முகப்பு

31 December 2016

விக்கிபீடியாவில் 300+ பதிவுகள் : இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம்

புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் 18 டிசம்பர் 2016இல் நடத்திய இணையத் தமிழ்ப் பயிற்சி முகாமில் விக்கிபீடியாவில் என் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பினைப் பெற்றேன். அந்த வகுப்பில் நான் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டவற்றைப் பகிர்வதில் மகிழ்கிறேன். அவ்வாய்ப்பினைத் தந்த பொறுப்பாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 
பயிற்சி முகாமிற்கு வந்தவர்கள் எளிதில் புரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கில் விழாவிற்கு வந்திருந்த திரு தங்கம் மூர்த்தி அவர்களைப் பற்றிய விவரங்கள் நேரில் பெறப்பட்டு, அங்கேயே புதிய பதிவு அவர் பெயரில் தொடங்கப்பட்டது. கூடுதல் விவரங்கள் பெறப்படும்போது அவரைப் பற்றிய கட்டுரை மேம்படுத்தப்படும். 


தற்போது கட்டுரைகளைத் தொடங்கும் முறை சற்றொப்ப வலைப்பூவில் உள்ளதைப்போலவே இருப்பதை அப்போதுதான் கண்டேன். அதே சமயத்தில் பழைய முறையிலும் பதியலாம். பயிற்சி வகுப்பில் நண்பர்களோடு பகிர்ந்துகொண்ட அனுபவங்களில் சில : 
  • மின்னஞ்சல், வலைப்பூ போன்றவற்றிற்கு பதிவது போலவே பயனராக விக்கிபீடியாவில் பதிவு செய்துகொள்ளவேண்டும். அவ்வாறு பதிவு செய்யாமலும் பலர் எழுதுகிறார்கள். பதிவு செய்து பயனர் என்ற நிலையில் எழுதும்போது அனைத்தும் நம் பெயரில் பதிவாக வாய்ப்புண்டு. 
  • முடிந்தவரை தெரிந்த தகவல்களை அதன் நம்பகத்தன்மையை இணைப்பாகத் தந்து பதிவிடுதல் நலம். 
  • ஆரம்ப நிலையில் முடிந்தவரை விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளை மேம்படுத்தும் முயற்சியை மேற்கொண்டால், புதிய கட்டுரைகள் எழுத உதவியாக இருக்கும்.
  • நாளிதழ், ஆய்விதழ், நூல் என்ற நிலையில் பெறப்படும் புதிய செய்திகளை அந்தந்த தொடர்புடைய கட்டுரைகளோடு இணைத்து கட்டுரையினை மேம்படுத்தலாம். 
  • எடுக்கும் புகைப்படங்களை பொதுவகத்தில் இணைத்தால் பிற மொழி விக்கிபீடியாக்களில் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புண்டு.
  • ஏதேனும் ஐயமிருப்பின் பேச்சுப்பக்கத்தில் எழுதினால் பிற விக்கிபீடியர்கள் நமக்கு உதவி செய்வர், தெளிவுபடுத்துவர். 
  • எப்படி எழுதுவது என்பது தொடர்பானவை பற்றி விக்கிபீடியாவில் முதற்பக்கத்தில் கூறப்பட்டுள்ளன.
  • அனைத்திற்கும் மேலாக எழுத்தில் பொறுமையும், நிதானமும் இருப்பது நலம்.
  • மாற்றுக்கருத்துகளையோ, மாறுபட்ட கருத்துகளையோ பரிமாறிக்கொள்ளும்போது கவனம் தேவை.
விக்கிபீடியா தொடர்பான கடந்த பகிர்வுக்குப் பின் சுமார் 70 பதிவுகளை எழுதி தற்போது 320 பதிவுகளை நிறைவு செய்துள்ளேன். சூலை 2016இல் விக்கிபீடியாவில் என் கணக்கு தற்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் நான் உருவாக்கும் கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்பட்டதாகத் தானாகக் குறிக்கப்படும் என்பதை அறிந்தேன். அதனைத் தொடர்ந்து எழுதும்போது இன்னும் கவனமாக எழுதுகிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அண்மைய பதிவுகளில் ஏற்பட்ட சில அனுபவங்கள் :
  • நேரில் சந்திக்கும் நபர்கள், சென்ற இடங்கள் என்ற நிலையில் களப்பணியில் திரட்டப்படும் செய்திகளின் அடிப்படையில் பதிவுகளைத் தொடங்கவும், மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
  • மகாமகம் கட்டுரையில் 15ஆம் நூற்றாண்டு மகாமகம் முதல் கிடைத்த விவரங்கள் பதியப்பட்டன. துணைத்தலைப்பான 2016 மகாமகம் என்ற தலைப்பிலான, என்னால் ஆரம்பிக்கப்பட்ட கட்டுரை, முதன்மைக் கட்டுரையாக அமையும் அளவு விரிவுபடுத்தப்பட்டது. தேவையான புகைப்படங்கள் இணைக்கப்பட்டன. 
  • கடந்த மகாமகங்களின்போது வெளிவந்த குடந்தை மகாமக விழா மலர் 1980, மகாமகம் மலர் 1992, மகாமகம் சிறப்பு மலர் 2004 ஆகிய மலர்கள் தேடிப்பெறப்பட்டு விவரங்கள் பதியப்பட்டன.
  • 2016 மகாமகத்தின்போது வெளியிடப்பட்ட மகாமகம் 2016 சிறப்பு மலர் மற்றும் கும்பகோணம் மகாமகம் 2016 சிறப்பு மலர் ஆகிய மலர்கள் பெறப்பட்டு புதிய பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டன.
  • கும்பகோணத்திலுள்ள, விக்கிபீடியாவில் விடுபட்டுள்ள, பல கோயில்களைப் பற்றி புதிய பதிவுகள் தொடங்கப்பட்டன. 
  • இளைய மகாமகம் 2015 என்ற தலைப்பில் தொடங்கியிருந்த கட்டுரையில், ஒவ்வொரு மகாமகத்திற்கும் முந்தைய ஆண்டு இளைய மகாமகம் இல்லை என்றும், 11 ஆண்டுக்கொரு முறை வருவதே இளைய மகாமகம் என்ற விவரம் தாமதமாக அறியப்பட்டு,உரிய குறிப்பு கட்டுரையில் இணைக்கப்பட்டது.
  • கும்பகோணம் கோயில்கள் வார்ப்புரு அமைப்பில் தஞ்சாவூர் கோயில்கள் என்ற புதிய வார்ப்புரு தொடங்கப்பட்டு, முக்கியத்துவம் பெற்ற அனைத்துக் கோயில்களையும் விடுபாடின்றி சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 
  • நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்கள்,  தமிழவேள் உமாமகேஸ்வரனார் பற்றிய கட்டுரையை மேம்படுத்தும்படி கூறியிருந்தார். மேம்படுத்தும்போது வே.உமாமகேசுவரன் மற்றும் உமாமகேஸ்வரனார் என்ற தலைப்பில் இரு கட்டுரைகளை காண முடிந்தது. தற்போது இரு கட்டுரைகளும் இணைக்கப் பட்டுவிட்டது.
  • நவம்பர் 2026இல் கோயில் உலா சென்றதன் அடிப்படையில் புகைப்படங்களை விக்கிபீடியாவில் இணைத்தபோது ஒரே கோயில் பற்றிய பதிவு திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில் மற்றும் பாபநாசம் பாலைவனேஸ்வரர் கோயில் என்ற இரு தலைப்புகளில் இருப்பதைக் காண முடிந்தது. தற்போது இரு பதிவுகளும் இணைக்கப்படுகிறது. 
  • இவ்வாறே திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் கட்டுரையும் திருபுவனம் கம்பகரேசுவரர் கட்டுரையும் ஒன்றாக இணைக்கப்பட்டது.
  • இவ்வாறே ஆங்கில விக்கிபீடியாவில் ஒரே கோயில் பற்றிய பதிவு  Tirunallam Umamaheswarar Temple மற்றும் Umamaheswarar Temple, Konerirajapuram என்ற இரு தலைப்புகளில் இருப்பதைக் காண முடிந்தது. தற்போது இரு பதிவுகளையும் ஒன்றாக இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. (ஆங்கில விக்கிபீடியாவில் முதன்முதலாக கட்டுரையை இணைக்கும் முயற்சியை இப்பதிவு மூலம்தான் ஆரம்பித்துள்ளேன்), அத்துடன் இரு விக்கிபீடியாக்களிலும் இக்கோயில்களில் காணப்படுகின்ற சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் என்னால் இணைக்கப்பட்டன. 

விக்கிபீடியா தொடர்பான எனது பதிவுகள்: 
செப்டம்பர் 2014 : விக்கிபீடியாவில் 100ஆவது பதிவு 
சூன் 2015 : விக்கிபீடியா 200ஆவது பதிவு, 5000ஆவது தொகுப்பு 
ஆகஸ்டு 2015 : விக்கிபீடியாவில் பயனராவோம் 
ஆகஸ்டு 2015 : விக்கிபீடியாவில் கட்டுரை எழுதுவோம் 
அக்டோபர் 2015 : ஆங்கில விக்கிபீடியாவில் 100, தமிழில் 250 கட்டுரைகள் நிறைவு 
அக்டோபர் 2015 : முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் விருது  
நவம்பர் 2015 :  விக்கிபீடியாவில் முதற்பக்கம் பங்களிப்பாளர் அறிமுகம் 
நவம்பர் 2015 : Writer of 250 articles in Tamil Wikipedia: The New Indian Express
முகாமில் கலந்துகொண்டோர்  


இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி நறுக்கு 

புகைப்படங்கள் நன்றி : 
அன்பிற்குரிய நண்பர்கள் கவிஞர் முத்துநிலவன், தமிழ் இளங்கோ, கில்லர்ஜி, கீதா, புதுகை செல்வா

13 comments:

  1. அருமையான தகவல்கள். விரைவில் விக்கிப்பீடியா கணக்கைத் துவங்கி எழுத முயற்சிக்கிறேன். நன்றி

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா
    பயன் பெறும் தகவல்...பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  3. தான் அறிந்ததை அனைவருக்கும் கற்றுக்கொடுக்க முன்வருவது பாராட்டுக்குரிய செயல்.

    ReplyDelete
  4. Congrats Sir! Thanks for sharing very useful information

    ReplyDelete
  5. அருமை . புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் ஐயா... தொடரட்டும் விக்கிபீடியா பணி...
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. சாதனைகள் தொடரட்டும் !நல்ல வழிகாட்டுதல் அய்யா :)

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. தங்கள் பணி சிறக்கட்டும்...
    அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. வணக்கம் சகோதரரே

    அருமையான் பதிவு. விக்கிப்பீடியாவில் எழுதுவது குறித்து சிறந்த பயனுள்ள ஆலோசனைகளை தொகுத்து வழங்கியுள்ளீர்கள். விக்கிப்மீடியாவில் தங்களின் மகத்தான பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்

    தங்களுக்கு, இனிய ஆங்கிலப் புத்தாண்டின் நல்வாழ்த்துக்கள.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  11. சிறப்பான தகவல்கள்.....

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  13. சிறப்பான தகவல்கள்!

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete