முகப்பு

06 May 2022

அரசினர் கலைக்கல்லூரி (தன்னாட்சி), கும்பகோணம் : ஆண்டு மலர் 2020-21

கும்பகோணம், அரசினர் கலைக்கல்லூரி (தன்னாட்சி)  வெளியிட்டுள்ள 2020-2021 ஆண்டு மலரில், நான் இக்கல்லூரியில் எடுத்த ஒளிப்படங்கள் இடம் பெற்றுள்ளன.  


இம்மலரில் கல்லூரியின் 2020-2021க்கான ஆண்டறிக்கை, தமிழ்த்துறை, ஆங்கிலத்துறை, கணிதத்துறை, இயற்பியல் துறை, விலங்கியல் துறை, உயிர் வேதியியல் துறை, புவியியல் துறை, கணினி அறிவியல்-கணினிப் பயன்பாட்டுத்துறை, பொருளியல் துறை, வரலாற்றுத்துறை, இந்தியப்பண்பாடு மற்றும் சுற்றுலாவியல் துறை, வணிகவியல் துறை, தாவரவியல் துறை, வணிக நிர்வாகவியல் துறை, தேசிய மாணவர் படை உள்ளிட்ட துறைகளின் செயல்பாடுகள்,  கல்லூரியில் நடைபெற்ற விடுதலை நாள், குடியரசு நாள், தேசிய இளைஞர் தின விழா, உலகத்தாய்மொழி தினம், கல்விக்குழுக்கூட்டம், மகளிர் தின விழா, பெற்றோர் ஆசிரியர் கழகக்கூட்டம், ஆட்சிக்குழுக்கூட்டம், இணையவழிக் கருத்தரங்குகள் தொடர்பான விவரங்கள் தரப்பட்டுள்ளன.

முன்னாள் மற்றும் இந்நாள் மாணவ, மாணவியர், ஆசிரியர்களின் பங்களிப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளன. மலரின் முத்தாய்ப்பாக பல்கலைக்கழக நிலையில் தகுதி பெற்றவர்களைப் பற்றிய விவரங்கள் (Bharathidasan University Rank Examinations (URE) April 2020, Under Graduate and Pot Graduate students) புகைப்படங்களுடன் உள்ளன. 

கல்லூரியின் பழைய கட்டடங்களைப் புதுப்பிக்கும் பணி அழகான புகைப்படங்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பல புதிய கட்டிடங்களின் புகைப்படங்களும் இதில் காணப்படுகின்றன. 

இவற்றுடன் ஒரு பக்கப்புகைப்படங்களில் நான் எடுத்த ஐந்து புகைப்படங்கள் (பா.ஜம்புலிங்கம், உதவிப்பதிவாளர், பணி நிறைவு, கல்லூரியின் முன்னாள் மாணவர் என்ற குறிப்புடன்) இடம்பெற்றுள்ளன. (கீழுள்ள புகைப்படத்தில் முதல் இரு வரிசை)

1975-79இல் நான் படித்த கல்லூரி வெளியிட்டுள்ள மலரில் நான் எடுத்த ஒளிப்படங்கள் வெளியானது எனக்கு மகிழ்வினைத் தருகிறது. முதல்வருக்கும், மலர்க்குழுவினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

17 ஜூன் 2023இல் மேம்படுத்தப்பட்டது.

7 comments:

  1. சிறப்பு. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    ReplyDelete
  2. ஆஹா. வாழ்த்துகளும் பாராட்டுகளும் முனைவர் ஐயா.

    ReplyDelete
  3. முனைவர் அவர்களுக்கு எமது வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. படங்கள் அழகாக இருக்கின்றன ஐயா. பாராட்டுகள், வாழ்த்துகள்!

    கீதா

    ReplyDelete
  5. உங்கள் படங்களும் இடம் பெற்றமை சிறப்பான விஷயம். வாழ்த்துகள், பாராட்டுகள்!

    துளசிதரன்

    ReplyDelete
  6. "திறமான புலமை எனில்" (நாம் படித்த கல்லூரி) "அதை வணக்கம் செய்தல் வேண்டும்" - என்று பாரதியே சொன்னரே! மலரும் படங்களும் அருமை. அதைப் பாங்குற வெளியிட்ட தன்மையும் அருமை!

    ReplyDelete