முகப்பு

28 July 2023

தஞ்சாவூர் புத்தகத் திருவிழா 2023 : வாசிப்பை நேசிப்போம்

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் (14-24 ஜூலை 2023) நாள்தோறும் இலக்கிய அரங்கம், பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான போட்டிகள், பள்ளி/கல்லூரி/கிராமியக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், நகைச்சுவை-சிந்தனை அரங்கம் ஆகியவை இடம் பெற்றன. 


நான்காம் நாள் நிகழ்வான இலக்கிய அரங்கில் காலை 10.30 மணியளவில்  வரலாற்று அறிஞர் திரு அய்யம்பேட்டை என் செல்வராஜ் அவர்கள் "திருவிசைப்பாவும் தமிழும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து "வாசிப்பை நேசிப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினேன். நூல்கள், இதழ்கள் ஆகியவற்றை வாசிப்பதின் முக்கியத்துவத்தினையும், படிப்பதைப் பழக்கமாகக் கொள்ளவேண்டிய அவசியத்தையும், அந்தந்த இதழின் தளத்தில் சென்று படிக்கவேண்டிய முறையையும். சமூக வலைதளங்களை முறையாகப் பயன்படுத்த வேண்டியதையும் எடுத்துக்கூறினேன். 50 ஆண்டு கால நாளிதழ் வாசிப்பு, வாசகனாக இருந்த என்னை கட்டுரைகளையும், நூல்களையும் எழுத உதவியாக இருந்தது என்பதையும் பகிர்ந்துகொண்டேன்.      

முன்னதாக, அரங்கின் நெறியாளர் புலவர் மா.கோபாலகிருஷ்ணன் பொழிவாளர்களை அறிமுகப்படுத்தினார். சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதர் முனைவர் மணி.மாறன் நன்றி கூறினார்.



மூத்த பத்திரிக்கையாளர் கோ.சீனிவாசன் நினைவுப்பரிசு வழங்கல். உடன் (வ) அய்யம்பேட்டை செல்வராஜ், கோபாலகிருஷ்ணன், மணி.மாறன்




உரையை கீழ்க்கண்ட யுடியூப் இணைப்பில் கேட்கலாம்.


புத்தகத் திருவிழாவில் ஓர் அங்கமாக தஞ்சாவூர் மாவட்டம், கிளைச்சிறைகள், தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை சார்பாக சிறைவாசிகளுக்கு புத்தக தானம் செய்வீர் என்ற வேண்டுகோளுடன் அமைக்கப்பட்டிருந்த அரங்கில்  எங்கள் இல்ல நூலகத்திலிருந்து 250 நூல்களைப் புத்தக தானமாக வழங்கியுள்ளேன். அதனைப் பின்வரும் இணைப்பில் காணலாம்.

4 ஜூலை 2024இல் மேம்படுத்தப்பட்டது.

3 comments:

  1. நல்லதொரு நிகழ்வின் அறிமுகம். நூல்கள் தானமாக வழங்கியது சிறப்பு.

    ReplyDelete
  2. சிறப்பு ஐயா.
    நிகழ்வு அன்று நேரில் வர இயலா சூழல்.
    யூடியூப்பில் அவசியம் கேட்கிறேன்
    நன்றி ஐயா

    ReplyDelete
  3. நல்ல நிகழ்வு பற்றிய விவரங்கள். நூல்களைத் தானமாக வழங்கியது சிறப்பான விஷயம்

    கீதா

    ReplyDelete