2016 பிப்ரவரியில் கும்பகோணத்தில் மகாமகம் நடைபெறவுள்ள நிலையில் மகாமகத்தோடு தொடர்புடைய கோயில்களைப் பற்றி இப்பதிவில் காண்போம். முதலில் மகாமகத்தில் தீர்த்தவாரி காணும் சைவக்கோயில்களைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
மகாமகம் : தீர்த்தவாரி சைவக்கோயில்கள்
மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் சைவக்கோயில்கள் 12 ஆகும். மகாமக நாளன்று இந்த 12 சைவத்தலங்களிலிருந்தும் சுவாமிகள் எழுந்தருளி மகாமகக்குளம் சென்று தீர்த்தவாரி சிறப்பாக நடைபெறும். இக்கோயில்களில் மகாமகத்தை முன்னிட்டு கௌதமேஸ்வரர் கோயிலில் அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
பிற கோயில்களில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இக்கோயில்களில் கோடீஸ்வரர் கோயிலும், அமிர்தகலசநாதர் கோயிலும் கும்பகோணத்திற்கு அருகேயுள்ளன. மற்ற அனைத்து கோயில்களும் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளன. பிப்ரவரி 2016இல் மகாமகம் நிகழவுள்ள நிலையில் இக்கோயில்களுக்குச் செல்வோம், வாருங்கள்.
மகாமகம் : தீர்த்தவாரி சைவக்கோயில்கள்
மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் சைவக்கோயில்கள் 12 ஆகும். மகாமக நாளன்று இந்த 12 சைவத்தலங்களிலிருந்தும் சுவாமிகள் எழுந்தருளி மகாமகக்குளம் சென்று தீர்த்தவாரி சிறப்பாக நடைபெறும். இக்கோயில்களில் மகாமகத்தை முன்னிட்டு கௌதமேஸ்வரர் கோயிலில் அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
பிற கோயில்களில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இக்கோயில்களில் கோடீஸ்வரர் கோயிலும், அமிர்தகலசநாதர் கோயிலும் கும்பகோணத்திற்கு அருகேயுள்ளன. மற்ற அனைத்து கோயில்களும் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளன. பிப்ரவரி 2016இல் மகாமகம் நிகழவுள்ள நிலையில் இக்கோயில்களுக்குச் செல்வோம், வாருங்கள்.
- காசி விஸ்வநாதர் கோயில் (நவகன்னியர் அருள்பாலிக்கும் இடம்)
- கும்பேஸ்வரர் கோயில் (அமிர்தகலசத்திலிருந்து குடமூக்கு தங்கிய இடம்)
- நாகேஸ்வரர் கோயில் (வில்வம் விழுந்த இடம்)
- சோமேஸ்வரர் கோயில் (உறி விழுந்த இடம்)
- கோடீஸ்வரர் கோயில், கொட்டையூர் (அமிர்தத் துளிகள் விழுந்த இடம்)
- காளஹஸ்தீஸ்வரர் கோயில் (சந்தனம் விழுந்த இடம்)
- கௌதமேஸ்வரர் கோயில் (பூணூல் விழுந்த இடம்)
- அமிர்தகலசநாதர் கோயில், சாக்கோட்டை (கலச நடுப்பாகம் விழுந்த இடம்)
- பாணபுரீஸ்வரர் கோயில் (வேடுவ உருவில் சிவன், பாணம் எய்த இடம்)
- அபிமுகேஸ்வரர் கோயில் (தேங்காய் விழுந்த இடம்)
- கம்பட்ட விஸ்வநாதர் கோயில் (புஷ்பங்கள் விழுந்த இடம்)
- ஏகாம்பரேஸ்வரர் கோயில் (மற்ற உதிரி பாகங்கள் விழுந்த இடம்)
தீர்த்தவாரி கோயில்களில் முதல் கோயிலான காசி விஸ்வநாதர் கோயில் மகாமகக்குளத்தின் வட கரையில் உள்ளது. இறைவன் காசி விஸ்வநாதர், இறைவி விசாலாட்சி அம்மாள். ஞானசம்பந்தர், சேக்கிழார், மீனாட்சிசுந்தரம்பிள்ளை ஆகியோர் இத்தலம் குறித்துப் பாடியுள்ளனர்.
கும்பேஸ்வரர் கோயில் நகரின் நடுவில் அமைந்துள்ளது. இறைவன் கும்பேஸ்வரர், இறைவி மங்களாம்பிகை. ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் இத்தலத்தைப் பாடியுள்ளனர்.
தீர்த்தவாரி கோயில்களில் அடுத்த கோயில் நாகேஸ்வரர் கோயில் ஆகும். இறைவன் நாகேஸ்வரர், இறைவி பெரியநாயகி. நாவுக்கரசர் பாடல் பெற்ற தலம். கருவறை கோஷ்டத்தில் அய்யம்பேட்டை அருகேயுள்ள புள்ளமங்கை கோயிலில் காணப்படுவது போன்று அழகான சிற்பங்களைக் காணலாம். தேர் வடிவ மண்டமும் இக்கோயிலில் உள்ளது.
சோமேஸ்வரர் கோயில் பொற்றாமரைக்குளத்தருகில் உள்ளது. இறைவன் சோமேஸ்வரர், இறைவி சோமநாயகி. ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம்.
கோடீஸ்வரர் கோயில் கும்பகோணம்-சுவாமிமலை சாலையில் கொட்டையூரில் உள்ளது. இறைவன் கோடீஸ்வரர், இறைவி பந்தாடுநாயகி. நாவுக்கரசர் இத்தலத்தின் சிறப்பைப் பாடியுள்ளார்.
காளஹஸ்தீஸ்வரர் கோயில் மடத்துத்தெருவில் (காவிரியாற்றின் தென்புறம்) பெரிய மடத்திற்கு அருகில் உள்ளது. இறைவன் காளஹஸ்தீஸ்வரர் கோயில், இறைவி ஞானாம்பிகை.
2016 மகாமகத்தை முன்னிட்டு முதன்முதல் கும்பாபிஷேகம் ஆன இக்கோயில் மகாமகக்குளத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. இறைவன் கௌதமேஸ்வரர், இறைவி சௌந்தரநாயகி.
அமிர்தகலசநாதர் கோயில் கும்பகோணம்-வலங்கைமான் சாலையில் கும்பகோணத்திலிருந்து 3 கிமி தொலைவில் உள்ள (அரசலாற்றின் தென் கரையில்) சாக்கோட்டை எனப்படும் திருக்கலயநல்லூரில் அமைந்துள்ளது. இறைவன் அமிர்தகலசநாதர், இறைவி அமிர்தவல்லிநாயகி. சுந்தரர் பாடல் பெற்ற தலம். இதுவரை இக்கோயிலுக்கு நான் சென்றதில்லை. இங்கு செல்லும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
அமிர்தகலசநாதர் கோயில் கும்பகோணம்-வலங்கைமான் சாலையில் கும்பகோணத்திலிருந்து 3 கிமி தொலைவில் உள்ள (அரசலாற்றின் தென் கரையில்) சாக்கோட்டை எனப்படும் திருக்கலயநல்லூரில் அமைந்துள்ளது. இறைவன் அமிர்தகலசநாதர், இறைவி அமிர்தவல்லிநாயகி. சுந்தரர் பாடல் பெற்ற தலம். இதுவரை இக்கோயிலுக்கு நான் சென்றதில்லை. இங்கு செல்லும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
தீர்த்தவாரிகோயில்களில் அடுத்த கோயில் பாணபுரீஸ்வரர் கோயில். இக்கோயிலுள்ள பாணபுரீஸ்வரர், இறைவி சோமகமலாம்பாள்.
மகாமகக்குளத்தின் அனைத்துக் கரைகளிலிருந்தும் இக்கோயிலின் அழகினைப் பார்க்கலாம். மகாமகக்குளத்தின் கீழ்க்கரையில் அமைந்துள்ளது. இறைவன் அபிமுகேஸ்வரர், இறைவி அமுதவல்லி.
கம்பட்ட விஸ்வநாதர் கோயில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் கும்பகோணம் நகரில் கும்பேஸ்வரர் கோயிலுக்கு தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது. இறைவன் விசுவசேர், இறைவி ஆனந்தநிதி.
ஏகாம்பரேஸ்வரர் கோயில் கும்பகோணத்தின் மத்தியில் முச்சந்தி பாதாள காளியம்மன் கோயில் அருகே (பழைய பேருந்து நிலையம் அருகில்) உள்ளது. இறைவன் ஏகாம்பரேஸ்வரர், இறைவி காமாட்சியம்மன்.
மகாமகப்பெருவிழா, 2004, இந்துசமய அறநிலையத்துறை, தமிழ்நாடு அரசு, 2004
விக்கிபீடியாவில் இணைப்பதற்காக என்னால் எடுக்கப்பட்ட மேற்கண்ட புகைப்படங்களில் பெரும்பாலானவை விக்கிபீடியாவில் அந்தந்த தலைப்பிலுள்ள கட்டுரைகளில் இடம் பெற்றுள்ளன.
31.10.2015 அன்று மேம்படுத்தப்பட்டது.
------------------------------------------------------------------------------------------------
மகாமகம் தீர்த்தவாரி : வைணவக்கோயில்கள்
மகாமகத்தின்போது காவிரியாற்றில் தீர்த்தவாரி கொடுக்கும் வைணவக்கோயில்கள் பின்வருவன ஆகும். இக்கோயில்கள் அனைத்தும் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளன.
- சார்ங்கபாணி கோயில்
- ராமசாமி கோயில்
- ராஜகோபாலசுவாமி கோயில்
- வராகப்பெருமாள் கோயில்
- சக்கரபாணி கோயில்
------------------------------------------------------------------------------------------------
நன்றிமகாமகப்பெருவிழா, 2004, இந்துசமய அறநிலையத்துறை, தமிழ்நாடு அரசு, 2004
விக்கிபீடியாவில் இணைப்பதற்காக என்னால் எடுக்கப்பட்ட மேற்கண்ட புகைப்படங்களில் பெரும்பாலானவை விக்கிபீடியாவில் அந்தந்த தலைப்பிலுள்ள கட்டுரைகளில் இடம் பெற்றுள்ளன.
31.10.2015 அன்று மேம்படுத்தப்பட்டது.
அருமையான பகிர்வு. உங்கள் பதிவின் மூலம் எங்களுக்கும் கோபுர தரிசனம். நன்றி ஐயா.
ReplyDeleteவணக்கம் முனைவரே தங்களின் கோபுர விடயங்களின் விளக்கம் பிரமிக்க வைக்கின்றது
ReplyDeleteதமிழ் மணம் 2
உங்களது பதிவுகளின் நடையைவிடவா? வருகைக்கு நன்றி.
Deleteகோபுர தரிசனம்.. கோடி புண்ணியம்..
ReplyDeleteஅருமையான தரிசனம்.. வாழ்க நலம்..
எங்களை பல கோயில்களுக்கு அழைத்துச் செல்லும் தங்களின் வருகைக்கும் வாழ்த்துகும் நன்றி.
Deleteஐயா!.. தங்கள் தயவினால் நானும் இங்கு தரிசிக்கின்றேன்.
ReplyDeleteமிக அருமையான படங்கள். தகவல்களும் சிறப்பு!
மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!
மகாமகத்திற்கு முன்போ, வாய்ப்பு கிடைக்கும்போதோ இக்கோயில்களைக் காண்பதற்காகவே இப்பதிவு. வருகைக்கு நன்றி.
Deleteஅருமை
ReplyDeleteவருகைக்கு நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
ஆலய தரிசனம் கிடைத்தது போல ஒரு உணர்வு அழகிய புகைப்படங்களுடன் அற்புதமான விளக்கம்.. வாழ்த்துக்கள் த.ம5
தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டி கலந்து கொள்ளுங்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மா பெர...:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. கவிதைப்போட்டி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
Deleteஅழகிய படங்களுடன் எங்களையும் உடன் அழைத்து சென்ற உணர்வைத் தந்தது தங்களின் பகிர்வு.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Delete2016 ல் நடைபெறப் போகும் மகா மகத்தின் துவக்கப் பதிவாகாவே இருந்தது அய்யா!
ReplyDeleteகோபுர தரிசனம் சாலவும் சிறந்தது. மனம் காணும் மகிழ்வின் மகத்துவம் அய்யா அது!
நன்றி!
த ம +
நட்புடன்,
புதுவை வேலு
மகாமகத்தோடு தொடர்புடைய சைவக் கோயில்களைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ளவே இப்பதிவு. வருகைக்கு நன்றி.
Deleteஅருமையான பதிவு . படங்களும் அழகு.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Deleteமகாமக கோயில்கள் பற்றிய விளக்கம் சிறப்பு! நன்றி!
ReplyDeleteமுடிந்தவரை சிறு குறிப்பாகத் தந்துள்ளேன். வருகைக்கு நன்றி.
Deleteசென்ற முறை நடந்த காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகம் பார்த்திருக்கிறேன் கோடீஸ்வரர் கோவில் காள ஹஸ்தீஸ்வரர் அமிர்த கலச நாதர் கோவில் பார்த்ததில்லை. மகாமகக் குளத்தில் சைவக் கோவில்கள் தவிர பிற கோவில்களிருந்து தீர்த்தவாரி கொடுக்கப் படுவதில்லையா.?
ReplyDeleteமகத்தின்போது காவிரியில் தீர்த்தவாரி கொடுக்கின்ற வைணவக் கோயில்களைப் பற்றி தனியாக ஒரு பதிவு எழுதவுள்ளேன். விக்கிபீடியாவில் பதிவதற்காக புகைப்படங்கள் எடுக்கவும், விவரங்கள் சேர்க்கவும் சென்றதன் விளைவே இப்பதிவு. தங்களின் வருகைக்கு நன்றி.
Deletethank you for the information.let your service continue
ReplyDeleteதங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களுடன் பயணம் தொடரும். வாய்ப்பிருக்கும்போது இக்கோயில்களைக் காணஅழைக்கிறேன். நன்றி.
Deleteஅற்புதமான தகவல்களை பதிவு செய்கிறீர்கள். அதனால்தான் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பாராட்டையும் பெற்றுள்ளீர்கள். இணையத் தமிழுக்கு அரும்பணி ஆற்றிக் கொண்டிருகிறீர்கள். நன்றியும் வாழ்த்தும்
ReplyDeleteசோழ நாட்டில் பௌத்தம் என்ற எனது வலைப்பூவை திரு எஸ்.ராமகிருஷ்ணன் பாராட்டியபோது நெகிழ்ந்துவிட்டேன். புத்தர் சிலை பற்றிய செய்தி வரும்போது உன்னிப்பாக என் பெயரைப் பார்ப்பதாக அவர் கூறியபோது எனது ஆய்வின் அருமையை உணர்ந்தேன். தங்களைப் போன்ற நண்பர்களின் தூண்டுகோலே எனது எழுத்துக்கும், ஆய்வுக்கும் பக்கபலம். வாழ்த்துக்கு நன்றி.
Deleteஎஸ் ரா அவர்களால் பாராட்டப்பட்டதற்கு வாழ்த்துகள் ஐயா! தங்கள் பணி மேலும் தொடர்ந்து சிறக்கவும் வாழ்த்துகள்!
Deleteபுதுக்கோட்டையில் வலைப்பதிவர் விழா நிறைவுற்றபின் பல நண்பர்கள் எழுத்தாளர் திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எனது ஆய்வைப் பாராட்டியது பற்றி என்னிடம் பகிர்ந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். உங்களைப் போன்ற சகபதிவர்களின் வாழ்த்தும்கூட நான் மென்மேலும் எழுத உதவி செய்கிறது. வருகைக்கு நன்றி.
Deleteஎஸ்ரா வாயால் பாராட்டப் பெற்றவர் தாங்கள் என்று அறிகிறேன். வாழ்த்துகள். படங்கள் வாயிலாக எங்களுக்கும் கோபுர தரிசனம் செய்வித்தீர்கள். நன்றி. நான் நேரில் பார்த்த ஒரே கும்பாபிஷேகம் பல வருடங்களுக்கு முன்னால் தஞ்சைப் பெரிய கோவில் கும்பாபிஷேகம். கூட்டத்தில் மாட்டிக் கொண்டு பட்ட அவஸ்தை தனி அனுபவம்!
ReplyDeleteதம +1
தமிழக வரலாற்றுக்கு ஒரு முக்கியப் பதிவாக அமையவேண்டும் என்ற நன்னோக்கில் எனது பௌத்த ஆய்வினைக் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொண்டுவருகிறேன். பாராட்டிய எழுத்தாளர் திரு ராமகிருஷ்ணன்அவர்களுக்கும், பகிர்ந்த உங்களுக்கும் நன்றி.
Deleteகோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். பவுத்த ஆராய்ச்சியில் நீங்கள் இருந்தாலும், சைவம் சார்ந்த திருக்கோயில்கள் பற்றிய உங்களது பதிவுகள், உங்கள் ஆன்மீக ஈடுபாட்டை விளக்குகின்றன.
ReplyDeleteஇப்போது கும்பேஸ்வரர் கோயிலுக்கு வந்தால், கோபுரத்தை படம் எடுக்க இயலுமா? அல்லது வர்ணம் தீட்டுவதற்காக மூங்கில் மற்றும் கீற்றுகளால் சாரம் கட்டி மறைத்து வைத்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
பௌத்த ஆய்வு என்பதானது முனைவர் பட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்டுத் தொடர்ந்துவருகிறது. கும்பகோணத்தில் பிறந்தவன் என்ற நிலையில் கோயில்களை என்னுள்ளிருந்து பிரிக்க முடியாத நிலையிருப்பதை உணர்கிறேன். கும்பேஸ்வரர் கோயில் வந்தால் புகைப்படம் எடுக்கலாம். நவராத்திரி விழா முடிந்தபின் வாருங்கள். 5.6.2009இல் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் மகாமகத்திற்காக இக்கோயிலில் கும்பாபிஷேக நிகழ்வு இல்லை என்பதை நவராத்திரி விழாவிற்காக 17.10.2015 அன்று சென்றபோது அறிந்தேன்.
Deleteஅனைத்துக் கோயில்களையும் தரிசித்தேன். கும்பகோணத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தும் இத்தனை கோயில்களையும் தரிசித்ததில்லை.
ReplyDeleteகோயில் & மகாமகம் பற்றிய விபரங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி சார்.
மகாமகத்திற்கு வரவுள்ளோருக்கு உதவியாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இப்பதிவு. வாய்ப்பு கிடைக்கும்போது இக்கோயில்களைப் பார்க்கலாம். வருகைக்கு நன்றி.
Deleteமகாமகம் பற்றித் தெரிந்திருந்தாலும், இத்தனைத் தகவல்கள் அறிந்ததில்லை. விவரங்கள் அனைத்தும் சிறப்பு. புகைப்படங்களுடன்....
ReplyDeleteஎங்களையும் எல்லா கோயிகளையும் தரிசனம் செய்ய வைத்துவிட்டீர்கள் ஐயா! மிக்க நன்றி பகிர்வுக்கு!
விக்கிபீடியாவில் மகாமகம் மற்றும் மகாமகம் தொடர்பான கோயில்கள் என்ற நிலையில் ஒழுங்கமைவு செய்ய மேற்கொண்ட முயற்சி இப்பதிவுக்குத் துணையாக இருந்தது. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteநிறைவான ,சுருக்கமான பதிவுகள்.நன்றி
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Deleteமன நிறைவு தந்த பகிர்வு
ReplyDeleteதங்களின் மன நிறைவு மகிழ்வினைத் தருகிறது. நன்றி.
Deleteபல கோயில்களைப் பற்றிய சுருக்கமான பதிவு. நேரில் சென்று பார்க்கவேண்டும் என்ற உணர்வை ஊட்டுகிறது. 1974 இல் சிட்டி யூனியன் பாங்கில் வேலை கிடைத்தபோது கும்பேஸ்வரர் -மங்களாம்பாள் சந்நிதி தரிசனம் கிடைத்தது. அடுத்த தரிசனம் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னரே கிடைத்தது. விரைவில் இந்த ஆண்டு தரிசிக்கவேண்டும் என்று ஆசை. அவன் அருளால் அன்றோ அது நிறைவேறவேண்டும்? - இராய செல்லப்பா
ReplyDeleteஅனைத்துக் கோயில்களையும் பார்க்கவேண்டும் என்ற உங்களது ஆவல் அவன் அருளால் நிறைவேறும். நன்றி.
Delete