் Guardian and Observer style guide என்ற முதன்மைத்தலைப்பில் ஒவ்வொரு ஆங்கில எழுத்திற்கும் தனியாக (a முதல் z வரை) அவர்கள் பெரிய எழுத்தினைப் பயன்படுத்தும் விதியினைக் குறிப்பிட்டுள்ளனர். அதில் style guide c என்ற பிரிவில் capital letter பயன்படுத்துவதைப் பற்றி விளக்கமாகத் தந்துள்ளனர்.
கார்டியன் 23 டிசம்பர் 2015
பொதுவாக New York Times இதழில் வருகின்ற செய்தியின் தலைப்புகளில் ஒவ்வொரு முதல் எழுத்தும் பெரிய எழுத்தாக உள்ளதைக் காணமுடியும். இருப்பினும் connecting wordக்கு அவர்கள் பெரிய எழுத்தினைப் பயன்படுத்துவதில்லை.
நியூயார்க் டைம்ஸ் 4 ஜுலை 2018
Daily Mail மற்றும் Express போன்ற இதழ்களில் வெளிவருகின்ற செய்திகளில் அதனதன் முக்கியத்துவத்தைக் குறிக்கும்வகையில் ஒரு சொல் முழுமையாக பெரிய எழுத்துக்களில் காணப்படுகின்றன. Express இதழில் ஒரு செய்தியில் இரு சொல் இவ்வாறாக பெரிய எழுத்துகளில் வந்துள்ளதைக் காணமுடிகிறது. இந்த பெரிய எழுத்துக்கள் முக்கியத்துவம் என்பதுடன் தொடர்புடைய செய்தியில் காணப்படுகின்ற கோரம், ஆதங்கம், வருத்தம், தாக்கம், மன உறுதி போன்ற பல நிலைகளில் உணர்வு வெளிப்பாடுகளை வெளிப்படுத்துவதை அறியலாம்.
டெய்லி மெயில் 25 ஜுலை 2018

எக்ஸ்பிரஸ் 24 ஜுலை 2018

டெய்லி மெயில் 24 ஜுலை 2018


டெய்லி மெயில் 25 ஜுலை 2018


எக்ஸ்பிரஸ் 1 ஆகஸ்டு 2018

எக்ஸ்பிரஸ் 29 ஜனவரி 2017
நேற்று டிரம்ப் தன்னுடைய மகள் இவங்கா டிரம்ப் ஊடகங்கள் தொடர்பாக அளித்த பேட்டியின்போது கருத்தினைக் குறிப்பிட்டு, பெரிய எழுத்துக்களை பயன்படுத்தியிருந்தார். FAKE NEWS என்பதனை வலியுறுத்திக் கூறும் வகையில் அந்த இரு சொற்களை பெரிய எழுத்தில் பயன்படுத்தியுள்ளார். முக்கியத்துவம் மற்றும் வலியுறுத்திக்கூறல் என்ற வகையில் இது அமைகிறது.  முற்றிலும் பெரிய எழுத்துக்களைக் கொண்ட சொல் எதுவுமின்றிகூட டிரம்ப் டிவிட்டரில் பல செய்திகளைப் பகிர்கிறார்.



துணை நின்றவை
Trump has an unusual habit of capitalizing random words in his tweets writing experts take their best guesses why, Business Insider, 19 April 2018
Trump Uses Random Uppercase Letters, but Should You? An Issue of Capital Importance, The New York Times, 4 July 2018
Trump says Iran will ‘suffer consequences after speech by President Rouhani,Guardian, 23 July 2018
Trump, Iran, and the Dangers of Presidential Bluffing, The Atlantic, 23 July 2018

Trump’s Iran Tweet And THE LONG HISTORY OF TYPING IN ALL CAPS, NDTV,  24 July 2018

 Zach Braff, Papa Roach, and Jersey Shore’s Vinny troll the president with hilarious all-caps tweets addressed to Iranian President Rouhani after Trump posted an astonishing online rant, Daily Mail, 25 July 2018)

https://www.ndtv.com/world-news/donald-trumps-iran-tweet-and-the-long-history-of-typing-in-all-caps-1888459


25 comments:

  1. பெரிய எழுத்துகள் கண்களுக்கு பழகாத காரணத்தால் படிப்பது சிரமம். அப்படியே பழகினோமானால் அதுவும் எளிதாகும்!

    ReplyDelete
  2. ஆங்கிலத்தில் கேபிடல் லெட்டரில் எழுதலாம்.. தமிழில் அந்த வசதி இல்லையே.....!

    ReplyDelete
    Replies
    1. தமிழில் அடர்த்தி (Bold) செய்ய வேண்டியது தான்...

      Delete
  3. கேபிடல் லெட்டரிலேயே ட்வீட் செய்யும் டிரம்ப்பை கேபிடலிஸ்ட் என்று அழைக்கலாமோ!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஹா மிக மிக ரசித்தேன் ஸ்ரீராம் இதை...

      கீதா

      Delete
  4. நல்ல சுவாரஸ்யமான தொகுப்பு.

    ReplyDelete
  5. நல்லதொரு தொகுப்பு......

    ReplyDelete
  6. பெரிய எழுத்துக்களைப் பற்றிய தங்களின் ஆய்வும் தொகுப்பும் போற்றுதலுக்கு உரியது ஐயா
    நன்றி

    ReplyDelete
  7. பல உதாரணங்களோடு அருமையான விளக்கம்...

    ReplyDelete
  8. பெரிய எழுத்து அரைகுறை படிப்பாளிகளுக்கு உதவியாக இருக்கலாம் என்பது எனது கருத்து.

    நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  9. நல்லதோர் தொகுப்பு. அலுவலக கடிதங்களில் சில வார்த்தைகளை இப்படி எழுதுவதுண்டு - URGENT என்பது ஒரு எடுத்துக்காட்டு!

    ReplyDelete
  10. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் பயன் தர கூடியதாய் நல்லதொரு தொகுப்பு கட்டுரை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  11. நல்லதொரு பகிர்வு.
    சில கிழக்கத்திய நாடுகளிலிருந்து வரும் சிலர் ஆங்கிலத்தில் இரு மாதிரியான எழுத்துக்கள் இருப்பது அவசியமா என்று நினைப்பது உண்டு , நாம் சிறு வயதிலிருந்தே அதற்குப் பழக்கப் பட்டுவிட்டதால் நமக்கு அது சிரமமாகத் தெரியவில்லை

    ReplyDelete
  12. நல்ல பகிர்வு.

    பொதுவா பெரிய எழுத்தில் ஆங்கிலத்தில் எழுதுவது, arroganceஐக் குறிக்கும். படிக்கிறவர்களிடம், அழுத்திச் சொல்வதற்காக பெரிய எழுத்தில் எழுதினால், படிப்பவர்களுக்கு எரிச்சலாக இருக்கும். இப்படிச் செய்யக்கூடாது என்பது email பயன்பாட்டின் ஒரு விதி (அழகியல் விதி)

    ReplyDelete
  13. புதிய தகவலைத் தந்த முனைவருக்கு நன்றி.

    ReplyDelete
  14. நாமும் நம்மை அறியாமல் முக்கியத்துவம் கருதி இம்மாதிரி பெரிய எழுத்துகளை எழுதிக்கொண்டுதான் இருக்கிறோம்.
    எழுத்து, எழுதும் மனம் இரண்டும் சேர்த்து உருவாக்கும் உணர்வின் வெளிப்பாடாகவே capital letters.

    ReplyDelete
  15. அரிய மற்றும் வித்யாசமான தகவல். தொகுத்து அளித்தமைக்கு நன்றி ஜம்பு சார்

    ReplyDelete
  16. அனைவருக்கும் பயன்தரக்கூடிய அருமையான பதிவு!

    ReplyDelete
  17. தமிழ், தமிழர் வரலாறு, தமிழர் பண்பாடு பற்றியே தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வந்த ஐயா அவர்கள் முதன் முதலாக ஆங்கிலம் பற்றி இப்படி ஒரு விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டிருப்பதைக் காண்கிறேன். எம் தமிழறிஞர்கள் எப்பொழுதும் ஆங்கில ஆய்வாளர்களாகவும் இருப்பது கண்டு பெருமைப்படுகிறேன்!

    பொதுவாக, ஒரு சொற்றொடரில் எந்த இடத்துக்கு அழுத்தம் தர வேண்டுமோ அந்த இடத்தில், குறிப்பிட்ட சொல்லைப் பெரிய எழுத்தில் எழுதும் வழக்கத்தைப் பார்த்திருக்கிறேன். அதையேதான் டிரம்ப்பும் கடைப்பிடிக்கிறார் என்பதாகத்தான் எனக்குப் படுகிறது.

    ReplyDelete
  18. USA நாட்டில் சிலர் இயல்பாக Capital Letter இல் எழுதுவது வழக்கம் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

    ReplyDelete
  19. Hats up to you sir. This article is SOMETHING DIFFERENT. Thanks

    ReplyDelete
  20. பெரிய எழுத்து என்னும் ஒரு வலைத் தளமே இருக்கிறது

    ReplyDelete
  21. நல்ல தொகுப்பு மற்றும் தகவல்கள். பொதுவாக ஆங்கில எழுத்துக்களை கேப்பிட்டலில் எழுதுவது நாம் சொல்லும் விஷயத்தின் முக்கியத்துவத்தைக் காட்டத்தான். தமிழில் அதை போல்ட் லெட்டாராகச் சொல்லலாம்..

    ReplyDelete
  22. நல்ல தகவல் தொகுப்பு ஐயா

    ReplyDelete