17 October 2015

முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் விருது : வலைப்பதிவர் திருவிழா 2015

11.10.2015 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற வலைப்பதிவர் திருவிழா ஒரு மறக்க முடியாத அனுபவத்தைத் தந்தது. தஞ்சாவூரிலிருந்து நண்பர்கள் குழாமாகக் கிளம்பி புதுக்கோட்டையில் விழா நிகழ்விடத்திற்கு வந்தோம். வரவேற்பு, வருகைப்பதிவு, சக வலைப்பதிவர்கள் வருகை, விருந்தினர்களின் பொழிவுகள், விருந்தோம்பல்,  என ஒவ்வொரு நிகழ்வும் திட்டமிட்டபடி மிக சிறப்பாக அமைந்திருந்ததைக் காணமுடிந்தது. 

முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் விருது
விழாவின் ஒரு நிகழ்வாக முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் என்ற விருதினை, விக்கிமீடியா இந்தியாவின் திட்ட இயக்குநர் திரு அ.இரவிசங்கர் அவர்களிடமிருந்து பெறும் பெரும் பேறு எனக்குக் கிடைத்தது. 

தமிழ் விக்கிபீடியாவில் தொடர்ந்து கட்டுரை எழுதிய என்னை ஊக்குவிக்கும் வகையில் இவ்விருதினை வழங்க முடிவெடுத்த திரு முத்துநிலவன் அவர்கள் தலைமையிலான விழாக்குழுவினருக்கும், என் சக வலைப்பதிவர்களுக்கும்  என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் பிப்ரவரி 2011 முதல் எழுதி வருகிறேன். இது முழுக்க முழுக்க வரலாற்றுரீதியாக சோழ நாட்டில் பௌத்தம் பரவியிருந்ததைப் பகிரும் வகையில் கட்டுரைகளைக் கொண்டமைந்தது. திரு கரந்தை ஜெயக்குமார் கூறிய ஆலோசனையின்படி பிற தலைப்புகளில் பொதுவாக எழுத ஆரம்பிக்க நினைத்து நான் படித்ததை, பார்த்ததை, ரசித்ததைப் பகிரும் நோக்கில்  முனைவர் ஜம்புலிங்கம் என்ற தலைப்பில் டிசம்பர் 2013 முதல் எழுதிவருகிறேன்.     



திரு இரவிசங்கர் அவர்கள் எனக்கு விருதினை வழங்கல் 
முனைவர் பட்ட ஆய்விற்காக நான் மேற்கொண்ட களப்பணிகளும், பல கோயில்களுக்குச் சென்றுவந்த பின் வலைப்பூவில் எழுதிய பதிவுகளும் என்னை விக்கிபீடியாவில் எழுதுவதற்கு ஓர் ஆர்வத்தை உண்டாக்கியது. முதலில் எழுத ஆரம்பித்தபோது சற்று சிரமமாக இருந்தாலும் நாளடைவில் எளிதாகத் தோன்றியது. கும்பகோணம் கோயில்கள், தேவாரப்பாடல் பெற்ற தலங்கள், கும்பகோணம் மற்றும் புதுக்கோட்டையிலுள்ள நூலகங்கள், அறிஞர்கள் மற்றும் நூல்கள் அறிமுகம் என்ற நிலையில் எனது பதிவுகள் தொடர்கின்றன. இந்நிலையில் இவ்வாறான விருது என்னை மென்மேலும் எழுத ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன். தமிழ் விக்கிபீடியாவில் எழுத ஆரம்பித்த அனுபவம், ஆங்கில விக்கிபீடியாவில் தடம் பதிக்க உதவியாக அமைந்தது. 
-----------------------------------------
புதுக்கோட்டையில் வரலாறு படைத்த பதிவர் விழாவின் சிறப்பு அம்சங்கள்
  • கவிதை மற்றும் ஓவியக் கண்காட்சி
  • பதிவர்களின் நூல் கண்காட்சி மற்றும் விற்பனை
  • வலைப்பதிவர் கையேடு வெளியீடு
  • இடையிடையே தமிழிசைப் பாடல்கள்
  • முதன்மைப் பேச்சாளர்களின் பொழிவுகள்
  • திரு கரந்தை ஜெயக்குமார் மற்றும் திரு தவரூபன் நூல்கள் வெளியீடு
  • போட்டியில் வெற்றி பெற்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்தல் 
  • மூத்த பதிவர்கள் புலவர் இராமானுசம், திரு மதுரை சீனா, திரு திண்டுக்கல் தனபாலன் ஆகியோருக்குச் சிறப்பு விருதுகள் 



இவ்வலைப்பதிவர் திருவிழா பல நண்பர்களைச் சந்திக்க பெரும் வாய்ப்பாக இருந்தது. சிறப்பாக விழாவினைத் திட்டமிட்டு நிறைவேற்றிய அனைத்துக்குழுவினருக்கும் நன்றி.
-----------------------------------------
புகைப்படங்கள் உதவிக்கு நன்றி:
திரு முத்துநிலவன் வலைப்பூ
திரு கரந்தை ஜெயக்குமார் வலைப்பூ
வலைப்பதிவர் சந்திப்பு வலைப்பூ
-----------------------------------------
17.10.2015 அன்று நவராத்திரியை முன்னிட்டு கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோயிலுக்கு நானும் என் மனைவியும் சென்றோம். 21.10.2015 அன்று கும்பாபிஷேகம் ஆகவுள்ள பெரியதெரு ஆஞ்சநேயர் கோயில், அண்மையில் கும்பாபிஷேகம் ஆன பெரிய கடைத்தெரு ராஜகோபாலசாமி கோயில்களுக்கும் சென்றோம். இவ்வுலா பற்றி அடுத்த பதிவில் காண்போம்.

முந்தைய விருதுகள்
சித்தாந்த இரத்தினம், 1997


அருள்நெறி ஆசான், 1998

பாரதி பணிச்செல்வர், 2001

20 பிப்ரவரி 2022இல் மேம்படுத்தப்பட்டது.

63 comments:

  1. தாங்கள் - மேலும் பல விருதுகளைப் பெற்றிட வேண்டுகின்றேன்..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  2. வணக்கம் ஐயா !

    மன நிறைவைத் தருகின்ற படங்களுடன் தாங்கள் பெற்றுக் கொண்ட விருது பெருமை அளிக்கிறது எல்லோர்க்கும் .....பகிர்வுக்கு நன்றிகள் கோடி மேலும் தங்கள் பணிகள் சிறப்புற நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி. வாழ்த்துக்களுடன் பணியைத் தொடர்வேன்.

      Delete
  3. தகுதியானவரை நாடி தகுதியான விருது வழங்கப் பட்டிருக்கின்றது
    வாழ்த்துக்கள் ஐயா
    தங்களின் சீரிய பணி தொடரட்டும்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. சோழ நாட்டில் பௌத்தம் என்ற வலைப்பூவில் எழுதிவந்த என்னை பிற தலைப்புகளில் எழுதுவதற்காக புதிய வலைப்பூவினைத் தொடங்கவைத்து எழுதவைத்த தங்களின் அன்பும் முயற்சியும் நான் இவ்விருது பெற ஒரு காரணம். நன்றி.

      Delete
  4. உங்கள் உழைப்பிற்கு கிடைத்த விருது இது. தமிழில் எழுதியவற்றை, உடனுக்குடன் மொழிபெயர்த்து ஆங்கில விக்கிபீடியாவிலும் வெளியிட்டு, மேலும் புகழினையும், விருதுகளையும் பெற்றிட முனைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் சொல்வதை, ஆங்கில விக்கிபீடியாவில் இல்லாத தமிழில் உள்ளனவற்றை, எழுதிவருகிறேன். தங்களின் வாழ்த்துக்களுடன் பணியைத் தொடர்வேன். நன்றி.

      Delete
  5. வாழ்த்துகள் ஸார்.

    ReplyDelete
  6. Replies
    1. நீங்கள் விருது பெற்ற அதே மேடையில் நானும் விருது பெற்றேன் என்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பலவித தொழில்நுட்ப உத்திகளைத் தாங்கள் எங்களுக்குக் கற்றுத் தந்தது நான் இவ்வகையில் தடம் பதிக்க உதவியது. அன்புக்கு நன்றி.

      Delete
  7. வாழ்த்துகள் ஐயா..

    மேலும் பல விருதுகள் உங்களை வந்தடையட்டும்.....

    ReplyDelete
    Replies
    1. தங்களது வாழ்த்துக்களுடன் பணியைத் தொடர்வேன். நன்றி.

      Delete
  8. தங்கள் தகுதிக்கும், தன்னடக்கத்திற்கும் இன்னும் பல விருதுகள் உங்களைத் தேடி வரும் முனைவரே!

    ReplyDelete
    Replies
    1. புதுக்கோட்டையில் தங்களை நேரில் கண்டு வாழ்த்து பெற்றதை எண்ணி மகிழ்கிறேன். தொடர்ந்து அலைபேசியில் உங்களுடன் பேசியது மனதிற்கு நிறைவினைத் தந்தது. தங்களது வாழ்த்துக்கள் என்னை மென்மேலும் எழுதவைக்கும். நன்றி.

      Delete
  9. வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  10. மிக்க பெருமை கொள்கின்றோம் ஐயா!

    வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்றோரின் ஊக்கமே என்னை எழுதவைக்கிறது. வாழ்த்தக்கு நன்றி.

      Delete
  11. வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  12. நன்றி முனைவர் அய்யா
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  13. வருகைக்கும் தமிழ் மண வாக்கிற்கும் நன்றி.

    ReplyDelete
  14. வாழ்த்துகள்..ஐயா....

    ReplyDelete
  15. வாழ்த்துகள் ஐயா.விருதுகள் தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வாழ்த்துக்களுடன் தொடர்வேன். நன்றி.

      Delete
  16. வணக்கம் முனைவரே..
    மிக்க மகிழ்ச்சி தாங்கள் மென்மேலும் பல விருதுகள் பெற எமது வாழ்த்துகள்

    தொண்டுகள் தொடரட்டும் விருதுகள் பெருகட்டும்.
    தமிழ் மணம் 11

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும், வாக்கிற்கும் நன்றி. தங்களது வாழ்த்துக்களுடன் எழுத்துப்பணி தொடரும்.

      Delete
  17. வணக்கம் சகோதரரே.

    தங்கள் பதிவினை படித்து விபரங்கள் அறிந்தேன் பதிவர் திருவிழா சிறப்பாக நடந்தமைக்கும், அதில் கலந்து கொண்டு மகிழ்வுடன் தாங்கள் பல விருதுகள் பெற்றமைக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கன். இன்னும் அனேக சிறப்பான விருதுகள் தங்களை வந்தடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. மென்மேலும் விருதுகள் பெற தங்கள் வாழ்த்துக்கள் என்னை ஊக்குவிக்கும்.

      Delete
  18. Dr Ramaswamy Muralidharan (tumurali@gmail.com மின்னஞ்சல் வழியாக) வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி. இன்னும் பல விருதுகள் பெற வேண்டும். R.Muralidharan

    ReplyDelete
  19. அய்யா வணக்கம். தாங்கள் நமது விழாவிற்காக அவ்வப்போது சொன்ன ஆலோசனைகள், நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுடன் இருமுறை புதுக்கோட்டை வந்து விழாவுக்கு உளப்பூர்வமாகச் செய்த உதவிகள் மறக்க முடியாதவை . தங்கள் பணிகளின் தகுதியறிந்து -திரு எஸ.ரா.அவர்களின் புகழுரைக்கு முன்னரே- விழாக்குழு தங்களுக்கு விக்கிப்பீடியா பொறுப்பாளரைக் கொண்டு விருதளிப்பதுஎன்று எடுத்த முடிவு சரிதான் என்பதைத் தற்போது உலகமுழுவதும் உள்ள நம் தமிழ்ப்பதிவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் தகுதியறிந்து விருது தந்தததை நாங்கள் பெருமையாக எண்ணி மகிழ்கிறோம். தங்கள் பணிகள் இன்னும் இன்னும் தொடரவேண்டுகிறோம். வந்து விழாவுக்குப் பெருமை சேர்த்துச் சென்றமைக்கு எங்கள் நன்றிகள் அய்யா.

    ReplyDelete
    Replies
    1. அனைத்துப் பெருமையும் உங்களுக்கே. புதுக்கோட்டையில் கணினிப்பயிற்சி வகுப்பில் தொடங்கியது, புதுக்கோட்டையில் விருது வாங்கும் அளவு உயர்த்தியுள்ளது. திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் புகழுரையும், அதற்கு முன்னதாகவே என் பணியைப் பாராட்ட தாங்கள் எடுத்த முயற்சியும் மறக்கமுடியாதன. வலைப்பதிவர் விழாவினைச் சிறப்பாக நடத்திமுடித்ததோடு எங்கள் எழுத்துப்பணிக்கு ஊக்கம் தருகின்ற உங்களுக்கு மனமார்ந்த நன்றி. பணிகளைத் தொடர்வேன், தங்களது வாழ்த்துக்களுடன்.

      Delete
  20. more you will achieve. congrats
    m.gauthaman

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  21. This is only the beginning period of your computer information service.
    Look above the sky which is ur limit. continue ur service. good wishes. Prof. Dr. T. Padmanaban

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து எனது எழுத்துப்பணிக்கு ஊக்கம் தரும் தங்களின் வாழ்த்துக்கு நன்றி.

      Delete
  22. பெருமையும் மகிழ்ச்சியும் ஒருசேர கொண்டேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்றோரின் மகிழ்ச்சியும், தரும் உத்வேகமும் எனது எழுத்துக்குத் துணை நிற்கின்றன. நன்றி.

      Delete
  23. Dr S.Ganeshram (thro' email: nsganeshram@gmail.com) Dear Sir,I am really delighted to hear this news. Congratulations. I wish you to continue your work with the same spirit. S. Ganeshram

    Dr M.Jegadeesan (thro' email: jegadeesan_tamiluniv@yahoo.co.in) Congratulations Dr. Jambu.

    முனைவர் கி.அரங்கன் (rangan.lingprof@gmail.com மின்னஞ்சல் வழியாக) மகிழ்ச்சி நிறைந்த பாராட்டுகள். பணி மேலும் சிறக்கட்டும். அன்பு, அரங்கன்.

    ReplyDelete
  24. மனம் நிறை வாழ்த்துக்கள் ஐயா,
    தொடருங்கள்
    நன்றி.

    ReplyDelete
  25. தங்களது வாழ்த்துக்களுடன் எழுத்துப்பணியைத் தொடர்வேன். நன்றி.

    ReplyDelete
  26. தகுதியான நபருக்கு சரியான விருது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  27. மனம் நிறை வாழ்த்துகள் முனைவர் ஐயா.

    ReplyDelete
  28. ஐயா மனம்நிறைந்த வாழ்த்துக்கள். சக பணியாளர் என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி பெருமையும் உள்ளது.
    இன்னும் நிறைய விருதுகள் பெற வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டு என்னை நெகிழவைத்துவிட்டது. இன்னும் நிறைய விருதுகள் பெறுவேன், உங்களைப் போன்றோரின் ஊக்கங்களுடன். நன்றி.

      Delete
  29. //...இந்நிலையில் இவ்வாறான விருது என்னை மென்மேலும் எழுத ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்
    நீங்கள் விருதுகளுக்காக எழுதபவரில்லை என்பது எங்களுக்குத் தெரியும். தங்களுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம், புது எழுத்தாளர்களை விக்கிபீடியாவுக்கு இழுத்து வரும் என நம்பிக்கை கொள்கிறோம். வலைப்பதிவர் சந்திப்பில்தான் தங்களை அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இனி உங்கள் ஆய்வு கட்டுரைகளை மெல்ல மெல்ல படிக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. எனது விக்கிபீடியா பதிவுகளுக்கு அடித்தளம் வலைப்பதிவுகளே. நாம் சந்தித்த மனிதர்கள், படித்த நூல்கள், பார்த்த இடங்கள், நம் பண்பாடு என்ற நிலையில் மனதில் வைத்து எழுத ஆரம்பித்தேன். பொறுமையுடனும் நிதானத்துடன், எழுத ஆரம்பித்ததால் 250 கட்டுரைகளை எழுதமுடிந்தது. இவ்வாறே ஆங்கில விக்கிபீடியாவில் நம்மவர்கள், நம்மூர் பற்றி இல்லாதனவற்றைப் பதிய ஆரம்பித்துள்ளேன். இதுவரை ஆங்கில விக்கிபீடியாவில் 100 கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்க அழைக்கிறேன். உங்களது அன்புக்கு மனமார்ந்த நன்றி.

      Delete
  30. சிறப்பான ஒருவருக்கு விருது...
    வாழ்த்துக்கள் ஐயா..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

      Delete
  31. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  32. வாழ்த்துக்கள் அய்யா!
    தங்களை நேரில் சந்தித்து விக்கிபீடியாவில் எழுதுவது பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். விரைவில் தங்களை சந்திக்கிறேன் அய்யா!
    த ம 13

    ReplyDelete
  33. எப்போது வேண்டுமானாலும் வாருங்கள். காத்திருக்கிறேன், பகிர்ந்துகொள்ள. வாழ்த்துக்களுடன்.

    ReplyDelete
  34. Dr.C. Sundaresan (thro email: kalam.drsundaresan@gmail.com)
    Thangal viruthu pertamai emakku migavum perumaiya ullathu vazuthukal

    Mr B. Selvapandian (thro email: selvapandianba@gmail.com)
    மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  35. விழா பற்றிய தங்கள் பதிவு அருமை.
    விக்கிபீடியாவில் தங்கள் பங்களிப்பு பற்றி
    அறிந்து மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

      Delete
  36. முனைவர் ச.இராசேந்திரன் (மின்னஞ்சல் rajushush@gmail.com வழியாக):
    விருது பெற்றமை அறிந்து மிகவும் மகிழ்கின்றேன். தங்கள் பணி மேலும் தொடரவும் மேலும் பல பல விருதுகள் பெற்று பெருமை பெறவும் எனது வாழ்த்துக்கள்.
    இராஜ்

    ReplyDelete
  37. Dr M.Bavani (thro email: jaibavaniepi@yahoo.com):
    Congrates for getting award for pioneer Wikiepedia

    ReplyDelete