முகப்பு

04 February 2016

மகாமகம் 2004 : தீர்த்தவாரிக் கோயில்கள் உலா

1968, 1980, 1992, 2004  ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மகாமகங்களைப் பார்த்துள்ளேன். கடந்த மகாமகத்தின்போது தீர்த்தவாரி காணும் அனைத்துக் கோயில்களையும் குடும்பத்துடன் சென்று கண்ட நிலையிலும், மகாமக நாளில் இரு முறை மகாமகக்குளத்திற்குச் சென்றுவந்த நிலையிலும் 2004 மகாமகம் என்னால் மறக்கமுடியாததாகும். 

தீர்த்தவாரி கோயில்கள் அனைத்திற்கும் செல்லல் (28,29 பிப்ரவரி 2004)
6.3.2004இல் நடைபெற்ற கடந்த மகாமகத்தைக் காண்பதற்காக 28, 29 பிப்ரவரி 2004 இரு நாள்கள் கும்பகோணம் சென்றோம். விழாத் துவக்க நாள்களான அந்நாள்களில் கும்பகோணத்திலுள்ள தீர்த்தவாரி காணுகின்ற சைவ மற்றும் வைணவக் கோயில்கள் அனைத்திற்கும் சென்றோம். சென்றுவந்த நினைவாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள பயணியர் கையேட்டினை வாங்கினோம். அதில் அப்போது நான் எழுதியிருந்தது, இதோ. 



28, 29.3.2004இல் நாங்கள் சென்ற கோயில்கள்

மேற்கண்ட தீர்த்தவாரி கோயில்களுடன் வீரபத்திரர் கோயில், வீர சைவ மடம், சரநாராயணப்பெருமாள் கோயில், அகோபில மடம், நவநீதகிருஷ்ணன் கோயில், திருமழிசைபிரான் சன்னதி ஆகிய கோயில்களுக்கும் சென்றோம். இவ்வாறாக அழைத்துச்செல்லும்போது குடும்பத்தினருடன் இவ்வாறான ஒரு வாய்ப்பு வாழ்நாளில் இன்னுமொரு முறை அமையுமோ என்று கூறிக்கொண்டே சென்றேன். ஒத்துழைப்பு கொடுத்து குடும்பத்தினரும் உடன் வந்ததை மறக்கமுடியாது.

மகாமகக்குளத்திற்கு இரு முறை செல்லல் (6 மார்ச் 2004)
மகாமக நாளன்று குடும்பத்தினர் அனைவரும் மகாமகக்குளத்திற்கு புனித நீராட காலை 5.50க்குக் கிளம்பினோம். எங்கு பார்த்தாலும் கூட்டம். நன்றாக நெறிப்படுத்தப்பட்டு கூட்டம் செல்லும் வகையில் அமைப்புகள் காணப்பட்டன. கும்பேஸ்வரர் கோயில் மொட்டை கோபுரம் அருகிலிருந்து கிளம்பி பொற்றாமரைக்குளம், சோமேஸ்வரர் கோயில், உச்சிப்பிள்ளையார் கோயில் வழியாக மகாமகக்குளத்திற்குச் சென்றோம். குளக்கரையில் எங்கும் மக்கள் மயம். மகாமகத்தில் நீராடிவிட்டு, பொற்றாமரைக்குளத்தில் புனித நீராடிவிட்டு, அங்கிருந்து காவிரியாற்றுக்குச் சென்றோம். அங்கிருந்து 9.30 மணியளவில் திரும்பினோம்.

வீட்டில் வந்து அமர்ந்து அனைவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது இவ்வாறான கூட்டத்தையும், கும்பகோணத்தின் அழகையும் பார்க்க இன்னும் 12 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமே, மறுபடியும் பார்க்கலாமா என்ற உணர்வு வரவே நான் மட்டும் மறுபடியும் மகாமகக்குளத்தைப் பார்க்கக் கிளம்பினேன். நெரிசல் அதிகமாக இருந்தாலும் இயல்பாகக் கூட்டம் நகர்ந்து சென்றது. ஒரே நாளில் அவ்வளவு தூரம், அவ்வளவு கூட்டத்தில் சென்று வந்ததை நினைக்கும்போது இன்னும் ஆச்சர்யமாக இருக்கிறது.  

மகாமகத்திற்குச் சென்ற நினைவாக இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை வெளியிட்ட கும்பகோணம் பிரிவுத்திருக்கோயில்களின் பயணியர் கையேட்டினை வாங்கினோம். அக்கையேட்டில் தேவாரப்பாடல் பெற்ற வடகரைத்தலங்கள் (73), மங்களாசாசனம் பெற்ற தலங்கள் (22), சிறப்பான சிவத் தலங்கள் (22), வைணவத்தலங்கள் (8), முருகன் தலங்கள் (2), சக்தி தலங்கள் (7), நவக்கிரகத்தலங்கள் (6) உள்ளிட்ட பல தலங்களைப் பற்றிய விவரங்கனை அந்நூலில் காணமுடிந்தது. 





17 comments:

  1. கடந்த மகாமகத் திருவிழாவினை அழகாக அருமையாக நினைவு கூர்ந்து வழங்கியிருக்கின்றீர்கள்..

    சென்ற மகாமகத்தின் நினைவுகள் என்றும் பசுமையானவை..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  2. உங்கள் மஹாமக கோயில்களை என் வலைப்பூவில் வெளியிட அனுமதி தாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் தாராளமாக வெளியிடலாம். எனது வலைப்பூவிலிருந்து எடுக்கப்பட்டது என்ற ஒப்புகை உரிய பதிவுகளில் கொடுக்கப்படின் இன்னும் மகிழ்ச்சியே. தங்களின் ஆர்வத்திற்கு நன்றி.

      Delete
  3. தம. க

    கடந்த மகாமக நினைவலைகள்....அருமை ஐயா.

    ReplyDelete
  4. நினைவுகள் அருமை,,

    ReplyDelete
  5. நல்லதொரு பதிர்வு தந்த முனைவருக்கு நன்றியும் வாழ்த்துகளும் புகைப்படங்கள் நன்று
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  6. கடந்த 2004 மகாமகத்தில் நானும் கலந்து கொண்டேன். நண்பர் ஒருவர் வீட்டில் தங்கி விடியற்காலையில் குளத்தில் குளித்துவிட்டு வந்துவிட்டோம். இத்தனை விவரங்கள் தெரியவில்லை. இந்த முறையும் அழைக்கிறார்கள் கூட்டத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது.
    த ம 3

    ReplyDelete
  7. //1968, 1980, 1992, 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மகாமகங்களைப் பார்த்துள்ளேன்.//

    ஆஹா இதுவரை நான்கு மஹாமகங்களைப் பார்த்து, இம்மாதம் ஐந்தாம் மஹாமகத்தையும் பார்க்க உள்ள தங்களை நினைக்க மிகவும் பெருமையாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது.

    சென்ற மஹாமகம் 2004 பற்றிய சிறப்புச்செய்திகள் படிக்க சுவாரஸ்யமாக உள்ளன.

    பாராட்டுகள் + வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. அருமையான விளக்கங்களுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  9. ஆவணங்களோடு கூடிய
    மலரும் நினைவுகள்
    தங்களால் மட்டுமே முடியும் ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
  10. தொடர்ந்து நான்கு மகாமகங்களாக கும்பகோணம் சென்றமைக்கு எனது பாராட்டுக்கள். விழாவிற்கு வரும் கும்பலையும், கூட்ட நெரிசலையும் நினைத்து, நான் இதுவரை கும்பகோணம் மகாமகம் சென்றதில்லை. வெறுமனே கோயில், கோபுரம், என்று படம் எடுக்காமல், விஷுவல் டேஸ்ட்டாக வீதிகளில் தென்படும் இயல்பான காட்சிகளையும், மக்கள் மன நிலைகளையும் படம் பிடித்து பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஐந்தாவது முறையாக நீங்கள் கலந்து கொள்ள இருக்கும் கும்பகோணம் மகாமகம் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

    உங்களது பதிவுகள் என்னை இந்த விழாவிற்கு வரும்படியான ஆர்வத்தைத் தூண்டுகின்றன. பார்ப்போம். முனைவர் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நான் இங்கு விஷுவல் டேஸ்ட் என்று குறிப்பிட்டது, மகாமகம் அன்று நீங்கள் கும்பகோணத்தில் எடுக்கப் போகும் படங்கள் என்று எடுத்துக் கொள்ளவும்.

      Delete
  11. 2004-ம் ஆண்டு என் பேரக்குழந்தைகளுடன் மகாமகம் நடந்து முடிந்த நிலையில் குளத்ட்க்ஹுக்குக் கூட்டிச் சென்றேன் குளத்தில் இருக்கும் கிணறுகளை என் பேரக் குழந்தைகள் கண்டு மகிழ்ந்ததை நினைவு படுத்துகிறது இப்பதிவு. நன்றி.

    ReplyDelete
  12. அருமையான நினைவலைகள்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  13. வணக்கம்
    ஐயா
    அறியாத தகவலை தொகுத்து வழங்கியமைக்கு நன்றி ஐயா படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  14. மாகமத் தகவல்கள் அறிவது மகிழ்ச்சியே ஐயா.
    மிக்க நன்றி
    அத்துடன் என்அப்பா மகத்தில் பிறந்தவர்
    அவர் நினைவும் கூடவே....
    (வேதாவின் வலை)

    ReplyDelete
  15. அன்பின் அய்யா,
    நான்கு மகாமகம் நிகழ்வுகளை கண்டு அய்ந்தாம் மகாமகம் காண இருக்கின்ற சாதனையாளரை வணங்குகிறேன்.

    ReplyDelete