முகப்பு

28 December 2020

மறக்கமுடியா ஆவணப்பதிவு : 2020இல் எங்கள் வெளியீடுகள்

 எங்கள் குடும்பத்தார் அனைவரும் நூல்களை எழுதி வெளியிட்ட வகையில் 2020ஆம் ஆண்டு எங்கள் இல்லத்தைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான ஆண்டாகக் கருதுகிறோம்.  கொரோனா நேரத்தை நல்லமுறையில் பயன்படுத்த விரும்பி தன் தந்தையைப் பற்றிய நூலைத் தொகுத்து எழுதியுள்ளதை என் மனைவி திருமதி ஜ.பாக்கியவதி தன்னுடைய "அப்பாவுக்காக..." நூலில் குறிப்பிட்டுள்ளார். 

ஒவ்வோராண்டும் அந்த ஆண்டு நிறைவு பெற்றபின் அந்த ஆண்டிற்கான என் கோப்பினை ஒருங்கமைத்து, நூற்கட்டுக்குத் தந்து பாதுகாத்து வருகிறேன். 1976 முதல் இப்பணியினை நான் செய்து வருகிறேன். ஆரம்பத்தில் பொருளடக்கம் இடுவதில்லை. நாளடைவில் இட ஆரம்பித்தேன். என் ஆண்டுக்கான என் கோப்பில் அந்தந்த பொருண்மை தொடர்பான கடிதங்கள் ஒவ்வொரு பகுதியாகப் பிரித்து பொருளடக்கம் இட்டு ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். 

ஆய்வில் தடம் பதித்தபின்னர் கல்விப்பணிகள் என்ற ஒரு பகுதி ஆரம்பமானது. அதில் நான் கலந்துகொண்ட கருத்தரங்குகள், இதழ்களில் வெளியான கட்டுரைகள் பற்றிய விவரங்களைச் சேர்ப்பேன். பிற பதிவுகளாக முதலில் தமிழ்ப் பல்கலைக்கழகம், கோயில் உலா, விக்கிப்பீடியா, குறிப்பிடத்தக்க சாதனைகள் என்ற வகையில் நானே என்னை சுயமதிப்பீடு செய்து கொள்வேன். எந்த இடத்தில் குறையுள்ளதோ அதனை உற்றுநோக்கி சரிசெய்ய இந்த உத்தி எனக்கு உதவியாக இருப்பதை நான் உணர்ந்து வருகிறேன்.

2020ஆம் ஆண்டின் கோப்பில் சிறப்பாகவும்  வித்தியாசமாகவும் நான் பதிந்தது எங்கள் வீட்டில் அனைவரும் நூல் எழுதியதைப் பற்றிய குறிப்புகள் ஆகும். அந்த வகையில் இது மறக்கமுடியாத ஆவணப்பதிவாக அமைந்துவிட்டது.







பா.ஜம்புலிங்கம் (விக்கிப்பீடியா 1000 : பதிவு அனுபவங்கள்/மே 2020/மின்னூல்), எங்கள் மூத்த மகன் முனைவர் ஜ.பாரத் (கடவுள்களுடன் தேநீர்/ஜுன் 2020/மின்னூல், அச்சு நூல்), என் மனைவி திருமதி ஜ.பாக்கியவதி (அப்பாவுக்காக/நவம்பர் 2020/அச்சு நூல்), எங்கள் இளைய மகன் திரு ஜ.சிவகுரு (100 நூறு வார்த்தை கதைகள்/டிசம்பர் 2020/மின்னூல், அச்சு நூல்) என்ற வகையில் இந்த ஆண்டு எங்கள் குடும்பத்து உறுப்பினர்கள் நூல்களை வெளியிட்டுள்ளோம். 

2020ஆம் ஆண்டு எங்கள் நினைவில் நிற்கும் ஆண்டாக அமைந்துவிட்டது. கொரோனா எதிர்மறையை நேர்மறையாக்கி, எங்கள் எழுத்துப்பணிக்குத் துணைநின்ற நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் என் சார்பாகவும், எங்கள் குடும்பத்தார் சார்பாகவும் மனம் நிறைந்த நன்றி.

நூல்களைப் பெற : 

1) விக்கிப்பீடியா 1000 : பதிவு அனுபவங்கள் மின்னூல் : அமேசான்

2) அப்பாவுக்காக,,, 
அச்சு வடிவம்: முதல் பதிப்புநவம்பர் 2020, தமிழ்க்குடில் பதிப்பகம்தஞ்சாவூர்ரூ.150, தொடர்புக்கு : +91 9488969722,  tamilkudilpathipagam@gmail.com.

3) கடவுள்களுடன் தேநீர் 
மின்னூல் : அமேசான்
அச்சு வடிவம் : முதல் பதிப்புஜுன் 2020, ஜீவா படைப்பகம்காஞ்சீபுரம்  ரூ.120, தொடர்புக்கு : +91 9994220250  jeevapataippagam@gmail.com.

4) 100 நூறு வார்த்தைக்கதைகள் 
மின்னூல் : அமேசான்
அச்சு வடிவம் : முதல் பதிப்புடிசம்பர் 2020, ரூ.120, தொடர்புக்கு : +91 9488969722, tamilkudilpathipagam@gmail.com.

நன்றி  : எழுத்துக் குடும்பம், இந்து தமிழ் திசை, 2 ஜனவரி 2021


2 ஜனவரி 2021இல் மேம்படுத்தப்பட்டது

11 comments:

  1. பாராட்டுகளும், வாழ்த்துகளும்.  நிச்சயமாக இது ஒரு நல்ல சாதனை என்பதில் ஐயமில்லை.  அப்பாவுக்காக நூலை வாசித்து வருகிறேன்.  நல்ல முயற்சி.

    ReplyDelete
  2. மிகவும் மகிழ்ச்சி ஐயா... வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. எழுத்துக்காரக் குடும்பத்திற்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரரே

    நீங்கள் அனைவரும் தமிழுக்கு ஆற்றிய பணி மிகச்சிறந்தது. மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த எழுத்துலக தொண்டு மேலும் தொடரட்டும். சிறக்கட்டும். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  6. மனமார்ந்த பாராட்டுக்கள் ஐயா.
    எதிர்மறையை நேர்மறை ஆக்கியது உங்களின் தனித்துவமே

    ReplyDelete
  7. அஹா அருமையான விஷயங்கள். பாராட்டுகள் உங்கள் குடும்பத்தினருக்கு. வாழ்த்துக்கள் அனைவருக்கும் :)

    ReplyDelete
  8. தமிழகத்தில் எங்கும் இது போல நான் கேள்விப்பட்டதில்லை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. அய்யா, வணக்கம். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. மறக்கமுடியா ஆவணப்பதிவு : 2020இல் எங்கள் வெளியீடுகள் - எனது பக்கத்தில் பகிர்கிறேன். பாராட்டுகள் சார் முனைவர் ஜம்புலிங்கம்

    ReplyDelete