23 May 2020

விக்கிப்பீடியா 1000 : பதிவு அனுபவங்கள் மின்னூல்

விக்கிப்பீடியாவில் ஜுலை 2014இல், எழுத ஆரம்பித்து ஏப்ரல் 2020இல் 1000ஆவது பதிவினை நிறைவு செய்தேன். விக்கிப்பீடியாவில் எழுதுவது மிகவும் எளிது என்பதை நாளடைவில் உணர்ந்தேன். கட்டுரைகள் எழுதியபோது பெற்ற அனுபவங்களை மின்னூலாக வெளியிட்டுள்ளேன். என் முயற்சியில் துணை நின்ற அனைவருக்கும், அமேசான் தளத்திற்கும் என் மனமார்ந்த நன்றி.

விக்கிப்பீடியாவில் எழுத ஆரம்பித்தபோது தமிழுக்கான சிறந்த பங்களிப்பாக உணர்ந்தேன். கட்டுரை நீக்கப்படவுள்ளதாக தகவல் வந்தபோது குறைகளை நீக்கி, பதிவினை  மேம்படுத்தினேன். பின்னர் அவை ஏற்கப்பட்டன. எவற்றைச் செய்வது என்பதைவிட எவற்றைச் செய்யக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டேன். விக்கிப்பீடியாவின் நற்பழக்க வழக்கங்கள், கொள்கைகள், வழிகாட்டல்களை முறையாகக் கடைபிடித்து, நெறிமுறைகளின்படி எழுதும்போது கட்டுரைகள் ஏற்கப்படுவதை அனுபவத்தில் அறிந்தேன். எழுத ஆரம்பித்த முதல் கடந்த மைல்கற்களைக் காண்போம்.

  • பயனராகாமல் முதல் பதிவு, நீக்கம், ஜுன் 2013
  • என்னைப் பற்றி எழுதுதல், தலைப்புப் பிரிப்பு, பயனர் ஆதல்
  • முதல் பதிவு எழுதி, மேம்படுத்துதல், 6 ஜுலை 2014
  • முந்தைய மாத 250 தொகுப்புகளுக்காக பாராட்டு பெறல், ஆகஸ்டு 2014
  • அசத்தும் புதிய பயனர், விடாமுயற்சியாளர், தொடர் பங்களிப்பு (ஆகஸ்டு 2014), சைவ சமயப் பங்களிப்பு (அக்டோபர் 2014) ஆகியவற்றுக்கான பதக்கங்கள் பெறல்.
  • விக்கிகாமன்சில் முதல் படிமம் பதிவு, 15 செப்டம்பர் 2014
  • முதற்பக்கத்தில் “உங்களுக்குத் தெரியுமா?” பகுதியில் நான் ஆரம்பித்த/ மேம்படுத்திய சரபேந்திர பூபாலக் குறவஞ்சி (15 அக்டோபர் 2014), ஆதுர சாலை (29 அக்டோபர் 2014), கங்கா ஆரத்தி (நவம்பர் 2014),  ஆழித்தேர் (17 ஜுன் 2015), தஞ்சைப் பெருவுடையார் கோயில் (20 ஜனவரி 2016)  கட்டுரைகளிலிருந்து தகவல்கள் வெளிவரல்
  • புதுக்கோட்டை கணினி தமிழ்ச்சங்க வலைப்பதிவர் திருவிழாவில் முன்னோடி விக்கிப்பீடியா எழுத்தாளர் விருதினைப் பெறல், அக்டோபர் 2015
  • முகப்புப்பக்கத்தில்  பங்களிப்பாளராக அறிமுகமாதல், 1 நவம்பர் 2015
  • “Writer of 250 articles in Tamil Wikipedia” செய்திக் கட்டுரை வெளிவரல்,  TheNew Indian Express,13 November 2015
  • என் கணக்கு தற்காவல் பயனர் உரிமைக்கு மாற்றப்படல், ஜுலை 2016
  • விக்கிக்கோப்பை வெற்றியாளர், 253 பதிவுகள், மூன்றாம் இடம், 2017
  • “விக்கிப்பீடியா போட்டியில் மூன்றாமிடம் பெற்ற தமிழ்ப் பல்கலைக்கழகக் கண்காணிப்பாளர்” செய்தி வெளிவரல்,  தினமணி, 7 மார்ச் 2017
  • வேங்கைத்திட்டம் வெற்றியாளர், 260 பதிவுகள், மூன்றாம் இடம், 2019
  • ஆசிய மாதம் வெற்றியாளர், 115 பதிவுகள், இரண்டாம் இடம், 2019
  • “வியக்க வைக்கும் விக்கிப்பீடியா பதிவர்” கட்டுரை வெளிவரல், புதிய தலைமுறை, 13 பிப்ரவரி 2020
  • விக்கிப்பீடியாவில் 1000 பதிவுகள் நிறைவு, ஏப்ரல் 2020
  • ஆங்கில விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தில், “Did You Know?” பகுதியில், நான் ஆரம்பித்த Thukkachi Abatsahayesvar temple கட்டுரையிலிருந்து வெளிவரல், 20 ஆகஸ்டு 2017 
  • ஆங்கில விக்கிப்பீடியாவில் கோயில்கள் தொடர்பான 190 உள்ளிட்ட 210 பதிவுகள் நிறைவு, மே 2020
  • ஆங்கில விக்கிப்பீடியாவின் WikiProject India/The 10,000 Challenge (மே 1, 2020-ஜுலை 31, 2020) திட்டத்தில் கலந்துகொள்ளல்
  • ஆங்கில விக்கிப்பீடியாவில் முதன்முதலாக The Special Barnstar பதக்கத்தினைப் பெறல்

புதிதாக எழுத வருபவர்களுக்கு இந்நூல் மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது நூலை வாசித்து கருத்தினை அமேசான் தளத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன். நூலைப் பெற கீழ்க்கண்ட இணைப்பினைச் சொடுக்க வேண்டுகிறேன்.

இந்நூலைப் பற்றிய நண்பர்களின் மதிப்புரைகள், அவர்களுக்கு நன்றியுடன் :
திரு கரந்தை ஜெயக்குமார் சாதனையாளரை வாழ்த்துவோம்  


21 ஜனவரி 2021இல் மேம்படுத்தப்பட்டது,

29 comments:

  1. வாழ்த்துகள் சார்

    ReplyDelete
  2. வாழ்த்துகள் முனைவர் ஜம்புலிங்கம் சீர். அயராத உழைப்பு. பாராட்டுகள்.

    ReplyDelete
  3. தங்களது அயராத உழைப்பு பிரமிக்க வைக்கிறது இன்னும் பெரிய சாதனைகளை தொடுவீர்கள்.

    எமது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. வாழ்த்துகளும், பாராட்டுகளும் ஸார்.   உங்கள் உழைப்பு எங்களுக்கெல்லாம் ஒரு இன்ஸ்பிரேஷன் .

    ReplyDelete
  5. வாழ்த்துகளும் பாராட்டுகளும் முனைவர் ஐயா. தரவிறக்கம் செய்து விட்டேன். விரைவில் படிக்கிறேன்.

    ReplyDelete
  6. இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. சிறந்த முயற்சி ஐயா. தங்கள் பணியை வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  8. அமேசான் மின்னூல் உலகத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.

    ReplyDelete
  9. மிக மிக சிறப்பான முயற்சி ஐயா. விக்கிபீடியாவில் எழுதும் ஆர்வமுள்ளோருக்கு நல்ல முன்னோடி. எங்களின் இனிய மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள் ஐயா.

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete
  10. மாபெரும் பணி... இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள்...

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்

    ReplyDelete
  12. தனி மனித இயக்கமாய் தமிழ் இலக்கியம் பண்பாடு மற்றும் கலாச்சார சாரங்களை இயன்றவரை பலரது பார்வைக்கும் கொண்டு செல்ல அரும்பாடு படும் உங்களை வணங்குகிறேன் ஜம்பு. தொடரட்டும் உங்கள் பணிகள். மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. வாழ்த்துகள் ஐயா!

    ReplyDelete
  14. தங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் - தஞ்சை அப்பாண்டை ராஜ்

    ReplyDelete
  15. வணக்கம் சகோதரரே

    தங்களின் பெரும் முயற்சிகள் வெற்றியடைந்து தாங்கள் விக்கி பீடியாவில் ஆயிரமாவது பதிவை பதிப்பித்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மேலும் இப்பணியில் நீங்கள் சிறந்து விளங்கி புகழ் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  16. வாழ்த்துகள்! அய்யா!!

    ReplyDelete
  17. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete
  18. தங்கள் தேடலும் பணியும் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    உடுவை.எஸ்.தில்லைநடராசா---இலங்கை

    ReplyDelete
  20. தேதி வாரியாக தாங்கள் இட்டுள்ள குறிப்பு தங்களின் ஒழுங்கு முறையை காட்டுகிறது.பாராட்டுக்கள் ஐயா.

    ReplyDelete
  21. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் லாவகமாகக் கையாளத் தெரிந்தவர் நீங்கள். விக்கிபீடியாவில் கட்டுரைகளை வடிவமைப்பதில் உங்கள் புலமையும் உழைப்பும் கவனமும் மற்றவர்க்கு முன்மாதிரியானவை. எடுத்த பத்தியை மேன்மேலும் செம்மைப்படுத்துவதிலும் முறைப்படுத்துவதிலும் உங்கள் தனித்த அடையாளத்தைக் காணமுடியும். பாராட்டுகள்; வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. அருமையான உழைப்பு, அபாரமான வெற்றி. இடைவிடாத எழுத்துக்கு ஒரு சபாஷ். கொரோனா எனவே ப்லாக் போஸ்ட் போடுவதோடு போய்விடுவேன். இன்றைக்கு சிறிது நேரம் கிடைத்தது. ஆயிரம் பல்லாயிரமாகப் பெருக வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  23. கோவில்கள் பற்றிய கட்டுரைகளை வெளியிட சுவடிசள் அல்ல்து கல்வெட்டுகளை நாடுவீர்களா

    ReplyDelete
    Replies
    1. கோயில்கள் தொடர்பாக வந்த நூல்கள், கட்டுரைகள் மற்றும் நேரில் திரட்டிய செய்திகளையும், நான் எடுத்த புகைப்படங்களையும் கொண்டு ஆரம்பிக்கிறேன். அவற்றில் கல்வெட்டு மற்றும் பிற ஆவணங்களைப் பற்றிய குறிப்புகள் இருந்தால் அந்தந்த நூலை/கட்டுரையை மேற்கோளாகக் காண்பிக்கிறேன் ஐயா.

      Delete
  24. வாழ்த்துகள் சார். உங்கள் அயராத உழைப்பு எங்கள் எல்லாருக்குமே வழிகாட்டுகிறது

    ReplyDelete
  25. தாங்கள் எமக்கு நல்ல வழிகாட்டி!
    தங்கள் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி.
    தங்கள் பணி தொடர வாழ்த்துகள்!

    ReplyDelete
  26. ஏமாற்றங்களால் மனம் தளராமல் தொடர் முயற்சியால் சாதனை படைத்துள்ளீர்கள் .. வாழ்த்துக்கள் ஐயா !!!

    ReplyDelete