முகப்பு

27 February 2023

தமிழ்நாடு புலவர் பேரவை : தகைசால் தமிழர் விருது

“தமிழுக்கு மாறுவோம்” என்னும் இயக்கத்தை தமிழ்நாடு புலவர் பேரவை முன்னெடுத்து சீரிய பணிகளைச் செய்துவருகிறது. அதில் ஒரு பணியாக ஆங்கிலத்திலிருந்த முகநூல் கணக்கின் பெயரைத் தமிழுக்கு மாற்றுவதும் ஒன்றாகும். அதில் ஈர்க்கப்பட்டு பலர் தம்முடைய முகநூல் கணக்கின் பெயரைத் தமிழில் மாற்றி வருகின்றனர். நானும் என் முகநூல் கணக்கினை தமிழில் மாற்றம் செய்தேன்.

அவ்வாறு மாற்றம் செய்பவர்களுக்கு “தகைசால் தமிழர்” என்னும் தலைப்பிட்டு அவ்வப்போது அவர்கள் பெயருடன் நிழற்படத்தையும் முகநூலில் வெளியிட்டுப் பாராட்டிவருகின்ற சிறப்பான பணியைச் செய்கிறது தமிழ்நாடு புலவர் பேரவை. 
அவ்வகையில் உறுப்பினராக இருக்கும் 80 பேருக்கு தகைசால் தமிழர்” என்னும் விருதினை அளித்துச் சான்றிதழ் வழங்கியது இப்பேரவை. விருதுச் சான்றிதழ் வழங்கும் விழா தஞ்சை பெசண்ட் அரங்கில் 26 ஜனவரி 2023இல் நடைபெற்றது. இதே நாளில் விக்கிப்பீடியாவின் வேங்கைத்திட்டம் 2.0 பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ள ஆனைக்கட்டி சென்றதால் விருதினை நேரடியாகப் பெறமுடியவில்லை. என் சார்பாக என் மனைவி திருமதி பாக்கியவதி அவர்கள் விருதினைப் பெற்றுக்கொள்ள பேரவையினர் இசைந்தனர். விருதினை அவர் பெற்று வந்தார்.
தமிழ்நாடு புலவர் பேரவைக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 





ஒளிப்படம் நன்றி : தமிழ்நாடு புலவர் பேரவை

முந்தைய விருதுகள்
சித்தாந்த இரத்தினம், 1997


அருள்நெறி ஆசான், 1998

பாரதி பணிச்செல்வர், 2001







அருமொழி விருது, 2021




நிகரிலி சோழன் விருது, 2022

4 comments:

  1. விருதுகள் தொடரட்டும். மனம் நிறைந்த வாழ்த்துகள் முனைவர் ஐயா.

    ReplyDelete
  2. சாதனைகளுக்கு மேல் சாதனை. வணங்குகிறேன். வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    ReplyDelete
  3. நிறைய சாதனைகள் செய்து விருதுகளும் பெற்றிருக்கிறீர்கள் முனைவர் ஐயா! வாழ்த்துகள் பாராட்டுகள்! மேலும் மேலும் சாதனைகள் செய்து பெற்றிடவும் வாழ்த்துகள்!

    கீதா

    ReplyDelete
  4. மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகள்.

    ReplyDelete