18 June 2015

விக்கிபீடியா: 200ஆவது பதிவு, 5000ஆவது தொகுப்பு

தமிழ் விக்கிபீடியாவில் அண்மையில் 200ஆவது பதிவினை (article) நிறைவு செய்துள்ளேன். தொகுப்பு (edit) என்ற நிலையில் 5000ஐ நெருங்குகிறேன். இம் முயற்சிக்குத் துணை நிற்கும் விக்கிபீடியா நண்பர்களுக்கும், வலைப்பூ நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. பௌத்த ஆய்வாளராக விக்கியில் உள்ள நான் பயனர் என்ற நிலையில் பதிந்து எழுதிவருகிறேன். இவ்வினிய வேளையில் தமிழ் விக்கிபீடியாவில் எனது அனுபவங்களைப் பகிர்வதை மகிழ்கிறேன். உங்களையும் விக்கியில் எழுத அழைக்கிறேன்.

விக்கியின் விதிமுறைகளை முற்றிலும் அறியாத காலகட்டத்தில் சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் வழக்கமாக எழுதும் கட்டுரை போல விக்கிபீடியாவில் ஒரு பதிவு எழுதினேன். உரிய முறையில் அது எழுதப்படாத நிலையில் சில நாள்களில் அக்கட்டுரை நீக்கப்பட்டதை அறிந்தேன். விதிமுறைகளை ஓரளவு அறிந்து விக்கிபீடியாவில் எழுத ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே எழுத ஆரம்பித்தேன். 6.7.2014 அன்று விக்கிபீடியாவில் எழுதத்தொடங்கி 100ஆவது பதிவை  நிறைவு செய்தேன். ஒவ்வொரு பதிவுக்குப் பின்னும் ஒரு ஊக்கமும் ஆக்கமும் உள்ளதை எழுதும்போது உணரமுடிகிறது. புதிதாக எழுதுவதோடு மட்டுமன்றி பிறருடைய பதிவுகளையும் என்னால் முடிந்த அளவு மேம்படுத்தி வருகிறேன்.

முதல் பதிவு
தமிழ்ப்பண்டிதர் மணி.மாறனைப் பற்றியது. ஆரம்பித்தபோது எதை, எப்படி, எங்கிருந்து எழுதுவது என்ற நிலையில் பல கேள்விகள் எழுந்தன. அதிகம் சிரமப்பட்டு தொடங்கிவிட்டேன். அக்கட்டுரை தற்போதைய வடிவம் பெற பல மாதங்களானது.



அன்றே பதிவு
தஞ்சாவூரில் வெள்ளை பிள்ளையார் கோயில் குடமுழுக்கு (15.9.2014) நடந்தபோது கோயிலுக்குச் சென்று புகைப்படங்களை எடுத்து அன்றே பதிந்தேன். அன்றைய நாள் நிகழ்வினை அன்றே பதிய ஆரம்பித்தது இப்பதிவிலிருந்துதான்.

விரும்பிய பதிவுகள்
நான் ஆரம்பித்த பதிவுகள் அனைத்தும் மனதிற்குப் பிடித்தபோதிலும், கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல பதிவுகள் என்னை அதிகம் கவர்ந்துவிட்டன.
முதன்முதலில் கவனிப்பாரட்டுக் கிடந்து பின்னர் நல்ல நிலையினைப் பெற்ற, பட்டீஸ்வரம் அருகேயுள்ள, இராஜேந்திரசோழன் எடுத்த பள்ளிப்படையான பஞ்சவன்மாதேவீச்சரம்.
பிறந்த மண்ணான கும்போணம் செல்லும்போதெல்லாம் பெரும்பாலும் நான் செல்லும் பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோயில்.
ஒரே கோயில் வளாகத்தில் அமைந்துள்ள கோயில்களாக திருவலஞ்சுழியில் உள்ள கோயிலுக்குச் சென்று பதியப்பட்டவையே திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில் மற்றும்  திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோயில்.

இல்லாதவை பற்றிய பதிவு
தஞ்சாவூர் பீரங்கி பற்றி விக்கியில் உள்ளதா என்று என் மனைவி ஐயமெழுப்ப உருவானதே தஞ்சாவூர் பீரங்கி. பின்னர் அந்த நோக்கில் சிந்தித்து பல பதிவுகள் எழுதிவருகிறேன். இவ்வாறான ஆரம்பம் எந்த தலைப்பு இல்லை எனத் தெரிவு செய்து அதைப் பற்றி தேடி எழுத ஓர் ஆவலை உண்டாக்கிவிட்டது.

மறக்கமுடியாத பதிவு
தேனுகா அவர்களைப் பற்றிய பதிவினை ஆரம்பித்து, புகைப்படத்தைச் சேர்ப்பதற்காக அவருடன் தொலைபேசியில் பேசினேன். மறு நாள் அவர் மின்னஞ்சலில் அனுப்புவதாகக் கூறியிருந்தார். அவர் புகைப்படம் அனுப்புவதாகச் சொன்ன நாளில் கும்பகோணத்திலிருந்து வந்த செய்தி அவர் இறந்துவிட்டார் என்பதே. அவரைப் பற்றியப் பதிவையும் இட்டுவிட்டு அவருடைய இறப்பு பற்றிய செய்தியையும் பதியவேண்டிய நிலை வந்தது குறித்து வருந்தி அவருடைய பக்கம் சென்றேன். எனக்கு முன்னரே பிறிதொரு விக்கிபீடியா நண்பர் தேனுகாவின் இறப்புச் செய்தியைப் பதிந்திருந்தார். விக்கி நண்பர்களின் உதவியுடன் அவருடைய புகைப்படம், அவருடைய பதிவில் சேர்க்கப்பட்டது.



தொடர் பதிவு
தஞ்சாவூரில் தேரோட்டம் பற்றிய செய்தி வரத்தொடங்கிய முதல் தேரோட்ட நாளன்று விழாவில் கலந்துகொண்டது வரை அனைத்து செய்திகளையும் முடிந்த வரை தொகுத்து பதிவில் இணைத்தேன். குறிப்பாக விழா நாளில் தஞ்சாவூர் பெரிய கோயிலிலிருந்து விடியற்காலை பஞ்சமூர்த்திகள் புறப்பட்டதைப் புகைப்படங்களாகச் சேர்த்து பதிவில் இணைத்தேன். தேரோட்ட ஆரம்பம் முதல் இது ஒரு தொடர் பதிவாக இருந்தது. அவ்வப்போது மேற்கோள்களைத் தரவேண்டியிருந்தது.

மற்றொரு தொடர் பதிவு
இளைய மகாமகம் பற்றிய பதிவினை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் தேரோட்டம் மற்றும் தீர்த்தவாரி நாள்களில் கும்பகோணம் சென்று புகைப்படங்களை எடுத்துப் பதியப்பட்டதே இளைய மகாமகம்.

அறிமுகமான நிலையில் பதிவு
தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் ஒரு நண்பர், பெட்டி காளியம்மன் கோயில் விழாவிற்கு வருகிறார்களா? என்று கேட்கவே, போக முடியாத நிலையில் விழா முடிந்த பின்னர் அக்கோயிலுக்குச் சென்று பதிவு செய்ததே கொரநாட்டுக் கருப்பூர் பெட்டி காளியம்மன் கோயில்.

படித்த நூல் பற்றிய பதிவு
படித்த நூல்களைப் பதியவேண்டும் என்ற நிலையில் அவ்வப்போது பல நூல்களைப் பற்றிப் பதிவிடுகிறேன். அவ்வாறான ஒரு பதிவே ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் தமிழர் வீரம் (நூல்).



விக்கிபீடியர்களின் ஆலோசனைகள்
100ஆவது பதிவினை நிறைவு செய்தபோது நான் பகிர்ந்த கருத்தை இங்கு மறுபடியும் பதிய விரும்புகிறேன். ஆரம்பத்தில் பதிவுகளைப் பதிய ஆரம்பிக்கும்போது நடைமுறைகளைத் தெரிந்துகொள்ளாமல் பல தவறுகளையும், மாற்றங்களையும் செய்யும் நிலை எனக்கு ஏற்பட்டது. விக்கியுள்ள நண்பர்கள் என்னை நெறிப்படுத்தி செல்லும் நிலையில் ஓரளவு பக்குவம் ஏற்பட்டுள்ளதை என்னால் உணர முடிகிறது. விக்கிபீடியர்களின் துணையோடும், ஆலோசனைகளோடும் பதிவுகளை செம்மையாக எழுதும் எண்ணம் மேம்படுகிறது.

தெரிந்துகொள்ள வேண்டிய நுட்பங்கள்
இன்னும் சில தொழில்நுட்பங்களைக் கற்க வேண்டியுள்ளது. நூலட்டை சேர்த்தல், பிறருடைய புகைப்படங்களை இணைத்தல், பிற ஆவணங்களிலிருந்து புகைப்படங்களைத் தெரிவு செய்தல் போன்ற பல நிலைகளில் இன்னும் கற்றுக்கொண்டு வருகிறேன்.

விக்கிபீடியாவில் எழுத அழைப்பு
தொடர் பங்களிப்பும், விக்கிபீடியர்களின் துணையும் நான் தொடர்ந்து விக்கிபீடியாவில் எழுத உதவும் என்ற நம்பிக்கையை எனக்குத் தருகிறது. அந்நம்பிக்கையுடன் மற்ற நண்பர்களையும் விக்கியில் எழுத அழைக்கிறேன். தமிழ் விக்கிபீடியாவில் எழுத ஆரம்பிப்போம். நம் மொழி, பண்பாடு, கலை என்ற நிலைகளில் நம்மால் ஆன பங்களிப்பைத் தருவோம். வாருங்கள்.

----------------------------------------------------------------------------------------------------
200ஆவது பதிவை நான் நிறைவு செய்ததை அவரது தளத்தில் பகிர்ந்த நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
----------------------------------------------------------------------------------------------------
 19.6.2015 அன்று மேம்படுத்தப்பட்டது.

80 comments:

  1. அடுத்த மாதத்தில் இணையப்பயிற்சி பட்டறை நடத்தலாம் என்று முத்து நிலவன் ஐயா சொல்லியுள்ளார்... ஐயா அப்போது தாங்கள் இதைப் பற்றி ஒரு வகுப்பு எடுக்க வேண்டும் என்பது எனது விருப்பம்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவேன்.

      Delete
  2. எந்த தலைப்பு இல்லை என்றவுடன் உங்களின் தேடும் ஆவல் வியக்க வைக்கிறது... வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா

    வாழ்த்துக்கள் நிச்சயம் சென்று படிக்கிறேன் ... ஐயா
    த.ம3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அழைப்பை ஏற்று வந்தமைக்கு நன்றி.

      Delete
  4. குறுகிய காலத்தில் நீங்கள் செய்திருப்பது சாதனைதான் ,வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. தங்களைப் போன்றோரின் அன்பே இதற்குக் காரணம்.

      Delete
  5. அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள், தங்கள் முதல் பதிவு என் சகோதரர் பற்றியது எனும் பொது மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி அய்யா, தொடருங்கள், தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மணி. மாறன் பதிவு சீராக அதிகம் சிரமப்படவேண்டியிருந்தது. தொடர்ந்து வந்த பதிவுகள் நல்ல அனுபவத்தைத் தந்தன. நன்றி.

      Delete
  6. தங்களின் சாதனைக்கு வாழ்த்துக்கள்!! அய்யா...

    ReplyDelete
  7. தங்களின் சாதனைகள் மென்மேலும் தொடர வாழ்த்துகள் முனைவரே...
    தமிழ் மணம் 6

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி. என்ன எழுதினாலும் உங்களின் நடை வருமா?

      Delete
  8. எவ்வளவு உழைப்பு ஐயா! உங்கள் இந்த சிறந்த சாதனைக்கு வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவே என் இந்த முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. நன்றி.

      Delete
  9. 200 வது பதிவைத்தொட்ட தங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. உங்களின் முயற்சி வருங்காலத்தினருக்கு கிடைக்கப் போகும் பொக்கிஷம்...பாராட்டுக்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. தங்களது எதிர்பார்ப்பின்படி கவனமாகத் தொடர்ந்து பதிந்து பொக்கிஷமாகத் தருவேன்.

      Delete
  11. தங்களது அயரா தளரா உழைப்பின் வெளிப்பாடு 200 வது பதிவு
    மேலும் பல சாதனைகளை சாதிக்க வாழ்த்துக்கள் ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய கருத்துரை விக்கியின் பக்கங்களை எனது பதிவில் சேர்க்க உதவியாக இருந்தது. தங்களின் பேச்சு எனக்கு ஒரு உத்வேகத்தைத் தந்தது. நன்றி.

      Delete



  12. தங்களின் சாதனைக்கு பாராட்டுகள்!



    பல அறிய தகவல்களைக்கொண்ட ஆழமான கட்டுரைகளை விக்கிப்பீடியாவில் பதிந்திருக்கிறீர்கள். தொடர்ந்து புதியனவற்றை அறிகிற ஆர்வமும் கற்றுக்கொள்ளும் விழைவும் அறிந்தவற்றையும் கற்றவற்றையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் முனைப்பும் தங்களது இயல்பாக இருப்பதனை தங்களுடன் பழகிய சிறிது காலத்திற்குள்ளேயே உணர முடிகிறது. இந்த ஆர்வமும் விழைவும் முனைப்பும் தங்களின் இச்சாதனைக்கு அடிக்கற்களாக இருப்பதனை உணர்கிறேன். நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அவ்வப்போது உரையாடும்போது தாங்கள் தந்துவரும் ஊக்கம் எனது எழுத்துக்குத் துணை நிற்கிறது. நன்றி.

      Delete
  13. முனைவர் ஐயா அவர்களுக்கு உளங்கனிந்த வாழ்த்து! முதுமையின் காரணமாக முன் போல் அதிகம் படிக்க இயலவில்லை! முடிந்த வரை முயற்சிக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. என் தளத்திற்கு வந்து மறுமொழி தந்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். நன்றி.

      Delete
  14. தங்களின் சாதனைகள் வளர வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  15. வணக்கம் !
    பாராட்ட வார்த்தைகள் இல்லை தலை வணங்குகின்றேன் ஐயா !தங்கத் தமிழுக்கோர் அரிய புதல்வன்! தங்களின் ஆற்றல் மென்மேலும் வளரட்டும் வண்டமிழால் வாழ்வில் இன்பம் பொங்கட்டும் !மங்காத புகழும் பெயரும் மறவர் குலம் பெற்ற வரம் அவை தங்களுக்கும் கிட்டட்டும் வாழ்த்துக்கள் !மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கும் அழைப்பிற்கும் .

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வாழ்த்து என்னை நெகிழ வைத்துவிட்டது. நன்றி.

      Delete
  16. மறக்கமுடியாத பதிவு மனதில் பதிந்தது. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களைப் போன்றோரின் ஊக்கம் என்னை மென்மேலும் எழுதவைக்கிறது. நன்றி.

      Delete
  17. எதையும் ஆர்வத்துடன் செய்யவேண்டும் என்னும் முனைப்பு உங்கள் எழுத்தில்தெரிகிறதுமனம் இருந்தால் மார்க்கம் இருக்கும் என்பதற்கு நீங்களே எடுத்துக்காட்டு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் எழுத்து, சிந்தனை, அனுபவம் முன்பாக நான் மிகச் சிறியவன். தங்களின் அன்பிற்கு நன்றி.

      Delete
  18. கணினித் தமிழின் வரலாற்றில் சிறப்பு மிக்க இடத்தைப் பிடித்து விட்டீர்கள். பெரும் சாதனை. வாழ்த்துகள்.
    பின்னேர் பிடிக்க ஆவல் உள்ளது. பார்ப்போம்.........

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள், எழுதலாம். ஆரம்பத்தில் இருந்த சிரமம் எனக்கு இப்போது தெரியவில்லை. சில தொழில்நுட்பங்களைக் கற்க வேண்டியுள்ளது. அவ்வளவே. நன்றி.

      Delete
  19. மிக்க மகிழ்ச்சி
    சாதனைகள் தொடர நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. ஐயா வணக்கம்.

    ஓய்வின்றி ஆய்வு செய்யும் உங்களிடம் இருந்து இன்றைய இளைய தலைமுறை குறிப்பாகத் தமிழ்முனைவர் பட்ட ஆய்வாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.

    ஆய்வுப் பணியும், அறிவுப் பணியும் ஒரு புறமிருகக என்னைப் போன்று தமிழினை வாசிக்கத் தொடங்குபர்களுக்குப் பின்னட்டங்கள் வாயிலாக நீங்கள் அளிக்கும் ஊக்கம் பெரிது,

    தொடரட்டும் உங்களின் தமிழ்ச்சேவை!!!

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களைப் போன்றோர் தரும் ஊக்கமே எனது பதிவுகள் நன்கு அமைய உதவுகிற்து. நன்றி.

      Delete
  21. தங்கள் பணி தொடரவேண்டும்.. நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தொடர்வேன், தங்களுடைய வாழ்த்துக்களுடன். நன்றி.

      Delete
  22. பிரமித்து நிற்கிறேன்.வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. ஆரம்பத்தில் என்னால்கூட நம்பமுடியவில்லை. தொடர்ந்து எழுதியதன் விளைவே இந்த அளவு பதிவுகளைப் பதிய உதவியது. நன்றி.

      Delete
  23. வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  24. மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  25. அரிய பணி இதுபோன்ற பதிவுகளே இணையத் தமிழ் வளர்ச்சிக்கு வலு சேர்க்கும்

    ReplyDelete
  26. விக்கிபீடியாவில் ஏதோ போகிற போக்கில் எழுதிவிடக் கூடாது. தங்களைப் போன்றவர்களே ஆதாரத்துடன் செய்திகளை நம்பகத் தன்மையுடன் பதிவு செய்ய முடியும். தொடரட்டும் தங்கள் பணி

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சிரமப்பட்டு தொடங்கினேன். தற்போதுகூட ஆங்காங்கே தரவுகள் தரும்போது சில சிக்கல்களை எதிர்கொள்கிறேன். இருந்தாலும் தங்களைப் போன்ற நல்லுங்களின் ஊக்கம் என்னை இந்த அளவிற்கு எழுத வைத்துள்ளது. நன்றி.

      Delete

  27. வணக்கம்!

    புகழ்முனைவர் சம்புலிங்கம் போற்றுபணி யோங்க
    அகம்நிறைந்து வாழ்த்துகிறேன் அன்பால்! - அகழ்ந்தாய்ந்து
    தீட்டும் எழுத்தெல்லாம் காட்டும் தமிழ்த்தொன்மை
    கூட்டும் சுவையைக் குவித்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வாழ்த்துக்கவிதைக்கு மனமார்ந்த நன்றி.

      Delete
  28. தமிழ் விக்கிபீடியாவில் சாதனை படைத்திட்ட முனைவர் பா.ஜம்புலிங்கம் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    த.ம.17

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கு நெஞ்சார்ந்த நன்றி.

      Delete
  29. மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் பணி போற்றற்குரியது. மேன் மேலும் செழிப்புற வாழ்த்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுடன் பணி தொடரும். நன்றி.

      Delete
  30. 200 வது பதிவைத்தொட்ட தங்களுக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் பணி

    ReplyDelete
    Replies
    1. பதிவுப் பணி தொடரும். அன்புக்கு நன்றி.

      Delete
  31. மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா..தம +1

    ReplyDelete
  32. விக்கிபீடியாவில் 200 பதிவைத் தொட்டதற்கு வாழ்த்துக்கள்! ஆரம்பத்தில் உங்கள் கட்டுரை விலக்கப்பட்டது என்று எழுதியிருக்கிறீர்கள். புதிதாக எழுத விரும்பும் அன்பர்களுக்கு விக்கிபீடியாவில் எழுதுவது எப்படி என்று ஒரு பதிவு எழுதுங்களேன்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. விரைவில் எழுதுவேன். அன்புக்கு நன்றி.

      Delete
  33. வணக்கம் முனைவர் ஐயா !


    தங்கள் பணி தொடரவும் சிறக்கவும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
    வாழட்டும் தலைமுறை வாழ்க தமிழ் !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  34. இந்தத்தங்களின் அருமையான பதிவினை இன்றுதான் என்னால் படிக்க எனக்கு நேரம் கிடைத்தது.

    மேலே நம் திருமதி. ஞா. கலையரசி அவர்கள் எழுதியுள்ள பின்னூட்டத்திற்கான தங்களின் பதிலினை ஆவலுடன் எதிர்பார்த்து நானும் காத்திருக்கிறேன்.

    சப்தம் இன்றி சாதனைகள் பல செய்துள்ளீர்கள். கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    ஏற்கனவே இதுபற்றி நம் கரந்தை திரு. ஜெயகுமார் பதிவினில் படித்து கொஞ்சம் தெரிந்துகொண்டேன்.

    மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    என்றும் அன்புடன் VGK

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. நண்பர்களின் விருப்பப்படியும், நான் எதிர்கொண்ட சிரமங்களை அவர்கள் எதிர்கொள்ளாமல் இருக்கவும் விரைவில் எழுதுவேன்.

      Delete
  35. வாழ்த்துக்கள்/ தொடரட்டும் தங்களது நிறைவான பதிவுகள்

    ReplyDelete
    Replies
    1. தங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களுடன் பயணம் தொடரும். நன்றி.

      Delete
  36. தெரியப்படுத்தியமைக்கு நன்றி. பதிவினைப் பார்த்தேன்.

    ReplyDelete
  37. sir, my best wishes and congratuations. with regards.k.sridaran
    (Sridharan Krishnappa thro' email sridharmythily@gmail.com)

    ReplyDelete
  38. Dr Jambu, When wikipedia was introduced in English, I contributed some articles. But only if we contribute in English it reaches at international level. Tamil is our mother tongue. There are lot of persons to contribute. So I contribute to facebook and shytlefm. in English. When i proved the painting of Ravivarma can be restored through digital method and produced some samples, I received more support from foreigners..........There are lot of persons to contribute in Tamil. Let them get good name. good wishes to you. dr tp (Edited version of Dr Padmanabhan's comment thro' email : drt padmanaban )

    ReplyDelete
  39. தங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன் ஐயா

    ReplyDelete
    Replies
    1. அன்பான வருகைக்கு மனமார்ந்த நன்றி.

      Delete
  40. ஐயா! மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா! தாங்கள் விக்கியில் எழுத என்னென்ன விதி முறைகள் என்பதை ஒரு பதிவாக எழுதினால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்குமே ஐயா....எங்களது தாழ்மையான வேண்டு கோள்...

    தங்களது பதிவுகள் நாளைய பொக்கிஷங்கள். எல்லோருக்கும் பயன் பெறுமே...தாங்கள் மேன் மேலும் விக்கியில் பல பதிய வேண்டும் ஐயா வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. பல விதிமுறைகளை நானும் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை. முடிந்தவரை தெரிந்தவற்றை விரைவில் பகிர்வேன். வாழ்த்துக்கு நன்றி.

      Delete
  41. உங்கள் சாதனைக்கு என் வணக்கங்கள்.

    ReplyDelete
  42. தமிழ் படித்துப் பண்டிதர் என்று
    சொல்வதை விட மேலனாது - அது
    பலரறிய உலகிற்குத் தமிழ் பரப்புவதே!
    விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் ஊடாக
    உலகிற்குத் தமிழ் பரப்பும் எண்ணத்தில்
    200ஆவது பதிவு, 5000ஆவது தொகுப்பு என
    தொடர்ந்து தமிழ்ப் பணி மேற்கொள்ள
    என் உள்ளம் நிறைந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
  43. உங்களைப் போன்ற நண்பர்களின் தூண்டுதல் எனக்கு மிகவும் உதவியாக உள்ளது, வருகைக்கு மனம் நிறைந்த நன்றி,

    ReplyDelete