முகப்பு

09 November 2022

தகைசால் தமிழர்



முகநூலில் என் பெயரை கும்பகோணம் ஜம்புலிங்கம் என்று மாற்றியமைக்கு தமிழ்நாடு புலவர் பேரவையின் தலைவர் திரு வை.வேதரெத்தினம் அவர்கள் வாழ்த்து... நன்றி ஐயா....

தகைசால் தமிழர் !

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் 1959 –ஆம் ஆண்டு பிறந்தவர் திரு.ஜம்புலிங்கம். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உதவிப் பதிவாளராகப் பணியாற்றி 30-04-2017 அன்று ஓய்வு பெற்றவர் !
பணியில் இருந்து கொண்டே படித்து மதுரை, காமராசர் பல்கலைக் கழகத்தில் 1995- ஆம் ஆண்டு ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டமும், தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் 1999 – ஆம் ஆண்டு முனைவர் பட்டமும் பெற்றவர் !
தமிழிலும் ஆங்கிலத்திலுமாகப் பத்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். சோழநாட்டில் பௌத்தம், முனைவர் ஜம்புலிங்கம் போன்ற தனது வலைப்பூக்களில் ஐந்நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவையன்றி, தமிழ்ப் பொழில், தினமணி போன்ற இதழ்களிலும், விக்கிபீடியா மின்ம ஊடகத்திலும் ஆயிரத்துக்கும் மிகையாக ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார் !
அருள் நெறி ஆசான், பாரதி பணிச் செல்வர் போன்ற பல விருதுகளையும் பெற்றுள்ள இவர் Dr.B.JAMBULINGAM என்ற பெயரில் முகநூல் தொடக்கி இயக்கி வந்தார் !
“தமிழ்நாடு புலவர் பேரவை” முன்னெடுத்து வரும் ”தமிழுக்கு மாறுவோம்” என்னும் இயக்கத்தினால் ஈர்க்கப்பெற்ற இவர் தனது முகநூல் கணக்கினை “கும்பகோணம் ஜம்புலிங்கம்” என்ற பெயரில் தமிழுக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார் !
பணிவோய்வுக்குப் பின் தஞ்சை, கீழவாசலில் வாழ்ந்து வரும் இந்தத் தகைசால் தமிழரை வளமோடு, நலமோடு வாழ்வாங்கு வாழ்கவென உளமாற வாழ்த்துவோம் !
வாழிய செந்தமிழ்ச் செல்வரே ! வாழிய நீவிர் வளமோடு, நலமோடு, பொலிவோடு, புகழோடு நீடு வாழ்க !
-----------------------------------------------
அன்புடன்,
வை.வேதரெத்தினம்,
தலைவர்,
தமிழ்நாடு புலவர் பேரவை,
[திருவள்ளுவராண்டு: 2053, துலை (ஐப்பசி) 23]
{09-11-2022}
---------------------------------------------


6 comments:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தங்களுக்கு கிடைத்த பட்டம் தங்களுக்கு மிகவும் பொருத்தமானதே..! தங்களுக்கு கிடைத்த பட்டங்களையும், தங்களது எழுத்துலக தொண்டுகளையும் படிக்க பெருமையாக உள்ளது. தங்களுக்கு அன்பாக வாழ்த்துரைத்த தமிழ்நாடு புலவர் பேரவையின் தலைவர் திரு. வை. வேதரெத்தினம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. தங்களுக்கும் என்றும் எங்களது மனம் நிறைந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. மொழிப்பற்றும் தமிழ்ப்பற்றும் ஓங்கும் உம்மை
    முத்தமிழே வாழ்த்திவிடும் முன்னோர் கூட
    விழிக்கின்ற செயல்செய்யும் சிறப்பைக் கொண்ட
    விருதாளன் வாழ்வாங்கு வாழ வேண்டும் !

    சிறப்பு வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  3. மேலும் சிறப்புறட்டும் முகநூல் வழியே தங்களது தொண்டு.

    ReplyDelete
  4. மேலும் மேலும் சிறக்கட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  5. வாழிய.. வாழிய பல்லாண்டு..

    ReplyDelete