முகப்பு

27 June 2023

ஓவியர் சிற்பி முனைவர் சு. திருநாவுக்கரசு

முனைவர் சு.திருநாவுக்கரசு அவர்களின் (அலைபேசி 95009 78191) மனிதர்களும் ஆடுகளின் நிகழ்வுகளும் என்ற தலைப்பிலான தனி நபர் ஓவியக்கண்காட்சிக்கு நேற்று சென்றிருந்தேன்.

திரு திருநாவுக்கரசு, 2005வாக்கில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக  அறிமுகமானவர். அவர் படைத்திருந்த, உணர்வினை வெளிப்படுத்தும் அழகான ஓவியங்களைக் கண்டேன். சிறந்த தலைப்பினைத் தெரிவு செய்து அதனையொட்டி அமைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் உள்ளன. போற்றத்தக்க வேண்டிய அவருடைய முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.  

முனைவர் சு.திருநாவுக்கரசு (பி.20 செப்டம்பர் 1979) சிறந்த ஓவியக்கலைஞர், சிற்பக்கலைஞர், நுண்கலை எழுத்தாளர், நுண்கலை பேராசிரியர் ஆவார். தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் கலையின்மீதுள்ள ஈடுபாட்டால் கும்பகோணம், அரசு கவின் கல்லூரியில் சிற்பக்கலையில் இளநிலை நுண்கலை (2002) மற்றும் முதுகலை நுண்கலை (2004) பட்டம் பெற்றவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிற்பக்கலையில் ஆய்வியல் நிறைஞர் (2007) பட்டமும், தத்துவ நோக்கில் 20ம் நூற்றாண்டின் தமிழகச் சிற்பக்கலை என்ற தலைப்பில் முனைவர்  (2014) பட்டமும் பெற்றவர். புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன்முதலில் சிற்பக்கலையில் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழர் சிற்பக்கலையில் அழகியல் கோட்பாடுகள், விசுவல் ஆர்ட் கேள்வி பதில் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
















இந்த கண்காட்சி நான்கு நாள்கள் தஞ்சாவூரில் நடைபெறுகிறது. ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் இக்கண்காட்சியைக் கண்டு இன்புறவும், அவருடைய முயற்சிக்கு ஊக்கம் தரவும் வேண்டுகிறேன்.

தஞ்சாவூர் பெசண்ட் அரங்கம், 26-27.6.2023 காலை 10.00-மாலை 5.00
தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகம், 30.6.2023-1.7.2023 காலை 10.00-மாலை 7.00

இவருடைய நூலைப் பற்றிய மதிப்புரை:

10 ஆகஸ்டு 2023இல் மேம்படுத்தப்பட்டது.

7 comments:

  1. சிறப்பான பதிவு..
    நல்ல அறிமுகம்..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  2. வாழ்த்துவோம்....

    ReplyDelete
  3. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    ReplyDelete
  4. போற்றுவோம், வாழ்த்துேவோம்

    ReplyDelete
  5. ஓவியங்கள் எல்லாம் மிகவும் வித்தியாசமாக மிக அழகாக இருக்கின்ற்ன. ஒவ்வொன்றும் ஏதோ ஒரு உணர்வைப் பிரதிபலிப்பதாகத் தெரிகிறது...

    ஓவியக்கலைஞர் முனைவர் திருநாவுக்கரசு அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    கீதா

    ReplyDelete
  6. ஓவியங்கள் அனைத்தும் சிறப்பு. ஓவியக் கலைஞருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். சிறப்பான அறிமுகத்திற்கு நன்றி ஐயா.

    ReplyDelete