முகப்பு

01 December 2018

இலக்கை நோக்கும் உயரமான பெண் : தினமணி

நான் எழுதிய இலக்கை நோக்கும் உயரமான பெண் என்ற தலைப்பிலான கட்டுரை 28 அக்டோபர் 2018 நாளிட்ட தினமணியில் வெளியாகியுள்ளது. அதன் மேம்பட்ட வடிவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன். 



சின்னப் பையனாக இருந்தாலும்,  சின்னப் பெண்ணாக இருந்தாலும் அவளுடனே விளையாட விரும்புகின்றனர். உடன் படிப்போர் அவளுடைய கால்களின்மீது உட்கார்ந்து கொண்டு நகைச்சுவை பரிமாறிக்கொள்ள ஆசைப்படுகின்றனர்.  பருந்து- கோழி விளையாட்டின்போது  பருந்தாக சில மாணவர்கள் பறந்து துரத்தி வரும்போது கோழியாக விளையாடும் மாணவர்கள் அவளுடைய பாதுகாப்பில் காப்பாற்றப் படுகின்றனர். கூட்டத்தில் எங்கிருந்தாலும் அவளை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அனைத்திற்கும் காரணம் சாங் சியூ என்ற பெயருடைய மாணவியின் உயரமே. கிழக்கு சீனாவில் ஷாங்டன் பகுதியில் உள்ள ஆரம்பப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்ற, 11 வயதான அம்மாணவியின் தனித்துவமாக அவருடைய உயரத்தைக் கூறலாம்.  6 அடி 10 அங்குலம் உயரமுள்ள அவர் உலகின் மிக உயரமான பெண்ணாவார். 

தேசிய கூடைப்பந்து சங்க விளையாட்டு வீரர்களின் சராசரி உயரமான 6 அடி 7 அங்குலத்தைவிட சற்று உயரமாகவும், சராசரி சீனப் பெண்ணின் உயரமான 4 அடி 6 அங்குலத்தைவிட  மூன்றில் ஒரு பங்கு உயரமாகவும் உள்ளார். தேசிய கூடைப்பந்து சங்க விளையாட்டு வீரரான லீப்ரான் ஜேம்ஸைவிடவும் அவர் உயரமாக உள்ளார். ஜேம்ஸின் உயரம் 6 அடி 8 அங்குலமாகும்.


கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையாக ஆக வேண்டுமென்பதே இவருடைய விருப்பம். அவருடைய தந்தையும், தாயும் 6 அடி உயரமுள்ளவர்கள். அவர்கள் கூடைப்பந்து வீரர்கள் ஆவர். பெற்றோரைப் போலவே அவரும் உயரமாக உள்ளார். முன்னாள் கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையான அவருடைய தாயார் சீன தேசிய விளையாட்டு அணியில் இருந்தவர், தற்போது ஷாங்டன் விளையாட்டு அணியின் தற்காலிகத் தலைவராக உள்ளார். தாயை அடியொற்றி மகளுக்கு ஐந்து வயதிலிருந்தே விளையாட்டில் நாட்டம் இருந்துள்ளது. சாங் சியூ விளையாட்டில் மட்டுமன்றி படிப்பு, இசை, நடனம் ஆகிய துறைகளிலும் முன்னணியில் உள்ளதாக அவருடைய ஆசிரியை கூறுகிறார்.
 இங்கிலாந்தில் சவுத் ஹாம்ப்ட்டனைச் சேர்ந்த, 6 அடி 2 அங்குலம் உயரமுள்ள, 12 வயதாகும் ஸோபி ஹாலின்ஸ் கின்னஸ் சாதனையில் உயரமான பெண் என்ற இடத்தைப் பெற்றவர். ஸோபியைவிட உயரமாக இருந்தபோதிலும், சாங் சியூ கின்னஸ் நிறுவனத்தால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. கின்னஸ் சாதனையில் சாங் சியூ இடம்பெற அவருடைய குடும்பத்தார் முயற்சி எடுப்பார்கள் என்று நம்புவோம்.


-------------------------------------------
சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் இம்மாதப் பதிவு : 
உரையினை யுடியூபில் கேட்க :
-------------------------------------------

11 comments:

  1. வியப்பான தகவல்கள்.

    ஆறாம் வகுப்பில் ஆறடி உயரம்... ஏழு, எட்டு வகுப்பில் என்ன உயரம் இருப்பார்?!!!

    ReplyDelete
  2. பிரமிப்பான தகவல்தான் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. வியப்பு
    வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  4. பிரமிப்பான தகவல்... எத்தனை உயரம்.... வாழ்விலும் பல உயரங்களை அவர் தொட வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. //சாதனையில் சாங் சியூ இடம்பெற அவருடைய குடும்பத்தார் முயற்சி எடுப்பார்கள் என்று நம்புவோம்.//

    சாதனைகளை நிகழ்த்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. விந்தையான ஆச்சரியப்படுத்தும் தகவல். இப்போதே இவ்வளவு உயரம் என்றால் இன்னும் வளர்வாரோ?!

    அவர் தனது இலக்கை அடையவும் வாழ்த்துகள்..

    ReplyDelete
  7. சாதனைகள் பல நிகழ்த்திட வாழ்த்துகள்

    ReplyDelete
  8. ஒரு வேளை இன்னும் உயருவார் என எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறார்களோ என்னவோ கின்னசில் பதிவு செயய

    ReplyDelete
  9. 6 அடி 10 அங்குலமா!!! மிக வியப்பு! அதே நேரம், இவர் திருமணம் பற்றி நினைத்தால் கவலையாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. உண்மை. எங்கள் உறவில் ஒரு பெண் இப்படித் தான் திருமணம் தாமதம் ஆகிறது.

      Delete