முகப்பு

06 February 2016

மகாமகம் 2004 : மகாமகம் சிறப்பு மலர் 2004

இன்னும் மகாமக நிகழ்வுகள் ஆரம்பிக்க ஏழே நாள்கள் இருக்கும் நிலையிலும் (13 பிப்ரவரி 2016), தொடர்ந்து பல கோயில்களை அண்மையில் பார்த்துவந்த நிலையில் மாற்றத்திற்காக கடந்த மகாமகத்தின்போது வெளிவந்த சிறப்பு மலரைப் பார்ப்போம்.

2004 மகாமகத்தின்போது தமிழக அரசு வெளியிட்ட மகாமகம் சிறப்பு மலர் 2004, தலைப்புகளில் அருளாளர்களின் ஆசியுரைகள் மற்றும் 40க்கும் மேற்பட்ட கட்டுரைகளைக் கொண்டிருந்தது. அக்கட்டுரைகள் மகாமகத்தின் சிறப்பு, பல நிலைகளில் கும்பகோணம், கும்பகோணத்திலும் பிற இடங்களிலும் காணப்படும் குறிப்பிடத்தக்க கோயில்கள், புராணங்கள், இலக்கியங்கள், கலைகள் என்ற பல நிலைகளில் அமைந்திருந்தன.



மலர் பதிப்புக்குழுவில் நானும் ஒரு உறுப்பினராக இருந்து பணியாற்றிய அனுபவம் மறக்கமுடியாதது. முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், முனைவர் இராசு.பவுன்துரை, திரு த.ம.சரபோஜி (மணி.மாறன்), திரு எஸ்.சுதர்ஷன், திரு ஆர்.சுப்ரமணியன், திரு என்.விசுவநாதன் உள்ளிட்ட பல உறுப்பினர்களுடன் மலர் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டபோது பலதுறைப்பட்ட கட்டுரைகளைக் காணமுடிந்தது. அரிய புகைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பும், அதுவரை அறிந்திராத  நமது கலை, பண்பாடு பற்றிய அரிய செய்திகளையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு அப்போது கிடைத்தது. பார்க்காதனவற்றைப் பார்க்கவேண்டும் என்ற அவாவும் என்னுள் அப்போது எழுந்தது.

1980ளின் ஆரம்பத்தில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பதிப்புத்துறையில் பணியாற்றியபோது ஒவ்வொரு திங்களும் வெளிவரும் தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலருக்கான செய்திகளைத் தொகுத்து, தட்டச்சு செய்த பணியனுபவம் இந்த மலர் தயாரிப்பின்போது எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது. 
இம்மலரில் சப்தஸ்தானத்தலங்கள் என்னும் கட்டுரையினை எழுதும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. இக்கட்டுரைக்காக சப்தஸ்தானத் தலங்களான திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று செய்திகளைத் திரட்ட வேண்டியிருந்தது. 

2004 மகாமகத்தில் எழுத்துத்துறையில் எனக்கு ஊக்கம் தந்த வகையில் அமைந்த இந்தப் பொறுப்பும், பணியாற்றிய நினைவுகளும் என்றென்றும் என் மனதில் நிற்கும். பிற மகாமகம் மலர்களைப் பற்றி தொடர்ந்து விவாதிப்போம்.


பிற மகாமக மலர்கள் : 
1980 மகாமகம் மலர்

15 comments:

  1. விரிவான விளக்கம் தந்த முனைவருக்கு நன்றியும், வாழ்த்துகளும் தொடரட்டும் தங்களது தெய்வீகப்பணி
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. தொடரட்டும் தங்களது பணி..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  3. பழய நினைவுகள்,, இன்று பல கோயில்கள் பற்றிய அறிமுகம் எமக்கு (வலையில்), தொடருங்கள் ஐயா

    ReplyDelete
  4. தொடர்ந்து பல செய்திகளை உங்கள் பதிவுகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி ஐயா.

    ReplyDelete
  5. கோவில்களை பற்றி நிறைய செய்திகளை தெரிந்து கொள்ள முடிகிறது சார்.

    ReplyDelete
  6. தங்களின் பணி தொடரட்டும் ஐயா

    ReplyDelete
  7. பணி தொடரட்டும் ஐயா. தொடர்கிறோம்

    ReplyDelete
  8. வணக்கம்
    சிறப்பான தகவல் தந்தமைக்கு நன்றி ஐயா படித்து மகிழ்ந்தேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. உங்கள் பணி அனுபவங்களை சுவாரஸ்யமாகத் தந்தமைக்கு நன்றி.
    தம +1

    ReplyDelete
  10. தங்கள் பணியின் மூலம் பல தகவல்கள் அறிய முடிகின்றது ஐயா.

    //இம்மலரில் சப்தஸ்தானத்தலங்கள் என்னும் கட்டுரையினை எழுதும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. இக்கட்டுரைக்காக சப்தஸ்தானத் தலங்களான திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று செய்திகளைத் திரட்ட வேண்டியிருந்தது. // நல்ல அனுபவம் ஐயா. தங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  11. நிறைய தகவல்கள் அறிவது மகிழ்ச்சியே ஐயா.
    மிக்க நன்றி
    (வேதாவின் வலை)

    ReplyDelete
  12. தொடர்ந்து மகாமகம் குறித்து பல தகவல்கள் பகிர்ந்து வருவது மகிழ்வைத் தருகிறது. பல செய்திகளையும் அறிய முடிகிறது.
    த ம 4

    ReplyDelete
  13. தொடர்ந்து எழுதுங்கள். மகாமகம் சம்பந்த பதிவுகளைத் தொடர்ந்து படிக்க விரும்புகிறேன்

    ReplyDelete
  14. திரு எஸ்.வி.வேணுகோபாலன் (sv.venu@gmail.com மின்னஞ்சல் மூலமாக)
    அன்பு வாழ்த்துக்கள்...நன்றி மறவாத நற்பண்பும்
    என்றென்றும் செருக்கடையா உள்ளமும் கொண்டாடத் தக்க தங்களது உயர்வுக்குக் காரணம் அய்யா.எஸ் வி வி

    ReplyDelete
  15. திரு அருளரசன் (arulghsr@gmail.com மின்னஞ்சல் மூலமாக)
    மகாமக கட்டுரைகளை படிக்க சுவையாக உள்ளது. தொடரட்டும் தங்களது பணி..வாழ்க நலம்..

    ReplyDelete