முகப்பு

22 October 2015

சாக்கோட்டை அமிர்தகலசநாதர் கோயில் கும்பாபிஷேகம்


சாக்கோட்டை அமிர்தகலசநாதர் கோயிலின் கும்பாபிஷேகம் காண்பதற்காக இன்று (22.10.2015) சாக்கோட்டை சென்றேன். திரும்பும்போது இதே நாளில் கும்பாபிஷேகம் ஆன ஏகாம்பரேஸ்வரர் கோயில் (பழைய பேருந்து நிலையம் அருகில்), சித்திவிநாயகர் கோயில் (மணிக்கூண்டு அருகில்), ஆஞ்சநேயர்கோயில் (பெரிய கடைத்தெரு), வரசித்திவிநாயகர் கோயில் (கும்பகோணம் அரசு மருத்துவமனை அருகில்) ஆகிய கோயில்களுக்குச் சென்றேன். நான் சென்ற கோயில்களுக்கு உங்களையும் அழைக்கிறேன்.

அமிர்தகலசநாதர் கோயிலும், ஏகாம்பரேஸ்வரர் கோயிலும் மகாமகத் தீர்த்தவாரி கோயில்களாகும்.

சாக்கோட்டை அமிர்தகலசநாதர் கோயில் கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் சாலையில் கும்பகோணம் நகரிலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சுந்தரரால் பாடல் பெற்ற இத்தலத்தில் உள்ள இறைவன் அமிர்தகலசநாதர், இறைவி அமிர்தவல்லிநாயகி. ஊழிக்காலத்தில் உயிர்களை உள்ளடக்கிய அமிர்தகலசம் இத்திருத்தலத்தில் தங்கியதால் திருக்கலயநல்லூர் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலை கோட்டைச் சிவன் கோயிலை என்றும் வழங்குகின்றனர்.  சாக்கியர்கள் எனப்படும் பௌத்தர்கள் வாழ்ந்ததால் சாக்கியர் கோட்டை என்று அழைக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். கோட்டை சிவன் கோயில் என்றே உள்ளூரில் இக்கோயிலை அழைக்கின்றனர். கோயிலுக்குச் செல்லும் வழியில் அழகாகக் கோலமிட்டிருந்தனர். கும்பாபிஷேக நிகழ்வுகளை முழுமையாகப் பார்த்துவிட்டு, கும்பகோணம் திரும்பினேன்.













  
  
அடுத்து கும்பகோணத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு கண்டேன். இது பற்றி தனியாக ஒரு பதிவில் காண்போம். 
ஏகாம்பரேஸ்வரர் கோயில்
அங்கிருந்து பிற கோயில்களைப் பார்த்துவிட்டு மன நிறைவோடு தஞ்சாவூர் திரும்பினேன்.   
பெரிய கடைத்தெரு ஆஞ்சநேயர் கோயில்
சித்திவிநாயகர் கோயில் (மணிக்கூண்டு அருகில்)
  -------------------------------------------------------
------------------------------------------------------  
துணை நின்றவை
மகாமகப் பெருவிழா 2004, கும்பகோணம், இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடு அரசு, 2004
திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடு அரசு, 2014

18 comments:

  1. அன்புள்ள அய்யா,

    சாக்கோட்டை அமிர்தகலசநாதர் கோயில் கும்பாபிஷேகம் படங்களுடன் பார்த்தது கண்டு மகிழ்ச்சி.

    நன்றி.
    த.ம.2

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா!

    பதிவும் படங்களும் பக்திப் பரவசப்படுத்துகின்றன..

    இனிய நன்நாளின் இனிதான பதிவு!
    கோயில் தரிசம் கோடி புண்ணியம்!

    விஜயதசமி நன்நாள் வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  3. வணக்கம் முனைவரே புகைப்படங்கள் அனைத்தும் நன்று வாழ்த்துகள் தமிழ் மணம் 4

    ReplyDelete
  4. அழகான படங்களுடன் - ஆலய தரிசனம்..

    மகிழ்ச்சி.. மகிழ்ச்சி..

    ReplyDelete
  5. அழகான படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரரே.

    சாக்கோட்டை அமிர்தகலசநாதர் கோவிலைப் பற்றிய விபரங்களும், கும்பாபிஷேகத்தின் சிறப்பு படங்களுமாய், தங்கள் பதிவு படிக்க பக்திப் பரவசமாய் இருந்தது. தங்கள் பதிவின் துணையால் நாங்களும் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட நிறைவு ஏற்பட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி .

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. கும்பாபிஷேகத்தை நேரில் கான்பது போல் இருந்தது.
    நன்றி ஐயா

    ReplyDelete
  8. "சாக்கோட்டை அமிர்தகலசநாதர் கோயில்" கும்பாபிஷேகம் நிகழ்வுகள்
    மனதிற்கு நிறைவு. காணாத கண்களுக்கு காட்சிப் படுத்தி பதிவாக தந்த முனைவர் அய்யாவுக்கு நன்றி!
    மெய் மறந்தேன்! தேன்!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  9. வணக்கம்
    ஐயா

    நிகழ்வை மிக அருமையாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள். த.ம7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. பதிவும் படங்களும் மிக அருமை. கும்பாபிஷேகத்தை நேரில் பார்த்த மாதிரி இருந்தது.

    ReplyDelete
  11. நேரில் கலந்து கொண்ட உணர்வு. நன்றி.
    தம +1

    ReplyDelete
  12. தங்களால் நாங்களும் கலந்து கொண்ட ஓர் உணர்வு
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
  13. கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.. எங்களுக்கும் புண்ணியம் தேடித் தந்தீர்கள்.

    ReplyDelete
  14. எங்களையும் உடன் அழைத்துச்சென்று தரிசித்த அனுபவம் கிடைத்தது நன்றிங்க ஐயா.

    ReplyDelete
  15. அருமை ஐயா...நேரில் கண்டது போன்று உள்ளது. நேரில் செல்ல முடியவில்லை என்றாலும் தங்கள் பதிவுகளின் மூலம் அறிய முடிகின்றது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete