முகப்பு

13 September 2021

மன்மோகன் சிங் - பீடல் காஸ்ட்ரோ சந்திப்பு 2006

1970களின் இடையில் தி இந்து (ஆங்கில நாளிதழ்) வாசிக்க ஆரம்பித்து, 1999இல் அதில் வெளியான ஒரு கட்டுரையை மொழியாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டேன். தொடர்ந்து ஃப்ரண்ட்லைன் ஆங்கில இதழில் வெளியான நோம் சோம்ஸ்கியின் உரையை மொழியாக்கம் செய்தேன். மொழியாக்கம் செய்யும்போது எவ்வித குறிப்புகளையும் வைத்துக்கொள்வதில்லை. தட்டச்சுப்பொறியின் பக்கத்தில் மொழியாக்கம் செய்யவேண்டிய செய்தியை வைத்து அதனைப்  பார்த்துக்கொண்டு நேரடியாக தட்டச்சிடுவேன்.  பதிவின் இறுதியில் தட்டச்சிட எடுத்துக்கொண்ட நேரத்தையும் குறிப்பேன். 

அந்த வகையில் 2006இல் இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங், க்யூப அதிபர் ஃபீடல் காஸ்ட்ரோவைச் சந்திக்கச் சென்றது தொடர்பாக  தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் 18 செப்டம்பர் 2006, 19 செப்டம்பர் 2006 ஆகிய நாள்களில் வெளியான செய்திகளை, மொழியாக்கம் செய்தது ஒரு வித்தியாசமான அனுபவமாகும். ஆங்கில இதழில் வந்த செய்தி தமிழில் வந்தால் எப்படி இருக்கும் என உருவகப்படுத்திக்கொண்டு, செய்தி வெளியான நாளிதழின் பெயர், நாள் விவரம் (Newspaper title, publication date). கட்டுரையின் தலைப்பு (article title), துணைத்தலைப்பு (sub heading) கட்டுரையாளர்/செய்தியாளரின் பெயர் (name of author/reporter) செய்தியிலிருந்து தரப்படுகின்ற பெட்டிச்செய்தி (box columnஎன்ற வகையில் அதனை அமைத்திருந்தேன். தொடர்ந்து வருகின்ற நாளிதழ் வாசிப்பு என்னை மொழியாக்க முயற்சியில் ஈடுபட வைத்ததோடு, பல அனுபவங்களையும் தந்தது. அடுத்த பதிவில் பிறிதொரு மொழியாக்க அனுபவத்தைக் காண்போம். 




நன்றி : The Hindu

5 comments:

  1. மிகவும் சிறப்பான மொழிபெயர்ப்பு, ஐயா!

    ஆங்கிலம் மற்றும் உங்கள் மொழி பெயர்ப்பு இரண்டையும் வாசித்துத் தெரிந்து கொண்டேன். இப்படி மொழிபெயர்ப்புகள் வாசிப்பது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி ஐயா.

    கீதா

    ReplyDelete
  2. வடிவமைப்பும் சூப்பர்.

    ReplyDelete
  3. மொழியாக்கம் செய்ததோடு, நாளிதழில் வெளியான வடிவத்திலேயே வெளியிட்டு இருப்பதும் சிறப்பு.

    ReplyDelete