முகப்பு

27 October 2015

கும்பகோணம் அபிமுகேஸ்வரர் கோயில்

26.10.2015 அன்று கும்பகோணத்தில் பல கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றன. அக்கோயில்களில் அபிமுகேஸ்வரர்,  பாணபுரீஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கம்பட்ட விஸ்வநாதர் (மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காணும் சைவக்கோயில்கள்), வராகப்பெருமாள் (காவிரியில் தீர்த்தவாரி காணும் வைணவக்கோயில்களில் ஒன்று), திரௌபதியம்மன், வரசித்தி விநாயகர், பகவத் விநாயகர், யானையடி அய்யனார் கோயில்களுக்குச் சென்றோம். 14 கோயில்களில் கும்பாபிஷேகம் ஆகும் நிலையில் ஒன்பது கோயிலுக்குச் சென்றோம். முதன்முதலாக நாங்கள் சென்ற அபிமுகேஸ்வரர் கோயிலுக்குச் செல்வோம், வாருங்கள்.

முன்பொரு காலத்தில் சிவன் வேட உருவம் தாங்கி அமுதக்கலசத்தை உடைத்துச் சிதைத்தபோது அதிலிருந்து ஒரு தேங்காய் விழுந்த இடத்தில் ஒரு தென்னை மரம் தோன்றியதாகவும் அதனடியில் ஒரு சிவலிங்கம் தோன்றியதாகவும் அதனால் இத்தலம் நாளிக்கேச்சரம் என்று கூறப்படுவதாகவும் தலவரலாறு கூறுகிறது. ஆதலால் இறைவனை நாளிக்கேசன் என்றும் அழைக்கின்றனர். 

மகாமகக்குளத்தின் கீழ்க்கரையில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு காசி விசுவநாதர் கோயில் வழியாகச் சென்றோம். மகாமகக்குளக்கரையில் ஆங்காங்கு பக்தர்கள் வந்துகொண்டிருந்தார்கள். 





கோயிலின் அருகே இருந்தும், மகாமகக்குளக்கரையியிருந்தும், கும்பாபிஷேகத்தைக் காண ராஜகோபுரம் தமக்குத் தெளிவாகத் தெரியும்படி நின்றுகொண்டிருந்தனர்.  ராஜகோபுரத்தைக் கண்டு தரிசனம் செய்தோம். 

ராஜ கோபுர வாயில் வழியாக கோயிலுக்குள் சென்றோம். கொடிக்கம்பத்தைக் கடந்து உள்ளே சென்று மூலவர் அபிமுகேசரைக் கண்டோம். 

பிறகு அங்கிருந்து யாகசாலைக்குச் சென்றோம். கும்பாபிஷேகத்திற்காக சிறப்பு பூஜைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. 




யாகசாலை பூஜையைப் பார்த்துவிட்டு கருவறைத் திருச்சுற்றில் வரும்போது மந்திரங்கள் ஓதிக்கொண்டிருப்பதைக் கண்டோம். 

கருவறை விமானத்தைப் பார்த்துவிட்டு அங்கிருந்து அம்மன் சன்னதிக்குச் சென்றோம். இறைவி அமுதவல்லியைக்கண்டோம். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்தோம். முன்னரை விட கூட்டம் அதிகமாகவே கோயிலுக்கு அருகே மகாமகக்குளக்கரையின் படிக்கட்டின் ராஜகோபுரம் தெரியும் வகையில்  அமர்ந்தோம். குளத்தைச் சுற்றி அனைத்துத் திசைகளிலிருந்தும் கும்பாபிஷேகத்தைக் காண பக்தர்கள் காத்திருப்பதைக் கண்டோம். 

சிறுவர்கள் மகாமகக்குளத்தில் நீச்சலடித்துக்கொண்டிருப்பதைக் கண்டோம். அனைவருடைய கண்களும் ராஜகோபுரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது குளிக்கும் சிறுவர்களோ கையில் பெரிய குச்சியை வைத்துக்கொண்டு போட்டி போட்டுக்கொண்டு மண்டபத்திலிருந்து குதித்து மகிழ்ச்சியோடு விளையாடிக் கொண்டிருந்தார்கள். 



ராஜகோபுரத்திற்கு மேலே சூரியன் அழகாக ஒளிவீசிக்கொண்டிருக்க கும்பாபிஷேக  நிகழ்வுகள் தொடர்ந்தன. சிறிது நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. இறைவன் திருநாமத்தை உச்சரித்தோம். சிறிது நேரம் கோயிலில் இருந்துவிட்டு அங்கிருந்து மன நிறைவோடு கிளம்பினோம். கும்பகோணத்தில் இதே நாளில் கும்பாபிஷேகம் கண்ட பிற கோயில்களுக்கு தொடர்ந்து செல்வோம்.
--------------------------------------------------------------------------------------------------
மகாமகத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் சைவக்கோயில்கள்
  • காசி விஸ்வநாதர் கோயில் (நவகன்னியர் அருள்பாலிக்கும் இடம்)
  • கும்பேஸ்வரர் கோயில் (அமிர்தகலசத்திலிருந்து குடமூக்கு தங்கிய இடம்)
  • நாகேஸ்வரர் கோயில் (வில்வம் விழுந்த இடம்)
  • சோமேஸ்வரர் கோயில் (உறி விழுந்த இடம்)
  • கோடீஸ்வரர் கோயில், கொட்டையூர் (அமிர்தத் துளிகள் விழுந்த இடம்)
  • காளஹஸ்தீஸ்வரர் கோயில் (சந்தனம் விழுந்த இடம்)
  • கௌதமேஸ்வரர் கோயில் (பூணூல் விழுந்த இடம்)
  • அமிர்தகலசநாதர் கோயில், சாக்கோட்டை (கலச நடுப்பாகம் விழுந்த இடம்)
  • பாணபுரீஸ்வரர் கோயில் (வேடுவ உருவில் சிவன், பாணம் எய்த இடம்)
  • அபிமுகேஸ்வரர் கோயில் (தேங்காய் விழுந்த இடம்)
  • கம்பட்ட விஸ்வநாதர் கோயில் (புஷ்பங்கள் விழுந்த இடம்)
  • ஏகாம்பரேஸ்வரர் கோயில் (மற்ற உதிரி பாகங்கள் விழுந்த இடம்)
--------------------------------------------------------------------------------------------------
துணை நின்றவை
மகாமகப்பெருவிழா 2004 கும்பகோணம், இந்து சமய அறநிலையத்துறை,தமிழ்நாடு அரசு

50 comments:

  1. இயற்கை மின்ன இயல்பு நிலைப் படங்கள்
    அருமையான பக்திப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. மகாமகத் தீர்த்தவாரி கோயில்களுக்கு ஒவ்வொன்றாகச் செல்லலாம் என்ற எண்ணத்தில் இப்பதிவு.

      Delete
  2. அருமையான விளக்கவுரையுடன் கும்பாபிஷேக படங்கள் அழகு
    கீழிருந்து மூன்றாவது புகைப்படம் அருமை எடுத்தவருக்கு ஒரு சபாஷ்
    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் தமிழ் மண வாக்கிற்கும் நன்றி. அனைத்து புகைப்படங்களும் நான் எடுத்ததே. தங்களின் சபாஷுக்கு மேலும் ஒரு நன்றி.

      Delete
  3. தங்கள் பங்களிப்புகள் குறித்து எஸ்.ரா பேசியபோது ஆனந்த அதிர்ச்சி ...
    வாழ்த்துகள்
    பயணங்கள் தொடரட்டும்.

    ReplyDelete
  4. உங்களைப் போன்றோரின் வருகையும், நம் எழுத்தை வாசிப்பவர்களின் பாராட்டும் என்னை மென்மேலும் எழுதவைக்கும். நன்றி.

    ReplyDelete
  5. அறிந்துகொள்ள வேண்டிய ஆன்மிக தகவல்கள் அய்யா!
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. ஒரே நாளில் ஒரே நேரத்தில் பல கோயில்களில் கும்பாபிஷேகம் நடக்கும்போது ஒரு கோயிலையே உரிய நேரத்தில் பார்க்கமுடிகிறது. நன்றி.

      Delete
  6. கும்பாபிஷேகம் பார்த்த திருப்தி

    ReplyDelete
  7. கூடவே வந்து அளப்பரிய காட்சிகளைக் கண்ட திருப்தி ஐயா!

    மிக மிக அருமை!
    நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. உடன் வந்தமைக்கு நன்றி. தொடர்ந்து பிற தீர்த்தவாரி கோயில்களுக்குச் செல்வோம்.

      Delete
  8. வணக்கம்
    ஐயா
    நிகழ்வை சிறப்பாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் மற்றும் ஆலயம் பற்றியும் அறியக்கிடைத்தது...வாழ்த்துக்கள் த.ம7
    எனது பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உன் நினைவுக் கீற்றுக்கள்:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துககும் நன்றி. தங்களது கவிதையைப் படித்துவிட்டேன்.

      Delete
  9. கும்பாபிஷேக படங்கள் உட்பட அனைத்து படங்களும் அருமை ஐயா...

    கூடவே பயணித்த உணர்வு... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. புதுக்கோட்டை விழாவிற்குப் பிறகு உங்களது வருகை கண்டு மகிழ்ச்சி. நன்றி.

      Delete
  10. இனிய தரிசனம் கண்டு மகிழ்ச்சி..
    அடுத்த பதிவுகளைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றேன்..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி. விரைவில் பிறிதொரு கோயிலைப் பற்றிய பதிவுடன் சந்திப்போம்.

      Delete
  11. நினைவாலே நிம்மதியை அருளாய் தந்தீர் அய்யா
    குடமுழக்கு மூழ்கிய உணர்வு உள்ளத்தில்.
    நன்றி

    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி.

      Delete
  12. நல்ல தகவல்கள். அழகான படங்களுடன் ஐயா! பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  13. அபி முகேஸ்வரர் கோயில் தரிசனத்தை படங்களுடன் சிறப்பாக பகிர்ந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. நேரில் பார்க்கத் தவறியதை தங்களின் பதிவின் மூலம் காண உதவியமைக்கு நன்றி! படங்கள் துல்லியமாய் தெரிகின்றன. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டுக்கு நன்றி.

      Delete
  15. கும்பாபிஷேகத்தை நேரில் பார்த்த மாதிரி இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  16. படங்கள் நேரில் கண்டவை போலச் சிறப்பாக உள்ளன!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி, நன்றி.

      Delete
  17. படங்களோடும் விவரணைகளோடும் எங்களையும் உடன்கூட்டிச் சென்றீர்கள்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து இன்னும் பல கோயில்களுக்குச் செல்வோம். நன்றி.

      Delete
  18. அருமையான விளக்கமும் அழகான காட்சிப்படங்களும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

      Delete
    2. Mr K.S.S. Krishnan (thro email: krishnan.kss@gmail.com)
      THANKS JAMBU, IN FACT WE STAYED BEHIND THIS TEMPLE ONLY DURING MY CHILDHOOD DAYS FOR SEVERAL YEARS
      ENJOYED YOUR NARRATION WITH REAL FEELINGS
      ONCE AGAIN THANKS
      MY ELDER SISTER IS RESIDING IN KMU ONLY GOING TO ALL TEMPLES EVERYDAY.

      Delete
  19. அருமையான படங்கள் மற்றும் தகவல்கள்.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  20. அழகான படங்களுடன் அந்த இடத்தில் நாங்களும் இருந்தது போன்ற உணர்வைத் தந்தது.

    ReplyDelete
    Replies
    1. அத்தகைய ஓர் உணர்வினை, பதிவு ஏற்படுத்தியதறிந்து மகிழ்ச்சி. நன்றி.

      Delete
  21. அபிமுகேஸ்வரர் கோவில் போனதில்லை. உங்கள் பதிவு மூலம் கும்பாபிஷேகமே காண் முடிந்தது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வரும் பதிவுகளில் இன்னும் பல கோயில்களுக்கு அழைத்துச்செல்லவுள்ளேன். நன்றி.

      Delete
  22. பல கோயில்களுக்கு சென்று நேரடியாக கும்பாபிஷேசங்களைப் பார்த்த அனுபவத்தை தந்ததற்க்கு நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. அத்தகைய அனுபவத்தை, பதிவு தந்ததறிந்து மகிழ்ச்சி. நன்றி.

      Delete
  23. இணையவழி வாசகர்களை கும்பகோணத்திற்கு ஆன்மிகப் பயணம் செய்ய வைத்திருக்கிறீர்கள். கோடிப்புண்ணியம் உங்களைத் தேடி வரும்.

    ReplyDelete
    Replies
    1. மகாமகத்திற்கு முன்பாக நண்பர்களை நம் பதிவின் மூலமாக அனைத்து கோயில்களுக்கும் அழைத்துச் செல்ல இது ஒரு வாய்ப்பு. நன்றி.

      Delete
  24. கும்பாபிஷேகத்தை நேரில் பார்த்த உணர்வு. நன்றி. படங்கள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  25. அன்புள்ள அய்யா,

    கும்பகோணம் அபிமுகேஸ்வரர் கோயில் பற்றி படங்களுடன் கும்பாபிஷேக நிகழ்வுகள் அனைத்தையும் அறியத் தந்தது கண்டு மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் தமிழ் மண வாக்கிற்கும் நன்றி.

      Delete