06 November 2015

கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கோயில்

26.10.2015 அன்று கும்பகோணம் பகுதியில் கும்பாபிஷேகம் நடைபெற்ற 14 கோயில்களில் மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காணும் சைவக்கோயில்களான அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், பாணபுரீஸ்வரர், கம்பட்ட விஸ்வநாதர் கோயில்கள் உள்ளிட்ட ஒன்பது கோயில்களுக்குச் சென்றோம். கடந்த பதிவில் அபிமுகேஸ்வரர் கோயில் சென்ற நாம் இப்போது பாணபுரீஸ்வரர் கோயில் செல்வோம்,  வாருங்கள்.



கும்பகோணம் நகரின் மையப்பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றோம். திருப்பணிகண்ட கொடிமரம் மிகவும் அழகாக இருந்தது. முன்மண்டபத்தைக் கடந்து உள்ளே கருவறையில் இருந்த பாணபுரீஸ்வரரைக் கண்டோம். 

வெளியில் வரும்போது அத்தலத்தின் வரலாற்றோடு தொடர்புடைய அழகான ஓவியங்களைக் கண்டோம். மகாபிரளயத்தின்போது மிதந்து வந்த அமுதக் கும்பத்தினை எம்பெருமான் உடைக்கத் திருவுளம் கொண்டபோது இவ்விடத்திலிருந்துதான் கும்பத்தின்மீது பாணத்தைத் தொடுத்ததாகவும், பாணம் தொடுத்த இடமாதலால் பாணாதுறை என்று அழைக்கப்படுவதாகவும், அதன் காரணமாகவே இறைவன் பாணபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுவதாகவும் கூறினர். 


ஓவியங்களைப் பார்த்துவிட்டு கருவறையைச் சுற்றிவந்தோம். கும்பாபிஷேகம் முடிந்து சில மணி நேரங்கள் ஆன நிலையில் கோயிலில் கூட்டம் குறைவாகவே இருந்தது. 


மூலவர் கருவறை விமானத்திலும், இறைவியின் கருவறை விமானத்திலும் உள்ள கும்பங்களைக் கண்டு தரிசனம் செய்தோம். 



கும்பாபிஷேகம் கண்ட அக்கோயிலில் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். ஒரே நாளில் அடுத்தடுத்து கோயில்களைப் பார்க்கவேண்டியிருந்ததால் அங்கிருந்து அடுத்த கோயிலைப் பார்க்கக் கிளம்பினோம்.

(கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 6.00-12.30, மாலை 4.00 முதல் இரவு 8.30)

கோயிலைவிட்டு வெளியே வரும்போது எதிரில் இருந்த சித்திவிநாயகர் கோயிலைக் கண்டோம். அக்கோயிலும் அதே நாளில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் விநாயகரைத் தரிசித்துவிட்டு அடுத்த கோயிலுக்கு எங்களது பயணத்தைத் தொடர்ந்தோம்.  


----------------------------------------------------------------------------------------------
மகாமகத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் சைவக்கோயில்கள்
  • காசி விஸ்வநாதர் கோயில் (நவகன்னியர் அருள்பாலிக்கும் இடம்)
  • கும்பேஸ்வரர் கோயில் (அமிர்தகலசத்திலிருந்து குடமூக்கு தங்கிய இடம்)
  • நாகேஸ்வரர் கோயில் (வில்வம் விழுந்த இடம்)
  • சோமேஸ்வரர் கோயில் (உறி விழுந்த இடம்)
  • கோடீஸ்வரர் கோயில், கொட்டையூர் (அமிர்தத் துளிகள் விழுந்த இடம்)
  • காளஹஸ்தீஸ்வரர் கோயில் (சந்தனம் விழுந்த இடம்)
  • கௌதமேஸ்வரர் கோயில் (பூணூல் விழுந்த இடம்)
  • அமிர்தகலசநாதர் கோயில், சாக்கோட்டை (கலச நடுப்பாகம் விழுந்த இடம்)
  • பாணபுரீஸ்வரர் கோயில் (வேடுவ உருவில் சிவன், பாணம் எய்த இடம்)
  • அபிமுகேஸ்வரர் கோயில் (தேங்காய் விழுந்த இடம்)
  • கம்பட்ட விஸ்வநாதர் கோயில் (புஷ்பங்கள் விழுந்த இடம்)
  • ஏகாம்பரேஸ்வரர் கோயில் (மற்ற உதிரி பாகங்கள் விழுந்த இடம்)
----------------------------------------------------------------------------------------------
துணை நின்றவை
மகாமகப்பெருவிழா 2004 கும்பகோணம், இந்து சமய அறநிலையத்துறை,தமிழ்நாடு அரசு
----------------------------------------------------------------------------------------------
தஞ்சாவூர் மாவட்டம் விக்ரமம் என்னுமிடத்தில் நாங்கள் பார்த்த புத்தர் சிலையைக் கண்ட அனுபவத்தைக்  காண எனது முதல் வலைப்பூவிற்கு அழைக்கிறேன். 1999இல் முதல் முறை தனியாக. தற்போது நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் மற்றும் திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி ஆகியோருடன்.  
----------------------------------------------------------------------------------------------

35 comments:

  1. ஒவ்வொரு தகவலும் மிகவும் அருமை ஐயா...

    ReplyDelete
  2. பதிவுப் பயணத்தில் முதன்முதலாக துணைக்கு வந்து கருத்திட்ட தங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  3. கும்பாபிஷேக விடயம் அறிந்து மகிழ்ச்சி மேலும் கூடுதல் தகவல்கள் தந்த முனைவர் அவர்களுக்கு நன்றி
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  4. நல்லதொரு தகவல் பதிவு..

    முதன்முறையாக குடந்தை செல்வோர்க்குத் துணையாகும் குறிப்பு..

    ReplyDelete
    Replies
    1. கும்பகோணம் வருபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நிலையிலேயே பதிகிறேன். நன்றி.

      Delete
  5. படங்களும் தலம் குறித்த தகவல்களும் அருமை அய்யா!
    த ம 3

    ReplyDelete
  6. படங்களும் தகவலும் அருமை முனைவர் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தளம் வந்து கருத்திட்டமைக்கு நன்றி.

      Delete
  7. பாணபுரீஸ்வரர் படங்கள் எல்லாம் அருமை.
    செய்தி தொகுப்பும் பயனுள்ளவை, நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தொடரந்து இன்னும் பல கோயில்களுக்குச் செல்வோம். நன்றி.

      Delete
  8. படங்களும் தகவல்களும் மிக அருமை சார்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  9. நல்ல தகவல்கள்.
    தம +1

    ReplyDelete
  10. ஒரு பக்கம் பௌத்தப் பணி
    ஒரு பக்கம் இந்து ஆலயப் பணி
    தங்களால் மட்டுமே முடியும் ஐயா
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. நாம் பார்த்ததை நண்பர்களோடு பகிர்வோம் என்ற அடிப்படையில் இவ்வாறு அமைகிறது. வருகைக்கு நன்றி.

      Delete
  11. அரிதான தகவல்கள், அழகான படங்கள்ளென
    ஆத்ம திருப்தி தரும் நல்ல பதிவு ஐயா!

    நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  12. வணக்கம்
    ஐயா

    படங்களுடன் அற்புதமாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் ஆலயம் சென்று வந்ததுபோல ஒரு உணர்வு வாழ்த்துக்கள் ஐயா த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  13. அடுத்து மற்றுமொரு தீர்த்தவாரி கோயிலுக்குச் செல்வோம். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  14. தகவலுக்கு நன்றி! அய்யா....

    ReplyDelete
  15. அருமையான ஆலய தரிசனம்! நன்றி!

    ReplyDelete
  16. ஆலய தரிசனத்தில் கலந்துகொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  17. ஆலயம் பற்றிய அருமையான தகவல்கள்
    நன்றி

    ReplyDelete
  18. பாணபுரீஸ்வரர் கோயில் - திருத்தல பெருமை தெரிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அடுத்து காளஹஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் காண்போம். நன்றி.

      Delete
  19. சிறப்பான தகவல்கள் மற்றும் படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  20. வணக்கம் சகோதரரே.

    ஒவ்வொரு கோவில்களைப் பற்றிய தகவல்களும் அருமையாக இருக்கிறது. தங்கள் புண்ணியத்தில் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து பார்த்த நிறைவும், திருப்தியும் கிடைக்கிறது. படங்களையும் ஓவியங்களையும் பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி.

    என் தளம் வந்து கருத்திட்டு வாழ்த்துரைத்த தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. தீர்த்தவாரி காணும் பெரும்பாலான கோயில்களுக்குச் சென்றுவருகிறேன். நம் நண்பர்களுக்கும் அந்த அனுபவம் கிடைக்கவேண்டும் என்ற நன்னோக்கில் இப்பதிவுகள். தங்களின் வருகையும் வாழ்த்தும் மனதிற்கு நிறைவைத் தருகின்றன. நன்றி. இவ்வாரம் காளஹஸ்தீஸ்வரர் கோயில். நேரமிருக்கும்போது வாருங்கள்.

      Delete