முகப்பு

25 January 2016

கும்பகோணம் ராஜகோபாலசுவாமி கோயில்

மகாமகத்தின்போது தீர்த்தவாரி காணும் வைணவக்கோயில்களில் நாம் இன்னும் செல்லவேண்டியது ராஜகோபாலசுவாமி கோயிலும், சக்கரபாணி கோயிலும் ஆகும். மகாமக விழாவிற்காக நேற்று (24.1.2016) கும்பகோணத்தில் அனைத்து கோயில்களிலும் பந்தக்கால் நடப்பட்ட இவ்வேளையில் தற்போது நாம் ராஜகோபாலசுவாமி கோயிலுக்குச் செல்வோம்.

ராஜகோபாலசுவாமி கோயில் என்றாம் நம் நினைவிற்கு வருவது மன்னார்குடியே. கும்பகோணத்தில் இரு ராஜகோபாலசுவாமி கோயில்கள் உள்ளன. மகாமகத் தீர்த்தவாரியின்போது காவிரியில் தீர்த்தவாரி பெறும் கோயில்களில் ஒன்று கும்பகோணம் பெரிய கடைத்தெருவிலுள்ள ராஜகோபாலசுவாமி கோயில். 19.6.2015இல் இக்கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கு முன்னும், நவராத்திரியின்போது 17.10.2015 அன்றும் இக்கோயிலுக்குச் சென்றேன்.

இக்கோயில் கடைத்தெருவில் கடைகளின் இடையே இருப்பதால் கண்டுபிடிப்பது சற்றுச் சிரமமே. 1970கள் தொடங்கி இக்கோயிலுக்குப் பல முறை சென்றுள்ளேன். தற்போது நடந்த கும்பாபிஷேகத்தின்போது முகப்பில் புதிய ராஜகோபுரம் கட்டப்பட்டது. வாயிலின் இரு புறமும் கருடர் மற்றும் அனுமாரின் சிலைகள் உள்ளன. 

நெடிய வாயிலை கடந்து உள்ளே வரும் நம்மை இரு புறமும் சுதையாலான சிலைகளும், யானைகளும் வரவேற்கின்றன. முன்மண்டபத்தில் புதுப்பிக்கப்பட்ட கொடி மரம் மிக அருமையாக உள்ளது. 


ராஜகோபாலர், செங்கமலவல்லித்தாயார் உறையும் இக்கோயிலின் கருவறை விமானம் திருப்பணிக்குப் பின் அழகாகக் காட்சியளிக்கிறது. கருவறையைச் சுற்றி வரும்போது அங்கிருந்து கம்பீரமாக உள்ள ராஜகோபுரத்தை காணலாம். இக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் கருடசேவையும் ஒன்றாகும்.




  

ராமசாமி கோயிலிலிருந்து கிளம்பி பெரியக்கடைத்தெருவில் சென்றால் வரிசையாக அனுமார் கோயில், சரநாராயணப்பெருமாள் கோயில், கூரத்தாழ்வார் சன்னதி, உடையவர் சன்னதி, ராஜகோபாலசுவாமி கோயில், ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் என்று வரிசையாக கோயில்கள் உள்ளதைக் காணமுடியும். அதே பாதையில் சென்றால் சக்கரபாணி கோயிலைச் சென்றடையலாம். கும்பகோணத்தில் நேர்கோட்டில் அதிகமான கோயில்கள் உள்ள இடங்களில் பெரியக்கடைத்தெருவும் ஒன்றாகும். 19 சூன் 2015இல் இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது. இக்கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.30 மணி வரை. மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை. 

மகாமகம்
மகாமகத்தை முன்னிட்டு கும்பகோணத்திலுள்ள சிவன் கோயில்களில் 13.2.2016 அன்றும், வைணவக்கோயில்களில் 14.2.2016 அன்றும் கொடியேற்றத்துடன் விழா தொடங்கவுள்ளது. 13.2.2016 முதல் 22.2.2016 வரை நடைபெறுகின்ற மகாமக விழாவில் பங்கேற்கவும் அந்நாள்களில் குளத்தில் புனித நீராடவும் பக்தர்கள் வரவுள்ளனர்.

தோப்புத்தெருவில் இன்னொரு ராஜகோபாலசுவாமி கோயில்
கும்பகோணம் தோப்புத்தெருவில், கருவறையில் ஒரே கல்லில் சீதைராமரையும், அருகில் லட்சுமணரையும் கொண்டுள்ள ராஜகோபாலசுவாமிகோயில் என்ற பெயரில் மற்றொரு கோயில் உள்ளது.  

மகாமகத்திற்கு முன்போ, பின்போ தீர்த்தவாரியுடன் தொடர்புள்ள பெரியக்கடைத் தெருவிலுள்ள ராஜகோபாலசுவாமி கோயிலுக்குச் செல்வோம். ஒரே கல்லில் ராமர் சீதை சிற்பம் உள்ள தோப்புத்தெரு ராஜகோபாலசுவாமி கோயிலுக்கும் செல்வோம்.
--------------------------------------------------------------------------------------------------------
காவிரி ஆற்றில் தீர்த்தவாரி கொடுக்கும் வைணவக்கோயில்கள்
--------------------------------------------------------------------------------------------------------
27.1.2016 அன்று மேம்படுத்தப்பட்டது.

18 comments:

  1. அருமை ஐயா
    தம +1

    ReplyDelete
  2. தமிழ்மண இணைப்புடன் 1

    ReplyDelete
  3. மகாமகப் பதிவுகளில் - கோயில்களின் அறிமுகம் அருமை.. மகிழ்ச்சி..

    ReplyDelete
  4. அழகான படங்கள்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  5. அருமையான ஆன்மிகப் பதிவு!
    த ம 4

    ReplyDelete
  6. கும்பகோணம் கோயில் புகைப்படங்களுடன் பகிர்வுக்கு நன்றி முனைவரே
    தமிழ் மணம் 5

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா

    கோயிலை நேரில் பார்த்தது போல ஒரு உணர்வு பகிர்வுக்கு நன்றி ஐயா.த.ம6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. தரிசனம் கிடைக்கப் பெற்றேன்.
    தம +1

    ReplyDelete
  9. திவ்ய தரிசனம் செய்ய வைத்தமைக்கு நன்றி அய்யா!

    ReplyDelete
  10. அழகான கோயில் தரிசனம். புகைப்படங்கள் அருமை..பகிர்வுக்கு மிக்க நன்றி..ஐயா

    ReplyDelete
  11. படங்களுடன்
    சிறந்த கருத்துப் பகிர்வு

    இந்தியாவின் 67வது குடியரசு நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  12. இந்தியக் குடியரசு தின வாழ்த்து
    அருமையான பதிவு
    (வேதாவின் வலை)

    ReplyDelete
  13. தகவலுக்கு நன்றி அய்யா!

    ReplyDelete
  14. வழக்கம் போல படங்களுடன் பகிர்வு சிறப்பு! தொடருங்கள் ஐயா! நன்றி!

    ReplyDelete
  15. தகவலுக்கு நன்றி அய்யா!

    ReplyDelete
  16. கும்பகோணத்தில் இருப்போருக்கே இத்தனை கோவில்கள் பற்றிய விவரங்கள் தெரியுமா என்பது சந்தேகம் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்

    ReplyDelete